Post No. 14,686
Date uploaded in London – –25 June 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மௌலானா அபுல்கலாம் ஆஜாத் உள்ளிட்டோரின் கல்வித் தொண்டு! – 1
ச. நாகராஜன்
திரு எம். நாகேஸ்வர ராவ் 1-5-2025 ஸ்வராஜ்யா இதழில் எழுதியுள்ள கட்டுரை: (தமிழாக்கச் சுருக்கமாக இங்கு தரப்படுகிறது)
இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பின் கல்வித் திட்டமானது இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக (1947-1958) பணி புரிந்த மௌலானா அபுல்கலாம் ஆஜாத் அவர்களால் திட்டமிடப்பட்டது. அவரைத் தொடர்ந்து முஸ்லீம் அமைச்சர்களாக இருந்த ஹுமாயுன் கபீர், முகம்மத் குரியன் சாக்ளா, ஃபக்ருதீன் அலி அகமது, சையது நூருல் ஹாஸன் ஆகியோரால் தொடரப்பட்டது. இவர்கள் அனைவருமே ஹிந்து விரோத மனப்பான்மை உடையவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆவர்.
அவர்கள் திட்டமிட்டு இஸ்லாமிய படையெடுப்பாளர்களின் கொடுமைகளை நீக்கி விட்டு ஹிந்துக்களின் நற்செயல்களையும் நீக்கினர். அத்தோடு ஹிந்து பண்பாடு மூடநம்பிக்கை கொண்டது என்று கூறியதோடு வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களைப் புகழ்ந்து போற்றினர்.
இந்தக் கட்டுரை அவர்களது கொள்கைகளையும், பாடத்திட்டங்களையும்
பரிசீலிப்பதோடு ஹிந்து அடையாளங்களை அடக்குவதையும் இந்தியாவின் கடந்த காலத்தைத் தவறாகச் சித்தரிப்பதையும் பரீசீலிக்கிறது.
மௌலானா அபுல்கலாம் ஆஜாத் : அஸ்திவாரம் இட்டவர்:
மௌலானா அபுல்கலாம் ஆஜாத் 1888ம் ஆண்டு மெக்காவில் பிறந்தவர்.
இஸ்லாமிய அறிஞர். இந்திய தேசீய காங்கிரஸில் தலைவராக இருந்தவர். டியோபந்தி பள்ளி மற்றும் ஜமாயத் உலேமா-இ – ஹிந்த் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டவர்.
அவர் இந்தியா பிரிவினை செய்யப்படுவதை எதிர்த்தார். பிளக்கப்படாத இந்தியாவானது தாருல் இஸ்லாமாக,, பிரிட்டிஷ் ஆட்சியின் காலம் தவிர இதர காலத்தில், வெகு சீக்கிரம் இஸ்லாமிய மயமாக ஆகிவிடும் என்று நம்பினார். ஹிந்துக்கள் மெஜாரிட்டியாக உள்ள ஒரு நாடானது தாருல் இஸ்லாம் அமைவதைப் பாதிக்கும் என்றார் அவர். இந்தப் பார்வையே அவரது தேசிய நிலைப்பாடாக இருந்தது.
1947 முதல் 1958 முடிய இந்தியாவின் கல்வி அமைச்சராக இருந்த மௌலானா அபுல்கலாம் ஆஜாத் இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பின்னர், ஆரம்ப காலத்தில் அதன் கல்வித் திட்டத்தை வடிவமைத்தார். அவர் ஹிந்து விரோத நிலைப்பாட்டை வேண்டுமென்றே எடுத்தார். இஸ்லாமிய படையெடுப்பின் கோரங்களையும் ஆட்சிக் கொடுமையையும் அழித்ததோடு ஹிந்து பண்பாட்டுப் பாரம்பரியத்தை ஒதுக்கி வைத்தார்.
மௌலானா ஆஜாதின் அமைப்பு ஹிந்துக்களின் பாரம்பரியத்தை தவிர்த்ததோடு தங்களது மத, பண்பாட்டு, வரலாற்றுப் பின்புலம் ஆகியவற்றை தவறாக சித்தரிக்கப்பட்டதோடு இஸ்லாமிய படையெடுப்பாளர்களின் ஆட்சியைப் புகழ்ந்தது; ஹிந்துக்களின் நல்ல கொடைகளை வரலாற்று ரீதியாகத் தவிர்த்தது.
அவரது செகுலரிஸம் ஹிந்துக்களின் நல்லனவற்றை நீக்கி, இஸ்லாமிய படையெடுப்பு வெற்றிகளைப் புகழ்ந்தது.
இஸ்லாமிய படையெடுப்பின் தீமைகளைத் தவிர்த்தது
மௌலானா அபுல்கலாம் ஆஜாத், இஸ்லாமிய படையெடுப்புகள் பற்றியும் அவற்றின் ஆட்சி பற்றியும் உள்ள பாடதிட்டத்தைக் கண்காணித்தார். இடைக்கால ஆதாரங்களான தாரிக் – இ- பிரிஷ்தா, சாச்னாமா, ஆலயங்கள் அழிப்பு, கட்டாய மதமாற்றம், கஜினி முகம்மது, முகம்மது பின் காசிம், அலாவுதீன் கில்ஜி ஆகியோரின் அட்டுழியங்கள் உள்ளிட்டவை திட்டமிட்டு பாடபுத்தகங்களிலிருந்து நீக்கப்பட்டன. இதற்கு மாறாக இஸ்லாமிய ஆட்சியாளர்கள் தாராள மனப்பான்மையோடு பண்பாட்டைப் போற்றி வந்தவர்களாக சித்தரிக்கப்பட்டனர். 1025ம் ஆண்டு சோம்நாதர் ஆலயத்தை கஜினி முகம்மது அழித்தது ஹிந்துக்களின் மனதை வெகுவாகப் புண்படுத்திய ஒன்றாகும். அது பாடதிட்டங்களிலிருந்து நீக்கப்பட்டது அல்லது ஹிந்துக்களின் துயரங்களை மட்டுப்படுத்தி சாதாரணமாக விவரித்து மாணவர்களிடமிருந்து உண்மையை மறைத்தது
̀̀ ** தொடரும்