

Post No. 14,685
Date uploaded in London – 24 June 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
லண்டனில் விலை உயர்ந்த வயலின் இசைக் கருவி களவு போய்விட்டது; லண்டன் போலீசார் பொதுமக்களுக்குத் திருடனைக் கண்டுபிடித்தால் போன் செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர் ; இஸ்லிங்க்டன் என்பது லண்டனின் ஒரு பகுதி. அதிலுள்ள மதுபான விடுதியில் பிப்ரவரி 18 ஆம் தேதி களவு போனது; சி சி டி வி காமெராவில் திருடன் தெரிகிறான். ஆயினும் இதுவரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை; ஆகையால் இப்போது பொது மக்கள் உதவியை நாடியுள்ளனர்.
ஒரு வயலினுக்கு ஏன் இவ்வளவு முதலிடம் கொடுக்கிறார்கள் என்ற வினாவை நீங்கள் எழுப்பலாம். இதன் விலை 150,000 பவுன்; ரூபாய்க் கணக்கில் வேண்டுமானால் 117-ஆல் பெருக்கிக்கொள்ளுங்கள்.
1 Pound sterling equals
117.18 Indian Rupee as of 24 June 2025.
இந்த வயலின் இத்தாலியிலுள்ள பிளாரன்ஸ் நகரில் 1740-ஆம் ஆண்டில் செய்யப்பட்டது . மிக விலை மதிப்புடையது அதன் உரிமையாளருக்கோ விலைமதிப்பற்றது; அதாவது விலையே சொல்ல முடியாது!.

–Subham—
Tags- வயலின், களவு, லண்டன் , திருடன், போலீஸ்