Goddess Meenakshi of Madurai Temple in Wedding pose.
Post No. 14,578
Date uploaded in London – 1 June 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நம்பியை நம்பாதே ! தி, வி பு ஆராய்ச்சிக் கட்டுரை-8
திருவிளையாடல் புராணம் ஆராய்ச்சிக் கட்டுரை-8
வரலாற்றில் எவ்வளவோ புதிர்கள் இன்றுவரை தீர்க்கப்படாமல் உள்ளன. அவற்றில் ஒன்று மாணிக்க வாசகர் பற்றிய அதிசயமான புதிர்; விடுகதை , மறைப்பு!
World famous Madurai Meenkashi Sundareswrar / Shiva Temple.
சைவ சமயக்குரவர்கள் படங்கள் எல்லாவற்றிலும் நால்வர் படத்தைக் காண்கிறோம். நால்வர் என்பவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகியோர் ஆவர். இவர்கள் சைவ சமயத்தின் தேவாரம், மற்றும் திருவாசகத்தினை எழுதியவர்கள்.
புதிர் என்ன?
பல அற்புதங்களைச் செய்த மாணிக்க வாசகரை ஏனைய மூவரும் ஏன் குறிப்பிடவில்லை ? அது போகட்டும்; மாணிக்கவாசகர் அவர்களுக்குப் பிற்காலத்தில் வாழ்ந்து இருந்தால் , அவர் ஏன் மூன்று தேவாரப் பாடகர்களைக் குறிப்பிடவில்லை? அட,அது போகட்டும் ; ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பெரிய புராணம் பாடிய சேக்கிழார் ஏன் இவரைப் பாடவில்லை ? இந்த எல்லாக் கேள்விகளுக்கும் பதில் எழுதிய அறிஞர்கள் அனைவரும் சப்பைக்கட்டு, நொண்டிச் சாக்குதான் கூறியுள்ளனர் . அவற்றைத் திரும்ப எழுதும் தேவையே இல்லை . ஆகையால் இதற்கு வரலாற்றுச் சான்றுகள் காண்பதே. முறை
இந்தக் கேள்வி ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? ஏனெனில் மாணிக்கவாசகருடைய காலம் நமக்குத் தெரியவேண்டும் .
ஒரு இந்தியவியல்INDOLOGIST வெளிநாட்டு அறிஞர் மிக அழகாக இதை வருணித்தார் ; இந்திய வரலாற்றில் எந்தக் காலத்தையும் உறுதிபடச் சொல்ல முடியவில்லை . ஏனெனில் அது Jigsaw Puzzle ஜிக் சா பசில் போன்றது; ஒரு சதுரத்தை நகர்த்தினால் இன்னொரு சதுரம் நகருகிறது !
இப்போது கட்டுரையின் தலைப்புக்குச் செல்வோம் .
பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பவர் முதலில் ஸம்ஸ்க்ருதத்திலிருந்து மொழிபெயர்த்து திருவிளையாடல் புராணத்தை எழுதினார் . அவருக்கு நானூறு ஆண்டுகளுக்குப் பின்னர் பரஞ்சோதி முனிவர், இன்னும் ஒரு திருவிளையாடல் புராணத்தை எழுதினார் இவை தவிர கடவுள் மாமுனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் , சிவ லீலாவர்ணம் என்ற சம்ஸ்க்ருத திருவிளையாடல் புராணம் முதலியன உள்ளன . பரஞ்சோதி முனிவர் கால வரிசைப்படி நூலினை அமைத்தார் அதாவது மதுரை –கூடல் –ஆலவாய் என்ற மூன்று பெயர்களில் புராணத்தை பாடல் வடிவில் எழுதினார் ஆனால் நம்பி மதுரையைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
சரித்திரப்படி முதலில் இருந்தது மதுரை ; மூன்று சங்கங்களை உண்டாக்கி தெய்வத் தமிழை வளர்த்த புண்ய பூமி மா மதுரை ; இன்றுவரை அதற்குச் சான்றாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் வானத்தைத் தொட்டுக்கொண்டு நிற்கிறது; இதற்குப் பின்னர் நன் மாடக்கூடல், ஆலவாய் பெயர்கள் ஏற்பட்டன. இந்த வரிசையை பரஞ்சோதி கையாண்டுள்ளார் ஆனால் நம்பி, மதுரை என்ற நகரம் தோன்றியதை இடையே வைத்துள்ளார்.
இந்த வரிசை தவறு என்று மேம்போக்காகச்ச் சொல்லிவிடலாம் ஆயினும் நம்பியைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றிவி டமுடியாது ; காரணம் ?
அவர் எந்த மதுரையைக் கூறினார்? என்ற கேள்வியை அவர் தரப்பு வழக்கறிஞர் நீதி மன்றத்தில் எழுப்புவார். முதற் சங்க மதுரை, இரண்டாம் தமிழ்ச் சங்க மதுரை ஆகியவற்றைக் கடல் கொண்ட பின்னர் இப்போதுள்ள மதுரை தோற்றுவிக்கப்பட்டது . மகஸ்தனிஸ் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய இண்டிகாவில் பாண்டேயா என்ற தென்னாட்டு மஹாராணியைக் குறிப்பிடுகிறார் அதாவது மீனாட்சி அம்மையாரின் புகழ் பீஹாரிலுள்ள பாட்னா வரை அப்போதே பரவியதால் இப்படி எழுதியுள்ளார் அது எந்த மதுரை ? இதிலும் ஒரு புதிர் ! கி பி 75 CE வாக்கில் மதுரை மாற்றப்பட்டதாக பிளினி PLINY என்ற வரலாற்று ஆசிரியர் எழுதியுள்ளார் மதுரை எரியுண்டது பற்றிப் பேசும் சிலப்பதிகாரத்தின் காலம் கி பி 132 CE என்று கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன் குறிப்பால் அறிகிறோம் இது தற்கால மதுரையே! ஏனெனில் இன்றும் மதுரையில் கோவலன் பொட்டல் உள்ளது.
Goddess Meenakshi of Madurai Temple.
பரிபாடல் போன்ற சங்க நூல்கள் மதுரை, தாமரைப்பூ போல வீதிகள் அமைந்த ஊர் என்று பாடுகிறது ; இன்றும் மதுரை அப்படியே உள்ளது; மீனாட்சி சுந்தரேச்வரர் கோவில் நடு நாயகமாகத் திகழ ஆடி, ஆவணி, சித்திரை மாசி வீதிகள் சதுரத்துக்குள் சதுரமாக அமைய, பின்னர் வெளி வீதியும் வைகை ஆறும் உள்ளன.
கல்லாடம் போன்ற நூல்கள் 64 திருவிளையாடல் என்று சொல்லிவிட்டு 32 திருவிளையாடல்களை — அதாவது சிவ பெருமான் நடத்திய அற்புத லீலைகளைப் பட்டியல் இடுகிறது. சில லீலைகளை சிலப்பதிகாரமும் குறிப்பிடுகிறது
நம்பி என்ன தப்பு செய்தார் ?
தொடரும்…………………… to be continued
Tags- திருவிளையாடல் புராணம் , ஆராய்ச்சிக் கட்டுரை-8,நம்பியை நம்பாதே, Part One