WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,694
Date uploaded in London – –27 June 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மௌலானா அபுல்கலாம் ஆஜாத் உள்ளிட்டோரின் கல்வித் தொண்டு! – 3
ச. நாகராஜன்
அடுத்து வந்த இஸ்லாமிய கல்வித்துறை அமைச்சர்கள் என்ன செய்தார்கள் என்று பார்ப்போமா?
மௌலானா அபுல்கலாம் ஆஜாதிற்குப் பின்னர் வந்தவர்கள்:
ஹுமாயுன் கபீர் – 1958-1963
முகம்மதலி குரிம் சாக்ளா (எம்.சி, சாக்ளா) – 1963-1966
ஃபக்ருதீன் அலி அஹமது – 1966-1967
சையித் நூருல் ஹஸன் – 1971-1977
மேலே கண்டவர்கள் அனைவரும் ஹிந்து விரோதப் போக்கையும் அதற்கான வழிகளையும் காங்கிரஸ் ஆட்சியில் தீவிரப்படுத்தினர் என்று குற்றம் சாட்டப்படுகின்றனர்.
ஹிந்து மன்னர்களின் தாக்குப் பிடிக்கும் சக்தியையும் எதிர்ப்பையும் மறைத்து ஹிந்து நாகரிகத்தைத் தாழ்வு படுத்தி இஸ்லாமிய ஆட்சியாளர்களை வானளாவப் புகழச் செய்வதே இவர்களது கொள்கையாக இருந்தது.
ஹுமாயுன் கபீர் – 1958-1963
அறிஞரும் கவிஞருமான ஹுமாயுன் கபீர் மௌலானா ஆஜாதின் திட்டத்தை இன்னும் விரிவுபடுத்தி இஸ்லாமிய வரலாற்றைப் போற்றும் வரலாற்று ஆசிரியர்களை வெகுவாக ஆதரித்தார். NCERT எனப்படும் NATIONAL COUNCIL OF EDUCATIONAL RESEARCH AND TRAINING நிறுவனமானது 1961ம் ஆண்டு நிறுவப்பட்டது. தாஜ்மஹால், அக்பரது நிர்வாகம் ஆகியவற்றைப் போற்றியும் ஹிந்து சக்திகளான மராத்திய, ராஜபுத்திரர் திறம்பட ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்ததைக் குறைவுபடுத்தியும் முகலாயரின் திட்டங்களைப் புகழும் பாடபுத்தகங்கள் வெளியிடப்பட்டன.
சோழர்களின் உலகளாவிய சாம்ராஜ்ய செல்வாக்கு,
விஜயநகர சாம்ராஜ்யத்தின் வளம் மற்றும் பண்பாட்டின் உச்சகட்டம்,
கஜபதிகளின் கடலோரச் செல்வ வளம் மற்றும் அயல்நாட்டு வர்த்தகம்.
சரைகத் போர் (BATTLE OF SARAIGHAT) உட்பட 17 முறை அஹோம் வம்ச மன்னரால் (AHOM DYNASTY) தோற்கடிக்கப்பட்ட முகலாயர் பற்றிய வரலாறு வெறும் அடிக்குறிப்புகளாக மட்டுமே தரப்பட்டன – முகலாயரின் வெற்றியைப் பெரிதும் புகழ்ந்து!
ஹுமாயுன் கபீரின் கொள்கையான மைனாரிடி கல்வியானது, ஹிந்துக்களுக்கு எதிராகவும் இஸ்லாமியருக்கு ஆதரவாகவும் உள்ளனவற்றை முதன்மைப்படுத்தியது.
கல்வியில் இரண்டாம் கட்டமாக இது அமுல்படுத்தப்பட்டது. இதன்படி ஹிந்து மதம் என்பது மூடநம்பிக்கைகளின் மொத்தத் தொகுப்பு என்று ஹிந்து மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டது. இஸ்லாமியப் பண்பாடோ முற்போக்குக் கொள்கையைக் கொண்டது என்று கற்பிக்கப்பட்டது.
டெல்லி மீது 1398ல் நடத்தப்பட்ட டாமர்லேன் படையெடுப்பில் (TAMERLANE’S 1398 INVASION OF DELHI) ஏராளமான ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டதை பாடபுத்தகத்தில் சொல்லாமல் விட்டது கபீரின் மனப்போக்கையும் வழிமுறையையும் படம் பிடித்துக் காட்டுகிறது.
· தொடரும்
,
நன்றி, ஆதாரம் : ட்ரூத், கல்கத்தா வார இதழ்
TRUTH Vol 93 Issue No 6 Dated 23-5-2025