முதல் எழுத்து எது ? (Post No.14,659)

Written by London Swaminathan

Post No. 14,659

Date uploaded in London –  18 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

வெற்றிவேற்கை : ஓம் என்றால் பிள்ளையார்

வெற்றி வேற்கை (அதிவீரராம பாண்டியர்)

கடவுள் வாழ்த்து

பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்

சரண அற்புத மலர் தலைக்கு அணிவோமே.

வெற்றி வேற்கை வீரராமன்,

கொற்கை ஆளி, குலசேகரன், புகல்

நல்—தமிழ் தெரிந்த நறுந்தொகைதன்னால்

குற்றம் களைவோர் குறைவிலாதவரே.

வாழிய, நலனே! வாழிய, நலனே!

****

திருவிளையாடற்புராணத்தில் ஓம்காரம்

முதல் எழுத்து எது ?

நாவலர், பண்டித ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் உரை

அங்க மாறுமே கால்களாய்

     முதலெழுத் தம்பொற்பீ டிகையாகித்

துங்க நான்மறை நூல்களே

     நித்திலந் தொடுத்தசை தாம்பாகி

எங்க ணாயக னெம்பெரு

     மாட்டியோ டிருப்பதற் குருக்கொண்டு

தங்கி னாலென நவமணி

     குயின்றபொற் றவிசது சமைத்திட்டார்.

எங்கள் இறைவனாகிய சோமசுந்தரக் கடவுள், எம் பெருமாட்டியோடு இருப்பதற்கு – எம் இறைவியாகிய தடாதகைப் பிராட்டியோடு வீற்றிருப்பதற்கு, ஆறு அங்கங்களுமே கால்களாகவும்,

பிரணவம் அழகிய பொற்பீடமாகவும், உயர்ந்த நான்கு வேதங்களாகிய நூல்களே,  முத்தினால் தொடுத்து அசைகின்ற தாம்புகளாகவும்,

வடிவங்கொண்டு, தங்கினாற்  போல,  நவரத்தினங்கள் இழைத்த பொற்றவிசு ஒன்றைச் செய்து அமைத்தார்கள்

     முதலெழுத்து – எல்லா வேதங்களுக்கும் மந்திரங்களுக்கும்

முதலாகிய பிரணவ எழுத்து.

****

ஓம் என்ற பிரணவம், அ+ உ +ம  என்ற எழுத்துக்களால் ஆனதால் அ–என்ற எழுத்தையும் முதல் எழுத்தாகச் சொல்லலாம்; அதை கீதையில் பகவான் கிருஷ்ணன் சொன்னதை அப்படியே திரு வள்ளுவர் முதல் குறளில் சொன்னார்.

ஓம் பற்றிய பொன்மொழிகள்

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag 

30 Dec 2016 — அது ஓம்காரத்தில் துவங்கி ஓம்காரத்தில் முடியும். ஓம் அக்னிமீளே புரோஹிதம் என்று துவங்கி இறுதியில் ஹரி: ஓம் என்று முடிப்பர். ஜனவரி 20

 

31 Beautiful Quotes on Omkara (Aum)—Post No. 3499

 

Compiled by London swaminathan

 

Date: 30 December 2016; Post No.3499

 

 

—Subham—

Tags- பிரணவ எழுத்து. முதலெழுத்து, திருவிளையாடற்புராணம், ஓம்காரம்

Leave a comment

1 Comment

  1. kalidoss doss's avatar

    kalidoss doss

     /  June 18, 2025

    தமிழ் எழுத்தா/ இந்த எழுத்தா/ சமஸ்கிருத எழுத்தா? தென்கச்சி சாமிநாதன் நகைச்சுவையாக குறிப்பிடுவார்: கடவுள் மாட்டிற்கு எப்படி தெரிவார்? மாடு ரூபமாகவே தெரிவார். அது போல தமிழில் ஓம் என்பதை புரிந்து கொள்ளலாமா?

Leave a comment