உபுண்டுவா அது என்ன? அதை உடும்புப் பிடி பிடிக்கணுமா?
புரியவில்லையே என்று திகைக்க வேண்டாம்.
ஆப்பிரிக்காவின் மனித நேயக் கொள்கை தான் உபுண்டு என்று அழைக்கப்படுகிறது.
அப்படி என்றால் என்ன?
அனைவரையும் திறந்த மனதுடன் வரவேற்கிறீர்களா?
நலிந்தவர்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் இரக்கத்துடன் பார்த்து உதவி செய்ய முன் வருகிறீர்களா?
மற்றவர்கள் பல்வேறு பேதங்களால் அவமானப்படுத்தப்படும் போது நீங்களே அவமானப்படுவதாக உணர்கிறீர்களா?
மற்றவர்கள் தாழ்த்தப்பட்டு ஒடுக்கப்படும் போது நீங்களே ஒடுக்கப்பட்ட உணர்வை அடைகிறீர்களா?
மனித குலம் மனிதத்தன்மையோடு விளங்க வேண்டும் என்பதை முன் நிறுத்தி அதற்கு எடுத்துக்காட்டாக நீங்கள் விளங்குகிறீர்களா?
அப்படி என்றால் நீங்கள் ஒரு உபுண்டு ஆள் தான்!
உபுண்டு என்ற ஆப்பிரிக்க வாழ்முறைக்கு மனிதத் தன்மையோடு வாழ்வது என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம்.
தென்னாப்பிரிக்காவில் பல்வேறு சமூகத்தினரிடையே இணக்கத்தை ஏற்படுத்துகிறது உபுண்டு. பாரம்பரியம் பாரம்பரியமாக அங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்தப் பண்பானது விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் எதையும் அணுகி பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வுகளைக் காண உதவுகிறது.
தனி மனித அகங்காரத்தை விட்டு விட்டு இணக்கமான கூட்டு மனித வாழ்க்கையை வற்புறுத்தும் உபுண்டுவை தென்னாப்பிரிக்க நோபல் பரிசு பெற்ற ஆர்ச்பிஷப் டெஸ்மாண்ட் டுடு (Desmond Tutu) வெகுவாக ஆதரித்துப் பரப்பி வருகிறார். அவரது ‘‘நோ ஃப்யூச்சர் வித் அவுட் ஃபர்கிவ்னெஸ்” (No Future without Forgiveness) என்ற புத்தகம் உபுண்டு கொள்கையை நன்கு விளக்குகிறது.
கறுப்பு இனத்தைச் செர்ந்த நெல்ஸன் மண்டேலாவும் உபுண்டு கொள்கையை வெகுவாகப் பரப்பியவருள் ஒருவர். இவரே கறுப்பரில் முதல் ஜனாதிபதி ஆனவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
உடைந்து கிடந்த ஆப்பிரிக்காவை அவர் ஒன்று சேர்த்தது எப்படி என்றால் இந்த உபுண்டு கொள்கையை வைத்துத் தான்!
அண்டை அயலாரிடம் அன்புடன் பழகுவதோடு அன்றாடம் அவர்கள் நலமாக இருக்கிறார்களா என்று விசாரிப்பது தான் உபுண்டு.
வயதானவர்கள் தனியே வாழ்ந்தால் அவர்களை அக்கறையுடன் பாதுகாப்பாக வாழச் செய்வது தான் உபுண்டு.
உபுண்டுவை விளக்க ஒரு சிறிய கதை ஒன்று உண்டு.
ஒரு மனிதவியலாளர் (Anthropologist) ஆப்பிரிக்காவில் இருந்த பூர்வகுடியினரிடையே சென்று வசித்தார்.
ஒரு நாள் அங்கிருந்த குழந்தைகளை அவர் விளையாட அழைத்தார்.
ஒரு கூடை நிறைய பழங்களை நிரப்பிய அவர் அதை அங்கிருந்த ஒரு மரத்தின் அருகில் வைத்தார்.
மரத்திலிருந்து 300 அடி தள்ளி குழந்தைகளை நிற்க வைத்தார் அவர்.
பிறகு கூறினார்: “யார் முதலில் சென்று கூடையைத் தொடுகிறார்களோ அவரே அனைத்துப் பழங்களையும் எடுத்துக் கொள்ளலாம்.”
பின்னர் ,“ரெடி, போகலாம்” என்று அறிவித்தார்.
அந்தச் சின்னக் குழந்தைகள் என்ன செய்தார்கள், தெரியுமா?
அவர்கள் அனைவரும் ஒருவரோடு ஒருவர் கையைக் கோர்த்துக்கொண்டு கூட்டாக அந்த மரத்தருகே சென்று கூடையைத் தொட்டு பழங்களைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர்.
வியந்து போன மனிதவியலாளர், “ஏன் இப்படிச் செய்தீர்கள்?” என்று கேட்டார்.
அவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் பதிலைச் சொன்னார்க்ள்: “உபுண்டு”
மற்றவர்கள் எல்லாம் வருத்தப்படும் போது ஒருவர் மட்டும் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்? என்பது தான் உபுண்டு.
“நான் இருக்கிறேன், ஏனெனில் மற்றவர்கள் என்னுடன் இருக்கிறார்கள்!”
இது தான் உபுண்டு!
இந்தக் கொள்கையை உடும்புப் பிடியாக உலகத்தோர் அனைவரும் பிடித்தால் சண்டை, சச்சரவு இன்றி உலகம் முன்னேறுமில்லையா சார்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
வேதத்தில் கடவுளைப் பற்றிய கவிதையில் இதை வீட உன்னதமான கவிதையை நான் கண்டதே இல்லை. இறைவன் சர்வ வியாபி, எல்லாம் வல்லவன் , எங்கும் நிறைந்தவன் , எல்லாம் அறிந்தவன் என்பதை இந்த அளவுக்கு விளக்கும் கவிதையை நான் கண்டதே இல்லை; இதில் கடைசி மந்திரம் (அதர்வண வேதம் காண்டம் 4, சூக்தம் 16 (சூக்தம் 118 என்றும் சொல்லுவர் ) எதிரிகளுக்கு எதிரான சாபம் போல இருப்பது ஒன்று மட்டுமே குறை– வான் ராத் VON ROTH.
****
ஜூன் 2025 பண்டிகைகள்
ஜூன் 5-உலக சுற்றுச்சூழல் நாள்; 7 பக்ரீத்; 9 – வைகாசி விசாகம்: முருகப்பெருமானின் அவதார தினம் ; ஜூன் 10 – பெளர்ணமி விரதம், சாவித்திரி விரதம்; 11-கபீர் ஜெயந்தி; 27 Friபுரி ரத யாத்திரை.
1.அவன் மனிதனின் கண் சிமிட்டல்களையும் எண்ணிக்கொண்டே இருக்கிறான். அதாவது NASA நாஸா , PENTAGON பெண்டகன் முதலிய இடங்களில் உள்ள சூப்பர் கம்பியூட்டர்களை விட வருணன் பெரிய கம்ப்யூட்டர். அவன் சிசி டிவி CCTV காமெரா போல பார்த்துக் கொண்டிருப்பதோடு பாவ புண்ணியங்களை கணக்குப் போட்டுக் கொண்டே இருக்கிறான். இதனால் தினமும் மாலை வேளை மந்திரத்தில் பிராமணர்கள் வருண பகவானிடம் பாவ மன்னிப்பு கேட்கின்றனர் .
****
ஜூன் 3 செவ்வாய்க் கிழமை
2.அவனுடைய தூதர்கள் உளவாளிகள் ; அவர்களுக்கு ஆயிரம் கண்கள் . இப்போது கூகிள் மேப் GOOGLE MAP மூலம் நாம் யார் வீட்டின் வாசலில் யார் நிற்கிறார் என்பதைக் காண முடியும். அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குள் யார் நுழைகிறார், வெளியே வருகிறார் என்று காண முடியும். இதை வருணன் ஒற்றர்கள், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செய்துள்ளனர். செய்து வருகின்றனர்.
****
ஜூன் 4 புதன்கிழமை
3. வருணன் இன்விஸிபிள் INVISIBLE MAN மேன் ; அதாவது நாம் இருவர் மட்டுமே ரஹசியம் பேசுகிறோம் என்று நினைக்கிறோம். புலவர் சொல்கிறார்; டேய் மக்கு, மடையா; உன் பின்னால் வருணனும் உனக்குத் தெரியாமல் கேட்டுக் கொண்டு இருக்கிறாண்டா. என்று
****
ஜூன் 5 வியாழக் கிழமை
அவன் பெரிய அதிகாரி; பக்கத்தில் இருந்து பார்ப்பது போல உன்னிப்பாக நம்மையே பார்க்கிறான் ; எல்லோரும் ரஹசியம் பேசுவதாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்; அது எல்லாம் தேவர்களுக்கு நன்கு தெரியும்- அதர்வண வேதம் காண்டம் 4, சூக்தம் 16 (சூக்தம் 118 என்றும் சொல்லுவர் )
****
ஜூன் 6 வெள்ளிக்கிழமை
ஒருவன் நிற்பது, உட்காருவது, வளைந்து வளைந்து கோணலாக ஓடுவது, மறைவாக ஒளிந்து கொண்டு யாருக்கும் தெரியாமல் எதையாவது -செய்வது, இருவர் மட்டுமே தனி இடத்தில் அமர்ந்து கிசு கிசு பேசுவது அத்தனையும் வருணனுக்குத் தெரியும். எப்படித் தெரியுமா? அவன் உங்கள் அருகில் மூன்றவது ஆளாக நைசாக உட்கார்ந்து பார்த்துக்கொண்டே இருக்கிறான்!! அதர்வண வேதம் காண்டம் 4, சூக்தம் 16 (சூக்தம் 118 என்றும் சொல்லுவர் )
****
ஜூன் 7 சனிக் கிழமை
இந்தப் பூமி அவனுக்கு சொந்தம்; அதற்கு மேல் நாம் பார்க்கும் வானமும் அவனுக்குச் சொந்தம் . பூமியில் உள்ள கடலும், கடல் போன்ற ஆகாயமும் அவனுடையதே.- அதர்வண வேதம்
****
ஜூன் 8 ஞாயிற்றுக் கிழமை
.((சப்போஸ்suppose ; நீ ஆகாயத்துக்கு அப்பால் ஸ்பேஸ் ஷட்டிலில் SPACE SHUTTLE போகிறாய் என்று வைத்துக்கொள்வோம்)). அப்போதும் நீ அவன் எல்லைக்கு அப்பால் சென்றதாக நினைத்துவிடாதே . அவனுடைய ஒற்றர்கள் அங்கிருந்துதான் பூமிக்கே வருகிறார்கள் . அவர்களுக்கு 1000 கண்கள். பூமியை பார்த்துக கொண்டே இருக்கிறார்கள் (அதாவது அவர்கள் ஸிஸிடிவி CCTV காமெராக்கள்; கூகுள் மேப் GOOGLE MAP )– அதர்வண வேதம் நாலாவது மந்திரம்
****
ஜூன் 9 திங்கட் கிழமை
வருணன் பெரிய ராஜா ; பூமி, ஆகாயம், அதற்கு இடையிலுள்ள அந்தரம், வானத்துக்கும் அப்பால் உள்ள இடம் அத்தனையையும் பார்க்கிறார்.இந்த ஜனங்களின் இமைச் சிமிட்டுகளையும் அவன் எண்ணியுள்ளான். சூதாடுபவன் காய்களை உன்னிப்பாக எண்ணுவது போல அவன் எண்ணிக்கொண்டே இருக்கிறான்!!- அதர்வண வேதம் ஐந்தாவது மந்திரம்
****
ஜூன் 10 செவ்வாய்க் கிழமை
ஏ வருணா ! பொய் சொல்ற ஆட்களை 3X 7= 21 பாஸக் கயிற்றால் கட்டி, அடித்து விட்டு விளாசு; ஆனால் உண்மை பேசுவோரைத் தொடாதே — அதர்வண வேதம் ஆறாவது மந்திரம்
****
ஜூன் 11 புதன்கிழமை
ஏ வருணா ! விடாதே; அவர்களை 100 பாசக்கயிற்றால் கட்டு ; மனிதர்களைக் கவனிக்கும் வருணா! பொய் சொல்ற ஆட்களை நல்லாக் கட்டு. ((நீ அடிக்கிற அடியிலே )) அவன் வயிறு தொங்கி மஹோதர நோயுள்ளவன் (போல) ஆகட்டும்– அதர்வண வேதம் ஏழாவது மந்திரம்
****
ஜூன் 12 வியாழக் கிழமை
நீயே அகலம்; நீயே நீளம்; நீயே மனிதன் , நீயே தெய்வமாக நிற்கிறாய் நீ முன்னைப் பழமைக்கும் பழமையானவன். பின்னைப் புதுமைக்கும் புதுமையானவன்- அதர்வண வேதம் எட்டாவது மந்திரம்
****
ஜூன் 13 வெள்ளிக்கிழமை
நான் அந்த எல்லாப் பாசங்களுடன் உன்னைக் கட்டுகிறேன்;.இந்த இந்த குடும்பத்தைச் சேர்ந்தவனே ! இந்த இந்தத் தாயின் மகனே ! அவர்களின் அனைவரையும் உனக்கு நான் அனுகூலமாய் நான் ஆக்ஞாபிக்கிறேன்– ஒன்பதாவது மந்திரம்; அதர்வண வேதம் காண்டம் 4, சூக்தம் 16 (சூக்தம் 118 என்றும் சொல்லுவர் )
****
ஜூன் 14 சனிக் கிழமை
பிராமணர்கள் தினமும் மாலையில் சொல்லும் மந்திரம் ; இதில் நான்கு முறை வருணன் பெயர் வருகிறது.
வருணதேவரே !என்னுடைய இந்த வேண்டுதலைக் கேட்டருள்வீர் ; இப்பொழுதே (என்னை) இன்புறச்செய்வீர் . இந்தப் பாதுகாப்பினை / ரக்ஷையை வேண்டி உம்மைப் பிரார்த்திக்கிறேன்- சந்தியா வந்தன மந்திரம் .
****
ஜூன் 15 ஞாயிற்றுக் கிழமை
வேத மந்திரத்தால் ஸ்தோத்திரம் செய்துகொண்டு அதற்காகவே உம்மைச் சரண் அடைகிறேன் ; யாகம் செய்பவன் எந்த ஹவிஸ் திரவியங்களைக் கொண்டு அதைச் செய்கிறானோ , அதையே கோ ருகிறான் (அதுபோல)
****
ஜூன் 16 திங்கட் கிழமை
புகழ்மிக்க வருணதேவரே ! என்னைக் கைவிடாமல் இப்பொழுது என் பிரார்த்தனையை அங்கீகரிக்கவேண்டும் . எமது ஆயுளைக் குறைத்து விடாதீர்.
வருணதேவரே ! தேவதைகளின் சமூகத்திற்கு மனிதர்களாகிய நாங்கள் அறியாமையால் என்னென்ன செய்தோமோ , தருமத்தைப் புறக்கணித்தோமோ , அந்தப் பாவங்களுக்காக எங்களைத் துன்புறுத்தி விடாதீர்கள்.
****
ஜூன் 19 வியாழக் கிழமை
சூதாடிகளைப் போன்றவர்கள் , தீயோர் நடுவில் என் மீது அநியாயமாக சுமத்திய பழியினையும் நான் அறிந்தும் அறியாதும் செய்த பாவங்கள் அனைத்தையும் சிதறடித்து விடுங்கள்.
****
ஜூன் 20 வெள்ளிக்கிழமை
வருணதேவரே; நாங்கள் என்றும் உனது அன்பிற்குப் பாத்திரமாக இருப்போமாக!
****
ஜூன் 21 சனிக் கிழமை
மன்னன் விவேகமுள்ள, தீவிரமான, பெருந்தன்மையுள்ள குணங்களைப் பெற்றிருந்ததால் அவன் வருணனை ஓத்திருந்தான்; அவன் கையில் இருந்த வில்லின் நாண், வருணனின் பாசக்கயிறு போல இருந்தது – காளிதாசனின் ரகுவம்சம்
****
ஜூன் 22 ஞாயிற்றுக் கிழமை
மரங்களும் பறவைகளின் ஒலிகளைக் –புத்திமதியைக்கேட்டு — மன்னனை வருணன் என்று கருதி தலை வணங்கின – ரகுவம்சம்
****
ஜூன் 23 திங்கட் கிழமை
தீயோரைத் தண்டிப்பதில் தசரத மன்னன் யமனையும் வருணனையும் ஓத்திருந்தான் – ரகுவம்சம்
****
ஜூன் 24 செவ்வாய்க் கிழமை
மித்ரனும் வருணனும் பகலும் இரவும் போன்றவர்கள் – ஐத்ரேய பிராஹ்மணம்
****
ஜூன் 25 புதன்கிழமை
மித்ரனும் வருணனும் உலகத்தின் காவலர்கள் – ரிக்வேதம்
****
ஜூன் 26 வியாழக் கிழமை
அவர்களுடைய ஆணையின் பேரில் வானம் ஒளியுடன் திகழ்கிறது – ரிக்வேதம்
****
Varun is Perun in Slav languages
ஜூன் 27 வெள்ளிக்கிழமை
அவர்கள் பயங்கரமானவர்கள்; பொய்மையை வெறுப்பவர்கள்- ரிக்வேதம்
வருணன் ஒரு டாக்டர்/ மருத்துவன். டாக்டர்களின் தலைவன் –யஜுர் வேதம்
****
ஜூன் 30 திங்கட் கிழமை
என்னுடைய இந்த தோத்திரம் இந்திரன்- வருணனிடம் செல்க; றனக்குப் புதல்வர்களையும் பெயர்களையும் அருளட்டும்; நல்ல செல்வத்துடன் நாம் தேவர்களின் விருந்துக்குச் செல்வோம் – ரிக்வேதம் 7-85
–SUBHAM—
TAGS- வருணன், பொன்மொழிகள், ஜூன் 2025 காலண்டர், வருணன் மேய பெருமணல் உலகமும், அதர்வண வேதம் காண்டம் 4, சூக்தம் 16, வான் ராத் VON ROTH.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
11-4-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
நாரதரை நாராயணர் கேட்ட கேள்வி!
ச. நாகராஜன்
வைகுண்டத்திற்கு வழக்கம் போல வந்த நாரத மஹரிஷி நாராயணரை தரிசித்தார்.
அவரைப் பார்த்த நாராயணர் அவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்: “நாரதா! ஐந்து பூதங்களான நிலம், நீர், காற்று, அக்னி, வானம் ஆகியவற்றில் எது சிறந்தது? உன் அபிப்ராயம் என்ன?
உடனே நாரதர் சற்று சிந்தித்தார். பின்னர் விடை அளித்தார்: “ஐயனே! பூமி தான் பரந்தது. சிறந்தது.
உடனே நாராயணர், “ஆனால் பூமியில் நான்கில் மூன்று பங்கு நீர் இருக்கிறதே” என்றார்.
உடனே நாரதர், “நீர் தான் சிறந்தது” என்று கூறினார்.
உடனே நாராயணர், “அந்த நீரைத் தான் அகஸ்தியர் ஒரு மடக்கில் குடித்து விட்டாரே” என்றார்.
சற்று யோசித்த நாரதர், “அகத்தியர் தான் சிறந்தவர்” என்றார்.
உடனே நாராயணர், பரந்த பிரபஞ்சத்தில் வானத்தில் ஒரு குட்டி நட்சத்திரம் தானே அகஸ்தியர்” (கானோபஸ் என்ற அகத்திய நட்சத்திரம் பிரபஞ்சத்தில் ஒரு துளி தானே!) என்றார்.
உடனே நாரதர், “சந்தேகமில்லாமல் வானம் தான் சிறந்தது” என்றார்.
உடனே நாராயணர், “நாரதா! பூமி, வானம் பாதாளம் ஆகியவற்றை வாமனன் தன் ஒரு அடியால் அளந்து விட்டானே” என்றார்.
உடனே நாரதர், “ ஆஹா! ஒரு பாதமே இப்படிச் செய்தது என்றால் கடவுள் எவ்வளவு பெரியவர். கடவுள் தான் பெரியவர்” என்றார்.
உடனே நாராயணர், “பக்தனான ஒருவன் அவ்வளவு பெரியவரைத் தன் இதயத்தில் இருத்தி விடுகிறானே” என்றார்.
உடனே நாரதர், “அவன் பிரேம பாசத்தினால் இறைவனைப் பிணித்து விடுகிறான். ஆகவே பக்தன் தான் கடவுளை விடச் சிறந்தவன்” என்றார்.
ஆக நாரதர் இப்போது பக்தியின் பெருமையை முற்றிலுமாக நாராயணனின் அருளால் உணர்ந்தார்.
யாக்ஞவல்கிய மஹரிஷி பக்தியை விளக்குகையில் உயிரின் ஆதாரமே பக்தி தான் என்கிறார்.
பக்தியே ஜீவ சக்தி!
‘ப’ என்பது பகவானையும், ‘க்தி’ என்பது அனுரக்தியையும் (பேரன்பு) குறிப்பிடுகிறது என்று விளக்குகிறார் அவர்.
அதாவது இறைவனின் மீது எல்லையற்ற தூய அன்பு கொள்வதே பக்தியாகும்!
1.Dreams in Kalidasa Kavyas and Sangam Tamil Literature- 1
2.Dreams in Kalidasa Kavyas and Sangam Tamil Literature- Part 2
3.Tamil Hindus Explode Freudian Theory on Dreams
4. Dreams in Tamil Epic Silappadikaram
5.Dreams in Valmiki Ramayana
6. Role of Dreams in Tamil Saivite Literature
7.Ten “Inauspicious Deams”; Dreams in Vedas and Upanishads!
8.Vedic Echo in Sumer and Egyptian Concept of Dreams
9.More ( Dream) Secrets from Vishnu Sahasranama
10.Tamil Discovery! Do Animals Dream?
11.Do our Dreams Have Meaning?
12.Strange Dreams
****
Second Part: Animals in Hinduism
1.One More Frog Wedding, Now in Telangana
2.Ants in Hinduism- Part One
3.Ants in Hinduism – Part Two
4.What can Parrots teach You?
5.Tamil View on Biting Dogs and Barking Dogs!
6.You will be born as a Dog Tamil Saint Tirumular Warns!
****
Book cover shows a painting of British painter Frederic Leighton. The painting of the sleeping beauty is in the Sydney Art Gallery.
*****
Foreword
Hindus and western scholars view dreams differently. Hindus believe that dreams come true under certain circumstance. They also find meaning in the dreams. Moreover, they believe that they foretell good or bad things. Vast literature in Hinduism supports these views. Western psycho analysts and psychologist think that they have no meaning, and they can’t predict future events. In their opinion dream is the reflection of suppressed desires or jumbled thoughts. Hindus were first in saying that no one can avoid dreams. So, they included a verse in their daily prayer to stop bad dreams.
Here is a collection of articles that I wrote in my two blogs in the past few years. I also believe that Carl Jung and Sigmund Freud are wrong in their conclusions. I have given reasons for this in my articles.
The second part of the book deals with Animals in Hindu literature. I have already published a few books in Tamil and English with many true animal stories and myths from Tamil and Sanskrit literature. These articles will be useful to researchers and religious believers
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
முகம் பார்க்கும் கண்ணாடி என்ற பொருள் மஹாபாரத காலத்திலிருந்த வழக்கிலிருந்தது பகவத் கீதை உவமையால் தெரிகிறது . ஆண்டாள், ஆதிசங்கரர், தொல்காப்பியர் முதலியோரும் இதைப் பயன்படுத்தியுள்ளனர் .
விவேக சூடாமணி மற்றும் தட்சிணாமூர்த்தி துதிகளில் ஆதிசங்கரர் கண்ணாடி உவமையைக் கூறுகிறார்.
தொல்காப்பியர் சூத்திரம் என்ற சம்ஸ்க்ருதச் சொல்லைப் பொருளதிகாரத்தில் நிறைய இடங்களில் பயன்படுத்துகிறார்; அதில்தான் ஆடி /கண்ணாடி உவமை வருகிறது . ஆகையால் அவர் இதை சம்ஸ்க்ருதத்திலிருந்து பெற்றது தெரிகிறது .
கபிலர் என்ற அந்தணப் புலவர் திருவள்ளுவ மாலையில் இந்த உவமையைப் பயன் படுத்துகிறார் . அவரும் சம்ஸ்க்ருத கவிஞர் காளிதாசனைப் பின்பற்றியது குறிஞ்சிப் பாட்டிலிருந்தும், யாழ் பிரமதத்தன் என்ற வடக்கத்திய மன்னனுக்கு தமிழ் கற்பி த்ததிலிருந்தும் அவருடைய சம்ஸ்க்ருதப் புலமை தெரிகிறது. .
மேலும் கபிலரின் திருவள்ளுவ மாலை, தொல்காப்பிய த்திலுள்ள பொருளதிகாரம் என்பன பிற்சேர்க்கை என்பது பலரின் கருத்து; என் கருத்தும் அதுவே ; ஏனெனில் பாணினி பயன்படுத்திய சூத்திரம் என்ற சொல்லைப் பயன்படுத்தியதோடு கண்ணாடி உவமைக்கு அடுத்த சூத்திரத்திலேயே பகவத் கீதையில் வரும் இன்னுமொரு உவமையையும் பயன்படுத்துவதால் தொல்காப்பியர் பகவத் கீதையை நன்றாகப் படித்தவர் என்பதும் தெரிகிறது இந்த உவமை சூத்ர மணி கணா என்னும் பகவத் கீதை உவமை; அதாவது நூலில் கோர்க்கப்பட்ட முத்துக்களைப் போல என்பது பொருள்.
இப்போது இவர்களது காலத்துக்கு வருவோம். ஆதி சங்கரர் கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994 )நீண்ட வாதத்தினை முன்வைத்துள்ளார்; ஆகையால் இவர்கள் ஆதி சங்கரரிடமிருந்தே இந்த உவமைய அறிந்திருக்க வேண்டும் .
ஆதிசங்கரர் தனது விவேக சூடாமணியில் கூறுகிறார்:
யத்ரைச ஜகதா பாஸோ தர்ப்பணாந்தபுரம் யதா
தத் ப்ரஹ்ம்மமிதி ஞாத்வா க்ருத க்ருத்யோபவிஷ்யசி
பொருள்:-
ஒரு கண்ணாடியில் ஒரு நகரத்தின் பிரதிபலிப்பைக் காண்பது போல நீயே பிரம்மம்; இதை உணர்ந்துவிட்டால் பூரணத்துவம் பெறுவாய். பிரபஞ்சமே உன்னிடத்தில் பிரதிபலிக்கிறது.(ஆதி சங்கரர்)
அதே கருத்து மேலும் ஓரிடத்தில் வருகிறது!
ஆதிசங்கரரின் தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரத்தில் முதல் பாடல்
விச்வம் தர்ப்பண த்ருச்யமான
நகரீ துல்யம் நிஜாந்தர்கதம்
பச்யன் ஆத்மனி மாயயா பஹிரிவோத்-
பூதம் யதா நித்ரயா |
ய: சாக்ஷீ குருதே ப்ரபோத ஸமயே
ஸ்வாத்மானமேவாத்வயம்
தஸ்மை ஸ்ரீகுருமூர்த்தயே நம
லண்டன் மீ.ராஜகோபாலன் இதை அழகிய தமிழ்க் கவிதையாக வடித்துள்ளார் :
கண்ணாடி புராணம்! ‘அடுத்தது காட்டும் பளிங்கு போல’ (Post No.3412)
Date: 3 December 2016; Post No.3412
கண்ணாடி என்பது நம் நாட்டிலும் உலகில் ஏனைய பழைய நாகரீகங்களிலும் நீண்ட நெடுங்காலமாக புழக்கத்தில் உள்ளது. இது இந்தியாவில்தான் தோன்றியிருக்க வேண்டும். ஏனெனில் மஹாபாரதத்திலுள்ள பகவத் கீதை முதல் ஆண்டாள் பாடிய திருப்பாவை வரை (தட்டொளி) கண்ணாடியைக் காண்கிறோம். தமிழில் மிகப் பழைய நூல் என்று கருதப்படும் தொல்காப்பியம் முதல் கேரளத்தில் பெருந்தலைவர் நாராயண குரு கண்ணாடிக் கோவில் வைத்தது வரை இது நமது வாழ்வில் இரண்டறக் கலந்திருப்பதையும் காணலாம்..
திருவிழாக் காலங்களில் கன்யாப் பெண்களை வீட்டுக்கு அழைத்து கண்ணாடி, குங்குமச் சிமிழ், சீப்பு கொடுக்கும் வழக்கமும் உளது. தீபாவளி, விஷுக் கனி காணுதலின் போது கண்ணாடியில் முகம் பார்க்கும்/ விழிக்கும் வழக்கமும் உளது.
கண்ணாடி உடைவது அபசகுனம் முதலிய பல சகுன சாத்திர தகவலும் உள.
மெக்சிகோவில் அஸ்டெக் நாகரீகத்தில் ஒருவர் பெயர் ‘புகைக் கண்ணாடி’. ஜப்பானில் ஆட்சியாளர் மாறும்போது கண்ணடி கொடுப்பர். கண்ணாடி தேவதை அமர்தரேசுவும் இருக்கிறது. எட்ருஸ்கன் நாகரீகக் கண்ணடிகளின் பின்னால் அற்புதமான வரைபடங்கள் உள்ளன.
முதலில் வான்புகழ் வள்ளுவன் தேனினும் இனிய தமிழில் செப்பியதைக் காண்போம்
அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம் (குறள் 706)
பொருள்:-
தன்னை அடுத்த பொருளைக் கண்ணாடி காட்டும்; அதுபோல ஒருவனுடைய உள்ளத்தில் எழும் உணர்வுகளை அவன் முகமே காட்டிவிடும்.
திருவள்ளுவமாலையில்
தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட
பனயளவு காட்டும்படித்தால் – மனையளகு
வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி
-திருவள்ளுவ மாலை, கபிலர்
பொருள்:-
மனையில் வளர்க்கப்படுகின்ற பறவைக் குஞ்சுகள், உலக்கைப் பாட்டால் கண் உறங்குகின்ற வளம் பொருந்திய நாட்டை உடைய மன்னவனே! திரு வள்ளுவனின் குறட்பா அளவில் சிறிது; ஆனால் அது காட்டும் பொருள் மிகப்பெரிது. எப்படியென்றால், புல் நுனியில் படிந்துள்ள பனித்துளி, ஒரு தினையரிசிக்கும் சிறியது; ஆயினும் பக்கத்திலுள்ள பனைமரத்தை அதன் உள்ளே (கண்ணாடி போல) பார்க்கலாம் அல்லவா? -திருவள்ளுவ மாலை, கபிலர்
xxx
ஒல்காப் புகழ் தொல்காப்பியன் பகர்வதையும் பார்ப்போம்.
சூத்திரம்தானே ஆடி நிழலின் அறியத் தோன்றி
நாடுதல் இன்றி பொருள் நனி விளங்க
யாப்பினுள் தோன்ற யாத்து அமைப்பதுவே
தொல்காப்பியம், பொருளதிகாரம் (சூத்திரம் 1425)
பொருள்:-
சூத்திரம் என்பது, கண்ணாடிக்குள் அதன் பிரதிபலிப்பில் ஒரு பெரிய மலையே தோன்றுவது போல, ஆராய்தல் இல்லாமலேயே, கூறப்பெற்றுள்ள பொருள் தெளிவாக விளங்குமாறு அமையும். யாப்பினுள் ஏதாவது ஒன்று வடிவமைத்து அமைப்பதாகும்.
xxx
5000 ஆண்டுப் பழமையான பகவத் கீதை கூறுவதைக் கேளுங்கள்
பகவத் கீதையில் (3-38)
தூமேனாவ்ரியதே வஹ்னிர் யதா தர்சோ மலேன ச
யதோல்பேனாவ்ருதோ கர்ப்பஸ் ததா தேனேதமாவ்ருதம்
பொருள்:–
எப்படித் தீயானது புகையால் மறைக்கப்படுகிறதோ, கண்ணாடி அழுக்கால் மறைக்கப்படுகிறதோ, எப்படி கருவானது கருப்பையால் மறைக்கப்படுகிறதோ, அப்படியே காமத்தால், இந்த ஞானம் மறைக்கப்படுகிறது. (3-38)
ராஹர்ஷிவம்சஸ்ய= ராஜ ரிஷியான இக்ஷ்வாகுவின் வம்சத்திற்கு
மத்த:= என்னிடமிருந்து
தர்பணஸ்ய = கண்ணாடிக்கு
பயோதவாதாத் இவ = மேகத்திலிருந்து வந்த காற்றினாலே (மாசு ஏற்படுவது) போல
கீத்ருச: = எப்படிப்பட்ட
அயம் கலங்க: = இம் மாசு
உபஸ்தித: = ஏற்பட்டது
பஸ்யத= பாருங்கள்
எப்போதும் தூயதாய் விளங்கும் என் குலத்துக்கு என்னால் அவப்பெயர் வந்துவிட்டதே (மேகம், காற்றினால் வரும் அசுத்தம் எப்படி எளிதில் கண்ணாடியிலிருந்து நீங்குமோ அது போல இதுவும் எளிதில் போய்விடும் என்பது உட்பொருள்; அதாவது நிரந்தர களங்கம் இல்லை)
காளிதாசன் சாகுந்தலம் நாடகத்திலும் ரகு வம்சத்தில் பிற இடங்களிலும் கண்ணாடி உவமையைக் கூறுவதால் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வீடு தோறும் கண்ணாடி இருந்ததும், அதில் நம் குலப் பெண்கள் முகம் பார்த்து அலங்கரித்ததும் நம் மனக் கண் முன் வரும்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
10-4-25 அன்று கல்கிஆன்லைனில் வெளியான கட்டுரை!
மன அழுத்த பாதிப்பா? சமாளிப்பது எப்படி?
ச. நாகராஜன்
இன்றைய அதிவேக நவீன தொழில்நுட்ப உலகில் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் மன அழுத்தம் அவர்களைப் படாத பாடு படுத்துகிறது.
எதற்கெடுத்தாலும் இந்த மன அழுத்தத்தால் பாதிப்பட்டு வருந்துவோர் முதலில் அதைப் பற்றிய அடிப்படை உண்மைகளை அறிந்து கொண்டு அதை எதிர்கொள்ள வேண்டும்.
இந்த மன அழுத்தம் ஏற்படுவது எதனால்?
வேலைப் பளு, பள்ளி, குடும்பம், ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சினைகள், தினசரி நாம் செய்ய வேண்டியிருக்கும் கட்டாயமான வேலைகள் – இவற்றால் தான் பெரும்பாலும் மன அழுத்தம் ஏற்படுகிறது.
திடீரென்று வேலையை இழத்தல், மணமுறிவு, திடீரென்று ஏற்படும் உடல் பாதிப்புகள், வியாதிகள் – இவற்றாலும் மன அழுத்தம் ஏற்படுகிறது.
திடீரென்று எதிர்பாராமல் ஏற்படும் விபத்து நம்மை நிலைகுலையச் செய்கிறது. போர், போராட்டங்கள், இயற்கைப் பேரிடர்கள் ஆகிய சூழ்நிலைகள் தோன்றும் போதும் மன அழுத்தம் ஏற்படுகிறது.
வேலையில் கொடுக்கப்படும் அழுத்தம் நிச்சயம் தேவை தான். அதுவே நமது திறமையைக் காட்ட உதவுகிறது. முன்னேற்றத்திற்கு வழி வகுக்கிறது. அதே போல அரசு மற்றும் சமுதாய தொடர்புகளில் உள்ள விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளும் தேவையே. இவற்றால் அலட்டிக் கொள்ளாமல் அதற்குத் தக முன்னேற்பாடுடன் அவற்றை எதிர்கொண்டால் அழுத்தம் நமக்கு நல்லதையே செய்யும்.
உடல் பாதிப்புகளை அலட்சியம் செய்யக் கூடாது. ஜீரணக் கோளாறுகள், தூக்கமின்மை, இடைவிடாத தலைவலி போன்றவற்றிற்கு தகுந்த டாக்டரை அணுகி உடனடியாக மருத்துவ உதவியை நாடினால் நீடித்த மன அழுத்தம் ஏற்படாது.
ஓரிடத்தில் அமைதியாக உட்கார்ந்து எதனால் நமக்கு இந்த மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது என்பதைச் சிந்தித்தாலேயே பாதி தீர்வு கிடைத்து விடும்.
இடைவிடாமல் சிகரெட் பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றை விட்டு விட இப்போது நல்ல ஆலோசனைகளும் மருத்துவ தீர்வுகளும் உள்ளன. நல்ல டாக்டரையோ அல்லது ஒரு ஆலோசகரையோ அணுகுதல் இன்றியமையாதது.
தினமும் உடல்பயிற்சி குறைந்த பட்சம் 30 நிமிடங்களுக்குச் செய்தல் வேண்டும்.
யோகா, தியானம், தாய் – சி போன்ற அருமையான உத்திகள் மன ஓய்வுக்காகவும் மன சாந்திக்காகவும், உடல் மற்றும் மனத் திறனைக் கூட்டவும் உள்ளன. இவற்றை முறைப்படி கற்று அன்றாடப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
இறை வழிபாடும் நல்லவர் சேர்க்கையும் மன அழுத்தம் போக்கவல்ல முக்கியமான வழியாகும்.
நல்ல நண்பர்களுடன் அன்றாட அரட்டையோ அல்லது குறிக்கோளுடன் கூடிய உரையாடலோ நல்லதையே செய்யும்.
அருமையான இசையைக் கேட்டல். நல்ல பத்திரிகைகள், மற்றும் புத்தகங்களைப் படித்தல் மனதுக்கு இதமளிப்பதோடு அறிவை வளர்க்கும் உத்திகளாகும்.
வாழ்க்கை லட்சியத்தை வரையறுத்துக் கொள்ளுதல், அதை நிறைவேற்ற இடைவிடாது பாடுபடுதல், எது முதலில் செய்ய வேண்டும், எவற்றை உடனடியாகத் தவிர்க்க வேண்டும் என்பதைப் பட்டியலிட ஒரு சில நிமிடங்களே ஆகும். FIRST THINGINS FIRST – முக்கியத்திற்கு முதல் இடம் என்ற ஒரு உத்தியே போதும், – வாழ்க்கையை மேம்படுத்தி விடும்!
இவற்றையும் மீறி உள்ள தீவிரமான பிரச்சினைகளை மன நல மருத்துவரே தீர்க்க முடியும்.
திட்டமிட்ட வாழ்க்கை – தெவிட்டாத வாழ்க்கை! மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை என்பது நிதர்சனமான உண்மையாகும்!