சிவபெருமான் குதிரை வியாபாரியாக வருதல்
Post No. 14,621
Date uploaded in London – 11 June 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
இந்தக் கட்டுரையின் முதல் பகுதி நேற்று வெளியானது
பாண்டியர் வரலாறு 2600 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்குகிறது என்பதை மஹாவம்ச க் குறிப்புகளிலிருந்து அறிகிறோம் என்றும் அதற்குப் பின்னர் கல்வெட்டுக் குறிப்புகள் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரே கிடைப்பதால் அந்த இடைப்பட்ட ஆயிரம் ஆண்டுகளில் ஆட்சிபுரிந்த குறைந்தது 50 அல்லது 60 அரசர்களைக் கண்டுபிடித்து கால வரிசைப்படுத்த வேண்டும் என்றும் கட்டுரையின் முதல் பகுதியில் கண்டோம்.
சம்பந்தரும் அப்பரும் தேவாரத்தில் மாணிக்கவாசகரின் லீலைகளைக் குறிப்பிட்ட பின்னரும் அதைக் கண்டுகொள்ளாமல் வரகுணன் என்ற ஒரே குறிப்பை மட்டும் வைத்து மாணிக்க வாசகரைப் பின்னுக்குத் தள்ளியது தவறு என்பதை இப்போது காண்போம் .
நரி பரி ஆன லீலை
மதுரைக் கோவிலுக்குச் சென்றோர் அனைவரும், கல்லில் ஆன வன்னி மரம், சிவலிங்கம், அருகில் ஒரு கிணறு இருப்பதை பிரகாரத்தில் கண்டிருப்பார்கள். வன்னி மரமும் கிணறும் சாட்சியாக வந்த ஸ்தல வரலாறு இது ; கண்ணகி ஏழு மாபெரும் பத்தினிகளைச் சொல்லும் சிலப்பதிகார வஞ்சினமாலைப் பகுதியில் இந்தக்கதை வருகிறது ; நல்ல அருமையான ஆராய்ச்சி உரை எழுதிய உ. வே சாமிநாத அய்யர் தஞ்சசைப் பிரதேசத்திலுள்ள (திருப்புறம்பியம் சாட்சிநாதர் , திருமருகல் ) ஓரிரு கோவில்களின் கதைகளில் இது இருப்பதாகச் சொல்லியுள்ளார் . ஆனால் சிலப்பதிகாரத்தை முதல் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வி ஆர் ராமசந்திர தீட்சிதர் , திருவிளையாடல் புராணத்திலும் (தி.வி.பு) இக்கதை இருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார் ; சான்றுரைத்த திருவிளையாடல் என்பது கடைசி (64) திருவிளையாடல் ஆகும். சிலப்பதிகார காலம் இரண்டாம் நூற்றாண்டு என்றால் இந்த சம்பவம் அதற்கு முன்னால் நிகழ்ந்திருக்க வேண்டும் அல்லவா?
சம்பந்தர் தேவாரத்தில் வரும் திருவிளையாடல் நிகழ்ச்சிகளை ஏ.வி ஜெயச்சந்திரன் எழுதிய நூலில் பட்டியலிட்டுள்ளார் . அதில் ஆராய்ச்சிக்குரியவை நான்மாடக்கூடல், திரு ஆலவாய் ஆன படலங்கள் ஆகும். மிக முக்கியமானது திருமுகம் கொடுத்த குறிப்பு! சிவ பெருமான் பாணபத்திரருக்கு RECOOMENDATION LETTER ரெக்கமண்டேஷன் லெட்டர் கொடுத்து அனுப்பிய படலம் அது. உலகிலேயே இலக்கியத்தில் காணப்படும் முதல் சிபாரிசுக் கடிதம் இதுதான்; கின்னஸ் சாதனைப் புஸ்தகத்தில் இடம் பெறவேண்டியது . இதை எல்லோரும் சேரமான் பெருமாள் காலம் என்ற பகுதியில் வைத்துப் பின்னுக்குத் தள்ளுகின்றனர் .
இதற்கு இன்னுமொரு உதாரணம் அப்பர் தேவாரத்தில் வருகிறது .
சங்கத் தமிழ் நூல்களில் மிகப்பெரிய HISTORIAN ஹிஸ்டோரியன்- வரலாற்று ஆசிரியர் பரணர் ; எழுபதுக்கும் மேலான சம்பவங்களை நமக்கு அளிக்கிறார் அதே போல 12 திருமுறைகளில் மிகப்பெரிய ஹிஸ்டோரியன் அப்பர் பெருமான்; வடக்கே பாடலிபுத்திரம் வரை சென்று , காளிதாசன் போல, இந்தியாவையே அளந்தவர் . அவர் சொல்லும் தி.வி.பு பட்டியலில் முக்கியமானவை:
தருமிக்குப் பொற்கிழி அளித்தது ;
நரி, பரியானது;
மண் சுமந்தது (சிவ பெருமானே புட்டுக்கு மண் சுமந்த நிகழ்சசி இன்றும் மதுரையில் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு புட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
நரி -பரி, புட்டுக்கு மண் சுமந்தது– இரண்டும் மாணிக்க வாசகர் கதைகள். இவ்வளவு தெளிவான சான்று இருந்தும் வீம்பு பிடிக்கும் பிடிவாதப் பேர்வழிகள் மாணிக்கத்தைப் பின்னுக்குத் தள்ளுவது ஏனோ தெரியவில்லை.
கூன் பாண் டியன் சுரம் தீர்த்த படலம் படலம்
பாவை பாடிய வாயால் கோவை பாடிய மாணிக்கம், திருக்கோவையில் இரண்டு முறை வரகுணநைக் குறிப்பிடுகிறார்; நமக்குத் தெரிந்தவரை 17ஆவது நூற்ரா ண்டு வரை 3 வரகுணன்ங்கள் இருக்கிறார்கள் சிவ பக்தர்களுக்கு எல்லாம் இப்பட்டம் கிடைத்திருக்கிறது; ஆகையால் இவர்களுக்கு எல்லாம் மூத்த ஒரு சிவ பக்த வரகுணன் இருந்திருக்க வேண்டும் என்பதே என் கருத்து. அப்பரும் சம்மந்தரும் பொய் சொல்ல மாட்டார்கள்! இப்போது சுந்தரர் -பாணபத்திரன்- சேரமான் பெருமாள் நாயனார் – சிபாரிசுக் கடித புதிரை விடுவிக்க வேண்டும் ஒன்று, திருமுகம் கொடுத்த தேவார பாடல் தவறாக ச ம் பந்தர் தேவாரத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும்; அல்லது பாணர்- சேரமான் பெருமாள் நாயனாரை முன்னுக்குத் தள்ள வேண்டும் ; இதற்கு ஆதாரங்கள் தேவை.
இந்திய வரலாற்றில் ஒரு நிகழ்ச்சியைவைத்து இன்னொருவர் காலத்தைக் கணிக்கும் அவல நிலை இருக்கிறது; மாண்டசோர் கல்வெட்டு ஒன்றினை வைத்து காளிதாஸருக்கு 700 ஆண்டு காலம் கற்பித்த கதை போன்றது இது !
கல்லாடம் என்னும் நூலில் 31தி வி பு சம்பவங்கள் வருகின்றன
அதிலும் திருமுகம், நரி- பரி, மண் சுமந்தது வருகின்றன
Picture-மண் சுமந்தது
சங்க லத்திலிருந்து பல கல்லாடர் இருந்த சான்று உள்ளது; ஆகையால் இந்தக் கல்லாடர் காலத்ததையும் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
மாணிக்கவாசகருக்குப் பின்னர் 12 மன்னர்கள் இருந்ததைச் சொல்லி சம்பந்தர் கால கூன் பாண்டியனைக் குறிப்பிடுகிறார். ஆகவே குறைந்தது 200 ஆண்டு இடைவெளி; அதாவது மாணிக்க வாசகர் சம்பந்தருக்கு முந்தியவர்; மேலும் நின்ற சீர் நெடுமாறன் என்று போற்றப்படும் கூன் பாண்டியன் மட்டும் நெடுமாறன் அல்ல என்பது பெரியாழ்வார் குறிப்பிடும் நெடுமாறனால் தெரிகிறது. நம்மாழ்வார் வரகுணமங்கை என்ற ஊரைப்பாடுகிறார். அங்கோ சிவன் சம்பந்தமே இல்லை .
இதிலிருந்து தெரிவது என்ன வென்றால், ஒரு வரகுணன் மட்டும் இல்லை; ஒரு நெடுமாறன் மட்டும் இல்லை, ஒரு சேரமான் மட்டும் இல்லை; இந்த திறந்த மனத்தோடு தி வி பு. வை அலசி ஆராய வேண்டும்.
கடைசியாக ஒரு விஷயம். பரஞ்சோதி முனிவர் எழுதிய தி.வி.பு.வில் மிகத்தெளிவாக மன்னர் வரிசை உள்ளது.
நல்ல வேளையாக 64 திருவிளையாடல்களை ஆயிரம் ஆண்டுக்கு முந்தையவை என்பதை எல்லா சான்றுகளும் காட்டுகின்றன கரிகாலன் பெயர் கூட தி.வி.பு.வில் வருகிறது.
சுந்தர பாண்டியன் என்ற பெயரில் நாலைந்து பேர் இருந்ததை பரஞ்சோதியே சொல்கிறார். ஆதி சங்கரர் சொல்லும் சுந்தர பாண்டியன் யார் ?
காக்கைபாடினியார் எழுதியது காக்கைபாடினீயம்; அகத்தியர் எழுதியது அகத்தியம் ; தொல்காப்பியர் எழுதியது தொல்காப்பியம்; பாணினி எழுதியது பாணினீயம்; சுந்தர பாண்டியன் எழுதியது சுந்தர பாண்டியம் ; சங்கரர் காலம் 732CE என்று வாதிடுவோர், அவருக்கு முந்தையா சுந்தர பாண்டியனைக் கண்டுபிடிக்க வேண்டும் அல்லவா ?
முன்னர் சொன்னபடி, கடுங்கோனுக்கு முன்னர் ஆண்ட ஐம்பது பாண்டியர்களைக் கண்டுபிடிக்க தி வி பு உதவும்.
மாணிக்கவாசகர் காலம் பற்றிய எனது பழைய கட்டுரைகளில் மேலும் பல தகவல்களைக் காணலாம்
*****
ஆதீனங்களுக்கு வேண்டுகோள்
திருமந்திர மகாநாடு, சைவ மகாநாடு கூட்டுவது போல தி வி பு மஹாநாட்டினைக் கூட்டி பல் துறை அறிஞர்களைக் கொண்டு ஆராயவேண்டும். ஏனெனில் தி. வி. பு. வில் பல சுனாமி அழிவுகள், தலைநகர் மாற்றங்கள் பாபுலேஷன் பிராப்ளம்/ மக்கட் தொகை பெருக்கம், 12ஆண்டு வறட்சி, பிராமணர் -செட்டியார் குடி பெயர்வு, இலங்கை முதல் இமயம் வரை ஜியாக்ரபி / புவியியல் ,பல நாடுகள், கத்திச் சண்டைப் போட்டி, சங்கீதப் போட்டி, வழக்காடுதல், சங்கப் புலவர் சண்டை என்று பல துறை விஷயங்கள் வருகின்றன.
விரைவில் மகாநாட்டில் சந்திப்போம்
–subham—
Tags பாண்டியர், வரலாற்றில், தீர்க்கப்படாத மர்மங்கள், புதிர்கள், PART 2, ஆதீனங்களுக்கு, வேண்டுகோள் , மாணிக்கவாசகர் காலம், கல்லாடம்,முதல் சிபாரிசுக் கடிதம், வரகுணன்