சங்க இலக்கியத்தில் நரகம்; புத்த மதத்தில் கொடிய நரகம் (Post.14,488)

Written by London Swaminathan

Post No. 14,488

Date uploaded in London –  8 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சங்க இலக்கிய நூல்களான அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, பதிற்றுப்பத்து ஆகிய நூல்களில் நரகம் பற்றிய குறிப்புகள் வருகின்றன நிரையம் என்றால் நரகம்; இந்தச் சம்ஸ்கிருதத் சொல்லை அவைகள் பயன்படுத்துகின்றன. தாயின் மனம் நரகம் போல சித்திரவதை செய்கிறது என்று காதல் வயப்பட்ட பெண்கள் புலம்புகின்றனர்.

சங்க இலக்கியத்தில் நிரையம்/ நரகம் வரும் இடங்கள் :

அகநானூறு -95-12;

நற்றிணை -236-5; 329-1;

குறுந்தொகை -258-6; 292-6;

பதிற்றுப்பத்து -15-4; 15-31

( புதிய விளக்க உரைகள் இதை கொடிய என்று எழுதி மழுப்பிவிடுகின்றன. பழைய உரைகளிலும் ஆங்கில மொழிபெயர்ப்புகளிலும் நரகம்/ HELL  என்றே காணப்படுகிறது).

ஆனந்தவிகடன் தமிழ் அகராதிப்படி நிரையம் என்பதற்கு நரகம் என்ற ஒரே அர்த்தம்தான் கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் அளறு என்பதற்கு சேறு , குழம்பு , நரகம் முதலிய பொருள்களும் உண்டு. வள்ளுவர் நரகம் என்ற பொருளில் மட்டும் பயன்படுத்தியுள்ளார்.

****

அளறு / நரகம் HELL என்பது திருக்குறளிலும் சங்கஇலக்கியத்திலும் வருகிறது

மதுரைக்காஞ்சி- 45

பரிபாடல் – 2-47; 6-18; 8-93; 10-73; 12-97

பதிற்றுப்பத்து- 27-13

 ****

நிரையம்

புத்தமத சம்ஸ்க்ருத நூல்களும் பாலி மொழி நூல்களும் இதை பயன்படுத்துகின்றன ; அவற்றின் பெயர்கள் –

1.மஹாவஸ்து – – சம்ஸ்க்ருதம் , பிராகிருதம், பாலி

2.அஸ்வகோஷர் எழுதிய புத்தசரிதம் – சம்ஸ்க்ருதம்

3.பலர் எழுதிய லலிதவிஸ்தாரம் – சம்ஸ்க்ருதம்

இவை அனைத்தும் சங்க இலக்கியத்தை விட அல்லது சமகாலத்திய நூல்கள். அதாவது 2000 ஆண்டுகள் பழமை உடைத்து.

மனு ஸ்ம்ருதி போன்ற நூல்கள் 21 நரகங்களின் பெயர்களை மட்டுமே சொல்லியது; அவற்றை விளக்கவில்லை. ஆனால் புத்த மத நூல்கள் அங்கே என்ன கொடிய தண்டனைகள் அளிக்கப்படுகின்றன என்று விளம்புகின்றன. இவை நமது புராணங்களில் உள்ள விஷயங்களே ; இவைகளைப் பார்க்கையில் வெள்ளைக்காரர்கள் புராணங்களுக்குக் கொடுத்த தேதி எல்லாம் தவறுஹிந்து புராணங்கள் இந்த புத்த மத நூல்களுக்கும் முந்தையவை என்பது விளங்கும். ஏனெனில் பெரும்பாலும் சம்ஸ்க்ருதப் பெயர்களையே இவை பயன்படுத்துகின்றன; அல்லது கொச்சையான சம்ஸ்க்ருதத்தில்– அதாவது பிராகிருதம் பாலி மொழிகளில் — இருக்கின்றன ; பிராகிருதம், பாலி  என்பன சம்ஸ்க்ருத மொழியின் பேச்சு வழக்கு; அதாவது கொச்சை மொழி ; புத்தர் ,அசோகர் போன்றவர்கள் இந்த பாலி மொழியையும் சமணர்கள் பிராகிருத மொழியையும் பயன்படுத்தினர் .

ஆகவே நரகத்தை வைத்து ஆராய்ச்சி செய்தால் புராணங்களின் பழமை விளங்கும்.

***

புத்த மதத்தில் நரகங்கள் எண்ணிக்கை அதிகம்!

எட்டு பெரிய நரகங்களும் அவை ஒவ்வொன்றுக்கும் பதினாறு துணை/ குட்டி நரகங்களும் இருப்பதாக அவை வருணிக்கின்றன.

நரகத்தில் சித்திரவதை

தலை கீழாகத் தொங்கவிட்டு வெட்டுதல், தீயில் வாட்டுதல் ;

அக்கினி போல தகிக்கும் அனலில் வெந்து தாகத்துக்குத் தண்ணீரைத் தேடித்  தேடி, இருட்டில் நிழல் என்று நுழைத்தால் , அங்கு கத்தி போலுள்ள இலைகளால் வெட்டப்படுத்தல்

அங்கம் அங்கமாக வெட்டப்படுத்தல்; கத்தியால் குத்தப்படுத்தல்; 

புத்தமத நூல்கள் குளிர் நடுக்கும் நரகம்வெயில் தகிக்கும் நரகம் என்று இரண்டு வகைகளாகப் பிரித்து ஒவ்வொன்றிலும் எட்டு நரகங்கள் இருப்பதாக இயம்புகின்றன.

எட்டு பெரிய நரகம் பதினாறு துணை நரகம் பற்றி மஹாவஸ்து நூல் எடுத்துரைக்கிறது.

***

அஸ்வகோஷர் புத்த சரித நூலில்  சொல்வதாவது ,

கர்மவினைக்கு ஏற்ப வண்டி மாடாகவோ, ரதத்தின் குதிரையாகவோ அல்லது யானையாகவோ பிறந்து குச்சியாலும் சாட்டையா லும் அ ங்குசத்தாலும் அடிபட்டு ரத்தக் காயங்களை அடைவர் ;

எரியும் நிலக்கரியில் வாட்டப்படுவர்; அல்லது இரும்புச் சட்டியில் வதக்கப்படுவார்கள்.

தபன், பிரதபன் நரகங்களில்  வதைக்கப்படுவர்; சுடப்படுவர்.  சஞ்சிவ நரகத்தில் தலை கீழாகத் தொங்கவிட்டு வெட்டப்படுவார்கள்.

சில தீயவர்களை, நாய்கள் கடித்து விழுங்கும். அந்த நாய்களுக்கு இரும்புப் பற்கள் கத்தி வடிவத்தில் இருக்கும் .

சிறிய நரகங்களில் சாம்பலாலும் தீப்பொறிகளாலும் தீயோர்கள் சுடப்படுவார்கள். கால சூத்ர நரகத்தில் கம்பியினாலான சாட்டைகளால் அடிக்கப்படுவார்கள்.

இவைகளையெல்லாம் அவர் 2200 ஆண்டுப் பழமையான மஹாவஸ்து நூலிலிருந்து எடுத்துரைக்கிறார்.

Source book :

Asvaghosa and His Times, Sarla Khosla, 1986 with my inputs.

—subham—

Tags- சங்க இலக்கியத்தில்,  நரகம்,  புத்த மதத்தில்,  கொடிய நரகம் , நிரையம், அளறு, அஸ்வகோஷர், லலிதவிஸ்தாரம், மஹாவஸ்து

வெற்றி பெற மோடிவேஷன்!  (உணர்வூக்கம்!) தேவை! (Post.14,487)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,487

Date uploaded in London – –8 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 26-3-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கட்டுரை

வெற்றி பெற மோடிவேஷன்! (உணர்வூக்கம்!) தேவை! 

ச. நாகராஜன் 

வாழ்க்கையில் வெற்றிபெற உணர்வூக்கம் எனப்படும் மோடிவேஷன் தேவை.

எங்கிருந்து உத்வேகம் பெற்றாலும் அது நல்லது தான்.

முதலில் நாம் குறிக்கோளை நிர்ணையித்துக் கொள்ள வேண்டும். அதை நோக்கி நடை பயில வேண்டும்.

அப்பர் பெருமானே (திருநாவுக்கரசர்) “குறிக்கோளின்றிக் கெட்டேனே” என்கிறார்.

ஆலிஸ் இன் வொண்டலேண்டில் (Alice in Wonderland)  ஒரு அற்புதமான காட்சி.

பாதைகள் இரண்டாகப் பிரிகின்றன.

செஷைர் கேட்டை நோக்கி ஆலிஸ் கேட்கிறாள் (Alice and Cheshire cat)

 : “பாதைகள் இரண்டாகப் பிரிகின்றனவே. எந்தப் பாதையில் செல்வது?”

அதற்கு செஷைர் கேட் கூறுகிறது; “ அது நீ எங்கு செல்ல வேண்டும் என்பதைப் பொறுத்திருக்கிறது. (It depends upon where you want to get into!)

ஆலிஸ் : நான் எங்கு செல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியாதே!

(I don’t know where I want to get into!)

செஷைர் கேட்: அப்படியானால் நீ எந்தப் பாதையில் போனாலும் பரவாயில்லை!

(Then it does not matter in which way you go!)

அற்புதமான இந்த உரையாடல் குறிக்கோளின்றிச் சென்றால் போகும் பாதை எங்கு கொண்டு போய் விடும் என்பது நமக்குத் தெரியாது என்பதைத் தான்!

டபிள்யூ க்ளிமெண்ட் ஸ்டோன் கூறியதை நினைவில் இருத்த வேண்டும். அவர் கூறினார். “எப்போதெல்லாம் ஒரு மனிதனிம் மனம் சாதனையைச் செய்ய நிர்ணயிக்கிறதோ அப்போதெல்லாம் அது வெற்றி பெறுகிறது!”

குறிக்கோளுடன் செல்லும் போது சின்னச் சின்ன வெற்றிகள் ஏற்படும். அப்போது அவற்றைக் கொண்டாடி உங்களை நீங்களே பாராட்டிக் கொண்டு இன்னும் அதிக ஊக்கம் பெறுங்கள்.

எவரெஸ்டில் ஏறி வெற்றி கொண்ட டென்சிங் ஒவ்வொரு அடியாகத் தான் முன்னேறினார். வெற்றி பெற்றார்.

ஏன் இந்தக் குறிக்கோள் எனக்கு முக்கியம் என்பதை அடிக்கடி கேட்டு பதிலைப் பெற்றால் வேறு பலவற்றில் மனம் செல்லாது; நேரமும் சக்தியும் திறமையும் வீணாகாது!

ஆக்கபூர்வமான சிந்தனை மிக முக்கியம். அத்துடன் நேரத்தையும் வேலைகளையும் ஒழுங்குபடுத்தி நிர்வகிப்பதும் மிக முக்கியம்.

ஒவ்வொரு திறமையும் கஷ்டப்பட்டு கற்றுக் கொண்ட திறமையே தான்! அது யாரிடம் இருந்தாலும் சரி, இது தான் உண்மை!

உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்!

உங்களுடைய கருவிகள், நேரம், கருத்துக்கள் அனைத்தையும் மட்டுமே மனதில் கொண்டு அவற்றை உரிய முறையில் பயன்படுத்தினால் தேவையற்றவை உங்களைக் குழப்பத்தில் ஆழ்த்தாது. வெற்றி பெற முடியாதோ என்ற பயத்தை ஏற்படுத்தாது.

வெற்றி பெற்றவர்களின் பட்டியல் ஒன்றைத் தயாரித்து அவர்கள் வெற்றி பெற்றது எப்படி என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

மேலே கூறியவற்றை நன்கு புரிந்து கொள்ள அது உதவும்!

வெற்றி பெற வாழ்த்துக்கள்!

***

Pictures of 2500 Indian Stamps!- Part 31 (Post No.14,486)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 14,486

Date uploaded in London – –7 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

PART 31

Stamps posted today include 1987 STAMPS,

Centenary of South Eastern Railway, THREE TRAIN STAMPS, ALLIGATOR, ELEPHANT, CORBETT NATIONAL PARK, FREEDOM FIGHTERS, T SATYAMURTI, RAMASWAMY CHOWDHRY, KAILASHNATHU KATJU, M N ROY, LALA HAR DAYAL, AJMAL KHANA, FALY PLANNING, HAPPY FAMILY, TANSEN, UNICEF, CHILD, FAMILY PLANNING TRIANGLE, WIND ENERGY, SOLAR ENERGY, BIO GAS, ST MARTHA’S HSOSPITAL, INDIAN SAILING EXPEDION , PANDIT HRUDAYNATHA KUNZRU, ARICA FUND , ICC CONGRESS, ANNIVERSAY OF INDIAN POLICE

–Subham—

Tags Part 31, 2500 Indian Stamps, YEAR 1987, Centenary of South Eastern Railway, THREE TRAIN STAMPS, ALLIGATOR, ELEPHANT, CORBETT NATIONAL PARK, FREEDOM FIGHTERS, T SATYAMURTI, RAMASWAMY CHOWDHRY, KAILASHNATHU KATJU, M N ROY, LALA HAR DAYAL, AJMAL KHANA, FALY PLANNING, HAPPY FAMILY, TANSEN, UNICEF, CHILD, FAMILY PLANNING TRIANGLE, WIND ENERGY, SOLAR ENERGY, BIO GAS, ST MARTHA’S HSOSPITAL, INDIAN SAILING EXPEDION , PANDIT HRUDAYNATHA KUNZRU, ARICA FUND , ICC CONGRESS, ANNIVERSAY OF INDIAN POLICE , ANIMAL STAMPS,

Rare Pictures from Times Group, Bombay- 2(Post 14,485)

Written by London Swaminathan

Post No. 14,485

Date uploaded in London –  7 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Book Title- India Illustrated

Contents-A Collection of pictures of the cities Calcutta, Bombay, Madras

Together with a Selection of most interesting  Buildings and scenes throughout India.

Publishers

Bennet  Colman & Co

The Times Press

Bombay.

Part 2/ last aaprt

I have  not taken the pictures of all the pages in the book; but I have covered Madras in full.

Here we go,

Sri Rangam, TrichyFort, Amritsar Golden Temple, Taj Mahal  Delhi Iron Pillar Kutubminar, Hindu Fakir, Palani Tamil devotees, Basket makers, Sugarcane press in village,  Lamanis, Blind Beggars, Udaipur Temple, Haridwar, Temple, Village weavers, East entertains west

—-subham—–

Tags- Times group, Rare Pictures, , Madras, Sri Rangam, Temples , Part two, Trichy Fort, Kaveri Waterfalls, Indian teaching white children,  Naga tribe, Sri Rangam, TrichyFort, Amritsar Golden Temple, Taj Mahal  Delhi Iron Pillar Kutubminar, Hindu Fakir, Palani Tamil devotees, Basket makers, Sugarcane press in village,  Lamanis, Blind Beggars, Udaipur Temple, Haridwar, Temple, Village weavers, East entertains west, last part.

Is Hell Real or Not? List of 21 Hells from Manu Smriti-2 (Post No.14,484)

Written by London Swaminathan

Post No. 14,484

Date uploaded in London –  7 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 Is Hell Real or Not?  List of 21 Hells from Manu Smriti-2 (Post No.14,484)

SECOND PART

Ramana Maharishi on Hell

Talk 41

22nd September, 1936
Talk 41.

D.: Are there heaven (swarga) and hell (naraka) ?
Maharshi: There must be someone to go there. They are like dreams. We see time and space exist in dream also. Which is true, dream or wakefulness?
D.: So we must rid ourselves of lust (kama [?]), anger, (krodha ), etc.

Maharshi:
 Give up thoughts. You need not give up anything else. You must be there to see anything. It is the Self. Self is ever-conscious.

D.:
 Are pilgrimages, etc., good?
Maharshi:
 Yes.

***

Whatever you do, you can either do it willingly or unwillingly. If you do it willingly, it will be heaven. If you do it unwillingly, it will be hell. ~ Sadhguru Jaggi Vasudev.

***

Tamil Saint Manikka vasagar also sang about Naraka/hell in many places. He mentioned 21 types of Hell as well.

***

Asvaghosa , author of Buddhacarita, described all the tortures in the Hell. Buddhist scriptures talk about Major hells and Minor hells. Their number exceeds Hindu’s 21 hells.

***

Is there a hell under the earth or up above in the sky?  No

Following is from Wisdom Library.com

यो राज्ञः प्रतिगृह्णाति लुब्धस्यौच्छास्त्रवर्तिनः ।
स पर्यायेण यातीमान्नरकानेकविंशतिम् ॥ ८७ ॥

yo rājñaḥ pratigṛhṇāti lubdhasyaucchāstravartinaḥ |
sa paryāyeṇa yātīmānnarakānekaviṃśatim || 87 ||

He who accepts gifts from a king who is avaricious and behaves contrary to the scriptures, goes, in succession, to these twenty-one hells:—(87)

Medhātithi’s commentary (manubhāṣya):

This is an exaggerated deprecation of receiving gifts from Kings.

Avaricious’—who is in the habit of extracting riches from his subsidiary chiefs.

Who behaves contrary to the scriptures’—he who acts against the laws laid down under 11-2 2 et. seq., and inflicts undue punishments, confiscates the women, and so forth.

In succession’—i.e., he goes to another hell after having experienced the sufferings of one.

Hell.’—This term signifies extreme suffering; and, since extreme suffering is all that is meant to be expressed, the singular number would be the proper form; and the number ‘twenty-one’ is an exaggerated description.—(87)

Comparative notes by various authors

(verses 4.87-91)

Viṣṇu Purana (43.1-22).—‘The Hells are as follows—

1.     Tāmisra,

2.     Andhatāmisra,

3.     Raurava,

4.     Mahāraurava,

5.     Kālasūtra,

6.     Mahāmaraka,

7.     Sañjīvana,

8.     Avīci,

9.     Tāpana,

10.Sampratāpana,

11.Saṅghātaka,

12.Kākola,

13.Kuḍmala,

14.Pūtimṛttika,

15.Lohaśaṅku,

16.Ṛcīṣa,

17.Viṣamapathin,

18.Kaṇṭakaśālmali,

19.Dīnapadī,

20.Asipatravana,

21.Lohacāraka.’

Skandapurāṇa (quoted in Parāśaramādhava, p. 199).—‘The man who has been brought up on gifts from the king becomes a Brahmarākṣasa in the water-less desert, and docs not obtain another birth. The man who, having renounced his Brāhmaṇahood, and deluded by greed for riches and for sensual objects, accepts gifts from the king, his fall into the Raurava hell is certain. Even trees burnt by forest-fíres grow again on the advent of rain; but those that have been burnt by gifts from the king never grow again.’

तामिस्रमन्धतामिस्रं महारौरवरौरवौ ।
नरकं कालसूत्रं च महानरकमेव च ॥ ८८ ॥
सञ्जीवनं महावीचिं तपनं सम्प्रतापनम् ।
संहातं च सकाकोलं कुड्मलं प्रतिमूर्तिकम् ॥ ८९ ॥
लोहशङ्कुं ऋजीषं च पन्थानं शाल्मलीं नदीम् ।
असिपत्रवनं चैव लोहदारकमेव च ॥ ९० ॥

tāmisramandhatāmisraṃ mahārauravarauravau |
narakaṃ kālasūtraṃ ca mahānarakameva ca || 88 ||
sañjīvanaṃ mahāvīciṃ tapanaṃ sampratāpanam |
saṃhātaṃ ca sakākolaṃ kuḍmalaṃ pratimūrtikam || 89 ||
lohaśaṅkuṃ ṛjīṣaṃ ca panthānaṃ śālmalīṃ nadīm |
asipatravanaṃ caiva lohadārakameva ca || 4-90 ||

(1)  Tāmisra, (2) Andhatāmisra, (3) Mahāraurava, (4) Raurava, (5) Kālasūtra-Naraka, (6) Mahānaraka, (7) Sañjīvana, (8) Mahāvīci, (9) Tāpana, (10) Sampatāpana, (11) Saṃhāta, (12) Sakākola, (13) Kuḍmala, (14) Pūtimṛttika, (15) Lohaśaṅku, (16) Ṛjīṣa, (17) Pathin, (18) Śālmalī, (19) Nadī, (20) Asipatravana and (21) Lohadāraka.—(88-90).

****

MEANINF OF HELLS

 1.‘Tāmisra,’ darkness,

  1. Andhatāmisra’, dense darkness,—
  2. Mahāraurava-Raurava’, abounding in hot sands,—
  3. Kālasūtra,’ resembling the potter’s cutting string,—
  4. Mahānaraka’, where all sorts of dire sufferings are gone through,—
  5. Sañjīvanam’, where one is repeatedly killed and brought to life,—
  6. Mahāvīci’, where large waves tumble about,—
  7. Tapana’, resembling flaming fire,—
  8. Sampratāpana’ is another name for the Kumbhīpāka,—
  9. Saṃhāta’ over-crowded,—
  10. Kākola’, where people are devoured by crows,—
  11. Kuḍmala,’ where there is whipping with cords,—
  12. Pūtimṛttikam’ where the earth smells like filth,—
  13. Lauhaśaṅku’, pricks like the needle,—
  14. Ṛjīṣa’, where rotten flour is thrown,—
  15. Panthā’, where one is constantly on the move,—
  16. Śālmala’, where people are pierced by thorns of the Śālmalī tree,—
  17. Nadī’, where one is washed away by such streams as the Vaitariṇī and the like—
  18. Lohacāraka,’ where there is chaining in irons.

एतद् विदन्तो विद्वांसो ब्राह्मणा ब्रह्मवादिनः ।
न राज्ञः प्रतिगृह्णन्ति प्रेत्य श्रेयोऽभिकाङ्क्षिणः ॥ ९१ ॥

etad vidanto vidvāṃso brāhmaṇā brahmavādinaḥ |
na rājñaḥ pratigṛhṇanti pretya śreyo’bhikāṅkṣiṇaḥ || 4-91 ||

Knowing this, the learned Brāhmaṇas reading the Vedas do not accept gifts from a king, if they desire to secure welfare after death.—(91)

 ******

To be continued………………………………………..

Tags- Hell, Real or not, Ramana, Sadguru, Buddhist scriptures

GNANAMAYAM 11TH MAY  2025 SUNDAY BROADCAST PROGRAMME


Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 1 PM (British Summer Time)

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time .

***

Prayer by Mrs Jayanthi Sundar Team:

***

World Hindu News in Tamil  presented by Vaishnavi Anand from London and Gomathi Karthikeyan from Chennai.

***

Mrs. Brahannayaki Sathyanarayan speaks on Tiruchirapalli Shrine.

****

Song by Sathyarthi Chandrasekharan , Japanese- English- Tamil translator, Interpreter; On line Music Teacher, Guildford, UK

****

Speech by Bengaluru S Nagarajan,

Topic- Saint Kachiappa Sivachariyar

*** 

SPECIAL EVENT- 

Talk by MR. MURUGA BARATHI from Pudukkottai; Motivational Speaker, Author of 13 books, Running his own e Magazine Nalla Seithi. 

****

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

****

11-5-2025 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சிநிரல்

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்:

****

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த் மற்றும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயன்

***

ஆலயம் அறிவோம் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் —

தலைப்பு –  திருச்சிராப்பள்ளி தலம்

****

பாடல் – சத்யார்த்தி சந்திரசேகரன் , ஜப்பானிய- ஆங்கில- தமிழ் மொழிபெயர்ப்பாளர், ஆன் லைன் சங்கீத ஆசிரியர் , லண்டன்.

***

பெங்களூரு ச. நாகராஜன் உரை ,

தலைப்பு– மகான் கச்சியப்ப சிவாசாரியார்

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

சொற்பொழிவு நிகழ்த்துபவர் –

திரு. முருகபாரதி,  மனித வளப் பயிற்றுநர்புதுக்கோட்டை

*****

Anchored by London Swaminathan from London and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham—

Tags- GNANAMAYAM ,11-5-2025, BROADCAST, PROGRAMME

துறவிக்கு, வேந்தனுக்கு, வீரனுக்கு எவர் துரும்புக்குச் சமம்- Part 2 (Post No.14,483)

படம்- சீன மன்னர் கதை :உள்ளே காண்க 

Written by London Swaminathan

Post No. 14,483

Date uploaded in London –  7 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

துறவிக்கு, வேந்தனுக்கு, வீரனுக்கு எவர் துரும்புக்குச் சமம்- Part 2 (Post No.14,483)

Part-2

பெண்போகம் ஒரு துரும்பு !கல்யாண ஊர்வலத்தில் மனம் மாறிய மாப்பிள்ளை!

நேமி என்பவர் சமுத்ரவிஜயன் என்ற மன்னரின் மகன். அவர் ஷௌரிபூர் என்ற சிறிய பிரதேசத்துக்கு மன்னர். நேமிக்கும் ராஜ்மதி என்ற இளவரசிக்கும் திருமணம் நிச்சயமாகியது. அவள் பவநகர் மன்னன் உக்ரசேனனின் மகள். ராஜா வீட்டுக் கல்யாணம் என்றால் கேட்கவா வேண்டும். ஊரே அலங்காரம் செய்யப்பட்டது. மேளதாள, தாரை, தம்பட்டையுடன் பெரிய மாப்பிள்ளை அழைப்பு  ஏற்பாடாகியது!

யானை, ஒட்டகம், அலங்கரிக்கப்பட்ட மாடுகள் , ஆடல், பாடல் கலைஞர்களுடன் மாபிள்ளை நேமி ஊர்வலத்தில் வந்தார். அவர் வந்த ரதம் பிரமாதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இளவரசி ராஜ்மதி எனப்படும் ரஜூலை தோழிகள் கிண்டல் செய்த வண்ணம் இருந்தனர். அவள் அரண்மனை சாளரத்திலிருந்து, வழி மேல் விழி வைத்து, ஊர்வலத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கல்யாண மப்பிள்ளை அழைப்பு ஊர்வலம், அரண்மனையிலுள்ள கல்யாண மண்டபத்தை நெருங்கிவந்துவிட்டது.

அப்பொழுது ஒரே ஆடுமாடுகளின் கோழி, கௌதாரிப் பறவைகளின் ஓலம் கேட்டது. மாப்பிள்ளைக்கு சிறிய சந்தேகம். தனது தோழர்களிடம் இது என்ன இரைச்சல்? என்று கேட்டார். உடனே அவர்கள் அரசாங்க அதிகாரிகளிடம் கேட்க, அவர்கள் பெருமையுடன், எல்லாம் உங்கள் கல்யாண விருதுக்குத்தான்! இன்று கனஜோரான விருந்து கிடைக்கப்போகிறது– என்றனர்.

அதைக்கேட்ட மாப்பிள்ளை வண்டியிலிருந்து குதிக்கப் போனார். அவர்கள் எல்லோரும் என்ன ? என்ன ஆயிற்று? என்று வினவ, மாப்பிள்ளை எனக்குக் கல்யாணமும் வேண்டாம், கார்த்திகையும் வேண்டாம்; ரதத்தை கிர்னார் மலையை நோக்கிச் செலுத்துங்கள் என்று கட்டளையிட்டார். ரதம் எதிர் திசையில் செல்ல ஆரம்பித்தவுடன் மேளதாளங்கள் நின்றன. ஒரே பரபரப்பு. பெண் வீட்டாருக்கும் செய்தி பரவியது. ஊரே அமைதியில் ஆழ்ந்தது.

பாதி ஊர்வலத்தில் மனம் மாறிய நேமி, சமணமதத் துறவியாகப்போவதாக அறிவித்துவிட்டு கிர்னார் மலையில் சமணத் துறவிகளிடம் தஞ்சம் அடைந்தார்.

குஜராத்திலுள்ள கிர்நார் மலை பலவகைகளிலும் புனிதம் பெற்ற இடம். கண்ண பிரான் முதல் சமணத்துறவிகள் வரை எல்லோரும் பழகிய இடம். இப்பொழுது அசோகன், ருத்ரதாமன், குப்தமன்னரின் கல்வெட்டுகள் அந்த மலையை அலங்கரிக்கின்றன.

இளவரசி ரஜூலுக்கு முதலில் மன வருத்தம்; பெரிய ஏமாற்றம். 51 நாட்கள் வரை, ஒரு வேளை மணமகன், மனம் மாறிவிடக்கூடும் என்று காத்திருந்தார். ஆனால் வரவில்லை. சிறிது சிறிதாக அவர் மனதிலும் மாற்றம் உண்டானது. என்னை அடைவதைவிட ஒரு இன்பமான நிலையை என் கணவராவதற்கு இருந்த நேமி, அடையமுடியுமானால் அதே இன்பத்தை நானும் நுகர்வேன் என்று அவரும் கிர்நார் மலைக்குச் சென்று துறவி ஆனார்.

ரஜூல் என்ற ராஜ்மதி உடனே துறவியானதாகச் சில நூல்களும் சில காலத்துக்குப் பின்னர் துறவியானதாகச் சில நூல்களும் செப்பும். மேலும் இடைக்கால கவிஞர்கள் இதையே ஒரு காதல் காவியமாக மாற்றி விரகதாப பாடல்களும் எட்டுக்கட்டிவிட்டனர். நேமி- ராஜூல் மணமுறிவு, ஒரு புது வகை இலக்கியத்தையே படைத்துவிட்டது.

அதையெல்லாம் விட மிகப்பெரிய விஷயம் அந்த நேமி என்பவர்தான் சமணர்கள் போற்றும் 22ஆவது தீர்த்தங்கரரான நேமிநாதர். அவருக்குப் பின்னர்தான் வர்த்தமான மஹாவீரர் அவதரித்தார். அவர் புத்தருக்குக் கொஞ்சம் சீனியர்.

நேமிநாதரின் மற்றொரு பெயர் அரிஷ்ட நேமி. இவர் கிருஷ்ணருக்கு உறவினர் என்றும் அதே யாதவ குலத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரது பெயர், ரிக் வேதம் முதலிய நூல்களில் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர் பகர்வர். அவர் எந்தக் காலத்தைச் சேர்ந்தவரானாலும் போற்றுதலுக்குரிய புண்ணிய புருஷர் என்பதில் ஐயப்பாட்டுக்கு இடமில்லை.

“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும்  தொழும்” என்று வள்ளுவப் பெருந்தகை சொன்னது இவர் மூலம் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது. கொல்லாமை விரதம் பூண்டோருக்கு பிற தர்மம் தேவை இல்லை என்றும் வள்ளுவர் கருதுவார்.

இந்துமத யோகிகளும் சந்யாசம் ஏற்கையில் மனம் , மொழி, மெய் ஆகிய மூன்றினாலும் எவ்வுயிர்க்கும் தீங்கு செய்ய மாட்டேன் என்று விரதம் ஏற்பர். வள்ளுவனும் இக்கருத்தைத் துறவறவியலில் கூறுவதைக் காண்க.

*****

துறவிக்கு வேந்தன் (ராஜா) துரும்பு; அவர் கோபப்பட்டால் பெரும் அரசுகள் கவிழும் என்று வள்ளுவரும் திருக்குறளில் எச்சரிக்கிறார்.

படம்–சொர்க்கத்திலிருந்து நகுஷன் விழுந்த கதை (see first part of this article)

சாது மிரண்டால் காடு கொள்ளாது!

தமிழில் ஒரு பழமொழி உண்டு. சாதுக்கள் கோபிக்கமாட்டர்கள். ஆனால் அவர்களுக்குக் கோபம் வந்தாலோ அரசாட்சியே கவிழ்ந்துபோகும்.

வித்யாரண்யர் அருளால், விஜயநகரப் பேரரசு தோன்றி தென்னாட்டில் முஸ்லீம் ஆட்சிக்கு சாவு மணி அடித்தது. மகாராஷ்டிரத்தில் சமர்த்த ராமதாஸ் அருளால் வீர சிவாஜி உருவாகி மொகலாய சாம்ரஜ்யத்துக்கு சாவு மணி அடித்தார். இதற்கு முன் சாணக்கியனின் கோபம் நந்த வம்சத்தை வேரறுத்து மௌரியப்பேரசை நிறுவியது.

 பழங்காலத்தில் அகஸ்தியரைப் பகைத்த நகுஷன் அழிந்தான்; வேனன், சுமுகன் முதலிய கொடுங்கோல் மன்னர்கள் அழிந்து போனதை மனு நீதி சாத்திரம் பட்டியல் போட்டுத் தரும். வள்ளுவனும் தன் குறளில் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதைப் “பெரியாரைப் பிழையாமை” அதிகாரத்தில் கூறுகிறார்:

 குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியோடு

நின்றன்னார் மாய்வர் நிலத்து (898)

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுறிந்து

வேந்தனும் வேந்து கெடும் (899)

பொருள்: குணத்தினால் உயர்ந்த பெரியோர்கள், ஒருவனை அழிக்க நினைத்தால், அவன் குலமே அழிந்து போகும்.

உயர்ந்த கொள்கையுடைய சான்றோர் வெகுண்டெழுந்தால், நாடாளும் அரசன் முறிந்து வீழ்வான்.

இதை விளக்கும் ஒரு சம்பவம் சீனாவில் நடந்தது:-

சின் வம்ச முதல் அரசன் (கி.மு.221-206), சீனாவின் ஒரு பெரிய நிலப்பரப்பை ஆண்டுவந்தான். அருகாமையிலிருந்த ஒரு சின்ன நாட்டின் பகுதியைத் தனக்குத் தரவேண்டுமென்று மிரட்டினான். அதை ஏற்க மறுத்த அந்த சிறிய நாட்டின் அரசன் ஒரு தூதரை சமாதானம் பேச அனுப்பினான். அந்தக் காலத்தில் தூது போவோர் பெரிய அறிஞர்களாக இருப்பர். இந்தியாவில் பிராமணர்கள் தூதர்களாகப் பணியாற்றியதை சங்க இலக்கியமும், தொல்காப்பியமும் கூறும்.

சீனாவில் சின் வம்ச அரசன், சின்ன நாட்டின் தூதரைப் பார்த்துச் சொன்னான்:

“ஓய் அறிஞரே! ஒரு மன்னனுக்குக் கோபம் வந்தால் என்ன நடக்கும் என்பது உமக்குத் தெரியுமா?

அறிஞர்: மன்னவா, எனக்குத் தெரியாது.

மன்னன்: ஒரு மன்னனுக்குக் கோபம் வந்துவிட்டால் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு லட்சக் கணக்கான சடலங்கள்தான் இருக்கும்.

அறிஞர்: ஒரு அறிஞருக்குக் கோபம் வந்தால் என்ன நடக்கும் என்பது தெரியுமா?

மன்னர்: ஹூம்! தொப்பியையும், காலணிகளையும் கழற்றி எறிவார். மண்டையை நிலத்தில் மோதி உடைத்துக் கொள்வார். இது என்ன தெரியாதா?

அறிஞர்: ஓ, அது முட்டாள்கள் செய்யும் வேலை. 

இப்படிச் சொல்லிவிட்டு அந்த அறிஞர் அந்த மன்னனுக்கு முன்னோர் காலத்தில் நடந்த மூன்று சம்பவங்களை அருமையான கவிதை நடையில் பொழிந்து தள்ளினார். கொடுங்கோல் மன்னர்களை அந்த அறிஞர்கள் தீர்த்துக் கட்டியது பற்றிய கவிதைகள் அவை.

மன்னவா! அந்த மூன்று பேர் பட்டியலில் இன்று என் பெயரும் சேரப்போகிறது. இதோ உமக்கும் எனக்கும் உள்ள ஐந்து அடி இடைவெளியில் இரண்டே சடலங்கள்தான் இன்று இருக்கும். இதோ பார்! என்று சொல்லியவாறே அறிஞர் தன் வாளை உருவினார். 

மன்னன் நடுநடுங்கிப் போனார். 

மன்னர்: அறிஞரே நிறுத்துங்கள்;அவசரம் வேண்டாம். தயவுசெய்து அமருங்கள். இப்பொழுது எனக்கு விளங்கிவிட்டது. மிகப்பெரிய சாம்ராஜ்யங்களான ஹான், வெய் போன்றவை அழிந்த போதிலும் உமது நாட்டைப் போன்ற சிறிய நாடுகள் உயிர்பிழைத்தது எப்படி என்பது விளங்கிவிட்டது. உங்களைப் போன்ற அறிஞர்கள் இருப்பதால்தான் நுமது நாடு இன்னும் வாழ்கிறது”. 

மன்னனை அடக்கிய அறிஞனின் கதை இது!

—SUBHAM—-

TAGS—துறவிக்கு, வேந்தனுக்கு, வீரனுக்கு, எவர் துரும்பு,

குமரேச சதகம், ஆராய்ச்சிக் கட்டுரை 7, part 2

இலந்தை உடலுக்குத் தரும் நன்மைகள்! (Post.14,482)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,482

Date uploaded in London – –7 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

28-3-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை 

போஜன குதூகலம்

இலந்தை உடலுக்குத் தரும் நன்மைகள்! 

ச. நாகராஜன்

போஜன குதூகலம் என்ற பழம் பெரும் நூல் உணவு பற்றிய பலவித உண்மைகளைத் தெளிவாக விளக்கும் நூல் 

அதில் இலந்தையைப் பற்றி வரும் பகுதி இது: 

இலந்தை இனிப்பும் சற்று கசப்பும் புளிப்பும் உள்ளது. நன்கு பழுத்தது இனிப்பும் புளிப்புமே உள்ளது.

கபத்தையும், வாயுவையும், அதிசாரம், இரத்த நோய், களைப்பு, வரட்சி ஆகியவற்றையும் போக்கும். நல்ல சுவை உள்ளதாகும்.

இவை இலந்தையின் பொதுவான தன்மைகளாகும்.

இராஜபதரம் எனப்படும் பெரும் இலந்தை குளிர்ச்சியுள்ளது.

தாகம், பித்தம், வாதம் ஆகியவற்றைப் போக்கும். காமத்தைக் கொடுக்கும். வீரியத்தை வளர்க்கும். வறட்சி, களைப்பு ஆகியவற்றைப் போக்கும். 

பூபதரம் என்னும் நில இலந்தை குளிர்ச்சியுள்ளது. இவ்விலந்தையின் சுவை இனிப்பும் புளிப்புமாகும். இதனால் கபம், வாதம் ஆகியவை அகலும். உடலுக்குப் பத்தியமானது. செரிமானத்தையும் பசியையும் தரும். சற்று பித்தத்தையும் இரத்தப் பெருக்கத்தையும் கொடுக்கும். நல்ல சுவையுள்ளதாகும்.

 சிறு இலந்தை இனிப்பும் புளிப்புமுள்ளது. பழுத்தது, கபத்தையும், வாதத்தையும் போக்கும். சுவை மிக்கது. பசையுள்ளது வயிற்றில் பூச்சியுண்டாக்கும். பித்தநோய், வாதம், வறட்சி ஆகியவற்றை அகற்றும்.

 இலந்தையின் இலை மேற்பூச்சுக்குப் பயன் பட்டால் காய்ச்சலையும் எரிச்சலையும் போக்கும். தோலில் தோன்றும் கொப்புளங்கள் கட்டிகளைப் போக்கும். இதன் விதை கண் நோய்க்கு நல்ல மருந்தாகும். 

ஆக இப்படி போஜன குதூகலம் விளக்கும் இலந்தைப் பழத்தின் விலை மலிவோ மலிவு.

கை வண்டியில் தள்ளிக் கொண்டு வீட்டிற்கே வரும் இலந்தைப் பழத்தை வாங்கி உபயோகித்தால், ஆஹா, எத்தனை பயன்கள்! 

இது போல அனைத்து கறிகாய்கள், பழங்கள், உணவு வகைகளை விளக்கும் நூல் போஜன குதூகலம்! 

இதை இயற்றியவர் இரகுநாதஸூரி என்னும் அறிஞர் ஆவார். வடமொழியில் அவர் இயற்றிய நூலின் ஒரு பகுதியான திரவியகுண தகனம் என்னும் பகுதி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு போஜன குதூகலம் என்ற பெயரில் சரஸ்வதி மஹால் வெளியீடாக வந்துள்ளது 

இரகுநாதஸூரி என்பவர் சத்ரபதி சிவாஜி மஹாராஜாவின் குருவாக விளங்கிய சமர்த்த ராமதாஸருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். 

நூலில் 43 அத்தியாயங்கள் உள்ளன. அபூர்வமான விஷயகளை இந்த நூல் விளக்குகிறது. இவற்றைப் படித்தால் பிரமித்துப் போவோம்!

சைவ உணவு வகைகளோடு அசைவ உணவு வகைகளும் கூட இதில் விளக்கப்படுகின்றன! 

நூலின் இறுதியில் அட்டவணையில் சுமார் 700 உணவுப் பொருள்கள் பற்றிய பட்டியலைக் காண்கிறோம். இத்தனை உணவுப் பொருள்களை இந்த நூல் விளக்குகிறது என்பது ஆச்சரியப்படும் விஷயம் தானே! 

இதை சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர்-லிருந்து பெறலாம். அல்லது https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM3kZpy.TVA_BOK_0008542/page/n1/mode/2up

என்ற இணையதளத்திலிருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 நூலைப் படியுங்கள்; பயனை அடையுங்கள்!

***

Pictures of 2500 Indian Stamps!- Part 30(Post No.14,481)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 14,481

Date uploaded in London – –6 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 Pictures of 2500 Indian Stamps!- Part 30(Post No.14,476)

PART 30

Stamps posted today include 1986 STAMPS

CHAITANYA MAHAPRABHU, SWAMI SIVANANDA, SAINT RVIDAS, CONGRESS CENTENARY, CONGRESS PARTY PRESISENTS, INS VIKRANT, CHLDREN’S DAY, HIKING, TENTH ASIAN GAMES, INTERNATIONAL YOUTH YEAR, INTERNATIONAL YEAR OF PEACE, SXTH TRIENNALE, MUSIC COMPOSERS BACH, HENDEL, VEER SURENDRA SA, ALLURI SEETARAMA RAJU, SAGARMAL GOPA, AERIAL POST, AIR PLANES, HIKING, VOLLEY BALL, MAYO COLLEGE, BHIMSEN SACHAR, WORLD CUP FOOTBALL, MEXICO, MADRAS G P O, PARA COMMANDO, naval dockyard bombay, inpex 86, I N S VIkrant, Yakshi etc.,

–Subham—

Tags Part 30, 2500 Indian Stamps, YEAR 1986, CHAITANYA MAHAPRABHU, SWAMI SIVANANDA, SAINT RVIDAS, CONGRESS CENTENARY, CONGRESS PARTY PRESISENTS, INS VIKRANT, CHLDREN’S DAY, HIKING, TENTH ASIAN GAMES, INTERNATIONAL YOUTH YEAR, INTERNATIONAL YEAR OF PEACE, SXTH TRIENNALE, MUSIC COMPOSERS BACH, HENDEL, VEER SURENDRA SA, ALLURI SEETARAMA RAJU, SAGARMAL GOPA, AERIAL POST, AIR PLANES, HIKING, VOLLEY BALL, MAYO COLLEGE, BHIMSEN SACHAR, WORLD CUP FOOTBALL, MEXICO, MADRAS G P O, PARA COMMANDO , I N S Vikrant, yakshi etc.,

Rare Pictures from Times Group, Bombay- 1(Post No.14,480)


Written by London Swaminathan

Post No. 14,480

Date uploaded in London –  6 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Book Title- India Illustrated

Contents-A Collection of pictures of the cities Calcutta, Bombay, Madras

Together with a Selection of most interesting  Buildings and scenes throughout India.

Publishers

Bennet  Colman & Co

The Times Press

Bombay.

Part 1

I have  not taken the pictures of all the pages in the book; but I have covered Madras in full.

Here we go,

Sri Rangam, Trichy etc

Jain Temple in Bombay

Tinsmiths in Bombay

Native Oil Press (Chekku in Tamil)

Madras Senes

to be continued……………….

Tags- Part 1, Rare Pictures, Madras, Bombay, Calcutta, Oil press, mother baby