

Post No. 14,667
Date uploaded in London – 20 June 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
2025 ஜூன் 15 ஆம் தேதி அமெரிக்காவில் ராணுவ தின அணிவகுப்பு நடந்தது; வழக்கமான ஆயுதங்களுடன் இரண்டு இயந்திர / ரோபாட் நாய்களும் நடந்து வந்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது . அணிவகுப்பு மரியாதையை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் -பும் அவர் மனைவி மெலானா ட்ரம்ப் -பும் ஏற்றனர்.

சென்ற ஆண்டு ட்ரம்ப் -ப்பை நோக்கி ஒருவர் சுட்டது முதல் அவர் பாதுகாப்புக்கு ரோபாட்/ இயந்திர நாயும் சேவையில் அமர்த்தப்பட்டது.
இதன் காரணமாக இப்போது பிரான்ஸ் தலை நகர் பாரீசில் நடக்கும் ரோபாட் கண்காட்சிக்கு மதிப்பு அதிகரித்துள்ளது.
****
புல்லட் பாயிண்டுகளில் ரோபாட் நாய் புராணம்:–







என்னை உதையுங்கள் என்ற போர்டுடன் ஒரு நாய் நிற்கிறது; அது இயந்திர நாய்தான்; ஆனாலும் எல்லோருக்கும் பயம்! பக்கத்தில் போனால், இரண்டு கால்களில் நின்று உங்களை வரவேற்கும்; கை கொடுக்கும்!
விலை £ 1600 பவுண்ட் முதல் £ 120000 பவுண்ட் வரை !
பயங்கரவாதத்தை ஒழிக்க இது பயன்படுகிறது; வெடி குண்டு இருப்பதாக தகவல் வந்தால் இது தைரியமாகச் சென்று செயலில் இறங்கும்; அப்படியே வெடித்தாலும் இறப்பது வெறும் மிஷின்தான்.
காப்பி கொண்டு வா என்றாலும் கொண்டு வரும்.
இன்னும் ஒரு கம்பெனி பட்லர் நாய்களை உருவாக்கி வருகிறது; இனி வேலைக்காரர்கள் திடீரென்று லீவு போட்டு உங்களை மிரட்ட முடியாது. இந்த பட்லர் நாய்கள் ஒயின், காப்பி, காலை உணவு கொண்டு வரும்; துணி துவைக்கும்; தரையை சுத்தப்படுத்தும்; ஏற்கனவே விமான நிலையங்களில் இவைகளை பார்த்திருப்பீர்கள்
இந்த பட்லர்/ வேலைக்கார ரோபாட்டுக்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் .
அப்பாடா; இனி வேலைக்காரிகள் லீவு போடுவது பற்றி கவலையே இல்லை என்று பெருமூச்சு விட்டுவிடவேண்டாம் .
இந்த பட்லர் ரோபாட்டும் சரியான சண்டிதான்! இருபது நிமிடம்தான் வேலை செய்யும் பின்னர் பிளக்கை மாட்டி ரீசார்ஜ் செய்யவேண்டும். நீங்களே சொல்லுங்கள்! பட்லர் வேண்டுமா? பட்லர் ரோபாட் வேண்டுமா?
–சுபம்–
TAGS– அமெரிக்க ஜனாதிபதி, அணிவகுப்பில், ரோபாட்,நாய்கள் , பட்லர், வேலைக்கார ரோபாட்