WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,698
Date uploaded in London – –28 June 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மௌலானா அபுல்கலாம் ஆஜாத் உள்ளிட்டோரின் கல்வித் தொண்டு! – 4
ச. நாகராஜன்
முகம்மது குரிம் சாக்ளா (எம்.சி.சாக்ளா)
சாக்ளா செகுலரிஸ ஆதரவிற்குப் பெயர் பெற்றவர். சரித்திர பாட புத்தகங்களில் இருந்த தவறுகளைத் திருத்தத் தவறி விட்டார். சிகந்தர் புட்ஷிகான் காஷ்மீரில் மார்த்தாண்ட சூரிய கோவிலை அழித்ததால் ஹிந்துக்கள் துயரமடைந்ததை அவர் வரலாற்றில் சேர்க்க ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. அதற்கு பதிலாக பாடத்தில் டெல்லி சுல்தான்களின் கங்கா யமுனா தெஹ்ஜீபை உயர்த்திக் காட்டினார். ஜஸியா வரி போன்ற ஹிந்து விரோதப் போக்குகளை அவர் காட்டாமல் ஒதுக்கினார்.
கங்கா, யமுனா ஆகிய நதிகள் ஹிந்துக்களுக்குப் புனிதமானவை. ஆனால் கங்கா யமுனா தெஹ்ஜீப் சமரசமான ஒரு பண்பாட்டை எடுத்துக்காட்டுவதற்காகச் சித்தரிக்கப்பட்டது. இந்தப் போக்கை அப்படியே கோதுமை பயிரிடுதலோடு ஒப்பிடுவோம்.
கோதுமை விளைநிலத்தில் மோசமான விதையான குல்லி தண்டா (PHALARIS MINOR) பயிர்கள் நன்றாக விளைவதை அச்சுறுத்தும். கங்கையும் யமுனையும் ஹிந்து நாகரிகத்திற்கு உரியவை போல நிலமானது விவசாயிக்குச் சொந்தமானது. இந்த நதிகள் ஹிந்து பண்பாட்டை வளப்படுத்துவது போல நிலமும் விவசாயிக்கு நிறைய பயிரைத் தர வேண்டியது தான்! என்றாலும் கூட விவசாயி விழிப்புடன் இல்லை என்றால் குல்லி தண்டா நிலத்தை மொத்தமாக அழித்து விடும். கோதுமை விளையும் நிலத்தை மோசமான பூச்சி அரித்த நிலமாக மாற்றி விடும்.
விவசாயிகள் நல்ல கோதுமை விளைச்சலுக்காக இடைவிடாது குல்லி தண்டாவை நீக்கப் பாடுபடுவர். அரசாங்கத்தின் கொள்கைகள் விதைகளை நன்கு வளரச் செய்து பூச்சி அரிப்பு இல்லாது செய்ய வேண்டுமா அல்லது மொத்தமாக பூச்சியால் அரித்துப் பாழ்படச் செய்ய வேண்டுமா?
குல்லி தண்டாவால் விளைந்த கோதுமையை யாராவது விலை கொடுத்து வாங்குவார்களா? குல்லி தண்டா கோதுமை என்று ஒன்று இல்லாதது போல கங்கா யமுனா தெஹ்ஜீப் என்று ஒரு பண்பாடே இல்லை.
கோதுமை என்பது நல்ல விளைச்சலினால் ஏற்பட்ட ஆதாயம். குல்லி தண்டா என்பது ஒரு விஷ விதை. இரண்டுக்குமுள்ள வேறுபாடு மிகவும் தெளிவானது. எது தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.
சாக்ளாவின் கவனம் தொழில்நுட்பக் கல்வியில் இருந்தது என்று சொல்வதானது அடிப்படையான ஹிந்து வரலாற்றை அழிக்கும் விஷயத்திற்குச் சற்றும் சம்பந்தமில்லாதது. இப்படிப்பட்ட பாடதிட்ட அமைப்பை எதிர்க்காமல் அவர் கிருஷ்ணதேவராயர், கபிலேந்தரதேய கஜபதி, சிவாஜி, குரு கோவிந்த சிங் ஆகிய ஹிந்து வீரர்களை ஒதுக்கித் தள்ளும்படியான ஒரு பாடதிட்டத்தை உருவாக்கினார்.
· தொடரும்
,
நன்றி, ஆதாரம் : ட்ரூத், கல்கத்தா வார இதழ்
TRUTH Vol 93 Issue No 6 Dated 23-5-2025