சம்பந்தர் தேவாரத்தில்  சத்சங்கம் (Post.14,700)

SAMBANDAR’S PALMYRA TREE MIRACLE

Written by London Swaminathan

Post No. 14,700

Date uploaded in London –  28 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 சம்பந்தர் தேவாரத்தில் தமிழ்ச் சங்கம் என்ற கட்டுரையை ஏற்கனவே படித்தீர்கள்; இப்போது அவர் சத் சங்கம் பற்றிப்பாடியதைக் காண்போம் . இந்த தேவாரத்தில் சத் சங்கம் என்பது என்னால் நுழைக்கப்பட்ட இடைச் செருகல் அல்ல. 1953- ம் ஆண்டில் தருமபுரம் ஆதீனம் வெளியிட்ட அருமையான தேவார உரைப் பதிப்பில் உள்ள சொல் ஆகும்

சீர்காழியில் உள்ள திருச்சிரபுரம் பதிகம்– முதல் திருமுறை

பல்லடைந்த வெண்டலையிற்

……….

தெங்குநீண்ட சோலைசூழ்ந்த

  சிரபுரம் மேயவனை

அங்கம்நீண்ட மறைகள்வல்ல

  அணிகொள்சம் பந்தன்உரை

பங்கம்நீங்கப் பாடவல்ல

  பத்தர்கள் பாரிதன்மேற்

சங்கமோடு நீடிவாழ்வர்

  தன்மையி னாலவரே.

இப்பதிகத்தை குற்றமறப்பாடவல்லார் இவ்வுலகில் சத் சங்கத்தோடு நீடு வாழ்வார்கள் எனப் பயன் கூறுகிறது என்பது 1953 –ஆம் ஆண்டு தருமபுர ஆதீனம் வெளீயிட்ட தேவாரத்தில் காணப்படும் உரையாகும்.

யானையை எவ்வளவு குளிப்பாட்டினாலும் அது, மண்ணில் இருக்கும் வரை,  தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளும். அதே யானையைக் குளிப்பாட்டி, சுத்தமான இடத்தில் கட்டிவிட்டால் அது அப்படிச் செய்யாது. நாமும் கெட்டவர் சஹவாசத்தில் உள்ளவரை இப்படி நம் தலையில் நாமே மண்னை வாரிப் போட்டுக்கொள்வோம். நல்லோர் சஹவாசம் என்னும் கட்டுத்தறியில் கட்டப்பட்டுவிட்டால் சுத்தமாக இருப்போம் என்பார் பரமஹம்சர்.

****

SAMBANDAR CURED A RARE DISEASE 

ஆதிசங்கரரும் பஜகோவிந்தம் என்னும் துதியில் நல்லோர் சஹவாசம் முக்தி நிலைக்கு இட்டும் செல்லும் என்கிறார்:–

சத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்

நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்

நிர்மோஹத்வே நிஸ்ஸலிதத்வம்

நிஸ்ஸலிதத்வே ஜீவன் முக்தி – பஜகோவிந்தம்.

****

திருவள்ளுவரும் சத்சங்கத்தின் பெருமையை, தொண்டர்தம் கூட்டை, ‘கேள்வி’ என்னும் அதிகாரத்தில் சொல்லுவார்:

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும் (குறள் 416)

கொஞ்சமாவது நல்லது கேளுங்கள்; அது உங்களுக்குப் பயன்படுகிறபோது நல்ல பெருமையைக் கொண்டுவரும் – என்கிறார்.

இன்னொரு குறளில் சறுக்கி விழும் நிலத்தில் நடக்கும்போது பயன்படும் ஊன்றுகோல் போல (வாக்கிங் ஸ்டிக்), புராண இதிஹாசச் சொற்பொழிவுகள் பயன்படும் என்பார்:

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் – குறள் 415

ஆதிசங்கரர் பற்றிபெரும்பாலோர் ஒப்புக்கொண்ட காலத்தை காஞ்சி பாரமாசார்ய சுவாமிகள் (1894-1994) மிக நீண்ட வாதத்தின் மூலம் தவறு என்று காட்டினார் . இந்த வரிகள்  ஆதி சங்கரர் காலம் பற்றிய சர்ச்சையைத் தீர்க்கவும் உதவலாம்.

நானும் அபிநவ சங்கரர்  வாழ்க்கையும் ஆதி சங்கரர் வாழ்க்கையும் மிக அதிசய ஒற்றுமைகளுடன் விளங்குவதால் இது ஆராயப்பட  வேண்டிய விஷயம் என்று  ஆதி சங்கரர் காலம்  பற்றிய கட்டுரையில் எழுதினேன். அதுமட்டுமல்லாமல் அப்பர் தேவாரத்தில் சய சய சங்கரா போற்றி என்று பாடியதையும் எடுத்துக்காட்டினேன். ஏனெனில் இந்த கோஷம் சங்கராசார்யாருடன் வரும் பக்கதர் கள்  எழுப்பும் கோஷம்; இன்றும் அதைக் கேட்கிறோம்.

APPAR AND SAMBANDAR MEET.

திராசாவிட சிசு என்று சங்கரர் குறிப்பிட்டது சம்பந்தரையே   என்று சிலர் சொன்னவுடன் இல்லை இல்லை அது சங்கரர் தன்னைத் தானே அழைத்துக்கொண்டது என்றும் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் விளக்கம் கொடுத்தார்; இது  உண்மை என்பதை சம்பந்தர் தேவாரம் முழுதும் காண் கிறோம். ரிக் வேதத்திலும் சில ரிஷிகள் நான் சொல்கிறேன் என்று பெயர் சொல்லிப்பாடிய துதிகள் உள்ளன. எல்லாப் பாடகர்களும் கிருதிகளிலும் கீர்த்தனைகளில் தங்கள் பெயர்களை சொல்லி முத்திரை வைத்திருப்பதை பல்லாயிரம் ஹிந்துஸ்தானி கர்நாடக இசைப்பாடல்கள்  காட்டுகின்றன. மீராபாய்  தன் பெயரைச் சொன்னார்; புரந்தர தாசர் தன் பெயரைச் சொன்னார் .இது எல்லாம் ரிக் வேதத்தில் துவங்கியதால் கவுண்டின்ய கோத்ரத்து புலவன் சம்பந்தனும் தன் பெயரைச் சொன்னான். கபிலனும் புறநானூற்றில் தன்னைப் பாடியதைக் காண்கிறோம். சம்பந்தர் எல்லாப்பாடல்களிலும் தன்னைப்  பற்றிய குறிப்புகளை விடுவதால் பெரியார்கள்

சம்பந்தர் தன்னைப் பாடினார்

அப்பர் என்னைப் பாடினார்

சுந்தரர் பெண்ணைப் பாடினார்

என்று சிவபிரான் சொல்வதாகவும் எழுதினார்கள்.

ஏற்கனவே தீர்க்கப்படாத இரண்டு புதிர்கள் உள்ளன . சங்கரர் உரைகளில் சுந்தரபாண்டியன் பற்றி குறிப்பிடுகிறார் இது பற்றிய விளக்கம் கிடைக்கவில்லை; யாரந்த சுந்தர பாண்டியர் ? நமக்குத் தெரிந்த முதல் சுந்தர பாண்டியன் மீனாட்சி அம்மனின் கணவர் . அவர் இருந்ததோ 2300 ஆண்டுகளுக்கு முன்னர் என்று மெகஸ்தனிஸ் குறிப்பு மூலம் அறிகிறோம். சுந்தர பாண்டியத்தின் தமிழ் மொழிபெயர்ப்பும் முழுதும் கி டைக்காததால் மர்மத்தை துளக்க முடியவில்லை ‘ மேலும் மூர்த்தி நாயனார் என்ற வைஸ்ய ஜாதி பாண்டிய மன்னர் பற்றி சுந்தரர், சேக்கிழார் , தமிழில் திருவிளையாடல் புராணம் எழுதிய நம்பி ஆகியோர் பாடியுள்ளனர்; இந்த மன்னர் பற்றி நமக்கு எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை

ஆனால் கடுங்கோன் ஆட்சி முதல் தொடர்ந்து கல்வெட்டுகள் செப்பேடுகள் கிடைத்திருப்பதால், இவர் 1500 ஆண்டுகளுக்கு முன்னர்தான் பதவி வகித்திருக்க வேண்டும் மேலும் எல்லா தமிழ் புராணங்களும் சம்ஸ்க்ருத நூல்களின் மொழிபெயர்ப்பு என்று அந்தந்த ஆசிரியர்களே பாடியிருப்பதால் சம்ஸ்க்ருத மொழியில்  உள்ள  ஹாலாஸ்ய மஹாத்ம்யம் , சிவ லீலார்ணவம் முதலியவற்றைக் கால வரிசைப்படுத்தி ஆராய வேண்டும் அப்போது புதிய உண்மைகள் வெளிப்படும்.

–subham—

Tags– சம்பந்தர் ,தேவாரத்தில், சத்சங்கம்

Leave a comment

Leave a comment