
ALUPA COINS WITH PANDYA NAME
Post No. 14,587
Date uploaded in London – 3 June 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருவிளையாடல் புராணம் ( தி.வி.பு.) ஆராய்ச்சிக் கட்டுரை-9
ALUPA DYNASTY OF KARNATAKA
கர்நாடக மாநிலத்தில் மங்களூரைத் தலை நகராகக் கொண்டு சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்டவர்களை ஆளுபா வம்சம் என்று அழைத்தனர் ; இதன் பொருள் விளங்கவில்லை என்றும் என்சைக்ளோபீடியாக்களில் எழுதியுள்ளனர்; எனது ஆராய்ச்சியில் இவர்கள் ஆல வாய் வம்சம் என்பது தெரியவந்தது ஏனெனில் இவர்கள் தங்களைப் பாண்டியர்கள் என்றும் சந்திர குல வேந்தர்கள் என்று அறிவித்ததோடு பாண்டியர்களின் இரட்டை மீன் சின்னத்துடன் தங்க காசுகளையும் வெளியிட்டுள்ளனர் ; இவர்களுடைய பெயர்களை திருவிளையாடல் புராணம் உண்மையே என்றும் நிரூபிக்கிறது!
ப என்ற எழுத்து வ என்ற எழுத்தாக மாறும் என்பதை இன்றும் வங்காளி, அஸ்ஸாமிய மொழிகளில் காண்கிறோம்; இது சங்கத் தமிழ், சம்ஸ்க்ருதம், அவஸ்தன் மொழிகளிலும் காணப்படுகிறது ஆகவே ஆளுபா என்பதை ஆலவாய் என்றே படிக்க வேண்டும் என்பது எனது துணிபு.

URO BOROS = URAGAPURAM /MADURAI OF KALIDAS.
ஆலவாய் என்றால் பாம்பு என்று பொருள்; அதாவது ஒரு பாம்பு வட்ட வடிவத்தில் உடலை வளைத்து தனது வாலினை வாயால் கவ்விக் கொள்வதை ஆலவாய் என்பார்கள்; இது எகிப்திலும் கிரேக்கத்திலும் காணப்படுகிறது. புறநானூற்றின் இரண்டு பாடல்களை எழுதிய புலவர் பெயரும் ஆலவாயார்தான் . முழுப்பெயர் மதுரைப் பேராலவாயார்.
தி வி பு. ஆராய்ச்சிக்கு மிகவும் உதவக்கூடியது ஆளுப்பா மன்னர் சரித்திரம் ஆகும்; ஏனெனில் இவர்கள் தீவிர சிவ பத்தர்கள், சக்தியையும் வழிபட்டவர்கள் இது நமக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்ற தெய்வங்களை நினைவுக்குக் கொண்டுவரும்
எல்லாவற்றுக்கும் மேலாக குலசேகரன் தனஞ்சயன் , வீர பாண்டியன் என்ற தி. வி பு பெயர்கள் அப்படியே ஆளுப்பா வம்சத்தில் இருக்கினறன.
குலசேகரன் பாண்டியன் மதுரையை நிறுவிய கதையுடன் தி வி பு. துவங்குகிறது அவன் மகன் மலைக் கொடியோன் , அதாவது மலையத்வஜன் ; அவன் மனைவி பொன்மாலை, அதாவது காஞ்சன மாலா . அவர்கள் மகன் உக்கிரகுமாரன், அதாவது முதலாவது கடுங்கோன். அவன் மனைவி காந்திமதி ; சூரிய குல இளவரசி அவர்கள் மகன் வீர பாண்டியன் ; அவனைப் புலி அடித்துக் கொன்றுவிட்டது உடனே அவன் மகன் அபிஷேக பாண்டியன் பட்டம் ஏற்றான். அவன் சிறு வயதில் மன்னன் ஆனான். ஒரு வேளை புறநானூறு கூறும் சிறுவயதில் பட்டம் ஏற்ற நெடுஞ்செழியனாக இருக்கலாம் . மதுரை சிவலிங்கத்தைக் கடம்ப வனத்தில் கண்டுபிடித்து குலசேகரனுக்கு அறிவித்த செட்டியாரின் பெயர் தனஞ்ஜெயன். அவரது சிலை பொற்றாமரைக் குள தூணில் உள்ளது. .இது தி வி பு செய்தி.
இந்தப் பெயர்களில் தனஞ்சயன் குணசேகரன், வீர பாண்டியன் ஆகிய அனைத்தும் ஆளுப்பா / ஆலவாய் சரித்திரத்தில் உள்ளது . அவர்களுடைய தேசத்தை ஆளுப்பா கேட்டா என்று எழுதினர்; இது ஆலவாய் க்ஷேத்திரம் என்பதன் மருவு; அதாவது பேச்சு வழக்கு ; வடக்கே இன்று வாழும் க்ஷத்ரியர் தம்மை கட்டி என்பார்கள் ; இது க்ஷத்ரிய என்பதன் பேச்சு வழக்கு; இவை அனைத்தும் ஆலவாய் க்ஷேத்திரம் என்பதை நிரூபிக்கின்றன.

ஆலவாய்ப் பாம்பின் அர்த்தம் அளவற்றது, முடிவற்றது தொடர்ச்சியானது INFINITY, ENDLESS, CONTINUOUS என்பதாகும் ; இதே போல ஒரு சம்பவம் மதுரையில் நடந்ததால் மதுரைக்கும் ஆலவாய் என்ற காரணப் பெயர் ஏற்பட்டதை தி வி பு. கூறுகிறது. மேலும் பாண்டியர்கள் மதுரைக்கும் முன்னர் மணலூரிலிருந்து ஆட்சி செய்ததை புராணமும் ஒப்புக்கொள்கிறது.
பிளினி PLINY என்ற யாத்ரீகர் மதுரை தலைநகர் மாற்றம் பற்றி கிபி 75 CE–ல் எழுதியுள்ளார் அதே ஆள் இந்த ஆளுப்பா வம்சத்தயும் கொச்சை மொழியில் குறிப்பிட்டுள்ளார் ஆகவே இரண்டாயிரம் ஆண்டு வரலாறு உடையவர்கள் இவர்கள் ; ஆளுப்பா வம்சம் பற்றி ஆராய்ந்த அனைவரும் இவர்களை நாகர்கள், பாம்புடன் தொடர்புடையவர்கள் என்றே உறுதிப்படுத்தியுள்ளனர்
காளிதாசனும் பாண்டியர் தலைநகர் உரகபுரம் என்று சங்க காலத்துக்கு முன்னரே எழுதியுள்ளார். இதன் பொருள் பாம்பூர் அல்லது ஆலவாய் . அந்தப் பெயரை மதுரைப் பேராலவாயார் என்ற சங்கத் புலவரின் பெயரில் காண்கிறோம்..
சைவர்களாக வாழக்கையைத் துவங்கிய இவர்கள் பிற்காலத்தில் சமண மதத்தையும் தழுவினர். ஒருவேளை இவர்கள்தான் தமிழ் நாட்டினை சங்க காலத்துக்குப் பின்னர் பிடித்தார்களோ என்றும் ஆராய வேண்டும். கன்னடத்தில் மிகப்ப ய கல்வெட்டு இவர்களைக் குறிப்பிடுகிறது கி.பி 600 CE முதல் தொடர்ச்சியான வரலாறு கிடைக்கிறது; பெரும்பாலானவை கோவில் நிகழ்ச்சிகள் பற்றியவை.
இவர்களில் பூதல பாண்டியன் என்பவன் புதிய சொத்துரிமை முறைகளை அறிமுகப்படுத்தினான் பூதல பாண்டியன் என்பதைத் தமிழில் சொன்னால் நிலம் தரு திருவில் பாண்டியன் என்று வரும்; அல்லது பான்னாடு தந்த பாண்டியன் என்றும் சொல்லலாம். இந்தப் பெயர்கள் தொல்காப்பிய காலம் முதல் தமிழில் இருப்பதை நாம் அறிவோம்.
பாண்டியர் வம்சத்தில் தீர்க்கப்படாத புதிர்களுக்கு ,மர்மங்களுக்கு ஆளுப்பா வம்ச ஆராய்ச்சி உதவலாம் .
களப்பிரர் மர்மம்
மூர்த்தி நாயனார் மர்மம்
மாணிக்வாசகர் மர்மம்
தி.வி.பு வில் உள்ள ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் மர்மம்
அவை வரலாற்று தடயங்களில் இல்லாத மர்மம்
முதல் இரண்டு தமிழ்ச் சங்கம் இருந்த இடங்கள், மன்னர்களின் மர்மம்
வியட்நாமில் முதல் மன்னர் ஸ்ரீமாறன் என்று இருக்கும் மர்மம்
வரகுணன் என்ற பெயர் மர்மம் (அரிமர்த்தனன் என்றே தி வி பு கூறுகிறது
நின்ற சீர் நெடுமாறனின் மர்மம் (பெரியாழ்வார் நெடுமாறன் என்ற மன்னரை வாழ்த்துகிறார் )
தொல்காப்பியம் சொல்லும் நிலம் தரு திருவில் பாண்டியனுக்கு வரலாற்றுச் சான்றில்லாத மர்மம்
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
****

பாண்டியர் பெயர்களில் ஜடிலன் வர்மன்
பாண்டியர்கள் மாறி ,மாறி சடையன், மாறன் என்ற பெயர்களை வைத்துக் கொண்டதை வரலாறு காட்டுகிறது . பாண்டியர்களை ஜடிலன் , வர்மன் என்று செப்பேடுகளின் ஸம்ஸ்க்ருதப் பகுதிகள் போற்றுகின்றன. இதனால் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் இருந்ததை ஆதிகாலம் முதல் அறிகிறோம்.
மேலும் இந்தோனேஷியாவின் அடர்ந்த காட்டுக்குள் கிடைத்த கல்வெட்டு பூரண வர்மன் என்று சொல்கிறது; பல்லவர்களும் இந்த வர்மன் பெயரை சொல்கின்றனர். இதனால் நெடுமாறன், வரகுணன் , நெடுஞ்செழியன் என்பதை ஒரே ஒருவர் என்று நம்பிவிடக்கூடாது
தி வி பு சொல்லும் அத்தனை மன்னர்களின் வரலாறும் உண்மையே அதை கால வரிசைப்படுத்த அறிஞர்கள் மகாநாட்டினை பல்கலைக்கழக வரலாற்றுத் துறைகளோ, ஆதீனங்களோ ஏற்பாடு செய்ய வேண்டும். பூர்ண வர்மன் காலம் நாலாவது நூற்றாண்டு. அபிஷேக பாண்டியனின் காலம் நாலாம் நூற்றாண்டு என்கிறார் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை. இத்தகைய செய்திகளைத் தொகுத்து தி வி பு வை ஆராய்வது நமது கடமை. (நேற்று எழுகிய ஆங்கில கட்டுரையில் ஆளுபா ஆராய்ச்சியாளர்களின் பெயர்களைக் கொடுத்துள்ளேன். ஆராய்ச்சி தொடரும் .
Following information from Wikipedia also confirms their connection with Tamil Aalwaay=Uro Boros= Uragapura of Kalidas.
According to B. A. Saletore, the name Alupa may be derived from its variant Aluka which is an epithet of the divine serpent Shesha of Hindu epics.[5] Fleet has suggested that the name Aluka may possibly denote the Nāgas, who in early times were included in Chalukya dominions.[5] Saletore further adds that the Naga origin of the Alupas is proved by two facts. The figure of a hooded serpent which is found in an effaced Alupa stone inscription in the Gollara Ganapati temple in Mangalore and their ultra Saivite tendencies.[5] Saletore dismisses the idea regarding the Dravidian origin of the name from the Tulu word Alunu meaning ‘to rule’ or ‘govern’.[5].
.jpg)
Their influence over coastal Karnataka lasted for about 1200 years.
MY OLD ARTICLE
காளிதாசன் போட்ட தமிழ்ப் புதிருக்கு கிரேக்க நாட்டில் விடை கிடைத்தது! (Post.10,825)
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,825
Date uploaded in London – – 9 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
உலகப் புகழ் பெற்ற கவிஞன் காளிதாசன் 2100 ஆண்டுகளுக்கு முன்னர் மாபெரும் சக்கரவர்த்தியான விக்ரமத்தித்தன் அரசவையில் கவிஞனாக இருந்தான். அவன் எழுதிய ஏழு நூல்களையும் படிக்காதவன் இந்தியனே இல்லை. அவன் பயன்படுத்திய 1500 உவமைகளில் 200 உவமைகளை சங்கத் தமிழ்ப் புலவர்கள் பயன்படுத்தயுள்ளனர். தமிழ் மொழியைக் கிண்டல் அடித்த யாழ் பிரம்மதத்தனுக்கு கபிலர் என்ற பிராமணப் புலவர் சம்ஸ்க்ருதம் மூலமாக தமிழ் சொல்லிக்கொடுத்து அவனுக்காக குறிஞ்சிப் பாட்டு என்னும் நூலை எழுதி கின்னஸ் சாதனை புரிந்தார். 99 மலர்ப் பெயர்களை ஒரே மூச்சில் அடுக்கிப் பாடினார். அதைப் படித்த ரெவரென்ட் ஜி .யு . போப் REV. G U POPE , இது காளிதாசன் நூலின் தாக்கத்தில் பிறந்தது என்று கருத்து தெரிவித்தார்.
காளிதாசன் எழுதிய ரகு வம்ச காவியத்தில் ஒரு புதிர் போட்டார். எல்லா உரைகாரர்களும் அர்த்தம் புரியாமல் தவியாய்த் தவிக்கின்றனர். அதற்கு அதர்வண வேதம், எகிப்தின் 3400 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியத்தில் விடை கிடைத்துள்ளது.
முதலில் புதிர் என்ன என்று பார்ப்போம். பாரதியார் பாட்டிலும், காஞ்சி புராணத்திலும், திருவிளையாடற் புராணத்திலும் தமிழுக்கு அகத்தியர் செய்த சேவையும் சிவ பெருமான் அவரை தமிழ் இலக்கணம் எழுத இமயமலையில் இருந்து அனுப்பிய செய்தியையும் படிக்கிறோம். இது பல பாண்டியர் கால செப்பேடுகளிலும் உள்ள செய்தி. ஆனாலும் அவர்களுக்கு எல்லாம் முன்னதாக ரகு வம்ச காவியத்தின் ஆறாவது அத்தியாயத்தில் காளிதாசன் பாண்டியருக்கும் அகத்தியருக்கும் உள்ள தொடர்பை முதல்தடவையாகப் பாடியுள்ளான் அது மட்டுமல்ல புறநானூற்று மன்னன் முதுகுடுமிப் பெருவழுதி செய்த அஸ்வமேத யாகம் பற்றியும் பாடியுள்ளான்; நமக்கு பெருவழுதியின் அஸ்வம்/ குதிரை பொறி த்த நாணயம் கிடைத்ததால் இது உறுதியாகிறது. அந்தப் பகுதியில் காளிதாசன் போட்ட புதிர் “உரகம் என்னும் பெயரை உடைய நகரத்தை ஆளும் பாண்டியர்” என்று அறிமுகம் செய்வதாகும். அதாவது ஒவ்வொரு மன்னரையம் இந்துமதிக்கு அவளது தோழி சுநந்தை அறிமுகம் செய்யும் சுயம்வர காட்சி அது. உரக URAGA/ SNAKE என்றால் பாம்பு. உரகபுரம் என்று காளிதாசன் சொல்லும் நகரம் எது? அது எப்போது பாண்டியருக்கு தலைநகராக இருந்தது என்பதே புதிர்.
இதோ அந்த ஸ்லோகம்
அத உரகாக் யஸ்ய புரஸ்ய நாதம் தெளவாரிகீ தேவசரூப்யமேத்வ
இத சகோராக்ஷி விலோகயே பூர்வானுசிஷ்டாம் நிஜகாத போஜ்யாம்
–ரகு வம்சம் 6-59
பொருள்
பிறகு வாயிற் காப்பாளரான ஸுனந்தை , தேவதைக்கு ஒப்பான வடிவு உடையவனும் பாம்பின் பெயரை தன் பெயராக உடைய பட்டணத்திற்கு அரசனுமான (பாண்டியனை) வனை அடைந்து, சகோர பக்ஷியின் கண்களைப்ப போன்ற கண்களை உடையவளே! இங்கு பார் ! என்று முதலில் சொல்லப்பட்ட இந்துமதியிடம் சொன்னாள் (போஜ்யாம் – இந்துமதி)
अथोरगाख्यस्य पुरस्य नाथम् दौवारिकी देवसरूपमेत्य|
इतश्चकोराक्षि विलोकयेति पूर्वानुशिष्टाम् निजगाद भोज्याम्॥ ६-५९
|| Raghu vamsa 6-59
atha uraga Akhyasya purasya nAtha.m dauvArikI deva sa rUpam etya itaH cakora akShi vilokaya iti pUrva anushiShTA.m nijagAda bhojyAm
இதில் பாம்பின் பெயரில் உள்ள = உரக புரம் என்பது பற்றி மல்லி நாதர், அருணகிரிநாதர் முதலிய உரைகாரர்கள் நாகப்பட்டிணம் அல்லது கன்யாகுப்ஜ நதிக்கரையில் உள்ள நாகபுரம் என்றெல்லாம் எழுதினார்கள் ஆனால் மதுரை மாநகருக்கே ‘நாகபுரம்’ SNAKE CITY என்ற பெயர் இருப்பதை நம்பி எழுதிய திருவிளையாடற் புராணம் மூலமா அறிகிறோம். இதை லிப்கோ வெளியிட்ட ரகுவம்ச உரையில் வேங்கட ராகவாசாரியார் எழுதியுள்ளார். மதுரைக்கு ஆலவாய் என்றும் பெயர். இது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் உண்டான பெயர் என்பது சங்க காலப் புலவர் மதுரைப் பேரால வாயார் என்ற பெயரிலிருந்து அறியலாம்.
ஆலவாய் என்றால் வட்டமான பாம்பு. ஒரு பாம்பு தன் உடலை வட்டமாக்கி வாலை தன் தலையால் கவ்வும் காட்சி. பாண்டிய மன்னன் ஒருவன் சிவபெருமானிடம் மதுரையின் எல்லையைக் காட்டுங்கள் என்று மன்றாடியபோது சிவ பெருமான் தன் கழுத்தில் இருந்த பாம்பை விட்டு எறிந்தார். அது வட்டவடிவமாக சுழன்று மதுரை எல்லையைக் காட்டியது என்பது திருவிளையாடற் புராணம், ஹாலாஸ்ய மஹாத்ம்யத்தில் உள்ள கதை. ஹாலாஸ்ய என்பது ஆலவாய் ஆகும். ஆலவாய் SNAKE HEAD EATING ITS OWN TAIL என்பது வட்டமான பாம்பு ஆகும் . உரக என்ற சொல் சிலப்பதிகாரம், மணி மேகலை காவியங்களில் இருக்கிறது ஆனந்த விகடன் அகராதியில் பாம்பைக் குறிக்கும் சொற்களில் வருகிறது.
இதில் வியப்பான விஷயம் என்னவென்றால் அந்த உரக கிரேக்க மொழிச் சித்திரத்திலும் உள்ளது. ஒரு பாம்பு வட்ட வடிவத்தில் தனது தலையால் தனது வாலையே விழுங்கும் காட்சிக்கு UROBOROS உரோ பரோ என்று பெயர். இதற்கு பல பொருள் கூறப் பட்டாலும் ‘உரக’ சப்தம் இருப்பதைக் காண முடிகிறது இது கிரேக்கத்திற்கும் முன்னால் எகிப்தில் கி.மு 1400 ல் சூரியக் கடவுளைச் சுற்றியும் காணப்படுகிறது . சீனாவில் கிமு. 1200 சித்திரத்திலும் இக்காட்சி உள்ளது.
இவற்றையெல்லாம் தொடர்புபடுத்தும் சொல் எகிப்துக்கும் முந்திய அதர்வண வேதத்திலும் உள்ளது
வியாச மகரிஷியின் காலம் கலியுகத்துக்கு 100 ஆண்டுகள் முந்தியது. சுமார் கிமு 3150. அதாவது 5200 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் வேதங்களை நான்காகப் பிரித்து நான்கு சீடர்களிடம் அவற்றைப் பரப்பும் பணியை ஒப்படைத்தார். அந்த நான்கு வேதங்களில் கடைசி வேதம் அதர்வண வேதம். அதில் ஐந்தாவது காண்டத்தில் ஒரு துதியில் பாம்புகளின் விநோதப் பெயர்கள் வருகின்றன. இவற்றை இனம் தெரியாத பாம்புகள் என்று வெள்ளைக்காரர்கள் உரை எழுதிவிட்டனர் . தற்கால ஆராய்சசி, இவை எல்லாம் சுமேரிய மொழியிலும் இருப்பதைக் காட்டின. தியமத = தைமாத என்ற பாம்பு சம்ஸ்க்ருதம், சுமேரிய, அக்கடியன் மொழிகளில் இருப்பதை முன்னொரு கட்டுரையில் கண்டோம்.
XXX
அதே மந்திரத்தில் வரும் மற்றொரு பாம்பு URUUGULAA உருகுலா.
அதர்வண வேதம் ஐந்தாம் காண்டம் எட்டாவது மந்திரம் ,
“உருகுலாவின் பெண், கரும் பாம்பினின்று தோன்றும் தாஸிப் பாம்பு அசிகின்யா – இந்தப் பெண் பாம்புகளின் விஷமும் சக்தி இழக்கட்டும் “
இதில் உருகுலா என்பதை ‘உரகத்தின் பெண்’ என்று கொள்ளளாம் . மேலும் சுமேரியாவில் உரு குலா என்ற ஒரு இடம் உள்ளது. துருக்கியில் 1982ம் ஆண்டில் கடலுக்கு அடியில் பழங்கால கப்பல் கண் டுபிடிக்கப்பட்ட துறைமுகத்தின் பெயரும் உருபலன். இதில் எல்லாவற்றிலும் உரக / பாம்பு சப்தம் வருகிறது. இந்தியாவில் நாகாலாந்து, நாகபுரி, நாகர்கோவில் என்ற நூற்றுக் கணக்கான பாம்பு ஊர்கள் , இமயம் முதல் குமரி வரை இருக்கின்றன அந்தக் காலத்தில் எகிப்திலும் பாபிலோனியாவிலும் பாம்பு ஊர்கள் இருந்திருக்கும்.
சுமேரிய உருகுலா என்ற ஊர்பெயருக்கு நேரடியாக பாம்பு தொடர்பு கா ட்டப் படாவிடிலும் இதை பாதாள உலக நகர் என்பர். அதற்கு AKKADIAAN அக்கடிய மொழியில் நெர்கள் NERGAL என்று பெயர். அதிலும் நாக அல்லது நரக சப்தம் வருகிறது ஆக உரிகல் , நெரி கல் ஆகியன பாதாள/ நாக லோக தொடர்பைக் காட்டுகின்றன. பாம்பின் வாய்க்குள் அதன் வால் இருக்கும் படம், சித்திரம் மதுரை ஆலவாய் முதல் எகிப்து வரை இருப்பதும், பாண்டியர் தலை நகரை காளிதாசன் உரகபுரம் / பாம்பூர் என்று சொல்லுவதும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன என்பதில் ஐயமில்லை.
XXX SUBHAM XXX
TAGS- உரகபுரம், உரகம் , பாம்பு, சுமேரிய, உருகுலா , கிரேக்க, உரோ பரோ , ஆலவாய், ஹாலாஸ்ய
—சுபம்—-
TAGS புதிய ஆராய்ச்சி, கர்நாடகம், ,ஆலவாய், பாண்டியர்கள், ஆளுபா வம்சம் , மீன் சின்னம், திருவிளையாடல் புராணம், ஆராய்ச்சிக் கட்டுரை-9