
Post No. 14,565
Date uploaded in London – 29 May 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
வேதத்தில் கடவுளைப் பற்றிய கவிதையில் இதை வீட உன்னதமான கவிதையை நான் கண்டதே இல்லை. இறைவன் சர்வ வியாபி, எல்லாம் வல்லவன் , எங்கும் நிறைந்தவன் , எல்லாம் அறிந்தவன் என்பதை இந்த அளவுக்கு விளக்கும் கவிதையை நான் கண்டதே இல்லை; இதில் கடைசி மந்திரம் (அதர்வண வேதம் காண்டம் 4, சூக்தம் 16 (சூக்தம் 118 என்றும் சொல்லுவர் ) எதிரிகளுக்கு எதிரான சாபம் போல இருப்பது ஒன்று மட்டுமே குறை– வான் ராத் VON ROTH.
****
ஜூன் 2025 பண்டிகைகள்
ஜூன் 5-உலக சுற்றுச்சூழல் நாள்; 7 பக்ரீத்; 9 – வைகாசி விசாகம்: முருகப்பெருமானின் அவதார தினம் ; ஜூன் 10 – பெளர்ணமி விரதம், சாவித்திரி விரதம்; 11-கபீர் ஜெயந்தி; 27 Friபுரி ரத யாத்திரை.
11 Wed பௌர்ணமி;; 25 Wed அமாவாசை; ஏகாதசி விரதம்; 6 , 21 .
முகூர்த்த தினங்கள்:–
| 01-06-2022 புதன் | வைகாசி மாதம் 18 வளர்பிறை, துவிதியை | சுப முகூர்த்தம் |
| 03-06-2022 வெள்ளி | வைகாசி மாதம் 20 வளர்பிறை, சதுர்த்தி | சுப முகூர்த்தம் |
| 09-06-2022 வியாழன் | வைகாசி மாதம் 26 வளர்பிறை, தசமி | சுப முகூர்த்தம் |
| 13-06-2022 திங்கள் | வைகாசி மாதம் 30 வளர்பிறை, சதுர்தசி | சுப முகூர்த்தம் |
| 17-06-2022 வெள்ளி | ஆனி மாதம் 3 தேய்பிறை, சதுர்த்தி | முகூர்த்தம் |
| 23-06-2022 வியாழன் | ஆனி மாதம் 9 தேய்பிறை, தசமி | முகூர்த்தம் |
| 27-06-2022 திங்கள் | ஆனி மாதம் 13 தேய்பிறை, சதுர்தசி | முகூர்த்தம் |

ஜூன் 1 ஞாயிற்றுக் கிழமை
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே.
– தொல்காப்பியம்-பொருளதிகாரம்-அகத்திணை இயல்-பாடல் எண்:5
****
ஜூன் 2 திங்கட் கிழமை
1.அவன் மனிதனின் கண் சிமிட்டல்களையும் எண்ணிக்கொண்டே இருக்கிறான். அதாவது NASA நாஸா , PENTAGON பெண்டகன் முதலிய இடங்களில் உள்ள சூப்பர் கம்பியூட்டர்களை விட வருணன் பெரிய கம்ப்யூட்டர். அவன் சிசி டிவி CCTV காமெரா போல பார்த்துக் கொண்டிருப்பதோடு பாவ புண்ணியங்களை கணக்குப் போட்டுக் கொண்டே இருக்கிறான். இதனால் தினமும் மாலை வேளை மந்திரத்தில் பிராமணர்கள் வருண பகவானிடம் பாவ மன்னிப்பு கேட்கின்றனர் .
****
ஜூன் 3 செவ்வாய்க் கிழமை
2.அவனுடைய தூதர்கள் உளவாளிகள் ; அவர்களுக்கு ஆயிரம் கண்கள் . இப்போது கூகிள் மேப் GOOGLE MAP மூலம் நாம் யார் வீட்டின் வாசலில் யார் நிற்கிறார் என்பதைக் காண முடியும். அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குள் யார் நுழைகிறார், வெளியே வருகிறார் என்று காண முடியும். இதை வருணன் ஒற்றர்கள், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செய்துள்ளனர். செய்து வருகின்றனர்.
****
ஜூன் 4 புதன்கிழமை
3. வருணன் இன்விஸிபிள் INVISIBLE MAN மேன் ; அதாவது நாம் இருவர் மட்டுமே ரஹசியம் பேசுகிறோம் என்று நினைக்கிறோம். புலவர் சொல்கிறார்; டேய் மக்கு, மடையா; உன் பின்னால் வருணனும் உனக்குத் தெரியாமல் கேட்டுக் கொண்டு இருக்கிறாண்டா. என்று
****
ஜூன் 5 வியாழக் கிழமை
அவன் பெரிய அதிகாரி; பக்கத்தில் இருந்து பார்ப்பது போல உன்னிப்பாக நம்மையே பார்க்கிறான் ; எல்லோரும் ரஹசியம் பேசுவதாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்; அது எல்லாம் தேவர்களுக்கு நன்கு தெரியும்- அதர்வண வேதம் காண்டம் 4, சூக்தம் 16 (சூக்தம் 118 என்றும் சொல்லுவர் )
****
ஜூன் 6 வெள்ளிக்கிழமை
ஒருவன் நிற்பது, உட்காருவது, வளைந்து வளைந்து கோணலாக ஓடுவது, மறைவாக ஒளிந்து கொண்டு யாருக்கும் தெரியாமல் எதையாவது -செய்வது, இருவர் மட்டுமே தனி இடத்தில் அமர்ந்து கிசு கிசு பேசுவது அத்தனையும் வருணனுக்குத் தெரியும். எப்படித் தெரியுமா? அவன் உங்கள் அருகில் மூன்றவது ஆளாக நைசாக உட்கார்ந்து பார்த்துக்கொண்டே இருக்கிறான்!! அதர்வண வேதம் காண்டம் 4, சூக்தம் 16 (சூக்தம் 118 என்றும் சொல்லுவர் )
****
ஜூன் 7 சனிக் கிழமை
இந்தப் பூமி அவனுக்கு சொந்தம்; அதற்கு மேல் நாம் பார்க்கும் வானமும் அவனுக்குச் சொந்தம் . பூமியில் உள்ள கடலும், கடல் போன்ற ஆகாயமும் அவனுடையதே.- அதர்வண வேதம்
****

ஜூன் 8 ஞாயிற்றுக் கிழமை
.((சப்போஸ்suppose ; நீ ஆகாயத்துக்கு அப்பால் ஸ்பேஸ் ஷட்டிலில் SPACE SHUTTLE போகிறாய் என்று வைத்துக்கொள்வோம்)). அப்போதும் நீ அவன் எல்லைக்கு அப்பால் சென்றதாக நினைத்துவிடாதே . அவனுடைய ஒற்றர்கள் அங்கிருந்துதான் பூமிக்கே வருகிறார்கள் . அவர்களுக்கு 1000 கண்கள். பூமியை பார்த்துக கொண்டே இருக்கிறார்கள் (அதாவது அவர்கள் ஸிஸிடிவி CCTV காமெராக்கள்; கூகுள் மேப் GOOGLE MAP )– அதர்வண வேதம் நாலாவது மந்திரம்
****
ஜூன் 9 திங்கட் கிழமை
வருணன் பெரிய ராஜா ; பூமி, ஆகாயம், அதற்கு இடையிலுள்ள அந்தரம், வானத்துக்கும் அப்பால் உள்ள இடம் அத்தனையையும் பார்க்கிறார்.இந்த ஜனங்களின் இமைச் சிமிட்டுகளையும் அவன் எண்ணியுள்ளான். சூதாடுபவன் காய்களை உன்னிப்பாக எண்ணுவது போல அவன் எண்ணிக்கொண்டே இருக்கிறான்!!- அதர்வண வேதம் ஐந்தாவது மந்திரம்
****
ஜூன் 10 செவ்வாய்க் கிழமை
ஏ வருணா ! பொய் சொல்ற ஆட்களை 3X 7= 21 பாஸக் கயிற்றால் கட்டி, அடித்து விட்டு விளாசு; ஆனால் உண்மை பேசுவோரைத் தொடாதே — அதர்வண வேதம் ஆறாவது மந்திரம்
****
ஜூன் 11 புதன்கிழமை
ஏ வருணா ! விடாதே; அவர்களை 100 பாசக்கயிற்றால் கட்டு ; மனிதர்களைக் கவனிக்கும் வருணா! பொய் சொல்ற ஆட்களை நல்லாக் கட்டு. ((நீ அடிக்கிற அடியிலே )) அவன் வயிறு தொங்கி மஹோதர நோயுள்ளவன் (போல) ஆகட்டும்– அதர்வண வேதம் ஏழாவது மந்திரம்
****
ஜூன் 12 வியாழக் கிழமை
நீயே அகலம்; நீயே நீளம்; நீயே மனிதன் , நீயே தெய்வமாக நிற்கிறாய் நீ முன்னைப் பழமைக்கும் பழமையானவன். பின்னைப் புதுமைக்கும் புதுமையானவன்- அதர்வண வேதம் எட்டாவது மந்திரம்
****
ஜூன் 13 வெள்ளிக்கிழமை
நான் அந்த எல்லாப் பாசங்களுடன் உன்னைக் கட்டுகிறேன்;.இந்த இந்த குடும்பத்தைச் சேர்ந்தவனே ! இந்த இந்தத் தாயின் மகனே ! அவர்களின் அனைவரையும் உனக்கு நான் அனுகூலமாய் நான் ஆக்ஞாபிக்கிறேன்– ஒன்பதாவது மந்திரம்; அதர்வண வேதம் காண்டம் 4, சூக்தம் 16 (சூக்தம் 118 என்றும் சொல்லுவர் )
****
ஜூன் 14 சனிக் கிழமை
பிராமணர்கள் தினமும் மாலையில் சொல்லும் மந்திரம் ; இதில் நான்கு முறை வருணன் பெயர் வருகிறது.
வருணதேவரே !என்னுடைய இந்த வேண்டுதலைக் கேட்டருள்வீர் ; இப்பொழுதே (என்னை) இன்புறச்செய்வீர் . இந்தப் பாதுகாப்பினை / ரக்ஷையை வேண்டி உம்மைப் பிரார்த்திக்கிறேன்- சந்தியா வந்தன மந்திரம் .
****

ஜூன் 15 ஞாயிற்றுக் கிழமை
வேத மந்திரத்தால் ஸ்தோத்திரம் செய்துகொண்டு அதற்காகவே உம்மைச் சரண் அடைகிறேன் ; யாகம் செய்பவன் எந்த ஹவிஸ் திரவியங்களைக் கொண்டு அதைச் செய்கிறானோ , அதையே கோ ருகிறான் (அதுபோல)
****
ஜூன் 16 திங்கட் கிழமை
புகழ்மிக்க வருணதேவரே ! என்னைக் கைவிடாமல் இப்பொழுது என் பிரார்த்தனையை அங்கீகரிக்கவேண்டும் . எமது ஆயுளைக் குறைத்து விடாதீர்.
****
ஜூன் 17 செவ்வாய்க் கிழமை
வருணதேவரே ! விவேகமற்ற மனிதர்களைப்போல உம்முடைய ஆராதனையை நாள்தோறும் அனுஷ்டிக்காமல் கவனக்குறைவால் விட்டுவிட்டோம் .
****
ஜூன் 18 புதன்கிழமை
வருணதேவரே ! தேவதைகளின் சமூகத்திற்கு மனிதர்களாகிய நாங்கள் அறியாமையால் என்னென்ன செய்தோமோ , தருமத்தைப் புறக்கணித்தோமோ , அந்தப் பாவங்களுக்காக எங்களைத் துன்புறுத்தி விடாதீர்கள்.
****
ஜூன் 19 வியாழக் கிழமை
சூதாடிகளைப் போன்றவர்கள் , தீயோர் நடுவில் என் மீது அநியாயமாக சுமத்திய பழியினையும் நான் அறிந்தும் அறியாதும் செய்த பாவங்கள் அனைத்தையும் சிதறடித்து விடுங்கள்.
****
ஜூன் 20 வெள்ளிக்கிழமை
வருணதேவரே; நாங்கள் என்றும் உனது அன்பிற்குப் பாத்திரமாக இருப்போமாக!
****
ஜூன் 21 சனிக் கிழமை
மன்னன் விவேகமுள்ள, தீவிரமான, பெருந்தன்மையுள்ள குணங்களைப் பெற்றிருந்ததால் அவன் வருணனை ஓத்திருந்தான்; அவன் கையில் இருந்த வில்லின் நாண், வருணனின் பாசக்கயிறு போல இருந்தது – காளிதாசனின் ரகுவம்சம்
****
ஜூன் 22 ஞாயிற்றுக் கிழமை
மரங்களும் பறவைகளின் ஒலிகளைக் –புத்திமதியைக்கேட்டு — மன்னனை வருணன் என்று கருதி தலை வணங்கின – ரகுவம்சம்
****
ஜூன் 23 திங்கட் கிழமை
தீயோரைத் தண்டிப்பதில் தசரத மன்னன் யமனையும் வருணனையும் ஓத்திருந்தான் – ரகுவம்சம்
****
ஜூன் 24 செவ்வாய்க் கிழமை
மித்ரனும் வருணனும் பகலும் இரவும் போன்றவர்கள் – ஐத்ரேய பிராஹ்மணம்
****
ஜூன் 25 புதன்கிழமை
மித்ரனும் வருணனும் உலகத்தின் காவலர்கள் – ரிக்வேதம்
****
ஜூன் 26 வியாழக் கிழமை
அவர்களுடைய ஆணையின் பேரில் வானம் ஒளியுடன் திகழ்கிறது – ரிக்வேதம்
****

Varun is Perun in Slav languages
ஜூன் 27 வெள்ளிக்கிழமை
அவர்கள் பயங்கரமானவர்கள்; பொய்மையை வெறுப்பவர்கள்- ரிக்வேதம்
****
ஜூன் 28 சனிக் கிழமை
வருணனும் மித்ரனும்நுரையீரலுக்கும் கல்லிரலுக்கும் அதிபதிகள் –யஜுர் வேதம்
****
ஜூன் 29 ஞாயிற்றுக் கிழமை
வருணன் ஒரு டாக்டர்/ மருத்துவன். டாக்டர்களின் தலைவன் –யஜுர் வேதம்
****
ஜூன் 30 திங்கட் கிழமை
என்னுடைய இந்த தோத்திரம் இந்திரன்- வருணனிடம் செல்க; றனக்குப் புதல்வர்களையும் பெயர்களையும் அருளட்டும்; நல்ல செல்வத்துடன் நாம் தேவர்களின் விருந்துக்குச் செல்வோம் – ரிக்வேதம் 7-85
–SUBHAM—
TAGS- வருணன், பொன்மொழிகள், ஜூன் 2025 காலண்டர், வருணன் மேய பெருமணல் உலகமும், அதர்வண வேதம் காண்டம் 4, சூக்தம் 16, வான் ராத் VON ROTH.