Post No. 14,651
Date uploaded in London – –17 June 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நேருஜியின் தவறுகள்! – 2
ச. நாகராஜன்
கட்டுரை தொடர்கிறது.
25) பாரதத்துடன் காஷ்மீரை ஓரங்கமாக ஆக்கும் முயற்சியில் நேருவின் அணுகுமுறை முற்றிலும் தவறாக இருந்தது. சர்தார் படேலை காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க அவர் அனுமதிக்கவில்லை. மற்ற எல்லா பிரச்சனைகளுக்குரிய பகுதிகளை சர்தார் படேல் வெற்றிகரமாகத் தீர்த்தார் – ஹைதராபாத் நிஜாம் பிரச்சனையைத் தீர்த்தது போல!
26) 1948ல் நடந்த இந்திய-பாகிஸ்தான் யுத்தத்தில் இந்தியா ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து காஷ்மீரைத் திரும்பிப் பெற்றது.
ஆனால் அவசரம் அவசரமாக ஐக்கியநாடுகள் சபைக்குச் சென்றார் அவர். இது ஒரு ராஜதந்திரத் தவறு. ஆனால் இப்போதோ இந்தியா காஷ்மீர் பிரச்சனையில் மூன்றாம் நபர் தலையீடோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களோ இருக்கக்கூடாது என்று இந்தியா வலியுறுத்துகிறது. முதலில் இதைச் செய்தவர் நேரு தான்!
27) மேலும், சீனப் போரில் நாம் வெல்லுகின்ற சமயத்தில் நேரு நமது விமானப் படை போரில் ஈடுபடுவதைத் தடுத்து நிறுத்தினார். நாம் அக்சாய் சின் பகுதியை இழந்தோம்.
28. ஶ்ரீ லங்காவில் இருந்த தமிழர் பிரச்சனை பற்றி அவர் கண்டு கொள்ளவே இல்லை.
29. 55 கோடி ரூபாயை பாகிஸ்தானுக்கு அவர் தானம் வார்த்தார்.
30. 1929ம் ஆண்டு உரிமையில்லாமலேயே காங்கிரஸ் தலைமையைக் கைப்பற்றினார்.
31. ஜனநாயக முறைப்படி அல்லாமல் சுதந்திரம் பெற்றவுடன் தானே பிரதம மந்திரியாக ஆனார்.
32. பிரிவினையைத் திட்டமில்லாமலும் தகுந்த முன்னேற்பாடு இல்லாமலும் செய்தார்.
33. ஆர்டிகிள் 370 – நேரு இந்தியாவிற்குக் கொடுத்த கொடைதான். அவருக்கு நன்றி தான் சொல்ல வேண்டும்.
34. ஜம்மு காஷ்மீர் பற்றிய ஆர்டிகிள் 35 A – இதற்கும் அவருக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.
35. சட்டத்திற்குப் புறம்பாகத் தவறான முறையில் மதமாற்றம் செய்து வருவதை அவர் கண்டு கொள்ளவே இல்லை.
36. விவசாய முன்னேற்றம் பற்றி அவர் நினைக்கவே இல்லை!
இன்னும் பட்டியல் தொடரும்
நன்றி : கொல்கத்தாவிலிருந்து வாரந்தோறும் வெளிவரும் ஆங்கில பத்திரிகை TRUTH VOL 93 – ISSUE NO 8 (6-6-2025)
**