காளிதாசனின் வியப்பூட்டும் உவமைப் பட்டியல்! (Post No.14,569)

Written by London Swaminathan

Post No. 14,569

Date uploaded in London –  30 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

காளிதாசனின் உவமைகள் உலகப் பிரசித்தி பெற்றவை. எண்ணிக்கையிலும் அதிகம்; தரத்திலும் அதிகம்; அவருடைய ஏழு நூல்களில் எங்கும் மிகப் பொருத்தமான உவமைகளைக் காணலாம். அவற்றில் இரு நூற்றுக்கும் மேலான உவமைகளை சங்கத் தமிழ்ப்புலவர்கள் எடுத்தாண்டதை, நான் எழுதிய  இரண்டு தமிழ், ஆங்கில நூல்கள் மூலமாகவும் இந்த பிளாக்கில் வெளியான கட்டுரைகள் மூலமாகவும் வாசகர்கள் படித்து வருகிறார்கள் அவர்களுக்கு நன்றி. உரித்தாகுக. 

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால், டில்லி பல்கலைக்கழக ஸம்ஸ்க்ருதத்துறையைச் சேர்ந்த டாக்டர் திருமதி வினோத் அகர்வால் காளிதாசன் உவமைகளை சப்ஜெக்ட்/ விஷயம் வாரியாகத் தொகுத்து வெளியிட்டார். அதில் காளிதாசர்  என்ன தலைப்பில் எவ்வளவு உவமைகளை எழுதினார் என்பதை அறிந்தால் காளிதாசனின் வீச்சு எல்லோருக்கும் புரியும். அதனால்தான் அவரை உலக மஹா கவிஞன் என்றும் நாடக ஆசிரியன் என்றும் உவமைச் சக்ரவர்த்தி என்றும் இன்றும் அறிஞர்கள் போற்றுகின்றனர்.

இந்த உவமைப்பட்டியல் வேறு ஒரு விஷயத்தையும் தெளிவாக்குகிறது ; காளிதாசனின் காலம் மாணிக்கவாசகர் காலம் போலவே இன்றும் ஆராய்ச்சிக்குரியதாகவே உள்ளது. காளிதாசனை எழுநூறு ஆண்டு வட்டத்துக்குள் அறிஞர்கள் வைக்கின்றனர் ஆனால் டில்லி பல்கலைக்கழக பேராசிரியர் திருமதி சந்திரா ராஜன் வெளியிட்ட காளிதாசர் நூல்களின் மொழிபெயர்ப்பில் கூட அவரை சங்க காலத்துக்கு முன்னரே வைக்கின்றார்;இந்த உவமைப்

பட்டியலிலும் அவர் மன்னர்களை வேத கால தெய்வங்களுடன் ஒப்பிடுவதால் அவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவர் என்று தெளிவாகிறது;  சங்க நூல்களிலும் மன்னர்களை வேத கால தெய்வங்களுக்கும் பின்னர் முருகன் விஷ்ணு போன்ற தெய்வங்களுக்கும் ஒப்பிடுவது காலத்தைக் காட்டும் கண்ணாடியாகத் திகழ்கிறது.

இதோ காளிதாசனின் உவமை எண்ணிக்கை

நூலாசிரியர் ஆங்கில எழுத்து வரிசையில் ALPHABETICAL ORDER பொருளடக்கத்தில்  எழுதியதால் அதே வரிசையில் நானும் தருகிறேன் அக்கினி 2 , அஸ்வினி தேவர்கள் 1 பலராமன் 1, பிரம்மா 2, மன்மதன் 6, கடவுள் 4, சுவர்க்கம் 8, இந்திரன் 23 , ஜயந்தன் 4, கார்த்திகேயன் 7, கிருஷ்ணன் 3,  குபேரன் 2, லட்சுமி 7, அமிர்தம் 2, ரதி 1, சீதா 1, சிவன் 7, வருணன் 2,  விஷ்ணு 15, யமன் 2.

இந்திரன் மகன் ஜயந்தனையும் ஒப்பிடுவது பிற்காலத்தில் கிடையாது

இவைகளை சங்க காலத்து கடவுள் உவமைகளுடன் ஒப்பிட்டால் அவர், காலத்தால் முந்தியவர் என்பது தெளிவாகும் மாணிக்க வாசகர் போலவே கணபதி, சிவலிங்கம் ஆகியன காளிதாசனில் இல்லை.

இதில் இந்திரன் அவன் மகன் ஜெயந்தன், அக்கினி, அஸ்வினி தேவர்கள் யமன், விஷ்ணு வருணன் பற்றிய உவமைகள் அவர் பழங்கலத்துக் கவிஞர் என்பதைக் காட்டுகிறது

*****

அடுத்ததாக மனிதர்கள், குணாதிசயங்கள், உறவு முறை, உடல் உறுப்புகள் பற்றிய உவமைப் பட்டியலைக் காண்போம் .

இதே போல தமிழ் சங்க நூல்களில் உள்ள உவமைகளை நாம் தொகுக்க வேண்டும்.

அபிசாரிகா 2, வேளையாள் 1 , மணப்பெண் 3, மணமகன் 4, குள்ளன் 1, யானைப்பாகன் 1, மன்னன் 8, காதலன் 9,  பணிப்பெண் 6 முனிவர் 4, திருடன் 1, பயணி 2, குணவான் 5, பெண்கள் 17.

விரஹி-Virahin (विरहिन्).—a. (-ī f.)- 7

1) Absent from, being separated from a mistress or lover;

கணவன் அல்லது காதலனைப் பிரிந்த பெண்

விரஹணி -கணவன் அல்லது காதலனைப் பிரிந்த பெண்- 12

விரக தாபம் என்பதைத் தமிழிலும் அகத்துறைப்பாடல்களில் காண்கிறோம்

****

உறவு முறை

தாய் 3, தந்தை 4, சகோதரர் 1, மகன் 7, மருமகள் 1, குழந்தை 1, நண்பன் 2.

உடல் உறுப்புகள்

கண் 3, புருவம் 5, உதடு 7, மூச்சு 1, பின்னல் 6, கை 6, புஜம் 3, நகம் 4, முலை 8, இடுப்பு/ஒட்டியாணம் 2, தொப்புள் 2, இடை 3..

பிராணிகள்

காளை 5, கரடி 1, சாமரி/கவரிமான் 1யானை 29, மான் 12 , கோபிரதரா/ நதியைக் கடக்கும் காட்டெருமை 1, குதிரை 1, நரி 1, சிங்கம் 5.

 தமிழ் இலக்கியத்தில் சிங்கத்துக்குப் பதிலாக புலியை அதிகமாக ஒப்பிடுகிறார்கள் ; இது அவரவர் வாழும் நிலத்தைக் காட்டுகிறது.

பறவைகள்– சாதகம் 1, சகோரம் 2, சக்ரவாக 4, குயில் 2, கருடன் 1, பருந்து 1, கிளி 1, புறா 1, மயில் 3, அன்னம் 9.

பூச்சிகள்

தேனீ 9, மின்மினி 1, வெட்டுக்க்கிளி 1,

ஊர்வன – பாம்பு 17.

இயற்கை/ உயிரற்றவை INANIMATE  

மேகம் 30, நாள் 3, பூமி 10, தீ 29, நகைகள் 46 , ஏரி 7, மின்னல் 7, சந்திரன் 72, மலை  18, இரவு 11, கிரகங்கள் 10, மழை 6, வானவில் 2ஆறு 39, கடல் 21, பருவம் 5, வானம் 6, பனி 3, சூரியன் 34, விடியற்காலம் 6, தண்ணீர்  12, காற்று 11.

காளிதாசன் இயற்கையோடு ஒன்றிய கவிஞன் என்பதை இயற்கை ஒற்றுமைகள் காட்டுகின்றன.  சங்கத் தமிழிலும் இவை அதிகம்.

****

இயற்கை/ உயிருள்ளவை

மூங்கில் 1, கிளை 2, மொட்டு 5, கொடி 14பூ 126 , காடு  1, பழம் 1, மாலை 2, புல் 5, மூலிகை 5, இலை 6, தாவரம் 6, முளை 13 , தண்டு 1, மரங்கள் 39,

****

மனிதன் உண்டாக்கிய பொருட்கள், கருவிகள், வாகனங்கள்

விமானம் 1, சிலம்பு 1, கொடி 1, முள்கம்பி 1, நாண் 3, விதானம் 3, ரதம் 3, கண்மை 7, , கதவு 2, டமாரம் 4, அம்பு 1, விசிறி 1, ஆடை 5, கச்சை 2, கோரோசனை 1, விளக்கு 9, மது1 மணமாலை 1, கண்ணாடி 3, நெக்லஸ்/ சங்கிலி 3 , பவுடர்/ 1, அளக்கும் கோல் 1, மதகு 1 , கம்பு 1, குடம்/குவளை 1,

மதில் 1, கடிவாளம் 1, கற்பலகை 1, ஊஞ்சல் 1, ஊன்றுதடி 1, வாள் 2, படி, சிந்தூரம், கோபுரம், குடை 2, உலாவுதல் , நுகத்தடி.2

****

ஏனைய தலைப்புக்கள்

நகர வாயில்2, நகரம் 1, வீடு 1, சுவர் 2.

கற்றல் 8, இசைக்கருவி 1, ஓவியம் 8, பாடல் 1, நீச்சல் 1,

ஓம் 2, கேள்வி 1, வேட்பவர் 1, ஸ்ம்ருதி 1, திலகம் 2,

தர்மம் 1 , புகழ் 1,நம்பிக்கை 1, பெருமை 1, சாதனை 1, அவதாரம் 5, சிந்தனை 1, சிரிப்பு 1, மனம் 1, தகுதி 1, புன்னகை 1, கண்ணீர் 5, வெற்றி 1.

தூசி  2, கிழக்கு, தோட்டம் 1, தேன் 1, இரும்பு 3, நிலம் 1, வெளிச்சம் 1, காந்தம் 1, சகதி 2, எண்ணெய் 1, பாதை 2, குளம் 1, பிரதிபலிப்பு 1, பாறை 2, புகை 1, நிழல் 1, இடி 1, கம்பம் 1, முகத்திரை 1, வலை 1, கிணறு 1, கருப்பை 1.

இவை அனைத்தும் உவமைகள் அல்லது உருவகங்கள் என்பதை நினைவிற் கொள்ளவேண்டும்; மேலும் இது அனைத்து உவமைகளின் பட்டியல் இல்லை என்பதையும் நினைவிற் கொள்ளவேண்டும்.

****

 இதே போல தமிழில்  ஒவ்வொரு நூலுக்கும் உவமைப் பட்டியல் இருந்தால் ஒப்பிட்டு ஆராய்வதற்கு உறுதுணையாக அமையும்

****

சங்க இலக்கியத்தில் உவமைகள் ; ஆசிரியர். சீனிவாசன், ரா. ; பதிப்பாளர். சென்னை : அணியகம் , 1997 ; மிக அருமையான நூல்.

இதே போல ஆங்கிலத்தில் M. Varadarajan’s The Treatment of Nature in Sangam Literature (Ancient Tamil Literature) அருமையான நூல்.

இந்த இரண்டு நூல்களும் கட்டுரைகளை எழுத மிகவும் பயன்படுகின்றன.

RESOURCE:

THE IMAGERY OF KALIDASA,  DR MRS VINOD AGGARWAL, DEPARTMENT OF SANSKRIT, UNIVERSITY OF DELHI, EASTERN BOOK LINKERS, DELHI, 1985 with my Inputs.

–subham—

Tags– காளிதாசன்,  வியப்பூட்டும்,  உவமை, பட்டியல், எண்ணிக்கை, வேத கால தெய்வங்கள்

Leave a comment

Leave a comment