புதிய அகஸ்தியர் பற்றி நாம் அறியாத தகவல்! (Post No.14,625)

Written by London Swaminathan

Post No. 14,625

Date uploaded in London –  12 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

எத்தனையோ அகஸ்தியர் பற்றி நாம் கேள்விப்பட்டுள்ளோம்; ரிக் வேதத்தில் லோபாமுத்ரா என்ற மஹாராணியைக் கல்யாணம் கட்டிக்கொண்ட குட்டையான அகஸ்தியர் முதல் மருத்துவ நூல்கள் எழுதிய பிறகால அகஸ்தியர் வரை நாம் அறிவோம்; குள்ளமான அகஸ்தியர்  சிலைகள் இந்தியாவில் மட்டுமின்றி தென் கிழக்காசிய நாடுகளிலும் இருப்பதால் இந்து சமய மு னிவர்களில் பெரும் புகழ் படைத்தவர் அகஸ்தியர் ஒருவரே என்பதையும் உறுதிபட சொல்லலாம் . காளிதாசனின் ரகுவம்சம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அகஸ்தியர்- பாண்டியர் தொடர்பினைக் கூறிவிட்டது. கடைசியாக நாம  க்கு கவிதை எழுதிய பாரதியாரும் சிவபெருமான் தமிழ் மொழியை உண்டாக்கினார் அதற்கு அகஸ்தியர்  என்ற பிராமணன் இலக்கணம்  செய்து கொடுத்தான் என்று பாடிவிட்டார்.

ஆகையால் சிவபெருமான் எவ்வளவு பழமையானவரோ அவ்வளவு பழமையானது தமிழ் மொழி என்பதில் எள்ளவும் சந்தேகம் வர முடியாது!

ஆனால் தமிழ் வெறியை ஒதுக்கி வைத்துவிட்டு தமிழ் ஆர்வத்தோடு அணுகினால் சுமார் 2800 ஆண்டுகளுக்கு முன்னால் அகஸ்தியர் தமிழ் நாட்டிற்கு வந்தார் என்று சிவராஜ் பிள்ளை முதலியோர் எழுதிய ஆராய்ச்சி நூல்களை ஒப்புக்கொண்டு அங்கிருந்து காலத்தைக் கணக்கிடலாம். அகஸ்தியரை தமிழ்நாட்டிற்கு சிவ பெருமான் பதினெட்டு குடிகளுடன் அனுப்பியதற்கு முக்கிய காரணம் POPULATION PROBLEM பாபுலேஷன் பிராப்ளம் என்பதையும் நமக்கு இலக்கியங்கள் தெள்ளத் தெளிவாக எழுதியுள்ளன. அதுதான் உலகத்தின் முதல் ஜனத்தொகைப் பெருக்க பிரச்சினை என்பதும் முதல் திட்டமிட்ட குடிப் பெயர்வு (Southward migration of Hindus)  என்பதும் எனது ஆராய்ச்சியில் கண்ட முடிவு. இதற்கு நச்சினார்க்கினியர் எழுதிய சங்க இலக்கிய உரையே சான்று.

அகத்தியம் என்ற இலக்கண நூல் நமக்கு கிடைக்காமற் போனது நமது துரதிருஷ்டமே.; நிற்க

****

கங்கா தேவி எழுதிய மதுரா விஜயம் என்ற சம்ஸ்க்ருத நூலினை எஸ் திருவேகடாசாரி அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பதிப்பாக  (1957) வெளியிட்டார் . இதில் கங்கா தேவி எந்தளவுக்கு கற்றவர் பேரறிஞர் என்பது தெரிகிறது அவர் புகழும் மிகப்பெரிய புலவன் காளிதாசன் .

சம்ஸ்க்ருதத்தில் கவிதை வடிவில் மதுரா விஜயம் நூல்  எழுதிய கங்கா தேவி, மதுரையில் முஸ்லீம் ஆட்சியை வேரறுத்து இந்து ஆட்சியை நிறுவிய மாபெரும் விஜய நகர படைத் தளபதி குமார கம்பண்ணனின் மனைவி . அவர் இல்லாவிடில் தமிழ் நாட்டில்  இந்து மதம் அழிந்திருக்கும் அவரது காலம் 1365- 1370 CE

அதில் கங்கா தேவி அகஸ்தியர் பற்றிக்கூறுவதாவது

முதல் ஸ்லோகத்தில் பிள்ளையாருக்கு வணக்கம்;

இரண்டாவதில் பார்வதி பரமேஸ்வரனுக்கு வணக்கம்;

மூன்றாவதில் சரஸ்வதி தேவிக்கு நமஸ்காரம்;

நாலாவது  ஸ்லோகத்தில் விஜய நகர சாம்ராஜ்யத்தின் குலகுருவுக்கு வணக்கம் ;அவர் பெயர் க்ரியா சக்தி.

ஐந்தாவது ஸ்லோகத்தில் வால்மீகி முனிவருக்கு வாழ்த்து.

ஆறாவது  ஸ்லோகத்தில்  வியாசருக்கு நமஸ்காரம்;

ஏழாவது ஸ்லோகத்தில் காளிதாசனுக்கு அடிமையாகாத புலவர் எவரேனும் உண்டா?  இன்றும் கூட அவரது வழிகாட்டுதலில் அல்லவோ வாழ்கிறார்கள்! என்று புகழ்கிறார்

எட்டாவதில் பாண பட்டர்,  ஒன்பதாவதில்  பாரவி, பத்தாவதில் தண்டீன், 11- ஆவதில் பவபூதி 12-ஆவதில் கர்ணாம்ருத 13-ஆவதில் கவி திக்கையா, என்று வரிசைக்கிரம மாகப் புகழ்கிறார் கங்கா தேவி.

இந்த மஹாராணி மெத்தப் படித்தவர் என்பதற்கு இது ஒன்றே சான்று! ஆயிரம் ஸம்ஸ்க்ருதக் கவிஞர்கள் இருந்த திலும் கடலில் முத்து எடுப்பது போலப் புகழ்பெற்ற கவிஞர்களை கால வரிசைப்படி புகழ்ந்துள்ளார்!

அகஸ்தியருக்கு புகழ்மாலை

14-ஆவது ஸ்லோகத்தில் அகஸ்தியரை வாழ்த்தி வணங்குகிறார்

அகஸ்தியர் என்ற கற்றறிந்த கவிஞனைக்கண்டு பொறாமைப்படாமல் யாராவது இருக்க முடியுமா ? அவர் 74 கவிதை (நூல்) களை எழுதியவர் ஆயிற் றே!

பின்னர் கங்காதர, விஸ்வநாத ஆகியோரைப் புகழ்ந்து விட்டு இலக்கியத் திறனாய்வு பற்றிப் பாடுகிறார்.

யார் இந்த 74 கவிதை நூல் அகஸ்தியர்? அவரை ஏன்  கவி திக்கையாவுக்குப் பின்னாலும் கவி கங்காதரவுக்கு முன்னாலும் வைத்தார்?  அவர் எழுதிய 74 கவிதைகளோ கவிதை நூல்களோ எங்கே ?

கால வரிசைப்படிப் பார்க்கையில் இவர் நாம் அறியாத வேறு ஒரு புதிய அகஸ்தியர் என்று தெரிகிறது

இதற்கு உரை எழுதியோர் வாரங்கல் பிரதாபருத்ரதேவரின் ஆஸ்தான கவிஞர் அகஸ்தியர் என்றும் கங்காதேவிக்கு சீனியர் என்றும் கூறுகின்றனர்

பிரதாபருத்ரன் என்ற மன்னர் பற்றி அவர் எழுதிய கவிதை நூலி லிருந்து இதை அறிய முடிகிறது; அவருக்கு வித்யாநாத என்ற பட்டமும் இருந்திருக்கலாம். அவர் எழுதிய 74 நூல்களில் பெரும்பாலானவை அழிந்துவிட்டன  நமக்குக் கிடைத்தவை:

பால பாரத ,  கிருஷ்ண சரித,  நள கிர்த்தி கெளமுதி, லட்சுமி ஸ்தோத்ர, சிவ ஸ்தவ, லலிதா சஹஸ்ரநாமம், மணீ பரீக்ஷ,  சிவ சம்ஹிதா, சகலாதிகார.

இந்த அகஸ்தியர் சம்ஸ்க்ருத உரைநடையில் வல்லவர் என்றும் தெரிகிறது.

அகஸ்தியருடைய அண்ணண் மகன் கங்காதர மூன்று சம்ஸ்க்ருத நாடகங்களை எழுதியுள்ளார்  அவை மஹாபாரதசந்திர விலாச  ராகவ அப்யுதயம். இவரை இரண்டாவது வியாசர் என்று கங்காதேவி புகழ்வதால் அந்த மஹாபாரத நாடகம் விரிவானதாகவும் மிகச் சிறந் ததாகயும் இருந்திருக்க வேண்டும்.

—subham—

Tags-   புதிய அகஸ்தியர்,  நாம்,  அறியாத தகவல்

Leave a comment

Leave a comment