இந்தியாவின் ஊழல் மிக்க, மிக மோசமான பாதுகாப்பு மந்திரி யார்? (Post No.14,681)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,681

Date uploaded in London – –24 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

இந்தியாவின் ஊழல் மிக்க, மிக மோசமான பாதுகாப்பு மந்திரி யார் 

ச. நாகராஜன் 

இணையதளத்தில் அக்கு வேறு ஆணி வேறாக ஒவ்வொருவரைப் பற்றியும் ஆதாரத்துடன் அலசி ஆராய்கிறார்கள்.

இந்தியாவின் ஊழல் நிறைந்த மிக மோசமான பாதுகாப்பு மந்திரி யார்? என்பது பற்றிய ஆராய்ச்சியும் இவற்றில் ஒன்று.

அது யார் என்று தெரிந்து கொள்ள ஆவலா?

இதோ பதில்:

பாகிஸ்தான் 1965ல் இந்தியாவைத் தாக்கியது.

இதற்கு முன்னதாக சீனா  1962ம் ஆண்டு இந்தியாவைத் தாக்கியது ஆக்கிரமித்தது.

இந்தியா 72000 சதுரகிலோமீட்டர் பரப்பை இழந்தது.  அப்போது பாதுகாப்பு மந்திரியாக இருந்தவர் வி.கே.கிருஷ்ணமேனன்.  அவர் இந்தியாவில் அதிகம் இருக்க விரும்பியதே இல்லை.  பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்வதிலேயே அவர் விருப்பம் கொண்டிருந்தார்.  அவர் இந்தியாவை ஒருபோதும் நேசித்ததில்லை.

1960-61ல் அவர் பாராளுமன்றத்தில், “பாகிஸ்தான் இப்போது நமது நண்பன்” என்று ஒரு அறிக்கையை அளித்தார்.

1948ல் பாகிஸ்தானுடன் நாம் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டிருந்தோம்.  பாகிஸ்தானும் நாங்கள் ஒரு போதும் இந்தியாவைத் தாக்க மாட்டோம் என்று  கூறியிருந்தது. 

“நமக்கு எதிரியே இல்லை. ஆகவே ராணுவம் எதற்காக நாம் ராணுவத்தை நீக்கி விடலாம்” என்றார் அவர்.

ஒரு அவசரகால நிலை ஏற்பட்டால் ராணுவம் இல்லாமல் என்ன செய்வது என்று ஒருவர் கேட்டார்.

அப்போது அவர் பதில் கூறினார் :- நம்மிடம் காவல்துறை இருக்கிறது. அதை வைத்து சமாளித்து விடலாம்.

ஒரு நாள் காபினெட் கூட்டத்தில் நமக்கு ராணுவம் தேவை இல்லை என்பதால் பாதுகாப்பிற்கான பட்ஜெட் தொகையைக் குறைத்து விடலாம் என்றார் அவர். ஆகவே பட்ஜெட் தொகை குறைக்கப்பட்டது. அவர் ஆயுதத் தயாரிப்பையும் கூட குறைக்க உத்தரவிட்டார்.

தளவாடங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை மூடி விட்டு டீ, காப்பி தயாரிக்கும் தொழிற்சாலைகளை ஆரம்பித்தார்.

அந்தச் சமயம் சீனா இந்தியா மீது படையெடுக்கத் திட்டமிட்டது. நமது ராணுவத் துருப்புகள் எல்லையிலிருந்து திரும்பப் பெறப்பட்டதையும் நமது பட்ஜெட் தொகை குறைக்கப்பட்டதையும் சீனா நன்கு அறிந்திருந்தது.

ஆகவே நமது வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள இப்போது அருணாச்சல பிரதேசம் என்று அறியப்படும் நேஃபா பகுதியை அது தாக்கியது.

எல்லையில் யாரும் இல்லை என்பதால் சீனாவைத் தடுக்க யாரும் இல்லை!

இந்தியப் பெண்களிடம் மிக மிக மோசமான முறையில் சீன ராணுவம் நடந்து கொண்டது.

பலரைக் கற்பழித்தது. ஏராளமானோரைக் கொன்றது.

அங்குள்ளவர்களிடம் போரிட எந்த விதமான ஆயுதமும் இல்லை.  ஆகவே அவர்களால் தற்காத்துக் கொள்ள முடியவில்லை.  பொதுமக்களைக் காக்க ராணுவமே இல்லாததால் பொதுமக்கள் அனைவரும் இந்திய அரசை வெறுக்கத் தொடங்கினர். இந்த வெறுப்பு புரட்சியாக மாறியது.  இன்றும் கூட அவர்கள், ‘1962ம் ஆண்டு 

சீனா எங்களைக் கற்பழித்த போதும் கொன்று குவித்த போதும் உங்கள் இந்திய ராணுவம் எங்கே இருந்தது? என்று கேட்கின்றனர். இதன் விளைவாக போடோலேண்ட் என்று தங்களுக்கு தனிப் பகுதி வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தனர் அவர்கள். சீன ஆக்கிரமிப்பால் தான் அவர்கள் இந்திய அரசின் மீது நம்பிக்கையை இழந்தனர்.

72000 சதுர கிலோமீட்டர் பரப்பை நாம் இழந்ததோடு புனிதமான கைலாஸ் மானசரோவரையும் இழந்து விட்டோம்.

இன்று கைலாஷ் பகுதிக்குச் செல்ல சீனாவிடமிருந்து விசா வாங்க வேண்டிய நிலைக்கு வந்து விட்டோம்.

ஆகவே மேற்கூறிய காரணங்களால் இந்தியாவின் மிக மோசமான பாதுகாப்பு மந்திரி வி.கே.கிருஷ்ணமேனன் தான் என்பது எனது அபிப்ராயம்.

இப்படி இதைக் கூறியவர் ஶ்ரீ ராஜீவ் தீக்ஷித் ஆவார்.

ஆதாரம், நன்றி : ட்ரூத் வார இதழ்

TRUTH Weekly from Kolkata -Volume 93 -Issue no 7 Dated 30-5-2025

**

Leave a comment

Leave a comment