குரு பற்றிய 31 பொன்மொழிகள்- ஜூலை 2025 காலண்டர் (Post No.14,702)

Written by London Swaminathan

Post No. 14,702

Date uploaded in London –  29 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பண்டிகை தினங்கள்:– ஜூலை 10-குரு பூர்ணிமா , 29-நாக பஞ்சமி 6-முஹர்ரம்; 2-ஆனி உத்திர தரிசனம்- 28-ஆடிப்பூரம்;

அமாவாசை-24; பெளர்ணமி-10; ஏகாதசி-6, 21; கார்த்திகை -20

முகூர்த்த தினங்கள்- ஜூலை 2, 7, 13, 14, 16.

****

குரு பற்றி திருமூலர், ஆதிசங்கரர், திருவள்ளுவர், பாரதியார் முதலிய பெரியோர்கள் சொன்ன பொன்மொழிகள்

ஜூலை 1 செவ்வாய்க் கிழமை

1.குரு; 2.குருவுக்கு குரு = பரம குரு; 3.பரம குருவின் குரு = பரமேஷ்டி குரு;  4.பரமேஷ்டி குருவின் குரு = பராபர குரு

****

ஜூலை 2 புதன் கிழமை

நாம் முயற்சி செய்யவும் வேண்டும், .குருவின் உதவியும் நமக்குக் கட்டாயம் தேவை—ரமணர்

****

ஜூலை 3 வியாழக் கிழமை

குருநாதரின் சந்நிதியில் வாசனைகள் வலுவிழக்கின்றன. மனம் நிச்சலமாகிறது. சமாதி வாய்க்கிறது. ஆகவே குருவின் சந்நிதியில் சீடன், உண்மை அறிவும் சரியான அனுபவமும் பெறுகிறான். அதில் அசையாது நிற்க மேலும் முயற்சி தேவை.– ரமணர்

****

ஜூலை 4 வெள்ளிக் கிழமை

நம் மனம் யாரிடம் வசப்படுகிறதோ அவரே சரியான குரு; .அவரிடத்து, சாந்தி, மன்னிக்கும் மனப்பாங்கு, பொறுமை போன்ற நல்ல குணங்கள் அமைந்திருக்க வேண்டும் .– ரமணர்

xxx

ஜூலை 5 சனிக் கிழமை

கனவில் சிங்கத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே யானை விழித்துக்கொள்ளும். . அது போல குருவின் அருட்பார்வை மூலம், சீடன் அறியாமை என்னும் தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்கிறான் –. ரமணர்

****

ஜூலை 6 ஞாயிற்றுக் கிழமை

குரு,  ஆத்ம சாட்சாத்காரத்தைக் கொண்டு வருவதில்லை. மாறாக அதற்கான தடைகளை அகற்றுகிறார்.- ரமணர்

****

ஜூலை 7 திங்கட் கிழமை

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்

போற்றலுள் எல்லாம் தலை– குறள் 891

மணக்குடவர் உரை:
பெரியவர்களைப் போற்றாது ஒழுகுவனாயின் அவ்வொழுக்கம் அவராலே எல்லாரானும் இகழப்படும் நீங்காத துன்பத்தைத் தரும். இது முனிவரைப் போற்றா தொழியின் அது குற்றம் பயக்கு மென்றது.

****

ஜூலை 8 செவ்வாய்க் கிழமை

இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.—900

பரிமேலழகர் உரை: மிக்க தவத்தினை உடையார் வெகுள்வராயின்;  அவரான் வெகுளப்பட்டார் கழியப் பெரிய சார்பு உடையார் ஆயினும் அதுபற்றி உய்யமாட்டார். (சார்பு – அரண், படை, பொருள், நட்பு என இவை. அவை எல்லாம் வெகுண்டவரது ஆற்றலால் திரிபுரம் போல அழிந்துவிடும் ஆகலின், ‘உய்யார்’ என்றார். சீருடையது சீர் எனப்பட்டது).

****

ஜூலை 9 புதன் கிழமை

குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.—898

மலை ஒத்த ஆற்றல் உடைய பெரியவர், ஒருவரை அழிக்க எண்ணிவிட்டால், அவர் எண்ணிய அளவிலேயே இப்பூமியில் நிலைபெற்று வாழ்பவர் போன்றோரும், தம் குடியோடும்கூட அழிவர்.

****

ஜூலை 10 வியாழக் கிழமை

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.—897

தகுதியால் சிறப்புற்ற பெரியார் ஒருவனை வெகுண்டால் அவனுக்குப் பலவகையால் மாண்புற்ற வாழ்க்கையும் பெரும் பொருளும் இருந்தும் என்ன பயன்?

****

ஜூலை 11 வெள்ளிக் கிழமை

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.
மணக்குடவர் உரை:
வலியுடையார்க்கு வலியில்லாதார் இன்னாதவற்றைச் செய்தல், தம்மைக் கொல்லும் கூற்றத்தைக் கைகாட்டி அழைத்தாற் போலும்.

****

ஜூலை 12 சனிக் கிழமை

கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு.
மணக்குடவர் உரை:
தான் கெடுதல் வேண்டுவனாயின், பெரியாரைக் கேளாதே ஒருவினையைச் செய்க. தன்னைக் கொல்ல வேண்டுவனாயின், வலியுடையார் மாட்டே தப்புச் செய்க.

****

ஜூலை 13 ஞாயிற்றுக் கிழமை
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.–892
மணக்குடவர் உரை:
பெரியவர்களைப் போற்றாது ஒழுகுவனாயின் அவ்வொழுக்கம் அவராலே எல்லாரானும் இகழப்படும் நீங்காத துன்பத்தைத் தரும். இது முனிவரைப் போற்றா தொழியின் அது குற்றம் பயக்கு மென்றது.

****

ஜூலை 14 திங்கட் கிழமை
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்–.899
மணக்குடவர் உரை:
உயர்ந்த கோட்பாட்டை யுடையார் வெகுள்வராயின், இந்திரனும் இடையிலே இற்றுத் தன்னரசு இழக்கும். இது பொருட்கேடு வருமென்று கூறிற்று.

****

ஜூலை 15 செவ்வாய்க் கிழமை

ஞான குரு தேசிகனைப் போற்று கின்றேன்;

நாடனைத்துந் தானாவான் நலிவி லாதான்

மோன குரு திருவருளாற் பிறப்பு மாறி

முற்றிலு நா மமர நிலை சூழ்ந்து விட்டோம்;-பாரதியார்

*****

ஜூலை 16 புதன் கிழமை

தேன்னைய பராசக்தி திறத்தைக் காட்டிச்

சித் தினியல் காட்டி மனத் தெளிவு தந்தான்.

வானகத்தை யிவ் வுலகிலிருந்து தீண்டும்

வகை யுணர்த்திக் காத்தபிரான் பதங்கள் போற்றி!-பாரதியார்

*****

ஜூலை 17 வியாழக் கிழமை

எப்போதுங் குரு சரண நினைவாய், நெஞ்சே!

எம்பெருமான் சிதம்பர தேசிகன் றாளெண்ணாய்.

முப் பாழுங் கடந்த பெரு வெளியைக் கண்டான்,

முக்தி யெனும் வானகத்தே பரிதியாவான்,-பாரதியார்

*****

ஜூலை 18 வெள்ளிக் கிழமை

காற்றுள்ள போதே நாம் தூற்றிக் கொள்வோம்;

கனமான குருவை யெதிர் கண்ட போதே

மாற்றான அஹந்தையினைத் துடைத்துக்கொள்வோம்;

மலமான மறதியினை மடித்துக் கொள்வோம்;

கூற்றான அரக்கருயிர் முடித்துக் கொள்வோம்;-பாரதியார்

*****

ஜூலை 19 சனிக் கிழமை

வாயினாற் சொல்லிடவு மடங்கா தப்பா;

வரிசையுட னெழுதிவைக்க வகையுமில்லை.

ஞாயிற்றைச் சங்கிலியா லளக்கலாமோ?

ஞான குரு புகழினை நாம் வகுக்கலாமோ?-பாரதியார்

*****

ஜூலை 20 ஞாயிற்றுக் கிழமை

‘குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால்,

பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?’ ஆதி சங்கரர்–குரு அஷ்டகம் (குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால், பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?’ என்ற வரிகள் முதல் எட்டு ஸ்லோகங்களின் கடைசி வரிகளாக பொதுவாக உள்ளன.)

****

ஜூலை 21 திங்கட் கிழமை

அழகான உடல், அழகான மனைவி, பார் புகழ்,

குறையாத செல்வம் எல்லாம் இருந்தும், 

குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால்,

பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?

****

ஜூலை  22 செவ்வாய்க் கிழமை

மனைவி, செல்வம், புத்ரன், பேரன், வீடு, உறவினர்கள்,

புகழ் வாழ்ந்த குடும்பத்தில் பிறப்பு – ஆகியவைகள் அனைத்தும் இருந்தும்,குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால்,

பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?

****

ஜூலை 23 புதன் கிழமை

வேதத்தின் ஆறு பகுதிகளிலும் பாண்டித்தியம்,

அனைத்து வேத இலக்கியம் முழுமையும் கரைகண்ட கல்வி,

உயர்ந்த இலக்கிய உரை நடை – கவிதை ஆகியவைகளைப் படைக்கும் திறன் – ஆகியவைகள் அனைத்தும் இருந்தும்– குருவின்

****

ஜூலை 24 வியாழக் கிழமை

அன்னிய நாடுகளில் புகழ், சொந்த நாட்டில் பெரும் செல்வம், நல்லொழுக்கத்தில் கீர்த்தி – ஆகியவைகள் அனைத்தும் இருந்தும்- குருவின்

****

ஜூலை 25 வெள்ளிக் கிழமை

பூமி முழுவதையும் ஆட்சி செய்யும் அரசர்களும் உனக்கு சேவை செய்ய உன் பாதங்களில் தவம் கிடந்தாலும்,- குருவின்

****

ஜூலை 26 சனிக் கிழமை

உன் கொடையின் காரணமாக உன் புகழ் திக்கெட்டும் பரவி,

இந்த உலகத்தில் எதையும் நீ அடையும் திறன் பெற்றிருந்தாலும்- குருவின் …………………

****

ஜூலை 27 ஞாயிற்றுக் கிழமை

சுக போகம், ராஜ்யம், மனைவி, குடும்பம், செல்வம் –

ஆகியவைகளில் உன் மனம் ஈடுபடாமல்

துறவற மனப்பான்மையில் மூழ்கினாலும்– குருவின்

****

ஜூலை  28 திங்கட் கிழமை

காட்டில் அல்லது வீட்டில் வசித்தாலும், உடலை வருத்திச் செயலில் ஈடுபட்டாலும் அல்லது பெரிய சிந்தனையில் மூழ்கினாலும்– குருவின் …………..

*****

ஜூலை  29 செவ்வாய்க் கிழமை

சந்நியாசியோ, ராஜாவோ, பிரம்மசாரியோ அல்லது கிருஹஸ்தனோ யாராக இருந்தாலும், குருவின் போதனைகளை மனத்தில் பதிய வைத்து, இந்த ஸ்லோகங்களை பாராயணம் செய்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாவர். அவர்கள் பிரம்மத்தை உணர்ந்த பெரிய பரிசைப் பெற்ற பாக்கியவான்களாவர்.

****

ஜூலை 30 புதன் கிழமை

ஓம் குருர்ப்ரஹ்மா குருர்விஷ்ணு: குருர்தேவோ மஹேஸ்வர:

குருஸ்ஸாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம:

குரு என்பவர் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோருக்கு சமம் ஆனவர்

அந்த குருவை வணங்குகிறேன்.

****

ஜூலை 31 வியாழக் கிழமை

குரவே ஸர்வ லோகானாம் பிஷஜே பவ ரோகிணாம்

நிதயே ஸர்வ வித்யானாம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே நம

குரு என்பவர் பிறவிப்பிணியை அகற்றும் டாக்டர்.; எல்லா கலைகளுக்கும் இருப்பிடமானவர் . அவர் தட்சிணாமூர்த்தி.

****

BONUS QUOTES ON GURU

தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திருநாமம் செப்பல்

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே–  திருமந்திரம் 139

****

பரிசன வேதி பரிசித்த தெல்லாம்

வரிசை தரும்பொன் வகையாகு மாபோற்

குருபரி சித்த குவலயம் எல்லாந்

திரிமலந் தீர்ந்து சிவகதி யாமே –  திருமந்திரம் 2054

பரிசனவேதி என்ற குளிகை (Philosopher’s stone)   பட்ட உலோகம் எல்லாம் பொன்னாகிவிடும். அது போல குருவானவர் இந்த உலகத்தில் யாரை தொட்டாலும் அவர்கள் மும்மலம் நீங்கி சிவனுடன் ஐக்கியமாவார்கள்.

xxxx

கறுத்த இரும்பே கனகம் அது ஆனால்

மறித்து இரும்பு ஆகா வகை அது போலக்

குறித்த அப்போதே குரு அருள் பெற்றால்

மறித்துப் பிறவியில் வந்து அணுகானே.  திருமந்திரம் 2051

****

ரசவாத (Alchemy) வேதியியலின்படி கருமை நிறத்து இரும்பானது பொன்னிறமான தங்கமாகிவிடும். ஆனால் தங்கமானது மீண்டும் இரும்பாக மாறாது. அதுபோல ஆன்மாவானது குருவின் அருளினால் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களில் இருந்தும் விடுவிக்கப் படும் அந்த ஆன்மாவுக்கு மறுபிறவி கிடையாது. ஆன்மாவின் மும்மலங்களையும் நீக்கக் கூடிய குரு இறைவனே ஆகும்.

****

ஸ்ரீ குரு கீதை (392 Slokas) …

எவர் குருவோ அவர் சிவன், எவர் சிவனோ அவர் குரு

குருவைக் காட்டிலும் அதிகமான தத்துவம் இல்லை

குருவைக் காட்டிலும் அதிகமான தவம் இல்லை

குருவைக் காட்டிலும் அதிகமான ஞானம் இல்லை

****

குரு மந்திரத்திற்கு எதுவும் சமம் இல்லை

குருவிற்கு சமமான தெய்வமும் இல்லை

குருவிற்கு சமமான உயர்வுமில்லை

சிருஸ்டி, இஸ்திதி, சம்ஹாரம், நிக்ரஹம், அனுக்ரஹம் இந்த ஐந்து வகையான செயல்கள்எப்பொழுதும் குருவிடம் பிரகாசித்து கொண்டே இருக்கும்.

****

தியானத்திற்கு மூலம் குருவின் மூர்த்தி

பூஜைக்கு மூலம் குருவின் பாதம்

மந்திரத்திற்கு மூலம் குருவின் வாக்கியம்

முக்திக்கு மூலம் குருவின் கிருபை

– “ஸ்ரீ குரு கீதை”

—subham—

Tags- குரு, பொன்மொழிகள், ஜூலை 2025 காலண்டர் , குரு கீதை, ஆதி

Leave a comment

Leave a comment