ஞானமயம் வழங்கும் (15-6-2025)உலக இந்து செய்திமடல் (Post,14,648)

Written by London Swaminathan

Post No. 14,648

Date uploaded in London –  16 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் .

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்த் வாசித்து வழங்கும் செய்தி மடல்.

அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம்.

இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூன் 15-ஆம்  தேதி ம் தேதி 2025-ம் ஆண்டு .

(Collected from popular Tamil dailies and edited for broadcast)

முதலில் இந்தியச் செய்திகள்!

புரி ரத யாத்திரைஸ்நான யாத்திரையில் லட்சம் பக்தர்கள் பங்கேற்றனர்

இந்துக்களிடையே அதிகம் புகழ் பெற்ற புரி ரத யாத்திரை ஜூன் 27- ஆம் தேதி துவங்கி அடுத்த ஜூலை மாதம் ஐந்தாம் தேதி நிறைவு பெறும் .

புரி ரத யாத்திரை என்பது இந்தியாவின், ஒடிசா மாநிலத்தின் புரி கடற்கரை நகரத்தில் ஜெகன்நாதர் கோயிலில் குடி கொண்டுள்ள ஜெகன்நாதர், பலபத்திரர், சுபத்திரை ஆகியோர் ஆண்டு தோறும், தனித்தனியாக மூன்று இரதங்களில் ஏறி, புரி நகரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பதைக் குறிக்கும்..

முக்கிய தேர்கள் புறப்படுவதற்கு முன்னர் வரும் ஜேஷ்ட பௌர்ணமி யன்று ஸ்நான யாத்திரை நடைபெறும். அதாவது கற்பக கிரகத்திலிருந்து மூன்று தெய்வங்களையும் கோவில் வளாகத்திலுள்ள மேடையில் வைத்து 108 புனித நீர் நிலைகளிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கொண்டு அபிஷேகம் செய்வார்கள் . இது  ஜூன் 11- ஆம் தேதி நடந்தது.

ஸ்நான  யாத்திரை நடந்த பின்னர் இரண்டு வாரங்களுக்கு சிலைகளை தனிமையில் வைப்பார்கள் யாரும் தரிசனம் செய்ய முடியாது பின்னர் வெளியே கொண்டு வாந்து ரதங்களில் வைப்பார்கள்

ஸ்னான யாத்திரையைக் காண்பதற்காக லட்சக் கணக்கணபக்த்ர்கள் புரி நகரத்தில் குவிந்தனர்.

*****

ராமர் கோயிலுக்கு படையெடுத்த பக்தர்கள்!

வைகாசி மாத பௌர்ணமியையொட்டி உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தில் உள்ள ராமர் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

ஜூன் மாதத்தில் வரும் பௌர்ணமியை வடமாநிலத்தவர் ஜேஷ்ட பௌர்ணமி என அழைப்பார்கள். அந்த வகையில், ஜேஷ்ட பௌர்ணமியையொட்டி அயோத்தில் உள்ள ராமர் கோயிலில் அதிகாலை முதல் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

ஜேஷ்ட பௌர்ணமி தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் அயோத்தி கோயிலுக்கு வந்து சென்றனர்.

*****

ராமர் பாதையில் மதுக்கடைகள்: பாரதீய ஜனதாக் கட்சி அரசுக்கு காங்கிராஸ் கட்சி  கண்டனம்

அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லும் வழியான ராமர் பாதையில் மதுபானக் கடைகளை திறக்க அனுமதி அளித்த உத்தர பிரதேச அரசுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில், வரலாற்று சிறப்புமிக்க பால ராமர் கோவில் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. இதையடுத்து, அயோத்தியை உலகளாவிய ஆன்மிக சுற்றுலா தலமாக மாற்றுவதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக அயோத்தி வரும் பக்தர்கள், சுற்றுலா பயணியர் ராமரின் வாழ்க்கை வரலாற்றை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், 13 கிலோமீட்டர் தொலைவுக்கு ராமர் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

ராமர் கோவில் அமைந்துள்ள ராம ஜென்மபூமியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ராமர் பாதையிலேயே மதுக்கடைகள் செயல்படுவதாக, உத்தர பிரதேச காங்., தலைவர் அஜய் ராய் குற்றம்சாட்டியுள்ளார்.

பணம் சம்பாதிப்பதற்காக அயோத்தியில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், இது அயோத்திக்கு ஒரு அவமானம் என்றும் கண்டனம் தெரிவித்தார்.

ராமரின் புனித நகரத்தில் மதுபானக் கடைகளை திறக்க அரசு எப்படி அனுமதித்தது?  ராமர் பாதைக்கு அருகிலுள்ள மதுபானக் கடைகளுக்கு எப்போது உரிமங்கள் வழங்கப்பட்டன? இந்தக் கடைகள் அரசு அதிகாரிகளிடமிருந்து எவ்வாறு அனுமதி பெற்றன? உரிமங்களை வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? ஆம் எனில், எப்போது? என்று அடுக்கடுக்கான கேள்விகளையும் உ.பி., அரசுக்கு அஜய் ராய் எழுப்பி உள்ளார்.

*****

அமர்நாத் யாத்திரை.. பனி லிங்கத்திற்கு பிரதான பூஜை செய்த கவர்னர்

ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகையில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்வார்கள்.

இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ஆம் தேதி துவங்கி வரும் ஆகஸ்ட் 9 வரை 38 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமர்நாத் குகையில் உருவான பனி லிங்கத்துக்கு இன்று பிரதான பூஜை செய்யப்பட்டது. சம்பிரதாயப்படி அமர்நாத் யாத்திரை தொடங்கியதை குறிக்கும் இந்த நிகழ்வில், ஜம்மு காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா பங்கேற்று பூஜை செய்து பனி லிங்கத்தை வழிபட்டார்.

கவர்னர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “பாபா அமர்நாத் (சிவபெருமான்) நம் அனைவருக்கும் அருள் மழையை பொழிவாராக” என கூறி உள்ளார்.

முன்னதாக, விஸ்வ இந்து பரிஷத் சார்பில் அமர்நாத் யாத்திரைக்கான முதல் பூஜை தாவி ஆற்றங்கரையில் நடைபெற்றது.

*****

இனி தமிழ் நாட்டுச் செய்திகள்

மதுரையில் ஜூன் 22 ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு

ஜூன் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதுரையில்  பிரம்மாண்டமாக முருகன் பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

முருக பக்தியை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் நோக்கோடு முருகன் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. பழனியை தொடர்ந்து தற்போது மதுரையில் முருகன் பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. ஜூன் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பகல் பகல் 3 மணி துவங்கி, இரவு 8 மணி வரை மதுரை பாண்டி கோவில் அருகில் உள்ள அம்மா திடலில் இந்த பிரம்மாண்ட ஆன்மிக மாநாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாநாட்டு திடலில் ஜூன் 10ம் தேதி முதல் அறுபடை முருகன் கோவில் கண்காட்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு அறுபடை முருகனின் கோவில்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட வேல், பக்தர்களின் தரிசனத்திற்காக கண்காட்சியில் வைக்கப்பட உள்ளது. 

இந்த மாநாட்டில் பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். சிறப்பு அம்சமாக கந்த சஷ்டி கவசத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் ஒருமித்த குரலில் பாராயணம் செய்ய உள்ளனர். பிரபலமானவர்களின் ஆன்மிக உரைகள், கலை நிகழ்ச்சிகள், தமிழ் நாட்டிற்கே உரிய நாட்டுப்புற கலைகளில் நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டில் கலந்து கொள்ள வரும் பக்தர்களின் வசதிக்காக அடிப்படை வசதிகள், வாகனம் நிறுத்தும் இடங்கள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் எங்கு இருந்தும் நிகழ்ச்சிகளை கண்டு களிக்கும் வகையில் மாநாட்டு திடலை சுற்றிலுமே் எல்இடி L E D  திரைகள் அமைக்கப்பட உள்ளன. மாநாட்டு வளாகத்தில் ஆன்மிக மற்றும் இந்து விழிப்புணர்வு நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.

முருக பக்தர்கள் மாநாடு இந்துக்களை ஒற்றுமைப்படுத்துவதற்கும், உரிமையைப் பெறுவதற்குமான மாநாடு என,  இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மதுரை மாவட்டம் வண்டியூரில் அவர் அளித்த பேட்டியில்,

திருமாவளவன் மற்றும் திமுக தலைவர்கள் இந்துக்களைப் பற்றி இழிவாகப் பேசி வருகின்றனர் என்றும் திமுகவினர், தடுக்க தடுக்கத் தான் முருக பக்தர்கள் மாநாடு மிகச் சிறப்பாக நடைபெறும் என்றும் காடேஸ்வரா சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.

முருக பக்தர்கள் மாநாடு நடக்கக்கூடாது என்பதற்காக, பொய் வழக்குகளைப் பதிவு செய்கின்றனர் என்று கூறியவர், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளலாம்  என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவில், சில மாதங்களுக்கு முன்னர் ஆடு, கோழி உள்ளிட்டவற்றைப் பலியிட முயன்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனைக் கண்டித்துக் கடந்த பிப்ரவரி 4-ம் தேதி இந்து அமைப்புகள் சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தது. அதனைத் தொடர்ந்து வரும் 22-ம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப் போவதாக இந்து முன்னணி அறிவித்தது.

தற்போது நீதிமன்றத்தின் அனுமதியைத் தொடர்ந்து, மாநாட்டுத் திடலில் அறுபடை வீடுகளின் முகப்பு தோற்றம் கொண்ட மாதிரிகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. இதனை இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மேற்பார்வையிட்டு ஆ அறுபடை வீடுகளில் இருந்து பக்தர்கள் கொண்டு வந்த ஆறு வேல்களும்   மாநாட்டில்  உள்ள ஆறுபடை வீடு அருட்காட்சியில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட உள்ளது.லோசனைகளை வழங்கினார்.

*****

கோவில்களில் இறந்த தலைவர்களுக்கு கொண்டாட்டமா?  பொன். மாணிக்கவேல் கண்டனம்

ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பொன். மாணிக்கவேல் அளித்த பேட்டி: தமிழகத்தின் பிரதானமாக இருக்கும் ஆயிரக்கணக்கான ஹிந்து கோவில்களில், இறந்த அரசியல் கட்சித் தலைவர்களின் பிறந்த நாள், ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. மற்ற மதத்தினர், தங்கள் மதம் சார்ந்த ஆலயங்களில், இதுபோன்று கொண்டாட அனுமதிப்பதில்லை. குறிப்பிட்ட அந்நாளில், கோவில் வங்கி கணக்கிலிருந்து கோடிக்கணக்கான பணத்தை எடுத்து சிறப்பு பூஜை, மதிய விருந்து கொடுக்கின்றனர். இதனால், கோவில்கள் புனித தன்மை கெடுகிறது. கோவிலை கட்சி தலைமையிடமாக மாற்ற ஹிந்துக்கள் விடக்கூடாது.

தமிழகத்தில் உள்ள, ஆறு கோடி ஹிந்துக்களும் ஒன்று சேர்ந்து, ஒரே ஒரு நாள், ஒரு மணி நேரம், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒரே கோவிலில் கூட வேண்டும். பின், பத்து நிமிடம், கோவில்களில் இறந்த அரசியல் தலைவர்கள் பிறந்த நாளை கொண்டாடக்கூடாது என, பிரார்த்தனை செய்ய வேண்டும். தொடர்ச்சியாக, அரசின் இந்த முயற்சியை கைவிட வலியுறுத்த வேண்டும்.இப்படி செய்வதற்கான நாள், நேரம் விரைவில் அறிவிக்கப்படும். இந்த விஷயத்தில், அனைத்து ஹிந்து அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு, பொன். மாணிக்கவேல் கூறினார்.

******

கடைசியாக

லண்டனிலிருந்து ஒரு செய்தி.

லண்டனின் புறநகர்ப்பகுதியான SLOUGH  ஸ்லவ் என்னும் இடத்திலுள்ள ஹிந்து மந்திரில் டுத்த வாரம் லக்ஷ மோதக  மஹா யக்ஞம் நடைபெறப்போகிறது வெள்ளிசனி ஞாயிற்றுக்கிழமைகளில்அதாவது ஜூன் 202122 தேதிகளில்மூன்று நாடகளுக்கு இந்த வைபவம் நடைபெறுகிறது.

மூன்று நாள் வைபவத்தில் மஹாகணபதி யக்ஞம்லக்ஷ மோதக ஹோமம்அஷ்டோத்தர சத பிராமண போஜனம்நவாவர்ண பூஜாசண்டி ஹோமம் ஆகியன நடைபெறும் என்று யுனைடெட் கிங்டம் ஸ்ரீ சத்ய சண்டி  மண்டலி அறிவித்துள்ளது;  குருஜி ஸ்ரீ அவினாஷ் கணேசன் தலைமையில் நிறைய பக்தர்கள் இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளில் பங்கு கொண்டுள்ளனர். காலை ஏழு மணி முதல் மாலை எட்டு மணி வரை இரண்டு நாட்களுக்கு நடைபெரும் நிகழ்ச்சி கள்ஞாயிற்றுக் கிழமை நண்பகலில் நிறைவடையும். பக்தர்களுக்கு பூஜை முடிவில் மஹா பிரசாதமும் வழங்கப்படும். இது நடைபெறும் ஸ்லவ் ஹிந்து மந்திர்,  கீல் ட்ரைவ் என்னும் சாலையில் உள்ளது.

*****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்த் வாசித்த செய்தி மடல் இது.

அடுத்த ஒளிபரப்பு

ஜூன்  மாதம் 22–ம்  தேதி 

லண்டன் நேரம் பகல் ஒரு  மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .

வணக்கம்.

—SUBHAM—-

Tags– ஞானமயம் , (15-6-2025), உலக இந்து செய்திமடல் ,

Leave a comment

Leave a comment