ஸம்ஸ்க்ருதத்தை அழிக்க முடியாது என்று நாளேடுகள் காட்டுகின்றன! (Post No.14,666)

Written by London Swaminathan

Post No. 14,666

Date uploaded in London –  20 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 பத்திரிக்கை தேதி — 11-9-2023

சிலர் இந்தியத் தமிழைவிட இலங்கைத் தமிழ் சிறந்தது என்று சொல்லுவார்கள்;  எனக்கு வெடிச் சிரிப்பு வரும். காரணம் இல்லாமல் இல்லை ; பொழுது போகாத நேரத்தில் எல்லாம் இந்திய, இலங்கை, மலேசிய தமிழ்ப் பத்திரிக்கைகளில் எவ்வளவு ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருக்கிறது என்று ஹைலைட்டர் பேனா வைத்து வண்ணம் இடுவேன். 

ஏறத்தாழ ஒரே அளவுதான் இருக்கின்றன. அதில்  தவறே இல்லை; உலகில் எந்த மொழியும் தனித்து வாழ முடியாது; ஏனெனில் நாம் வாழும் உலகு அப்படிப்பட்டது. விமான நிலையத்துக்குச் சென்று கடவைச் சீட்டு, பயணச் சீட்டு, வானூர்தி புறப்படும் நேரம், விமான/ வானூர்தி இருக்கை எண், இருக்கையில் கச்சை BELT  அணியவேண்டும் என்று சொன்னால் சிரிப்பார்கள் .

மொழி என்பது தகவலைப் பரிமாறிக்கொள்ளத்தான். ஆனால் பிற மொழிக் கலப்புக்கும் ஒரு எல்லை உண்டு;  மணிப்பிரவாளம்  வேண்டாம்.

திருக்குறளில் அறு நூறு குறள் வரை ஸம்ஸ்க்ருதச் சொற்கள் உள்ளன; அதற்காகக் குப்பைத் தொட்டியில் போட முடியுமா ? சிலப்பதிகாரத்தில் ஹைலைட்டர் பேனா வைத்து ஸம்ஸ்க்ருதச் சொற்களை அடிக்கோடு இட்டால் புஸ்தம்காமே கலர் மாறிவிடும்!  ;அதற்காகக் குப்பைத் தொட்டியில் போட முடியுமா ?

இலங்கை  சென்றபோது வீரகேசரி வாங்கினேன்; அத்தோடு இலவச இணைப் பாக தினத்தந்தியும் கொடுத்தார்கள் ;

வெறும் தலைப்புகளில் உள்ள ஸம்ஸ்க்ருதச் சொற்களை மட்டும் அடிக்கோடு இட்டேன் அல்லது வட்டமிட்டேன் ; இருவரும் போட்டி போட்டுக்கொண்டு ஸம்ஸ்க்ருதத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள்; இத்துடன் உள்ள இணைப்புகளைக் காண்க ; பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்துவதில் தவறே இல்லை; அளவோடு இருக்க வேண்டும் ; அவ்வளவுதான்!

தமிழ் மொழியில் வெளிவரும் எல்லாப் பத்திரிக்கைகளின் பெயர்களும் சம்ஸ்க்ருதச் சொற்களுடன் உள்ளன ; ஏன் மாற்றவில்லை?!

–சுபம்—

Tags- ஸம்ஸ்க்ருதம், அழிக்க முடியாது, நாளேடுகள், இந்தியத் தமிழ்

, இலங்கைத் தமிழ்

Leave a comment

Leave a comment