உலக இயல்பு இது தானோ? (Post No.14,581)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,581

Date uploaded in London – –2 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சுபாஷிதம்

உலக இயல்பு இது தானோ?

ச. நாகராஜன்

சம்ஸ்க்ருத மொழியில் லட்சக்கணக்கில் உள்ள சுபாஷிதங்களில் சில இதோ:

செல்வமும் வறுமையும் வரும் விதம் இது தான்!

கேஷாம்சின் நிஜவேஷ்மனி ஸ்திதவதாமாலஸ்யவஸ்யாத்மனாம்

   த்ருஷ்யந்தே பலிதா லதா இவ சிரம் ச்ம்பந்நஷாகா: ஸ்ரிய: |

அம்பித் லங்த்யயதாம் கனோ: கன்யதாம் க்ஷோணிதலம் க்ஷுந்தததாம்

 அன்யேதாம் வ்யவஸாயசாஹஸசதியாம்  தன்னாஸ்தி யத் பச்யதே ||

சிலருக்கு அவர்கள் வீட்டிலேயே ஒன்றும் செய்யாமல் சோம்பேறியாக இருந்தாலும் கூட,  கொடிகளில் தவழும் பழங்கள் போல செல்வம் ஏராளமாக வந்து அவர்களிடம் சேர்கிறது;

ஆனால் மற்ற சிலருக்கோ அவர்கள் கடல் கடந்து சென்று சுரங்கங்களைத் தோண்டி பூமி முழுதும் அலசினாலும் கூட, மிகுந்த உழைப்பை மேற்கொண்டாலும் கூட அன்றைய தினத்திற்கு சமைப்பதற்கான ஒரு பொருள் கூடக் கிடைப்பதில்லை.

*

இதயத்திலிருந்து வரும் இனிமையான வார்த்தைகள்!

கேஷாம்சித் வாசி சுகவத் பரேஷாம் ஹ்ருதி மூகவத் |

கஸ்யாப்யா ஹ்ருதயாத் வக்த்ரே வல்கு வல்கந்தி சூக்தய: ||

சிலருக்கு கிளிகள் போல இனிமையான வார்த்தைகள் அவர்கள் வாயில் தவழ்கின்றன; சிலருக்கோ ஊமைகளைப் போல அந்த வார்த்தைகள் அவர்கள் இதயத்திலேயே முடங்கி விடுகின்றன.

ஆனால் சிலருக்கோ நல்ல வார்த்தைகள் அவர்கள் இதயத்திலிருந்து நடனமாடிக் கிளம்பி அவர்கள் வாயை அடைகின்றன!

*

குலத்தையே அழிப்பவர்கள் யார்?

குவஸ்த்ரம் ஹரதே தேஜ: குபோஜ்யம் ஹரதே பலம் |

குபார்யா ஹரதே ப்ராணம் குபுத்ரே ஹரதே குலம் ||

அழுக்கான ஆடையானது ஒருவனது மதிப்பைக் குறைக்கிறது. ஊசிப் போன உணவு ஒருவனது பலத்தைக் குறைக்கிறது. கற்பில்லாத மனைவி ஒருவனது பிராணனை அழிக்கிறாள். நல்ல நடத்தையில்லாத மகன்கள் ஒருவனின் குலத்தையே அழிக்கின்றனர்.

மோதிரம் அணிக!

குஷம் ஸ்வர்ணம் சதா தார்ய பஹிர்மால்யம் ந தாரயேத் |

நாகந்தே பிம்ருயாத் புஷ்பம் நாத்மார்தம் கும்பயேத் ஸ்த்ரஜம் ||

ஒரு மனிதன் எப்போதும் குஸம் புல்லை (தர்ப்பை புல்லை) அணிய வேண்டும். அத்துடன் தங்க மோதிரத்தையும் அணிய வேண்டும்.

வெளிப்புறத்தில் மாலையை ஒருவர் அணியக் கூடாது. மணம் இல்லாத மலரை அணியக் கூடாது. ஒருவர் தான் சூடும் மாலையைத் தானே தொடுக்கக் கூடாது.

 கர்மபலன் வந்தே தீரும் 

கும்பம் நிர்மார்தி சக்ரேண கும்பகாரோ ம்ருதா புவி |

ததேவ கர்மசூத்ரேண பலம் தாதா ததார்தி ச || 

பூமியிலிருக்கும் களிமண்னைக் கொண்டு ஒரு குயவன் ஒரு பானையைச் செய்கிறான். அதே போல படைப்பவன் (விதி) ஒருவன் செய்த கர்மத்திற்குத் தக்கபடி பலனைக் கொடுக்கிறான்.

**

Leave a comment

Leave a comment