

Post No. 14,550
Date uploaded in London – 24 May 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

நூலை எழுதியவர் – வாக் பட்டர்
காலம் – 500 CE முதல்600 CE வரை
மஹேந்திர பல்லவர், அப்பர் காலத்தை ஒட்டி ;சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்னர்..
அவர் எழுதிய இரண்டு நூல்கள் – அஷ்டாங்க ஹ்ருதயம், அஷ்டாங்க சங்கிரகம்
The Ashtanga Hridayam (The 8-Fold Path to the Heart of Ayurveda) is one of the foundational Vedic texts of Ayurveda, and perhaps the most comprehensive, as its author Vagbhata (AD 550-600), sought to compile the wisdom of the older texts (Samhitas) in Ayurveda that came before it.
இதன் சிறப்பு என்ன வென்றால் சரகர், சுஸ்ருதர் ஆகியோர் எழுதிய மிகப்பழைய நூல்களை இது சுருக்கித் தருகிறது. இதை ஆசிரியர் வாக்கபட்டரே சொல்கிறார்.
அஷ்ட என்றால் எட்டு EIGHT. ஆங்கிலச் சொல்லும் தமிழ்ச் சொல்லும் இதன் மருவு; ஆயுர்வேதத்தின் இருதயம் போன்ற எட்டுப் பிரிவுகளை கொடுப்பதால் நூலின் பெயர் அஷ்டாங்க ஹ்ருதயம்.
Ashtanga Hridayam is a significant classical text in Ayurveda, authored by Vagbhata this foundational treatise encompasses eight branches of Ayurveda and serves as a comprehensive summary of Ayurvedic principles, featuring 7471 verses divided into six sthanas. It is notable for having the highest number of commentaries among Ayurvedic texts and outlines essential teachings, practices, and treatment strategies for various diseases, making it a critical resource in the field of Ayurvedic medicine.
ஆயுர்வத்தின் எட்டுப்பிரிவுகள்:
சரீர, பால, கிரஹ,ஊர்த்வாங்க, சல்ய, தம்ஷ்ட்ரா, ஜரா, வ்ருஷ
என்பனவாகும்
Aṣṭāṅgahṛdaya (अष्टाङ्गहृदय).—The medical science which deals in eight separate division the treatment of the human body. (1) Śārīra (2) Bāla (3) Graha (4) Ūrddhvāṅga (5) Śalya (6) Daṃṣṭra (7) Jara and (8) Vṛṣa.
1.சரீரம் அல்லது காய என்பதில் நமது உடலைப் பற்றிய விவரங்கள் உள்ளன.
2.பால என்னும் பகுதியில் இன்னும் அங்கங்கள் முதிர்ச்சி பெறாத நிலை பற்றிய விவரங்கள் இருக்கின்றன. ; அதாவது குழந்தைகள், சிறுவர், சிறுமியரைப் பாதிக்கும் அம்சங்கள்.
3.கிரஹ என்பதில் மனதை பாதிக்கும் PSYCHIATRY அம்சங்கள் விவரிக்கப்படுகின்றன
4.ஊர்த்வ அங்க , அதாவது உடலின் மேல்பகுதி பற்றிய பிரிவில் கழுத்துக்கு மேலாக இருக்கும் கண் , காது, மூக்கு ENT முதலிய உறுப்புகளின் சிகிச்சை உளது.
5.சல்ய என்ற பகுதியில் வெளியிலிருந்து வந்து நமது உடலில் தங்கிய பொருட்ளை எடுக்கும் SURGERY அறுவைச் சிகிச்சை பற்றிக் காணலாம்.
6.தம்ஷ்ட்ர சிகிச்சைப் பகுதியில் விஷ முறிவு TOXICOLOGY பற்றிய தகவல்கள் சிகிச்சைகளைக் காணலாம் .
7.ஜர சிகிச்சைப் பிரிவில் முதுமையில் இளமை பெறுவது REJUVENATION THERAPY எப்படி என்று சொல்லப்படுகிறது ; ஜரா என்றால் மூப்பு என்று பொருள்; ஆங்கிலச் சொல் ஜெராண்டாலஜி GERONTOLOGY என்பதும் இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து பிறந்தததே.
8.வ்ருஷ, வ்ருஷய அல்லது வாஜீகரண பிரிவில் காம சம்பந்தமான குளிகைகள் APHRODISIAC THERAPY பற்றியும்,ஆண்களின் விந்து பற்றியும் தகவல் உள்ளது.
அஷ்டாங்க ஹ்ருதயம் Aṣṭāṅgahṛdaya (अष्टाङ्गहृदय) நூலினை வாக் பட்டர் ஆறு ஸ்தானங்களாகப் பிரித்துள்ளார்; ஆயுர்வேதத்தின் எட்டுப் பிரிவுகளை அவை எடுத்துரைக்கின்றன. இதில் மொத்தம் 7741 சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் உள்ளன.


அஷ்டாங்க ஹ்ருதயம் நூலின் ஆறு பிரிவுகள் பின்வருமாறு :
1.சூத்ர ஸ்தான
2.நிதான ஸ்தான
3.சரீர ஸ்தான
4.சிகித்சா ஸ்தான
5.கல்ப ஸ்தான
6.உத்தர ஸ்தான
இதற்குத்தான் அதிகமான உரைகள் உள்ளன; இதுதான் பயன்படுத்த எளிதான நூல் என்பதால் இவ்வளவு உரைகள்!
இந்தியாவில் மட்டுமின்றி திபெத்திலும் கூட இது இன்றும் பின்பற்றப்படுகிறது.
சூத்ரஸ்தான பகுதியில் வாத, பித்த, கப தோஷங்கள், பஞ்சகர்ம, மூலிகை பற்றிய விஷயங்கள் வருகின்றன.
பஞ்சகர்ம என்பது உடலில் சேர்ந்த விஷங்களை அகற்றி வாத, பித்த, கப தோஷங்களை சம நிலைக்கு கொண்டு வருவது பற்றியது ; மூலிகைகளைப் பயன்படுத்தும் விஷயங்களையும் இது விவரிக்கிறது. நோய்களைக் கண்டுபிடிப்பது, சிகிச்சை தருவது தொடர்பான விதிகளையும் வாக்கப்பட்டர் சொல்கிறார்.
நோய்களை அறியும் முறைகள், அவைகளுக்கான காரணங்கள், அவற்றின் அறிகுறிகள் நிதான ஸ்தானத்தில் உள்ளது.
சரீர ஸ்தான பகுதியில் மனித உடலின் அமைப்பினையும் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய உறுப்புகளையும் வாக்பட்டர் சொல்கிறார் . கரு எப்படி மாதம்தோறும் வளர்கிறது என்பதையும் சொல்கிறார். (The Shareera Sthana is (Anatomy) section of the Ashtanga Hridayam)
இதை மாணிக்க வாசகரும் விவரமாக திருவாசகத்தில் சொல்வது கணவனத்திற்கு உரியது.
சிகித்சா ஸ்தானப் பகுதி மிக முக்கியமான பகுதி ஆகும் ;பல வியாதிகளுக்கு என்ன சிகிச்சை தர வேண்டும், என்ன பத்தியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும், நோய்களுக்கான மருந்து என்ன, ஒவ்வொரு நோயையும் எப்படி அணுகுவது என்பனவற்றை விவரமாகத் தருகிறார் வாக்பட்டர்.

கல்ப ஸ்தான பகுதியில் வாந்தி, பேதி , இனிமா மூலம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் முறைகள் இருக்கின்றன.
கடைசி பகுதியான உத்தரஸ்தானம் மிகவும் விரிவான பகுதி ஆகும். இதில் மட்டும் ஐம்பது அத்தியாயங்கள் இருக்கின்றன. இதுவரை சொல்லாத ஆயுர்வேத விஷயங்கள் அனைத்தும் இதில் வந்துவிடுகின்றன . இதில் குழந்தை மருத்துவம், புத்துணர்வு பெறுதல் , விஷ முறிவு முதலிய வருகின்றன . ஆயுர்வேதத்தின் எட்டுப்பிரிவுகளின் விஷயங்களும் இதில் இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.
—SUBHAM—
TAGS- மருத்துவ நூல், அஷ்டாங்க ஹ்ருதயம் , வாக் பட்டர் , நூலின் சுருக்கம், ஆயுர்வேதம், எட்டு பிரிவுகள், ஆறு ஸ்தானங்கள், Ashtanga Hridayam , Vagbhata ,Tamil