நம்பியை நம்பாதே! தி. வி. பு. ஆராய்ச்சிக் கட்டுரை-8 Part Two(Post.14,583)

Written by London Swaminathan

Post No. 14,583

Date uploaded in London –  2 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருவிளையாடல் புராணம் ஆராய்ச்சிக் கட்டுரை-8 (Part two)

சங்கப்  புலவர்களின் பெயர்களில் அதிகம் காணப்படுவது மதுரை; ஆகையால் தற்போதைய மதுரை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது .அதற்குப் பின்னர் நான் மாடக்கூ டல் என்ற காரணப் பெயர் தோன்றியது; அதற்குப்பின்னர் ஆலவாய்  என்ற காரணப் பெயர் தோன்றியது . அந்தப் பெயரைத்தான் திருஞான சம்பந்தர் அதிகம் பயன்படுத்துகிறார். மாணிக்கவாசகர்தான் மதுரை என்ற பழைய சொல்லைப்  பயன்படுத்துகிறார் . ஆலவாய் என்பது பாம்பு தனது  வாயால் தன்னுடைய வாலினைக் கவ்விக் கொள்ளும் வடிவம் ; இந்த வட்டத்திற்குள் இருப்பது மதுரை இதை சங்க காலத்துக்கு முன்னர் வாழ்ந்த காளிதாசனும் உரகபுரம் என்ற சொல்லினால் ரகுவம்சத்தில் எழுதியுள்ளார் . இதை ருசுப்பிக்கும் வகையில் சங்க காலப் புலவர் பெயர் மதுரைப் பேராலவாயார் (புறநானூறு 247, 262)  என்றும் காணப்படுகிறது.

****

.இரண்டு திருவிளையாடல் புராணத்திலும்  படலம் எண்  வரிசை

பரஞ்சோதி      —          நம்பி 

மதுரை நகரம் கண்ட படலம் 3- 36

நான் மாடக்கூடல் ஆன படலம்  18- 12

வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம் 40-48

திரு ஆலவாய் ஆன படலம் 49 – 47

(இந்த மூன்று பெயர்களும் சங்க இலக்கியத்தில் இருப்பதால்  இதற்கு முந்திய லீலைகளை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வைக்க வேண்டும் என்பது என் துணிபு)

தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் 52-53—-  16, 17

வாதவூரடிகள் தொடர்பான படலங்கள் —  58 to 61 —  27 to 30

கூன் பாண்டியன்/ சம்பந்தர் படலம்  62,63–  37,38

வரகுணன் யார் ?

இவ்வளவு  பின்னனி  இருக்கையில் வரகுணன் என்ற ஒரு மன்னர் பெயரினை வைத்து மாணிக்கவாசகரை ஒன்பதாம் நூற்றாண்டுக் காரர் என்று சிலர் முத்திரை குத்திவிட்டனர். ஆனால் அவர்கள் அனைவரும் மாணிக்க வாசகர் கால மன்னர் அரிமர்த்தன பாண்டியன் என்று இருப்பதை மறைத்து எழுதுகினறனர் வரலாற்றுக்குத் தெரிந்த இரண்டு வரகுணன்கள்  எட்டு ஒன்பது நூற்றாண்டுக   ல்  இரூந்தவர்கள் என்பதும் ஜிக் சா பசில் JIGSAW PUZZLE  கதைதான்! ஒன்றை வைத்து ஒன்றின் காலத்தை நிர்ணயிக்கின்றனர். உறுதியான சான்று எதுவும் இல்லை. நல்ல வேளையாக நம்பியும் பரஞ்சோதியும் சம்பந்தர் கதையை மாணிக்கவாசகர் கதைக்குப்பின்னர் வைத்துள்ளனர் அவர்களும்  மாணிக்க வாசகரே முதல்வர் என்று நம்பினர்.

வரகுணன் என்பது பட்டப்பெயர் அதாவது சங்கராசார்யார் தலைலாமா, போப்பாண்டவர், இந்திரன் போன்ற பதவிப்பெயர்கள் அப்பா அமமா கொடுத்த அல்லது அலிஸிஷேக காலத்தில் புரோகிதர்கள் கொடுத்த பெயர் அல்ல ஆகையால் வரலாற்றுக்குத் தெரியாத வேறு ஒருவரையும் இப்படி வரகுணன் என்று அழைத்திருக்கலாம் ஏனெனில் மாணிக்க வாசகர் கால மன்னர் அரிமர்த்தன பாண்டியன்.

புதிர்களுக்கு விடை என்ன ?

பதில் சொல்ல முடியாத கேள்வி இது; தருமி என்ற பிராமணப் புலவருக்கு சிவபெருமானே பாடல் எழுதிக்கொடுத்து நக்கீரனுடம் சண்டைபோட்டதை அப்பரும் பாடியுள்ளதால் அது கிபி/CE 600-க்கு முன்னர் என்று உறுதியாகிட்டது அப்பருக்கு 300 அல்லது 400 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த நிகழ்ச்சி   நடந்ததால்தான் சோழநாட்டு அப்பர் அதை பாடியுள்ளார்.

****

புதிர்களுக்கு விடை எங்கே உள்ளது ?

1.புலவர் தருமி பற்றிய அப்பரின் தேவார பாடல் ;

2.ஸுந்தர பாண்டியன் என்று ஆதி சங்கரர் குறிப்பிடும்  பிரம்ம சூத்திர உரை ; சங்கரர் காலத்திலும் குழப்பம் இருக்கிறது ஆதிசங்கரர்  போலவே பிற்காலத்தில் அபிநவசங்கரர்  என்று ஒருவர் பட்டம் ஏற்று அதே போலா செயல்பட்டதால், சாதனை செய்ததால் இருவரையும் ஒருவராக எழுதிக் குழப்பிவிட்டனர் . காஞ்சீபுர மடத்தினர் ஆதி சங்கரரை மிகவும் முற்காலத்தில் வைப்பதைக் கருத்திற்கொள்ள வேண்டும்.

3.வரகுண மங்கை என்று நம்மாழ்வார் பாடிய பாசுரம். நம்மாழ்வார் வரகுண மங்கை என்கிறார் ; மாணிக்கவாசகர் உத்தரகோச மங்கை என்றார் ; இந்த மங்கை சொல் பற்றியும் ஆராய்வது அவசியம்  (பிற்கால பட்டினத்தார், தாயுமானவர் பாடல்களை விட்டுவிடலாம் )

நம்மாழ்வார் பாசுரம் குறிப்பிடும் வரகுண மங்கை –பாசுரம்

வரகுணமங்கை நம்மாழ்வார் பாடல்

நத்தம் என்றழைக்கப்படும் திருவரகுணமங்கை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கிழக்கே சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ளது.

திருவாய்மொழி பத்து

புளிகுடிக் கிடந்து வரகுண மங்கை

இருந்துவை குந்தத்துள் நின்று,

தெளிந்தவென் சிந்தை அகங்கழி யாதே

என்னையாள் வாயெனக் கருளி,

நளிந்தசீ ருலகம் மூன்றுடன் வியப்ப

நாங்கள்கூத் தாடிநின் றார்ப்ப   

பளிங்குநீர் முகிலின் பவளம் போல் கனிவாய்

சிவப்பநீ காணவா ராயே.   , 3687

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் மன்னன் வரகுணனுக்கும் இந்த ஊருக்கும்  எந்தத் தொடர்பும்  இல்லை! அவனோ சிவ பக்தன்; அப்படியிருக்க வரகுண மங்கை என்ற பெயர் எப்படி வந்தது?

****

4.கர்நாடக ஆளுப்பா வம்ச மன்னர்கள் !!!

இது முக்கியமான தடயம் ; ஆலவாய் என்ற பெயரே ஆளுப்பா என்று மருவியுள்ளது இவர்கள் பாண்டியா என்று தங்களை அழைத்துக்கொண்டு பாண்டியரின் மீன் சின்னத்துடன் காசுகளையும் வெளியிட்டனர். மேலும் தி, வி. பு மன்னர் பெயர்களையும் வைத்துக்கொண்டனர் (இது பற்றி தனி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுகிறேன்)

****

5.மூர்த்திநாயனார் மர்மம் !

மூர்த்தி நாயனார் என்ற வணிகரை, யானை மாலை போட்டு மன்னர் ஆக்கியதை நம்பியும் சேக்கிழாரும் பாடினார் ; அவர் சமணர்களின் எதிரி. சேக்கிழாரும் பாடியதால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையை ஆண்டிருக்கிறார் அவர் பற்றிய குறிப்புகள் வரலாற்று ஏடுகளில் எங்கணுமே இல்லை . அவர் எப்போது ஆண்டார்?

இதே போல இலக்கியங்கள் புகழும் பொற்கைப் பாண்டியன் யார் ? பசும்பூண் பாண்டியனா?

6.அபிஷேக பாண்டியன்– நான்மாடக் கூடல் தொடர்பினை வைத்து அவனுக்கு கி பி நான்காம் நூற்றாண்டினைக் குறிக்கிறார் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அதையும் தொடக்கமாக வைத்து முன்னும் பின்னும் காய்களை நகர்த்தலாம்.

7.மதுரைப் பேராலவாயார் புறநானூற்றின் 247, 262 பாடல்களை இயற்றியதால் ஆலவாய்ப் பெயரும் 2000 ஆண்டுப் பழமை உடைத்து!

அபிஷேக பாண்டியனும்  தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் சிறு வயதிலேயே பட்டம் ஏற்றதையும் ஓப்பிடலாம் கரிகாலன்கள்  மூவர்  இருந்தது போல  வரகுணன் மூவர் இருந்திருக்கலாம்! கரிகாலன் மன்னன் காலத்தில் ராஜசேகர  பாண்டிய மன்னன்  ஆண்டதாக தி. வி. பு. கூறுகிறது! எந்தக் கரிகாலன் ?

****

மதுரை என்ற பெயரின் தோற்றம் மர்மமாக உள்ளது

கலித்தொகையில் திரு மருத முன்துறை வருகிறது; மருதம் ஊர் என்பதே மதுரை ஆனதாகவும்,  கிருஷ்ணனின்  வட மதுரைஊரை வைத்தே  மதுரை தோன்றியதாகவும் பலர்  செப்புவர் . 

பதினோராம்  திருமுறையிலும்  தி வி பு விலும்  சேரமான் பெருமாள் நாயனார், பாணபத்திரர், திரு ஆலவாயான் ஆகியோர் ஒரே காலத்தில் இருந்த குறிப்பு வருகிறது இவர் வேறு  திரு ஆலவாயான் ??

இவ்வாறு ஏராளமான புதிர்கள் வருகின்றன ; இந்தப்புதிரை விடுவிக்க தி.வி.பு. மகாநாட்டினைக் கூட்டி அறிஞர்கள் ஆராய வேண்டும் அப்போது புதிருக்கு விடைகாணலாம்

 *****

வேள்விக்குடி செப்பேடு

சூடாமணி / சூளாமணி என்ற பெயர்கள் தி.வி.பு.வில் நிறைய மன்னர் பெயர்களில் வருகிறது. அவை எல்லாம் பிற்காலப் பாண்டியர் பெயர்களில் வருவதை செப்பேடுகளும் கல்வெட்டுகளும் கூறுவதால் இவை எல்லாம் பரஞ்சோதி, நம்பி ஆகியோரின் கற்பனையில் உதி த்தவை அல்ல.

கல்வெட்டுகளும் செப்பேடுகளும் ஸம்ஸ்க்ருதப் பகுதியில் பாண்டியனை வர்மன் என்ற பட்டத்துடன் கூறுகிறது. இந்தோனேஷியாவின் போர்னியோ தீவின் அடர்ந்த காட்டுக்குள் யூப தமபங்களும் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகளும் பூர்ண வர்மன் என்ற பெயருடன் கிடைத்துள்ளமான . இவை எல்லாம் தி .வி.பு ஸம்ஸ்க்ருதப் பெயர்களை உறுதி செய்கின்றன. பூர்ண வர்மன் நாலாம் நூற்றாண்டினைச் சேர்ந்தவன்  .

–subham –

Tags — திருவிளையாடல் புராணம் , ஆராய்ச்சிக் கட்டுரை-8,நம்பியை  நம்பாதே, Part two, last part

Leave a comment

Leave a comment