பிள்ளையாரை முதலில் வணங்குவது ஏன்? (Post No.14,573)

Written by London Swaminathan

Post No. 14,573

Date uploaded in London –  31 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

வாதாபி கணபதிம் என்ற கர்நாடக சங்கீதப் பாடலை அறியாத இசை ரசிகர்கள் யாரும் இருக்க முடியாது . அதில் வரும் ஒரு வரியை எல்லா பாடகர்களும் பத்து முதல் முப்பது முறை வரை திரும்பத் திரும்பப் பாடுவார்கள் ; அதுதான் பிள்ளையாரை அல்லது யானையை இந்துக்கள் வணங்குவதற்கு காரணம்..

அது என்ன வரி ?

வக்ர துண்டம் பிரணவ ஸ்வரூபம் என்னும் வரியாகும். அடுத்த முறை இந்தப் பாடலை கேட்கும்போது ஒவ்வொரு பாடகரும் எத்தனை முறை இந்த வரியைச் சொல்கிறார்கள் என்று கணக்குப் போடுங்கள் அப்போது தெரியும் ஏன் யானை முகத்தோனை முதலில் வழிபடுகிறார்கள் என்று.

இந்தப் பாடல், திருவாரூரில் உள்ள மூலாதார கணபதியின் பேரில் பாடப்பட்டது. அந்த கணபதியை ‘வாதாபி கணபதி’ என்றும் அழைப்பார்கள் .சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் இந்தப் பாடலை இயற்றினார்.

பிள்ளையாரின் வளைந்த துதிக்கை பிரணவ மந்திரமான ஓம் என்னும் எழுத்தின் வடிவத்தில் இருக்கிறது. அந்த ஓம்தான் எல்லா வேத மந்திரங்களுக்கும் முதல் எழுத்து; அந்த எழுத்தைப் பிரித்துப் பார்த்தால் அ +உ+ ம  என்று வரும் இதனால்தான் பகவத் கீதையில் கண்ணன் நான் எழுத்துக்களில் ‘அ’ என்னும் எழுத்தாக இருக்கிறேன் என்கிறார் ; அதையே வள்ளுவரும் முதல் குறளில்   ‘அ’கர முதல எழுத்து எல்லாம் என்று தமிழில் சொன்னார்  ஆக உலகமே ஓம் என்னும் எழுத்தில் இருக்கிறது!

அது மட்டுமல்ல உலகமே பிக் பேங் BIG BANG  என்னும் ஒலியில் துவங்கியதாக விஞ்ஞானிகள் சொல்வார்கள்; அது உபநிஷதம் சொல்லும் உண்மை. இந்தப் பிரபஞ்சமே ஓம்கார ஒலியிலிருந்து துவங்கியது என்று நமது உபநிஷதங்கள் சொல்கின்றன  இவ்வளவு பெருமை உடைய இந்த ஒரு ஸப்தத்தைத் தியானம் செய்தே இறைவனை அடையலாம் என்பதால் இந்தியாவில் உதித்த சனாதன மதம் முதல் சீக்கிய மதம் வரை எல்லோரும் ஓம்காரத்தைப் போற்றுகின்றனர் இதனால்தான்  பிள்ளையாரை முதலில் வணங்குகிறோம்.அடுத்த முறை பிள்ளையார் சிலைக்கு முன்னால் நிற்கும்போது இந்த ஓம்காரத்தையும் மனதில் தியானியுங்கள்

****

திருவாரூர் வாதாபி கணபதி– ஷோடச கணபதி கீர்த்தனை

இந்தக் கீர்த்தனையில் அவர் பதினாறு விதமாக கணபதியின் பெருமைகளைச் சொல்வார்.

‘ஷோடச கணபதி கீர்த்தனை’ என்றும் அந்தக் கீர்த்தனைக்குப் பெயர் என்று அருட்சக்தி என்ற ஒரு பெரியவர் எழுதியுள்ளார்.

வாதாபி கணபதிம் பஜேஹம் வாரணாஸ்யம் வரப்ரதம் ஸ்ரீ

அனுபல்லவி

பூதாதி ஸம்ஸேவித சரணம் பூதபௌதிக ப்ரபஞ்ச பரணம்

வீதராகிணம் வினதயோகினம் விச்வகாரணம் விக்னவாரணம்

சரணம்

புராகும்ப ஸம்பவ முனிவர  ப்ரபூஜிதம் த்ரிகோண மத்யகதம்

முராரி ப்ரமுகாத்யுபாஸிதம் மூலாதார க்ஷேத்ரஸ்திதம்

பராதி சத்வாரி வாகாத்மகம் ப்ரணவஸ்வரூப வக்ரதுண்டம்

நிரந்தரம் நிடில சந்த்ரகண்டம் நிஜவாமகர வித்ருதேகக்ஷுதண்டம்

கராம்புஜபாச’பீஜாபூரம் கலுஷவிதூரம் பூதாகாரம்

ஹராதிகுரு ஹதோஷித பிம்பம் ஹம்ஸத்வனி பூஷித ஹேரம்பம்

பொருள்:

யானை முகம் கொண்டவராகவும் வரங்களைக் கொடுக்கின்றவராகவும்

விளங்கும் வாதாபி கணபதியை நான் வணங்குகிறேன் (பஜனை செய்கிறேன்).

பூதகணங்களால் வணங்கப்பட்ட திருவடிகளை உடையவர். பூமி, நெருப்பு, காற்று, நீர், ஆகாசம் ஆகிய ஐம்புதங்களையும் அவற்றாலான மற்ற உலகங்களையும் தரிப்பவர். ஆசையில்லாதவர்.

வணங்கப்படும் யோகியவர்களை உடையவர். உலகங்களுக்குக் காரணபூதர்.

இடையூறுகளைப் போக்கடிப்பவர்.

முன்காலத்தில் கும்ப சம்பவர் எனப்படும் அகஸ்தியர் என்னும்

சிறந்த முனிவரால் பூஜிக்கப்பட்டவர்.

மூன்று கோணங்களுடன் கூடிய யந்திரத்தின் நடுவில் இருப்பவர்.

விஷ்ணு முதலிய முதல்வர்களால் தியானிக்கப்பட்டவர்.

மூலாதார §க்ஷத்திரமான திருவாரூரில் இருப்பவர்.

பரா, பச்யந்தி, மத்யமா, வைகரீ ஆகிய நான்கு வித வாக்கு சொரூபமாக இருப்பவர்.

பிரணவ சொரூபமாக(ஓங்கார சொரூபமாக) வளைந்த முகத்தை உடையவர்.

எப்போதும் நெற்றியில் பிறை சூடியவர்.

தமது இடது கையில் வைத்திருக்கப்பட்ட கரும்புத்துண்டத்தை உடையவர்.

தாமரை போன்ற கையில் பாசக்கயிறு, கொய்யாப்பழம், மாதுளம்பழம்,

இவற்றை உடையவர். பாபமற்றவர்.

பூதம் போன்ற பெரிய உருவத்தை உடையவர்.

பரமசிவன் முதலியவர்களாலும் சிவகுருவாகிய முருகனாலும்

சந்தோஷிக்கப்பட்ட சொரூபத்தை உடையவர்.

ஹம்சத்வனி ராகத்தில் இன்பமுறும் யானைமுகத்தோன்

Thanks to Arutsakti website.

****

நான் முன்னர் ஒரு கட்டுரையில் எழுதியது:–

பழைய கதையைச் சுருக்கமாகக் காண்போம்:– இரண்டாவது புலிகேசி என்னும் சாளுக்கிய மன்னன் தமிழ்நாட்டில் காஞ்சீபுரத்திலிருந்து ஆண்ட மகேந்திர பல்லவ வர்மனைத் தோற்கடித்தான். அவனது மகன் பெயர் நரசிம்ம வர்மன். பெயருக்கு ஏற்ற நரசிங்கம்தான் அவன். தந்தையைத் தோற்கடித்த புலிகேசியைப் பழிவாங்க பரஞ்சோதி என்ற கமாண்டரின் (படைத் தளபதி)

தலைமையில் ஒரு படையை கர்நாடகத்திலுள்ள பாதாமிக்கு (வாதாபி) அனுப்பினான். அவர் சாளுக்கியப் படைகளைச் சிதறடித்தார். அங்கே பல்லவர்களின் கொடி பறக்கத் துவங்கியது. அப்போது அந்த நகரிலிருந்த கணபதியையும் எடுத்து வந்து தனது சொந்த ஊரான திருச்செங்காட்டங்குடியில் நிறுவினார். அதற்கு வாதாபி கணபதி என்று பெயர்.வாதாபியை எப்படி அகத்தியர் வெற்றிகண்டாரோ அப்படி நரசிம்ம வர்மன் வாதாபியை வென்றான் என்று பல்லவர் கல்வெட்டுகள் புகழாரம் சூட்டுகின்றன (வாதாபி ஜீர்ணோ பவ: கதையை தனியாக முன்னரே கொடுத்துள்ளேன்) இந்த வாதாபி கணபதி கதையை முத்துசாமி தீட்சிதரும் தனது ஹம்சத்வனி ராக கீர்த்தனையில் சொல்லுவது சிறப்புக்குரியது. எப்படியும் வரலாற்று ஆய்வுக்கும் வழிபாட்டுக்கும் பயன்படுகிறார் வாதாபி கணபதி.

 திருவாருருக்கு அருகில்தான் திருச்செங்காடங்குடி உளது. நரசிம்மவர்மனின் படைத் தளபதியாக இருந்த பரஞ்சோதிதான் பெரிய புராணத்தில் சிறுத்தொண்ட நாயனாராகத் தோன்றுகிறார். அவருடைய சிவபக்தியை அறிந்த பல்லவ மன்னன் அவரைப் போற்றி வணங்கி படைப் பொறுப்புகளிலிருந்து விடுவித்து இறைப்பணியைத் தொடர வேண்டுகிறான். அவருடைய ஊருக்கு கணபதீச்வரம் என்றும் பெயர்.

****

எனது மொழியியல் ஆராய்ச்சி 

கட்டுரையை முடிப்பதற்கு முன்னதாக கொஞ்சம லிங்குஸ்டிக்ஸ் / LINGUISTICS மொழியியல் ஆராய்ச்சியையும் காண்போம்.

வாதாபி என்னும் பெயரே பாதாமி என்று திரிந்தது

வா + தா+ பி = பா +தா+ மி

 என்பது ப ஆக மாறும் என்பது சங்கத் தமிழில் உள்ளது; சபை என்பதை அவை என்று எழுதுவர். இது அவஸ்தன் முதல் ஸ்லாவ்

மொழிவரை உலகம் முழுதும் உளது வருணன் என்னும் தெய்வத்தை ஸ்லாவ் மொழி பேசுவோர் பருண் என்று கும்பிட்டார்கள் இன்றும் வங்காளி, மொழி, அஸ்ஸாமிய மொழிபேசுவோர் நாம்   என்று சொன்னால்  என்பர்; நாம் வ என்று சொன்னால்  என்பார்கள் சிவ சாகர் என்ற ஊரின் பெயரை சிப் சாகர் என்றுதான் சொல்வார்கள் அதே போல மி  , 

என்பதும் வி ,  ஆக மாறும் நாமே பேச்சு வாக்கில் விழி என்பதை முழி என்கிறோம். இதற்கும் நிறைய ஆதாரம் உள்ளது ஆக வாதாபி என்பதே சரி; பாதாமி என்பது அதன் திரிபு; அதாவது பேச்சு வழக்கு.

இன்னும் ஒரு உதாரணம்

சா + ம+ ரி என்ற மானை வள்ளுவர் கவரி என்று சொன்னார்;  இதிலும்  என்னும் எழுத்து வ என்னும் எழுத்தாக மாறுகிறது. இந்த மானின் முடியை மன்னருக்கும் கடவுளுக்கும் வீசும்போது கவரி ஏந்தினர் அல்லது சாமரம் வீசினர் என்போம். இந்த மாற்றமும் உலகம் முழுதும் உள்ளது.

காரணம்?

உலகில் ஆதிகாலத்தில் சிவ பெருமானிடம் தோன்றிய தமிழ் மொழியும் சம்ஸ்க்ருத மொழியும் மட்டுமே இருந்தன.

இந்துக்கள் உலகம் முழுதும் கலாசார தீபத்தை ஏந்திக்கொண்டு சென்று நாகரீகத்தைப் பரப்பியதால் இந்த மொழியியல் விஷயங்கள் உலகின் எல்லா பழைய மொழிகளிலும் இருப்பதைக் காண்கிறோம்.

–சுபம்-

TAGS –வாதாபி கணபதிம் பாடல், பாதாமி, வாதாபி, வக்ர துண்டம் , பிள்ளையார் , முதல் வணக்கம், ஏன், மொழியியல் ஆராய்ச்சி கவரிமான் சாமரம்,

Leave a comment

Leave a comment