சம்பந்தர் பாட்டில் தமிழ் சங்கம்! (Post.14,692)

Written by London Swaminathan

Post No. 14,692

Date uploaded in London –  26 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

மிகவும் வியப்பான விஷயம் மதுரை பற்றிய தேவார பதிகத்தில் திரு ஞான சம்பந்தர் கழகம் என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார்.

திருநள்ளாறு திருவாலவாய்ப்பதிகம்

பாடக மெல்லடிப் பாவையோடும்

                படுபிணக் காடிடம் பற்றிநின்று   

நாடகம் ஆடும்நள் ளாறுடைய    

                நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்   

சூடக முன்கை மடந்தைமார்கள்    

                துணைவ ரொடுந்தொழு தேத்திவாழ்த்த   

ஆடக மாடம் நெருங்குகூடல்    

                ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. 

 திங்களம் போதுஞ் செழும்புனலுஞ்

                செஞ்சடை மாட்டயல் வைத்துகந்து

நங்கண் மகிழுநள் ளாறுடைய    

                நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்

பொங்கிள மென்முலை யார்களோடும்    

                புனமயி லாட நிலாமுளைக்கும்

அங்கழ கச்சுதை1  மாடக்கூடல்    

                ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

1.இதற்கு உரை எழுதிய (1953 EDITION) தருமபுரப் பதிப்பில் அம்  கழகம்- மதுரைத் தமிழ்ச் சங்கம் என்றே உளது.

இது மதுரையில் தமிழ் வளர்த்த சங்கத்தைக் குறிக்கிறது.  ஏனெனில் இன்னொரு தேவார பதிகத்தில் மதுரைத் தொகை  என்றும் பாடியிருக்கிக்கிறார்.

ஆண்டாள் திருப்பாவையில் சங்கத் தமிழ் மாலை என்று சொன்னதை நாம் அறிவோம். ஏழைப் பிராமணப்  புலவன் தருமிக்கு ஆதரவாக சிவ பெருமானே தமிழ்ச் சங்கத்துக்கு  வந்ததை  அப்பர் தேவாரத்தில் பாடியதை நாம் அறிவோம். ஆயினும் இதுவரை திரு ஞான சம்பந்தர் சங்கம் பற்றிப் பாடியதை யாரும் விவாதிக்கவில்லை . சம்பந்தர் தாம் வாழ்ந்த பதினாறு ஆண்டுகளையும் தமிழ் மொழியைப் பரப்புவதையே நோக்கமாகக் கொண்டிருந்தார். இதை நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தன்  என்ற சுந்தரமூர்த்தி நாயனார் பாடல் உறுதி செய்கிறது .

மேலும் சம்பந்தர் பல இடங்களில் இதைக் கடைசிப் பாடலில் சொல்லி முத்தாய்ப்பு வைக்கிறார்

மூன்றாம் திருமுறை திருக்கழுமலம் பதிகம்  அருமையான வரிகளுடன் துவங்குகிறது

மண்ணின்நல் லவண்ணம்

  வாழலாம் வைகலும்

எண்ணின்நல் லகதிக்கி

  யாதுமோர் குறைவிலைக்

கண்ணின்நல் லஃதுறுங்

  கழுமல வளநகர்ப்

பெண்ணின்நல் லாளொடும்

  பெருந்தகை யிருந்ததே.  1

கடைசி பாடல்

கருந்தடந் தேன்மல்கு

  கழுமல வளநகர்ப்

பெருந்தடங் கொங்கையோ

  டிருந்தஎம் பிரான்றனை

அருந்தமிழ் ஞானசம்

  பந்தன் செந்தமிழ்

விரும்புவா ரவர்கள்போய்

  விண்ணுல காள்வரே.

சமணர்கள் மதுரையைச் சுற்றிலும் பிராகிருத மொழியில் கல்வெட்டுகளை பொரித்ததால்  அவர் இப்படி எதிர்ப்புக் குரல் கொடுத்தார் அதுமட்டுமல்ல வஜ்ரநந்தி  என்பவர் தமிழ்ச் சங்கத்துக்கு எதிராக திராவிட சங்கம் நிறுவியதை எதிர்த்தார்.

****

“வாழ்க அந்தணர்” எனத்தொடங்கும் திருப்பாசுரம் பதிகத்தில் 11 ஆம் பாடலில்..

அற்றன்றி யந்தண் மதுரைத் தொகை ஆக்கினானும்”

என்னும் முதல் அடியில் சிவபிரான் தமிழ்ச்சங்கம் நிறுவிய செய்தியைக் குறிப்பிடுகிறார்.

தொகை – சங்கம்)

****

இத்திருப்பாசுரத்தை அருணந்தி சிவாச்சாரியார் மெய்ஞானம் என்று போற்றுகின்றார்.

“அற்றன்றி அந்தண் மதுரைத்

தொகை யாக்கினானுந்

தெற்றென்று தெய்வந் தெளியார்

கரைக்கோலை தெண்ணீர்ப்

பற்றின்றிப் பாங்கெதிர் வினூரவும்

பண்பு நோக்கில்

பெற்றொன் றுயர்த்த பெருமான்

பெருமானு மன்றே”

****

இன்னும் ஒரு புதிர் போடுகிறார் ! சிவன் கையில் வீணை !

வீணா தட்சிணாமூர்த்தி பற்றி நாம் அறிவோம் . மதுரை ஆலவாய் அப்பனைப் பாடுகையிலும் சிவன் கையில் வீணை இருந்ததாகப் பாடுகிறார் . அவர் காலத்தில் மீனாட்சி கோவிலில் அப்படி ஒரு சிலை இருந்திருக்க வேண்டும் . 

ஆலநீழல் உகந்த திருக்கையே – மூன்றாம் திருமுறை

வெய்யவன்பல் லுகுத்தது குட்டியே

  வெங்கண்மாசுணங் கையது குட்டியே

யையனேயன லாடிய மெய்யனே

  யன்பினால்நினை வார்க்கருள் மெய்யனே

வையமுய்யவன் றுண்டது காளமே

  வள்ளல்கையது மேவுகங் காளமே

யையமேற்ப துரைப்பது வீணையே

  யாலவாயரன் கையது வீணையே.7

முதல் திருமுறை திருசிவபுரம் பதிகத்திலும் யாழ் ஏந்திய கையன் என்கிறார்

இப்போது தருமபுரத்தில் யாழ் ஏந்திய மூர்த்தியைக் காணமுடிகிறது.

YAAZ IN LORD SHIVA’S HAND, DHARMA PURAM

YAAZ IS CORRUPTED AS JAZZ IN WESTERN COUNTRIES. J=Y

–SUBHAM—

TAGS- சிவன் கையில் வீணை, யாழ் ஏந்திய மூர்த்தி, சம்பந்தர் பாட்டில், தமிழ் சங்கம்!   

Leave a comment

Leave a comment