WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,645
Date uploaded in London – –16 June 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ச. நாகராஜன்
பண்டிட் ஜவஹர்லால் நேரு போன்ற மாமனிதர் ஒருவரைப் பார்க்கவே முடியாது என்ற ஆரம்பத்துடன் அவர் மிகவும் தாராள மனதுள்ளவர் என்று கூறி ஒரு பெரிய பட்டியலைத் தந்துள்ளார் அன்பர் ஒருவர் இணையதளத்தில்!
பாகிஸ்தானுக்கு மூன்று பெரிய நதிகளை அவர் தானமாக அளித்தார்.
லடாக்கிற்கு நமது பகுதியைக் கொஞ்சம் அளித்தார்.
சீனாவுக்கோ யு என் இருக்கையைத் தந்தார்.
மயன்மாருக்கு (பர்மாவுக்கு) கோகோ தீவுகளைத் தந்தார்.
தனக்கு பாரத ரத்னா அளித்துக் கொண்டார்!
இப்படி ஆரம்பிக்கும் கட்டுரை ஒரு நீண்ட பட்டியலைத் தருகிறது.
1. ஐக்கியநாடுகள் சபை அளித்த நிரந்தர இருக்கையை வேண்டாம் என்று மறுத்தார்.
2. பாரதத்துடன் இணைகிறோம் என்று நேபாளம் கூறிய போது அதை மறுத்தார்.
3. பாரதத்துடன் பலூசிஸ்தான் இணைகிறோம் என்று கூறிய போது அதை மறுத்தார்.
4. காஷ்மீர் பிரச்சனையை உருவாக்கினார்.
5. சீன- பாரத யுத்தத்திற்கு தலைமை வகித்தார்.
6. நியூக்ளியர் உடன்பாட்டிற்கு உடன்படாமல் மறுத்தார்.
7. 1964ம் ஆண்டு அமெரிக்கா ஒரு அணுஆயுத சாதனத்தைத் தர முன்வந்த போது அதை வேண்டாம் என்று மறுத்தார். ஒருவேளை சிறந்த அஹிம்சாவாதியாக அவர் திகழ்ந்ததனால் அப்படி மறுத்திருக்கலாம்!
8. தவறான நோக்குடைய கூட்டு சேராக் கொள்கைக்கான இயக்கத்திற்கு தலைமை வகித்தார்.
9. கோவாவின் மீது அக்கறை செலுத்தாமல் இருந்தார்.
10. தடையிலா சந்தை (ஃப்ரீ மார்கெட்) முதலாளித்துவத்தை எதிர்த்து சோஷியலிஸத்தை ஆதரித்தார்.
11. ஊழலைப் பற்றி கண்டுகொள்ளவே இல்லை.
12. அதிகாரத்தை நெடுங்காலம் பற்றிக் கொண்டிருந்தார்.
13. பத்திரிகை சுதந்திரத்தைத் தடுத்ததோடு சுதந்திரமாக பேசும் பேச்சுரிமையையும் அடக்கினார்.
14. ஆரம்ப கல்வியை ஆதரித்து, ஊக்குவித்து, அதை அமுல்படுத்துவதில் தோல்வி அடைந்தார்.
15. 1957ல் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கேரள அரசைக் கவிழ்த்தார்.
16. பாகிஸ்தானை உருவாக்கினார்.
17. சர்தார் படேலை பிரதம மந்திரி ஆவதற்கு அனுமதிக்கவில்லை.
18. பர்மாவிற்கு மணிபூரில் உள்ள காபோ பள்ளத்தாக்கை இலவசமாக அளித்தார்.
19. பர்மாவிற்கு மிகவும் முக்கியமான கோகோ தீவுகளை அளித்தார்.
20. க்வாதார் துறைமுகத்தை ஓமன் அளித்த போது அதை ஏற்க மறுத்தார்.
21. திபெத்தை கவிழ்த்து விட்டு, இந்தியாவின் நீர் ஆதாரத்திற்கும் வடக்கு எல்லைக்கும் சீனாவை நம்பி இருக்கும் நிலைக்கு இந்தியாவைத் தள்ளி விட்டார்.
22. நட்பு என்றும் நல்லெண்ணம் என்றும் கூறி ஒருதலைப்பட்சமான ஒரு ஒப்பந்தத்தைப் பாகிஸ்தானுடன் செய்தார். சிந்து நதியில் பாயும் நீர் கொள்ளளவில் மூன்று பங்கு நீரை பாகிஸ்தானுக்குத் தாரை வார்த்துக் கொடுத்து சிந்து நீர் ஒப்பந்தத்தைச் செய்தார். இதற்கு நன்றிக் கடனாக ஐந்தே வருடங்களில் பாகிஸ்தான் இந்தியா மீது போர் தொடுத்தது.
23. சோமநாத் ஆலயத்தை சர்தார் படேல் மீண்டும் புனரமைத்தபோது அதை எதிர்த்தார்.
24. பாதகனான ஹைதராபாத் நிஜாமிடமிருந்து ஹைதராபாத்தை விடுவிக்க சர்தார் படேல் செய்த முயற்சிக்கு தடைகளைச் செய்தார்.
இன்னும் பட்டியல் நீள்கிறது.
– தொடரும்
நன்றி : கொல்கத்தாவிலிருந்து வாரந்தோறும் வெளிவரும் ஆங்கில பத்திரிகை TRUTH VOL 93 – ISSUE NO 8 (6-6-2025)
**