
Post No. 14,635
Date uploaded in London – 14 June 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
முஸ்லீம்களின் எண்ணிக்கை அதி பயங்கர வேகத்தில் அதிகரித்து வருவதாக பி இ டபிள்யூ PEW சர்வே காட்டுகிறது . இந்த அமைப்பு அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சி அமைப்பாகும். மக்களின் போக்கு, விருப்பங்கள், எண்ணிக்கை பற்றிய ஆராய்ச்சி செய்யும் பி இ டபிள்யு என்ற சாரிட்டி இதை நிர்வகிக்கிறது .
இந்துக்களின் ஜனத்தொகை அதிகரிக்கவில்லை ஆனால் சிறிதளவு குறைந்தும் இருக்கிறது
உலகில் ஜனத்தொகைக் கணக்கில் இந்துக்கள் நாலாவது இடத்தில் இருக்கிறார்கள். முதலிடத்தில் கிறிஸ்தவர்கள் இரண்டாமிடத்தில் முஸ்லீம்கள் உள்ளனர்; மூன்றாவது இடத்தில் எந்த மதத்திலும் சேராத ஆட்கள் இருக்கிறார்கள். நாலாவது இடத்திலுள்ள இந்துக்களின் எண்ணிக்கை 120 கோடி ஆகும்.
முஸ்லிம்களின் எண்ணிக்கை மற்ற எல்லா மதத்தினரையும் சேர்த்துவைத்தாலும் அதையும் விட கூடுதல் ஆகிவிட்டது!
இந்த சர்வே தரும் புதிய புள்ளி விவரம் பின்வருமாறு :

உலக அளவில் முஸ்லீம்களின் தொகை பத்து ஆண்டுகளில் 21% சதவீதம் அதிகரித்து இருக்கிறது. அதாவது 170 கோடியிலுருந்து 200 கோடி ஆகிவிட்டது. அதாவது ஏனைய மதத்தினரைப்போல இரு மடங்கு வேகம்.
இதில் வினோதம் என்னவென்றால் அமெரிக்காவில்தான் முஸ்லீம்கள் அசுர வேகத்தில் ஜனத்தொகையை அதிகரித்து வருகிறார்கள்; பத்து ஆண்டுகளில் இரு மடங்காகிவிட்டது.
நாடுகள் என்று பார்த்தால் இந்தியா பாகிஸ்தான் இந்தோனேஷியா ஆகிய மூன்று நாடுகளில்தான் உலக முஸ்லீம்களின் மூன்றில் ஒரு பங்கினர் வசிக்கின்றனர்.
இந்துக்கள் அதிகம் வசிக்கும் நாடுகள் : இந்தியா, நேபாளம், மொரீஷியஸ்.
இந்துக்களின் எண்ணிக்கை 126 கோடி இது 2020 ஆம் ஆண்டு வரை யான சர்வே

கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை – 230 கோடி
முஸ்லீம்களின் எண்ணிக்கை- 200 கோடி
எந்த மதத்தையும் சாராதவர்கள் 190 கோடி
பெளத்தர்கள் – 30 கோடி
இப்போதைய உலக ஜனத்தொகை- 822 கோடி
உலக ஜனத்தொகை 8,226,758,730 as of Wednesday, June 4, 2025
—subham—
Tags- இந்து ஜனத்தொகை, குறைகிறது, சர்வே , புதிய தகவல்