LONDON SWAMINATHAN’S NEW ENGLISH BOOK RELEASED

POSTED ON 24TH JUNE 2025

LONDON SWAMINATHAN’S NEW ENGLISH BOOK RELEASED

POSTED ON 24TH JUNE 2025

ABOUT THE BOOK AND THE AUTHOR

Title – Hindu Beliefs in Shakesperean Plays

Author – London Swaminathan (Santanam Swaminathan)

Language- English

Published  – June 2025

Subject – Literature

xxx

AUTHOR’S PROFILE

Santanam swaminathan (London swaminathan)

Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)

Higher Diploma in French and Sanskrit

DOB  6-11-1948

Work Experience- Now retired.

Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,

BBC Tamil Producer in London 1987-1991,

Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,

Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.

Living with his wife and two sons in London from 1987.

xxx

Blog Details

tamilandvedas.com

swamiindology.blogspot.com

xxx

Contact Details

swami_48@yahoo.com

swaminathan.santanam@gmail.com

Mobile Number in London

+ 44 07951 370 697

Published Works

Over 9500 articles in English and Tamil and over 146+2 Tamil and English Books.

Visited 16 Countries

India, Sri Lanka, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Malaysia, Singapore, Italy and Greece

*****

Foreword

Scholars in India have been quoting Shakespeare in their speeches and writings for decades. They have compared the quotations from Shakespeare’s plays with sayings in Hindu scriptures. I collected all such comparisons and used them in my articles in my two blogs.

When I bought a Shakespeare Quotation book last year, I was able to do the comparison subject wise or topic wise. Tamil and Sanskrit poems and proverbs echo Shakesperean thoughts. It proves the saying that Great men think alike.

One does not need to copy another when it comes to universal truths. But certain beliefs like women are inferior or certain animals like dogs, donkeys and pigs are despicable reflect the age they lived in. It helps the researchers to do sociological studies. So far, I have compared only some topics. There are lot more comparisons which will come in the second part of the book. Readers are welcome to come with more comparisons and similarities.

London Swaminathan

June 2025

swami_48@yahoo.com

swaminathan.santanam@gmail.com

Hindu Beliefs in Shakesperean Plays – book title

Contents

1.Shakespeare and Bhagavad Gita : Comparison by Scholars

2.Shakespeare and the Upanishads: Swami Ranganathananda

3.Money in Hindu Books and Shakespeare Works

4.Money in Hindu Books and Shakespeare Works -2

5. Money in Hindu Books and Shakespeare Works -3

6.Shakespeare in Rig Veda and Tamil Veda- on Misers

7.Shakespeare’s Othello and Valmiki Ramayana: Rt Honourable Srinivasa Sastri’s Talk

8.Pigs in Shakespeare and Tamil Hindu Scriptures

9.Tamil Poet Bharati and Shakespeare on Patriotism

10.Ghosts in Shakespeare ‘s Plays

11.Raven Bird in Shakespeare and Hindu Scriptures- Inauspicious

12. Shakespeare’s belief in Astrology -1

13.Shakespeare’s belief in Astrology -2

14.More Stars in Shakespeare and Hindu Literature

15.Except Manu, Whole World treated Women with Contempt! – Part 1

16.Except Manu, Whole World treated Women with Contempt! – Part 2

17.Tamils attack Women in Sangam Age!

18.Sanskrit Poets and Tamil Poets attack Women  

19.Eclipse, Ghosts and Omens from Shakespeare, Tamil and Sanskrit Books

20.Screeching Owls in Shakespeare, Tamil and Sanskrit Scriptures

21.Ass and Donkey in Shakespeare, Tamil and Sanskrit Literature -1

22.Ass and Donkey in Shakespeare, Tamil and Sanskrit Literature -2

23. Mind and Moon; Shakespeare and Hindu Scriptures

24. Tamils and Shakespeare attack Dogs!

********

Book cover shows Shakespeare with  Hindu symbols

Ref. 148  Books written by London Swaminathan in Tamil and English.

ENGLISH BOOKS WRITTEN BY LONDON SWAMINATHAN

(1) Is Brahmastra a Nuclear Weapon?

(2). AMAZING TIME TRAVEL by HINDU SAINTS

(3).Famous Trees of India

(4).DID INDIANS BUILD EGYPTIAN PYRAMIDS?

(5).ALL ABOUT DRAVIDAS, TAMIL SANGAMS,

KUMARIK KANDAM AND TOLKAPPIAM

(6).STORY OF TAMIL DEVADASIS AND ORIGIN OF DANCE DRAMA IN VEDAS

(7). Interesting  Anecdotes from the World of Music

(8).KALIDASA’S SIMILES IN SANGAM TAMIL LITERATURE: NEW CLUE TO FIX HIS AGE

(9).BIRDS AND GODS- OMENS, VAHANAS AND STRANGE STORIES FROM HINDU SCRIPTURES

(10).Animal Einsteins:  Amazing Intelligence of Creatures in Nature

(11) THE WONDER THAT IS HINDU TEMPLE

(12). KALKI AVATAR SOON! KALI YUGA FINITO!

(13). Date of Mahabharata War & other Research Articles

(14). Miracles of Hindu, Parsi, Jain & Buddhist Saints

(15). HINDU STORIES ABOUT MONKEYS,

DONKEYS AND ELEPHANTS

16.VALLUVAR, EINSTEIN AND SHAKESPEARE

17. Mayan Civilization and Hindu Nagas

Asuras, Rishis and Gandharvas

18.Hindu Wonders in Muslim Countries

19.Hindu Influence in Mesopotamia and Iran

20. Hinduism in Sangam Tamil Literature

21.Interesting Titbits from Bhagavad Gita

22.Om in Rome; Manu Smriti in London Church

 23.Tamil Hindus 2000 Years Ago!  

24.Rewrite Indian History

25. Beautiful Hindu Women and

Wonderful Weddings

26.Woman is an Adjective, Man is a Noun2

27.Amazing and Unknown Names of Hindu Gods,

Himalaya, Water and Sea!

28. 1000 Hindu Quotations for Speakers and Students

29. History is a Mystery in India

30.Thousand More Hindu Quotations for Speakers and Students

31. Controversial and interesting Laws in Manu Smriti

(First Part)

32. Controversial and interesting Laws in Manu Smriti

(Second Part)

33. Linguistic and Language Wonders in India- Old Theories Binned

34. Interesting Anecdotes for Partygoers  and Essay Writers

35.More Interesting Anecdotes for Partygoers

36.Third Book of Anecdotes for Students and Speakers

37. Brahmins in Tamil and Sanskrit Literature

38.Gandhiji’s Views on Controversial Matters

39.Guide to Hindu Homa (Havan) and Festivals

40.Guide to 108 Famous Temples in Maharashtra

41.Tamil Hindu Encyclopaedia

42.Strange Stories about Hindu Saints Temples and

 Historical Atrocities

43. Nagarjuna’s Sex Tips from China and Hinduism in Burma & Thailand 

44.Medical Wonders in Hindu Scriptures

45.Hidden Secrets in Vishnu Sahasranama

46.My Research Notes on Viveka Chudamani

47.Greatest Tamil Book Tirukkural & Oldest Language Sanskrit

48.Country of Kangaroos and Koalas! Amazing Australia!! 

49. Dreams in Hindu Literature 

50.History: A Bundle of Facts and Fabrications

51.Tamil and Sanskrit Proverbs around the World

52.Hindu Beliefs in Shakesperean Plays

****

TAMIL BOOKS WRITTEN BY LONDON SWAMINATHAN

லண்டன் சுவாமிநாதன் எழுதி வெளியிட்ட நூல்கள்:

1.உலகம் முழுதும் பாம்பு வழிபாடு!

2.தாய்லாந்து, வியட்நாம், கம்போடியாவில் தமிழ் முழக்கம்

3.தேனினும் இனிய கம்பராமாயணப் பாடல்கள்

4.பெண்கள் வாழ்க –

5.சுமேரியர்- இந்தியர் தொடர்பு

6.இந்து மத நூல்களில் வெளி உலக வாசிகளும், காலப்பயணமும்

7.தமிழர்கள் மரங்களை வழிபடுவது ஏன் ?

 8.பிரம்மாஸ்திரம் ஒரு அணு ஆயுதமா?

9.தமிழ் மொழி அதிசய மொழியே? இதோ சான்றுகள்!

10.திருப்பதி பாலாஜி தமிழ்க் கடவுள் முருகன்! அருணகிரிநாதர் போடும் புதிர்!!

11.திருவாசகத் தேன் ! திருமந்திர ஜுஸ் !!

12. தொல்காப்பியர் முதல் பாரதி வரை

பெரியோர்களுடன் ஒரு நிமிடப் பேட்டி

13.எலும்பு வலுப்பட கால்சியம்; குழந்தை பிறக்க செலீனியம் ; பல் பளபளக்க ப்ளூரைட்

14.ஆழ்வார்கள் சொல்லும் அதிசயச் செய்திகள்

15.வெள்ளி, அலுமினியம், யுரேனியம் பற்றிய சுவையான கதைகள்

16.கிரேக்க மொழியில் தமிழ் சொற்கள்!

கிரேக்க நாட்டில் இந்துமத  சடங்குகள், கதைகள்!!

17.சிங்கப்பூரில் சிவபெருமான் !

சிந்து சமவெளியில் சிவலிங்கம் !!

18.திராவிடர்கள் யார்? குமரிக் கண்டமும் 3 தமிழ்ச் சங்கங்களும் உண்மையா?

19.தொல்காப்பிய அதிசயங்கள்

20.கம்பராமாயணத்தில் எதிர்பார்க்காத விஷயங்கள்

21.ரிக் வேதத்தில் தமிழ்ச் சொற்களும் அதிசயச் செய்திகளும்

22.எகிப்திய நாகரீகத்தில் இந்தியர் பங்களிப்பு

23..சுமேரியாவில் தமிழ் யாழ்! ஜப்பானில் சாம வேத இசை!!

24.மனைவி ஒரு மருந்து

25.தமிழ் ஒரு கடல்! முத்துக் குளிப்போம் வாருங்கள்!

26.சங்கத் தமிழ் நூல்களில் காளிதாசன் உவமைகள்

27.தமிழ்நாட்டை உலுக்கிய பேய்

28.பறவைகள் சகுனம் உண்மையா?

கடவுளுக்கு  வாகனம் எதற்காக?

29.கணவர் மேல் 44 காதல் கவிதைகள்!  இறந்த பின்னர்

பெட்டிக்குள் 2000 கவிதைகள் !!

30.கடவுளை மறுத்த இங்கர்சால்! இந்துமத ஆதரவு

யேட்ஸ் , ரொமைன் ரோலண்ட், வால்ட் விட்மன்!

31.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே

32.தமிழ், சம்ஸ்க்ருத கல்வெட்டுகள்

தரும் சுவையான செய்திகள்

33.மொழியியல் ஆய்வில் விஷமங்கள், விசித்திரங்கள், விநோதங்கள்

34.முப்பது கட்டுரைகளில் இந்துமத அதிசயங்கள்

35.ரிக்வேதத்தில் மேல் நாட்டினரை

திகைக்கவைக்கும் கவிதைகள் !

 36.முக்கிய கோவில்கள், சமாதிகளை

தரிசிக்க உதவும் கையேடு

37. தீயோரை அழிக்க கல்கி வருகிறார்!

38.சுவையான  யானை  பூனை கதைகள்,

உண்மைச் சம்பவங்கள்

39.மகாவம்ச நூலில் தமிழர்கள் பற்றி வியப்பூட்டும் செய்திகள்

40.ஐன்ஸ்டீன் , ஹிட்லர்,  சாணக்கியன் சொன்ன கதைகள்

41. மஹாபாரதப் போர் நடந்ததா?

42.தமிழ் மன்னர்கள் செய்த யாக, யக்ஞங்கள்

43.அற்புத மூலிகைகள் பற்றி

வேதம் தரும் செய்திகள் (title)

44.தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியத்தில்

பெண்கள்

45. பகவத் கீதையில் அதிசயச் செய்திகள்

46. பரத நாட்டியக் கதைகளும்

பழமொழிக் கதைகளும் (title)

47.அதர்வண வேத பூமி சூக்தம்   

சொல்லும் வியப்பான செய்திகள்

48.வரலாற்றில் சில புதிர்கள்

தாஜ்மஹால் இந்துக் கோவிலா ?

ஏசு கிறிஸ்து  இந்தியா வந்தாரா?

49.லண்டன் பார்க்க வாறீங்களா !

சிட்னி பார்க்க வாறீங்களா? 

50.ராதே உனக்கு கோபம் ஆகாதடி

(கட்டுரைத் தொகுப்பு)

51. தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில்

அரிய அறிவியல் செய்திகள்

52.‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’

                     (கட்டுரைத் தொகுப்பு)

53.உபநிடதத் தென்றலும் வேத மழையும் 

54.புராணங்கள் புளுகு மூட்டைகளா?       

                  (கட்டுரைத் தொகுப்பு)

55. ஆயிரம் இந்துமதப் பொன்மொழிகள்

56.அக நானூறு , புற நானூறு ,காதா எழுநூறு ,ராஜ தரங்கிணி

சொல்லும் அதிசயச் செய்திகள்

57.கட்டுரைக் கதம்பம்

(அக்னி – ஆசனம் – குரு –கங்கை நதி) book title

58. கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்

59.மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் (முதல் பாகம்)

60.மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் ( இரண்டாம் பாகம் )

61.சம்ஸ்க்ருதப் பொன்மொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும்

62.  தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்

63.தினமணி பத்திரிக்கை கதையும் என் கதையும்

64. தமிழ் — ஆங்கில மொழிகளில் ஹிந்து ‘க்விஸ்’

(Tamil- English Bilingual Hindu Quiz Book) book title

65.இந்திய நாகர்– தென் அமெரிக்க மாயா நாகரீக

அற்புத ஒற்றுமைகள்

66.மஹாராஷ்டிர மாநிலத்தின் 108 புனிதத் தலங்கள்

67.மத மாற்றம், இந்து மதம் பற்றி காந்திஜி  என்ன சொல்கிறார்? 

68. கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற கோவில்கள்

69.தமிழ், இந்து மதம் பற்றிய 60 தலைப்புகளில்

600 கேள்வி–பதில்கள் !!

70.கன்பூசியஸ், பர்மா பற்றிய அரிய தகவல்கள் !

(ஆயுர்வேதம் , ஆரூடம் , லண்டன் விழாக்களும் உள்ளன )

71.இந்து மத பண்டிகைகளில் மரம் ,செடி, கொடி வழிபாடு

72. கேரள மாநிலத்தின் 108 புகழ்பெற்ற  கோவில்கள்

73.இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் (Two Parts)

74.Second part

75. மேலும் அறுபது தலைப்புகளில் 600 கேள்வி–பதில்கள் !!

76. ஆந்திரம், தெலுங்கானாவில்

புகழ்பெற்ற கோவில்கள் – முதல் பாகம் (book title)

77. தமிழில் ஹனுமான் சாலீஸா விளக்க உரை

78. விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் விஞ்ஞான ரகசியங்கள்

79.அவ்வை ,பாரதி முதல் பாபா, மோடி வரை ! 38 ஆராய்ச்சிக் கட்டுரைகள் 

80.அறிவியல் நோக்கில் திருமந்திரம் – ஆராய்ச்சிக் கட்டுரைகள் (Two Parts)

81.தமிழ் – அவஸ்தன்– சம்ஸ்க்ருத- கிரேக்க

மொழி ஆராய்ச்சிக் கட்டுரைகள்     

82.தமிழ் வளர்த்த ஆண்டாளும் வள்ளலாரும்!

(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)

83.அதிசயங்கள் நிறைந்த ஆஸ்திரேலியா

84.ஷேக்ஸ்பியர் நாடக வசனங்களும்

பழந் தமிழ் நூல்களும் – ஒரு ஒப்பீடு

85.பஸ், ரயில் பயணத்தில் படிக்க சுவையான துக்கடாக்கள்

86.கனவுகள், கல்வெட்டுகள் , தமிழ் பற்றிய  புதிய ஆராய்ச்சிக்  கட்டுரைகள்

87.விநாயகர் அகவலுக்கு புதிய ஆராய்ச்சி உரை

88.தமிழ், சம்ஸ்க்ருத மொழிகளை வளர்த்த

ஜெர்மானிய அறிஞர்கள்

89. நான்கு நாடுகளில் நான் சென்ற கோவில்கள் 

90. வெளிநாட்டுப் பழமொழிக் கதைகளும்

நம் நாட்டுக் கதைகளும்!

91. சம்ஸ்க்ருத மொழி உலகிற்கு அளித்த நன்கொடை

92.இந்துமதத்தில்  விஞ்ஞானம் புதிய  செய்திகள்

*******************

வேறு பதிப்பகம் மூலம் :-

1.வினவுங்கள் விடைதருவோம் ( பிபிசி தமிழோசையில் வெளியான எனது கேள்வி-பதில் தொகுப்பு)

2.இதழியல்

xxx

***** 

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

****

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—

TAGS- HINDU BELIEFS IN SHAKESPEREAN PLAYS, LONDON SWAMINATHAN, NEW ENGLISH BOOK.

ஞான சம்பந்தரின் அதிசய சொல்லாக்கம்! சந்து, இந்து, கந்து சேனன்; கனக, குணக, திவண நந்தி (Post.14,682)

Written by London Swaminathan

Post No. 14,682

Date uploaded in London –  24 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

முன்னொரு கட்டுரையில் பாடகம், சூடகம்,நாடகம், ஆடகம் பற்றி திருஞான சம்பந்தர் பாடியதைக் கண்டு ரசித்தோம் . மூன்று வயதிலிருந்து 16 வயதுக்குள் ஆயிரக் கணக்கான தெய்வீகப் பாடல்களை நமக்கு அளித்துவிட்டு இறைவனுடன் கலந்துவிட்டார்.

சேனன் என்று  முடியும் ஐந்து பேர்களையும் , நந்தி என்று  முடியும் ஐந்து பேர்களையும்  பாடலில் அழகாக அடுக்குகிறார் .

சமணர்கள் எலிப்பாட்டுகிளிப்பாட்டு இயற்றிய செய்திகளை நமக்குச் சொல்கிறார் !

சம்ஸ்க்ருத மொழியை சாகதம் என்றும் பிராகிருத மொழியை பாகதம் என்றும் தமிழ் மொழிப்படுத்துகிறார் ; தன்னை பால்மணம் மாறாத வாயுடைய பச்சிளம் பாலகன் என்கிறார்; சொக்கன் என்ற தமிழ்ப்பெயரை நமக்கு அளித்தவரும் சம்பந்தர்; மதுரையில் சொக்கர் என்ற பெயருடையவர்களைக் காணலாம். சுந்தர என்பதன் அருமையான மொழியாக்கம் இது. 

****

சோழநாட்டு இளவரசி மங்கையற்கரசி; அவள் பாண்டிய மன்னன் கூன் பாண்டியனுக்கு வாக்குப்பட்டாள். அப்போது கூன் பாண்டியன் அரசியலில் ஈடுபடும் எண்ணாயிரம் சமணர்களிடையே சிக்கிக் கொண்டார் . உடனே மங்கையற்கரசியார்  அமைச்சர் குலச்சிறையாருடன் சென்று சம்பந்தரை வேத நெறி தழைத்தோங்க  மிகுசைவத் துறைவிளங்கப் பாண்டிய நாட்டுக்கு எழுந்தருளவேண்டும் என்று பிரார்த்தித்தார். சம்பந்தரும் இசைவு தெரிவித்தார் ; அருகிலிருந்த அப்பர் பெருமான் நீரோ சிறுவன்; அரசியல் பேசும் சமணர்கள் பொல்லாதவர்கள் போகாதீரும் என்றார் ; சிவன் அடியார்களை நாளும் கோளுங்கூட தீங்கு செய்யாது என்று வேயுறு தோளிபங்கன் பதி கத்த்தைப்பாடி மதுரைக்குச் சென்றார் .

சமணர்கள் பாண்டிய மன்னனை எச்சரித்தார்கள்; எப்படி அந்தச் சின்னப்பையனைத் தடுப்பீர்கள்? என்று மன்னன்  கேட்டபோது அவர் தங்கியிருக்கும் மடத்துக்குத் தீவைப்போம் என்றனர் மன்னனும் சம்மதித்தான் ; சமணர்கள் இரவோடிரவாக மடத்துக்குத் தீ வைத்தனர் ; அப்பர் சொன்னது மெய்யாயிற்று! ஞான சம்பந்தரோ சுப்பிரமணியரின் அவதாரம். இந்தத் தீ பையவே சென்று பாண்டியர்க்காகவே என்று சொன்னவுடன் பாண்டியனை வெப்ப நோய் தாக்கியது பின்னர் பாண்டியனின் சுர நோயைத் தீர்த்து குள்ளனாக இருந்த குப்ஜ பாண்டியனை நின்ற சீர் நெடுமாறன் ஆக்கினார் ; அனல்வாதம், புனல்வாதம் ஆகியவற்றிலும் சமணர்கள் தோற்றனர் அவர்கள் சொன்ன வாக்கினை மீறாதபடி கழுவில் ஏறி இறந்தனர்.

*****

அதிசய பாடல்

அவர் மதுரைக்கு வந்த போது பாண்டிமாதேவி மங்கையற்கரசியாரையும் , பாண்டிய நாட்டு மந்திரி  குலச்சிறையாரையும் பாராட்டிப் பாடினார் ; இதில்தான், சுவையான விஷயம் உள்ளது!

Men Are from Mars, Women Are from Venus என்றும்

 Pink for Girls and Blue for Boys என்றும் ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.

Gendered associations with pink and blue became widespread after World War II, with pink hues assigned to girls, and blue hues assigned to boys. Since the 1950s, these gendered associations have increasingly been applied in the marketing of products, from clothes to toys.

இன்றும் மேலை நாடுகளில் பள்ளிக்கூட யூனிபார்ம்களில்/ சீருடைகளில் இதைக் காணலாம் . இதற்கெல்லாம் சம்பந்தரின் பாடல்தான் காரணம் போலும் !

சம்பந்தர் சொன்னார் ஒற்றைப்படை எண்கள் பெண்கள்இரட்டைப்படை எண்கள் ஆண்கள் என்று

Odd numbers are Women, Even Numbers are Men.

அவர் பாடிய, பதிக்கத்தில் மங்கயற்கசியாரைப் பாடியது எல்லாம் ஒற்றைப்படை எண்கள் !அமைச்சர் குலச்சிறையாரைப் பாடியது எல்லாம் இரட்டைப்படை எண்கள் ! யாராவது ஒரு புலவரைக் கூப்பிட்டு இப்படிப் பாடு என்றாலும் முடியாது; அதற்கு அவர் அவகாசம் கேட்பார்; சம்பந்தரோ மோதல் நடக்கப்போகும் TENSE டென்ஸ் ஆன  சூழ்நிலையில் சர்வசதாரணமாகப் பாடுகிறார் .இதை மங்கையற்கரசி வளவர்கோன் பாவை என்று  துவங்கும் மூன்றாம்-திருமுறை

திரு ஆலவாய்ப்பதிகத்தில் காணலாம்.

பாடல் முழுவதையும் கீழே கொடுத்துள்ளேன் .

எனது கருத்து

பெண்ணுக்கு ஏன்  சம்பந்தர் முதலிடம் கொடுத்தார் ? பெண்ணே உலகின் மூல சக்தி ; பராசக்தி. அவருடன் சிவன் சேரும் போதுதான் இயங்கும் சக்தி பிறக்கிறது ;சிவன் நடராஜனாக ஆட வேண்டுமானால் அவருக்கு சக்தி இருக்கவேண்டும்  ; அதனால்தான் சிவகாமி உடன் உறையும் சிவகாமிநாதனைக் காண்கிறோம். அதனால்தான் அங்கையற்கண்ணியுடன் உறையும் சுந்தரேசனைக் காண்கிறோம்.

மூன்றாம்-திருமுறை

1.மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை

  வரிவளைக் கைம்மட மானி

பங்கயச் செல்வி பாண்டிமா தேவி

  பணிசெய்து நாடொறும் பரவப்

பொங்கழ லுருவன் பூதநா யகனால்

  வேதமும் பொருள்களும் அருளி

அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த

  ஆலவா யாவதும் இதுவே.  

2.வெற்றவே யடியார் அடிமிசை வீழும்

  விருப்பினன் வெள்ளைநீ றணியுங்

கொற்றவன் றனக்கு மந்திரி யாய

  குலச்சிறை குலாவி நின்றேத்தும்

ஒற்றைவெள் விடையன் உம்பரார் தலைவன்

  உலகினில் இயற்கையை யொழிந்திட்

டற்றவர்க் கற்ற சிவனுறை கின்ற

  ஆலவா யாவதும் இதுவே.   

3.  செந்துவர் வாயாள் சேலன கண்ணாள்

  சிவன்திரு நீற்றினை வளர்க்கும்

பந்தணை விரலாள் பாண்டிமா தேவி

  பணிசெயப் பாரிடை நிலவுஞ்

சந்தமார் தரளம் பாம்புநீர் மத்தந்

  தண்ணெருக் கம்மலர் வன்னி

அந்திவான் மதிசேர் சடைமுடி யண்ணல்

  ஆலவா யாவதும் இதுவே.   

4  கணங்களாய் வரினுந் தமியராய் வரினும்

  அடியவர் தங்களைக் கண்டால்

குணங்கொடு பணியுங் குலச்சிறை குலாவுங்

  கோபுரஞ் சூழ்மணிக் கோயில்

மணங்கமழ் கொன்றை வாளரா மதியம்

  வன்னிவண் கூவிள மாலை

அணங்குவீற் றிருந்த சடைமுடி யண்ணல்

  ஆலவா யாவதும் இதுவே.   

5.  செய்யதா மரைமேல் அன்னமே யனைய

  சேயிழை திருநுதற் செல்வி

பையர வல்குற் பாண்டிமா தேவி

  நாடொறும் பணிந்தினி தேத்த

வெய்யவேற் சூலம் பாசம்அங் குசமான்

  விரிகதிர் மழுவுடன் தரித்த

ஐயனார் உமையோ டின்புறு கின்ற

  ஆலவா யாவதும் இதுவே.   

6  நலமில ராக நலமதுண் டாக

  நாடவர் நாடறி கின்ற

குலமில ராகக் குலமதுண் டாகத்

  தவம்பணி குலச்சிறை பரவுங்

கலைமலி கரத்தன் மூவிலை வேலன்

  கரியுரி மூடிய கண்டன்

அலைமலி புனல்சேர் சடைமுடி யண்ணல்

  ஆலவா யாவதும் இதுவே.  

7.  முத்தின்தாழ் வடமுஞ் சந்தனக் குழம்பும்

  நீறுந்தன் மார்பினின் முயங்கப்

பத்தியார் கின்ற பாண்டிமா தேவி

  பாங்கொடு பணிசெய நின்ற

சுத்தமார் பளிங்கின் பெருமலை யுடனே

  சுடர்மர கதமடுத் தாற்போல்

அத்தனார் உமையோ டின்புறு கின்ற

  ஆலவா யாவதும் இதுவே.   

8  நாவணங் கியல்பாம் அஞ்செழுத் தோதி

  நல்லராய் நல்லியல் பாகுங்

கோவணம் பூதி சாதனங் கண்டால்

  தொழுதெழு குலச்சிறை போற்ற

ஏவணங் கியல்பாம் இராவணன் திண்டோ ள்

  இருபதும் நெரிதர வூன்றி

ஆவணங் கொண்ட சடைமுடி யண்ணல்

  ஆலவா யாவதும் இதுவே.   

9  மண்ணெலாம் நிகழ மன்னனாய் மன்னும்

  மணிமுடிச் சோழன்றன் மகளாம்

பண்ணினேர் மொழியாள் பாண்டிமா தேவி

  பாங்கினாற் பணிசெய்து பரவ

விண்ணுளார் இருவர் கீழொடு மேலும்

  அளப்பரி தாம்வகை நின்ற

அண்ணலார் உமையோ டின்புறு கின்ற

  ஆலவா யாவதும் இதுவே.  

10.  தொண்டரா யுள்ளார் திசைதிசை தோறுந்

  தொழுதுதன் குணத்தினைக் குலாவக்

கண்டுநா டோ றும் இன்புறு கின்ற

  குலச்சிறை கருதிநின் றேத்தக்

குண்டரா யுள்ளார் சாக்கியர் தங்கள்

  குறியின்கண் நெறியிடை வாரா

அண்டநா யகன்றான் அமர்ந்து வீற்றிருந்த

  ஆலவா யாவதும் இதுவே.  

11.  பன்னலம் புணரும் பாண்டிமா தேவி

  குலச்சிறை யெனுமிவர் பணியும்

அந்நலம் பெறுசீர் ஆலவா யீசன்

  திருவடி யாங்கவை போற்றிக்

கன்னலம் பெரிய காழியுள் ஞான

  சம்பந்தன் செந்தமி ழிவைகொண்

டின்னலம் பாட வல்லவர் இமையோர்

  ஏத்தவீற் றிருப்பவர் இனிதே.

******

மானின்நேர்விழி மாதராய்வழுதி என்ற மூன்றாம் திருமுறைப் பதிகத்தில் ஒரு தாயின் உள்ளத்தைக் காண முடிகிறது ; எனதருமைக் கணவரே, பாண்டிய மன்னரே! உங்கள் சுர நோயைத்   தீர்ப்பதற்கு ஒரு பாலகன், சின்னப்பையன் வந்திருக்கிறான்  ; அவனுடன் எட்டாயிரம் சமணர்களை மோதவிடுவது என்ன நியாயம்? அவனோ இளம் வயதுக் குழந்தை; சமணர்களோ திட காத்திரம் உள்ளவர்கள் ; இப்படி மன்னனிடம் பாண்டிமாதேவி மன்றாடியவுடன், தாயே கவலைப்படாதீர்கள் நான் அவர்களை சமாளிக்கிறேன் என்று சம்பந்தர் ஆறுதல் கூறுகிறார் இப்படித் தாயுள்ளம் படைத்த ஒரு பெண்மணி என்பதால்தான் அவருக்கு முந்தைய பதிகத்திலும் முதலிடம் கொடுத்தார்.

சமணர்களின் பத்து பெயர்களைச் சொல்லி சம்பந்தர் கிண்டல் செய்கிறார் ; இவை எதுகை மோனைக்காக சொல்லப்பட்ட பெயர்கள் இல்லை ; உண்மையான பெயர்கள் ; மருள் நீக்கியாராகப் பிறந்த அப்பர் என்னும் திருநாவுக்கரசர், சமண மதத்தில் சேர்ந்த பின்னர் ஏற்ற பெயர் தருமசேனர் ; அதே போல மதுரையில் திராவிட சங்கம் என்ற பெயரில் சமணர்களுக்கு ஒரு சங்கம் அமைத்தவர் பெயர் வஜ்ர நந்தி ; பவணந்தி என்பவர் நன்னூலை எழுதியதையும் நாம் அறிவோம். ஆகவே சேனன், நந்தி என்ற பெயர்களை சம்பந்தர் சொல்லுவது உண்மைப் பெயர்களே ; கல்வெட்டுகளிலும் இவைகளைக் காண்கிறோம்.

*****

இதோ தேவாரப் பாடல்கள் ; முக்கியப் பெயர்களை பெரிய எழுத்தில் காட்டியுள்ளேன்.

மானின்நேர்விழி மாதராய்வழு

  திக்குமாபெருந் தேவிகேள்

பானல்வாயொரு பாலனீங்கிவன்

  என்றுநீபரி வெய்திடேல்

ஆனைமாமலை ஆதியாய

  இடங்களிற்பல அல்லல்சேர்

ஈனர்கட்கெளி யேனலேன்திரு

  ஆலவாயரன் நிற்கவே.  1 

ஆகமத்தொடு மந்திரங்க

  ளமைந்தசங்கத பங்கமாப்

பாகதத்தொ டிரைத்துரைத்த

  சனங்கள்வெட்குறு பக்கமா

மாகதக்கரி போல்திரிந்து

  புரிந்துநின்றுணும் மாசுசேர்

ஆகதர்க்கெளி யேனலேன்திரு

  ஆலவாயரன் நிற்கவே.  2 

அத்தகுபொருள் உண்டுமில்லையு

  மென்றுநின்றவர்க் கச்சமா

ஒத்தொவ்வாமை மொழிந்துவாதில்

  அழிந்தெழுந்த கவிப்பெயர்ச்

சத்திரத்தின் மடிந்தொடிந்து

  சனங்கள்வெட்குற நக்கமே

சித்திரர்க்கெளி யேனலேன்திரு

  ஆலவாயரன் நிற்கவே.  3 

சந்துசேனனும் இந்துசேனனுந்

  தருமசேனனுங் கருமைசேர்

கந்துசேனனுங் கனகசேனனும்

  முதலதாகிய பெயர்கொளா

மந்திபோல்திரிந் தாரியத்தொடு

  செந்தமிழ்ப்பயன் அறிகிலா

அந்தகர்க்கெளி யேனலேன்திரு

  ஆலவாயரன் நிற்கவே.  4 

மந்திபோல்திரிந் தாரியத்தொடு

  செந்தமிழ்ப்பயன்  அறியாதார் என்று சமணர்களை சமபந்தர் சாடுவதிலிருந்து அவர்கள் தமிழும்  பேசவில்லை; சம்ஸ்கிருதமும் தெரியாது ; அவர்கள் பேசியது கொச்சையான பாகதம்/ பிராகிருதம் என்று தெரிகிறது

கூட்டினார்கிளி யின்விருத்தம்

  உரைத்ததோரொலி யின்தொழிற்

பாட்டுமெய்சொலிப் பக்கமேசெலும்

  எக்கர்தங்களைப் பல்லறங்

காட்டியேவரு மாடெலாங்கவர்

  கையரைக்கசி வொன்றிலாச்

சேட்டைகட்கெளி யேனலேன்திரு

  ஆலவாயரன் நிற்கவே.  5 

கனகநந்தியும் புட்பநந்தியும்

  பவணநந்தியுங் குமணமா

சுனகநந்தியுங் குனகநந்தியுந்

  திவணநந்தியும் மொழிகொளா

அனகநந்தியர் மதுவொழிந்தவ

  மேதவம்புரி வோமெனுஞ்

சினகருக்கெளி யேனலேன்திரு

  ஆலவாயரன் நிற்கவே.  6 

பந்தணம்மவை யொன்றிலம்பரி

  வொன்றிலம்மென வாசக

மந்தணம்பல பேசிமாசறு

  சீர்மையின்றிய நாயமே

அந்தணம்மரு கந்தணம்மதி

  புத்தணம்மது சித்தணச்

சிந்தணர்க்கெளி யேனலேன்திரு

  ஆலவாயரன் நிற்கவே.  7 

மேலெனக்கெதி ரில்லையென்ற

  அரக்கனார்மிகை செற்றதீப்

போலியைப்பணி யக்கிலாதொரு

  பொய்த்தவங்கொடு குண்டிகை

பீலிகைக்கொடு பாயிடுக்கி

  நடுக்கியேபிறர் பின்செலுஞ்

சீலிகட்கெளி யேனலேன்திரு

  ஆலவாயரன் நிற்கவே.  8 

பூமகற்கும் அரிக்குமோர்வரு

  புண்ணியன்னடி போற்றிலார்

சாமவத்தையி னார்கள்போல்தலை

  யைப்பறித்தொரு பொய்த்தவம்

வேமவத்தைசெ லுத்திமெய்ப்பொடி

  யட்டிவாய்சக திக்குநேர்

ஆமவர்க்கெளி யேனலேன்திரு

  ஆலவாயரன் நிற்கவே.  9 

தங்களுக்குமச் சாக்கியர்க்குந்

  தரிப்பொணாதநற் சேவடி

எங்கள்நாயகன் ஏத்தொழிந்திடுக்

  கேமடுத்தொரு பொய்த்தவம்

பொங்குநூல்வழி யன்றியேபுல

  வோர்களைப்பழிக் கும்பொலா

அங்கதர்க்கெளி யேனலேன்திரு

  ஆலவாயரன் நிற்கவே.  10 

எக்கராம்அமண் கையருக்கெளி

  யேனலேன்திரு ஆலவாய்ச்

சொக்கனென்னு ளிருக்கவேதுளங்

  கும்முடித்தென்னன் முன்னிவை

தக்கசீர்ப்புக லிக்குமன்தமிழ்

  நாதன்ஞானசம் பந்தன்வாய்

ஒக்கவேயுரை செய்தபத்தும்

  உரைப்பவர்க்கிடர் இல்லையே.

–சுபம்—

TAGS– ஞான சம்பந்தர் , அதிசய சொல்லாக்கம்,  சந்து, இந்து, கந்து சேனன், கனக, குணக, திவண நந்தி, ஒற்றைப்படை எண்கள், இரட்டைப்படை எண்கள், ஆண்கள், பெண்கள், சமணர்கள், ஆலவாய்ப் பதிகம் , மூன்றாம் திருமுறை

இந்தியாவின் ஊழல் மிக்க, மிக மோசமான பாதுகாப்பு மந்திரி யார்? (Post No.14,681)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,681

Date uploaded in London – –24 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

இந்தியாவின் ஊழல் மிக்க, மிக மோசமான பாதுகாப்பு மந்திரி யார் 

ச. நாகராஜன் 

இணையதளத்தில் அக்கு வேறு ஆணி வேறாக ஒவ்வொருவரைப் பற்றியும் ஆதாரத்துடன் அலசி ஆராய்கிறார்கள்.

இந்தியாவின் ஊழல் நிறைந்த மிக மோசமான பாதுகாப்பு மந்திரி யார்? என்பது பற்றிய ஆராய்ச்சியும் இவற்றில் ஒன்று.

அது யார் என்று தெரிந்து கொள்ள ஆவலா?

இதோ பதில்:

பாகிஸ்தான் 1965ல் இந்தியாவைத் தாக்கியது.

இதற்கு முன்னதாக சீனா  1962ம் ஆண்டு இந்தியாவைத் தாக்கியது ஆக்கிரமித்தது.

இந்தியா 72000 சதுரகிலோமீட்டர் பரப்பை இழந்தது.  அப்போது பாதுகாப்பு மந்திரியாக இருந்தவர் வி.கே.கிருஷ்ணமேனன்.  அவர் இந்தியாவில் அதிகம் இருக்க விரும்பியதே இல்லை.  பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்வதிலேயே அவர் விருப்பம் கொண்டிருந்தார்.  அவர் இந்தியாவை ஒருபோதும் நேசித்ததில்லை.

1960-61ல் அவர் பாராளுமன்றத்தில், “பாகிஸ்தான் இப்போது நமது நண்பன்” என்று ஒரு அறிக்கையை அளித்தார்.

1948ல் பாகிஸ்தானுடன் நாம் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டிருந்தோம்.  பாகிஸ்தானும் நாங்கள் ஒரு போதும் இந்தியாவைத் தாக்க மாட்டோம் என்று  கூறியிருந்தது. 

“நமக்கு எதிரியே இல்லை. ஆகவே ராணுவம் எதற்காக நாம் ராணுவத்தை நீக்கி விடலாம்” என்றார் அவர்.

ஒரு அவசரகால நிலை ஏற்பட்டால் ராணுவம் இல்லாமல் என்ன செய்வது என்று ஒருவர் கேட்டார்.

அப்போது அவர் பதில் கூறினார் :- நம்மிடம் காவல்துறை இருக்கிறது. அதை வைத்து சமாளித்து விடலாம்.

ஒரு நாள் காபினெட் கூட்டத்தில் நமக்கு ராணுவம் தேவை இல்லை என்பதால் பாதுகாப்பிற்கான பட்ஜெட் தொகையைக் குறைத்து விடலாம் என்றார் அவர். ஆகவே பட்ஜெட் தொகை குறைக்கப்பட்டது. அவர் ஆயுதத் தயாரிப்பையும் கூட குறைக்க உத்தரவிட்டார்.

தளவாடங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை மூடி விட்டு டீ, காப்பி தயாரிக்கும் தொழிற்சாலைகளை ஆரம்பித்தார்.

அந்தச் சமயம் சீனா இந்தியா மீது படையெடுக்கத் திட்டமிட்டது. நமது ராணுவத் துருப்புகள் எல்லையிலிருந்து திரும்பப் பெறப்பட்டதையும் நமது பட்ஜெட் தொகை குறைக்கப்பட்டதையும் சீனா நன்கு அறிந்திருந்தது.

ஆகவே நமது வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள இப்போது அருணாச்சல பிரதேசம் என்று அறியப்படும் நேஃபா பகுதியை அது தாக்கியது.

எல்லையில் யாரும் இல்லை என்பதால் சீனாவைத் தடுக்க யாரும் இல்லை!

இந்தியப் பெண்களிடம் மிக மிக மோசமான முறையில் சீன ராணுவம் நடந்து கொண்டது.

பலரைக் கற்பழித்தது. ஏராளமானோரைக் கொன்றது.

அங்குள்ளவர்களிடம் போரிட எந்த விதமான ஆயுதமும் இல்லை.  ஆகவே அவர்களால் தற்காத்துக் கொள்ள முடியவில்லை.  பொதுமக்களைக் காக்க ராணுவமே இல்லாததால் பொதுமக்கள் அனைவரும் இந்திய அரசை வெறுக்கத் தொடங்கினர். இந்த வெறுப்பு புரட்சியாக மாறியது.  இன்றும் கூட அவர்கள், ‘1962ம் ஆண்டு 

சீனா எங்களைக் கற்பழித்த போதும் கொன்று குவித்த போதும் உங்கள் இந்திய ராணுவம் எங்கே இருந்தது? என்று கேட்கின்றனர். இதன் விளைவாக போடோலேண்ட் என்று தங்களுக்கு தனிப் பகுதி வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தனர் அவர்கள். சீன ஆக்கிரமிப்பால் தான் அவர்கள் இந்திய அரசின் மீது நம்பிக்கையை இழந்தனர்.

72000 சதுர கிலோமீட்டர் பரப்பை நாம் இழந்ததோடு புனிதமான கைலாஸ் மானசரோவரையும் இழந்து விட்டோம்.

இன்று கைலாஷ் பகுதிக்குச் செல்ல சீனாவிடமிருந்து விசா வாங்க வேண்டிய நிலைக்கு வந்து விட்டோம்.

ஆகவே மேற்கூறிய காரணங்களால் இந்தியாவின் மிக மோசமான பாதுகாப்பு மந்திரி வி.கே.கிருஷ்ணமேனன் தான் என்பது எனது அபிப்ராயம்.

இப்படி இதைக் கூறியவர் ஶ்ரீ ராஜீவ் தீக்ஷித் ஆவார்.

ஆதாரம், நன்றி : ட்ரூத் வார இதழ்

TRUTH Weekly from Kolkata -Volume 93 -Issue no 7 Dated 30-5-2025

**

BEST CARTOONS COME FROM DECCAN CHRONICLE 24 JUNE 2025

POSTED BY LONDON SWAMINATHAN.

BEST CARTOONS COME FROM DECCAN CHRONICLE 24 JUNE 2025

–SUBHAM—

CARTOONS, DC NEWSPAPER, 24-6-2025

Pictures of 2500 Indian Stamps!- Part 60 (Post No.14,680)

Written by London Swaminathan

Post No. 14,680

Date uploaded in London –  23 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART 60

Stamps posted today include YEAR 2000, YEAR 2001, STAMPS,

Pictures of 2500 Indian Stamps,

MINT (NOT USED)  STAMPS;

DHIRUBHAI AMBANI, KOTTAKKAL ARYAVAIDHYASALA, SHIMLA- KALKA RAILWAY, GOLKONDA FORT, 

INDIAN SNAKES, PYTHON, KING COBRA, BAMBOO PIT WIPER, GLIDING SNAKE, SANGITA NATAKA ACADEMY, THAKAZI SANKARAN PILLI, POTEEKATT, SANKRA KURUP, MURMU BROTHERS, CHANDRAPRABHA SAIKIYANI, KANIKA BANDOBHADHYAI, NIJALINGAPPA,   SWAMI PRANAVANANDA,  SUNDARANAND, GREETING STAMPS, FILM DIRECTORS, CHILDREN S DAY, PARLIAMENT, , ACHARYA RISHIJI,ROOSTER MOTIF, PEACOCK MOTIF, SANGEET NATAK AKADEMY, KUSUMAGRAJ, COTTON COLLEGE, ANAND RISHIJI MAHARAJ, P L DESHPANDE, ANNA BHAU SATHE, SREE THAKUR SATYANANDA, SANTIDEV GHOSE, AYYAN KALI, NAGPUR TRICENTENARY, TIRUMALA ANAND VIMANA ,SWAMI SWAROOPANANDJI

–subham—

Tags– 
Stamps posted today include YEAR 2000, YEAR 2001 STAMPS,

Pictures of 2500 Indian Stamps, PART 60 ,mint,

LONDON SWAMINATHAN’S LATEST TAMIL BOOK


முன்னுரை

தமிழ் ஒரு கடல் என்றால் சம்ஸ்க்ருதம் ஒரு சமுத்திரம். அந்த மொழியிலுள்ள நூல்கள் எல்லாவற்றையும் எவரும் பட்டியல் இட முடியாது . காரணம்  என்னவெனில் அழிந்த நூல்கள் ஏராளம்; ஆனால் அவற்றிலுள்ள ஓரிரு விஷயங்கள் மட்டும் மேற்கோள் காட்டப்படுகிறது . சமயம், மருத்துவம், ஜோதிடம் வானியல், பாலியல், சிற்ப சாஸ்திரம், அறிவியல் , இலக்கியம், இலக்கணம், சங்கீதம் , நடனம், நாடகங்கள், கவிதைகள், கதைகள் , நியாயங்கள், சுபாஷிதங்கள் என்று ஒவ்வொரு துறையிலும் எண்ணற்ற நூல்கள் உள்ளன. இவை எல்லாவற்றையும் எவராலும் படித்திட முடியாது;

ராமாயணத்தைப் படிப்பது போல மகாபாரதத்தின் ஒரு லட்சம் ஸ்லோகங்களையும் சம்ஸ்க்ருதத்தில் முழுதும் படித்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் .

என்ன, என்ன அந்த மொழியில் இருக்கிறேது என்று தெரிந்துகொண்டால் இயன்ற அளவு மொழிபெயர்ப்பிலாவது படிக்கலாம். ஒரே மொழியைத் தெரிந்து கொண்டு கிணற்றுத் தவளை போல ஒலி எழுப்புவது நகைப்புக்கு இடம் கொடுக்கும்.

இந்த நூலில், முக்கிய புத்தகங்களின் ஒரு (SAMPLE) மாதிரி மட்டும்தான் கொடுக்கப்பட்டுள்ளது ஆர்வம் உடையோர் புத்தகங்களை வாங்கிப்படிக்கலாம்.

அன்புடன்

லண்டன் சுவாமிநாதன்

ஜூன் 2025

Swami_48 @ yahoo.com

பொருளடக்கம்

1.பிள்ளையாரை முதலில் வணங்குவது ஏன்?

2.காளிதாசனின் வியப்பூட்டும் உவமைப் பட்டியல்!

3.சம்ஸ்க்ருத மொழி உலகிற்கு அளித்த நன்கொடை! ஒரு சின்ன ‘சர்வே’தான்!-1

4.சம்ஸ்க்ருத மொழி உலகிற்கு அளித்த நன்கொடை! ஒரு சின்ன ‘சர்வே’தான்!-2

5.சம்ஸ்க்ருத மழை பொழிந்த அறுபது கவிஞர்கள் – Part 1 to Part 7

6.ரிக் வேதத்தை முதலில் மொழிபெயர்த்தவர் யார்?

7.விவேகானந்தர் உரைகளை நமக்குத் தந்த ஜே. ஜே. குட்வின்!

8 .தொல்காப்பியத்தில் துர்கா தேவி: –தெ.பொ.மீ. தகவல்

9.ஆதிசங்கரரை காப்பி அடித்த கபிலரும் தொல்காப்பியரும்!

10.ராம ரத்தினத்தின் விலை என்ன ?

11.ஜேம்ஸ் பாண்ட் (007) -ஐ தோற்கடித்த ஹிந்து!

12.ஷேக்ஸ்பியர் மீது தாகூர் எழுதிய கவிதை!

13.நள்ளிரவில் நான் எழுதிய கவிதை

14..தமிழில் பழ மறையைப் பாடுவோம்: –பாரதியார்

*************

அட்டைப்படத்தில் காளிதாசனின் நூல்களிலிலுள்ள  ஸ்லோகங்களுடன் வெளியான தபால்தலைகளைக் காணலாம்.

*****

ABOUT THE BOOK AND THE AUTHOR

Title – சம்ஸ்க்ருத மொழி உலகிற்கு அளித்த நன்கொடை

Author – London Swaminathan (Santanam Swaminathan)

Language- Tamil

Published  – June 2025

Subject – Literature and Culture

xxx

AUTHOR’S PROFILE

Santanam swaminathan (London swaminathan)

Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)

Higher Diploma in French and Sanskrit

DOB  6-11-1948

Work Experience- Now retired.

Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,

BBC Tamil Producer in London 1987-1991,

Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,

Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.

Living with his wife and two sons in London from 1987.

xxx

Blog Details

tamilandvedas.com

swamiindology.blogspot.com

xxx

Contact Details

swami_48@yahoo.com

swaminathan.santanam@gmail.com

Mobile Number in London

07951 370 697

Published Works

Over 9500 articles in English and Tamil and over 145 Tamil and English Books.

Visited 16 Countries

India, Sri Lanka, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Malaysia, Singapore, Italy and Greece

*****

 Ref. 148  Books written by London Swaminathan in Tamil and English.

ENGLISH BOOKS WRITTEN BY LONDON SWAMINATHAN

(1) Is Brahmastra a Nuclear Weapon?

(2). AMAZING TIME TRAVEL by HINDU SAINTS

(3).Famous Trees of India

(4).DID INDIANS BUILD EGYPTIAN PYRAMIDS?

(5).ALL ABOUT DRAVIDAS, TAMIL SANGAMS,

KUMARIK KANDAM AND TOLKAPPIAM

(6).STORY OF TAMIL DEVADASIS AND ORIGIN OF DANCE DRAMA IN VEDAS

(7). Interesting  Anecdotes from the World of Music

(8).KALIDASA’S SIMILES IN SANGAM TAMIL LITERATURE: NEW CLUE TO FIX HIS AGE

(9).BIRDS AND GODS- OMENS, VAHANAS AND STRANGE STORIES FROM HINDU SCRIPTURES

(10).Animal Einsteins:  Amazing Intelligence of Creatures in Nature

(11) THE WONDER THAT IS HINDU TEMPLE

(12). KALKI AVATAR SOON! KALI YUGA FINITO!

(13). Date of Mahabharata War & other Research Articles

(14). Miracles of Hindu, Parsi, Jain & Buddhist Saints

(15). HINDU STORIES ABOUT MONKEYS,

DONKEYS AND ELEPHANTS

16.VALLUVAR, EINSTEIN AND SHAKESPEARE

17. Mayan Civilization and Hindu Nagas

Asuras, Rishis and Gandharvas

18.Hindu Wonders in Muslim Countries

19.Hindu Influence in Mesopotamia and Iran

20. Hinduism in Sangam Tamil Literature

21.Interesting Titbits from Bhagavad Gita

22.Om in Rome; Manu Smriti in London Church

 23.Tamil Hindus 2000 Years Ago!  

24.Rewrite Indian History

25. Beautiful Hindu Women and

Wonderful Weddings

26.Woman is an Adjective, Man is a Noun2

27.Amazing and Unknown Names of Hindu Gods,

Himalaya, Water and Sea!

28. 1000 Hindu Quotations for Speakers and Students

29. History is a Mystery in India

30.Thousand More Hindu Quotations for Speakers and Students

31. Controversial and interesting Laws in Manu Smriti

(First Part)

32. Controversial and interesting Laws in Manu Smriti

(Second Part)

33. Linguistic and Language Wonders in India- Old Theories Binned

34. Interesting Anecdotes for Partygoers  and Essay Writers

35.More Interesting Anecdotes for Partygoers

36.Third Book of Anecdotes for Students and Speakers

37. Brahmins in Tamil and Sanskrit Literature

38.Gandhiji’s Views on Controversial Matters

39.Guide to Hindu Homa (Havan) and Festivals

40.Guide to 108 Famous Temples in Maharashtra

41.Tamil Hindu Encyclopaedia

42.Strange Stories about Hindu Saints Temples and

 Historical Atrocities

43. Nagarjuna’s Sex Tips from China and Hinduism in Burma & Thailand 

44.Medical Wonders in Hindu Scriptures

45.Hidden Secrets in Vishnu Sahasranama

46.My Research Notes on Viveka Chudamani

47.Greatest Tamil Book Tirukkural & Oldest Language Sanskrit

48.Country of Kangaroos and Koalas! Amazing Australia!! 

49. Dreams in Hindu Literature 

50.History: A Bundle of Facts and Fabrications

51.Tamil and Sanskrit Proverbs around the World

52.Hindu Beliefs in Shakesperean Plays

****

TAMIL BOOKS WRITTEN BY LONDON SWAMINATHAN

லண்டன் சுவாமிநாதன் எழுதி வெளியிட்ட நூல்கள்:

1.உலகம் முழுதும் பாம்பு வழிபாடு!

2.தாய்லாந்து, வியட்நாம், கம்போடியாவில் தமிழ் முழக்கம்

3.தேனினும் இனிய கம்பராமாயணப் பாடல்கள்

4.பெண்கள் வாழ்க –

5.சுமேரியர்- இந்தியர் தொடர்பு

6.இந்து மத நூல்களில் வெளி உலக வாசிகளும், காலப்பயணமும்

7.தமிழர்கள் மரங்களை வழிபடுவது ஏன் ?

 8.பிரம்மாஸ்திரம் ஒரு அணு ஆயுதமா?

9.தமிழ் மொழி அதிசய மொழியே? இதோ சான்றுகள்!

10.திருப்பதி பாலாஜி தமிழ்க் கடவுள் முருகன்! அருணகிரிநாதர் போடும் புதிர்!!

11.திருவாசகத் தேன் ! திருமந்திர ஜுஸ் !!

12. தொல்காப்பியர் முதல் பாரதி வரை

பெரியோர்களுடன் ஒரு நிமிடப் பேட்டி

13.எலும்பு வலுப்பட கால்சியம்; குழந்தை பிறக்க செலீனியம் ; பல் பளபளக்க ப்ளூரைட்

14.ஆழ்வார்கள் சொல்லும் அதிசயச் செய்திகள்

15.வெள்ளி, அலுமினியம், யுரேனியம் பற்றிய சுவையான கதைகள்

16.கிரேக்க மொழியில் தமிழ் சொற்கள்!

கிரேக்க நாட்டில் இந்துமத  சடங்குகள், கதைகள்!!

17.சிங்கப்பூரில் சிவபெருமான் !

சிந்து சமவெளியில் சிவலிங்கம் !!

18.திராவிடர்கள் யார்? குமரிக் கண்டமும் 3 தமிழ்ச் சங்கங்களும் உண்மையா?

19.தொல்காப்பிய அதிசயங்கள்

20.கம்பராமாயணத்தில் எதிர்பார்க்காத விஷயங்கள்

21.ரிக் வேதத்தில் தமிழ்ச் சொற்களும் அதிசயச் செய்திகளும்

22.எகிப்திய நாகரீகத்தில் இந்தியர் பங்களிப்பு

23..சுமேரியாவில் தமிழ் யாழ்! ஜப்பானில் சாம வேத இசை!!

24.மனைவி ஒரு மருந்து

25.தமிழ் ஒரு கடல்! முத்துக் குளிப்போம் வாருங்கள்!

26.சங்கத் தமிழ் நூல்களில் காளிதாசன் உவமைகள்

27.தமிழ்நாட்டை உலுக்கிய பேய்

28.பறவைகள் சகுனம் உண்மையா?

கடவுளுக்கு  வாகனம் எதற்காக?

29.கணவர் மேல் 44 காதல் கவிதைகள்!  இறந்த பின்னர்

பெட்டிக்குள் 2000 கவிதைகள் !!

30.கடவுளை மறுத்த இங்கர்சால்! இந்துமத ஆதரவு

யேட்ஸ் , ரொமைன் ரோலண்ட், வால்ட் விட்மன்!

31.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே

32.தமிழ், சம்ஸ்க்ருத கல்வெட்டுகள்

தரும் சுவையான செய்திகள்

33.மொழியியல் ஆய்வில் விஷமங்கள், விசித்திரங்கள், விநோதங்கள்

34.முப்பது கட்டுரைகளில் இந்துமத அதிசயங்கள்

35.ரிக்வேதத்தில் மேல் நாட்டினரை

திகைக்கவைக்கும் கவிதைகள் !

 36.முக்கிய கோவில்கள், சமாதிகளை

தரிசிக்க உதவும் கையேடு

37. தீயோரை அழிக்க கல்கி வருகிறார்!

38.சுவையான  யானை  பூனை கதைகள்,

உண்மைச் சம்பவங்கள்

39.மகாவம்ச நூலில் தமிழர்கள் பற்றி வியப்பூட்டும் செய்திகள்

40.ஐன்ஸ்டீன் , ஹிட்லர்,  சாணக்கியன் சொன்ன கதைகள்

41. மஹாபாரதப் போர் நடந்ததா?

42.தமிழ் மன்னர்கள் செய்த யாக, யக்ஞங்கள்

43.அற்புத மூலிகைகள் பற்றி

வேதம் தரும் செய்திகள் (title)

44.தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியத்தில்

பெண்கள்

45. பகவத் கீதையில் அதிசயச் செய்திகள்

46. பரத நாட்டியக் கதைகளும்

பழமொழிக் கதைகளும் (title)

47.அதர்வண வேத பூமி சூக்தம்   

சொல்லும் வியப்பான செய்திகள்

48.வரலாற்றில் சில புதிர்கள்

தாஜ்மஹால் இந்துக் கோவிலா ?

ஏசு கிறிஸ்து  இந்தியா வந்தாரா?

49.லண்டன் பார்க்க வாறீங்களா !

சிட்னி பார்க்க வாறீங்களா? 

50.ராதே உனக்கு கோபம் ஆகாதடி

(கட்டுரைத் தொகுப்பு)

51. தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில்

அரிய அறிவியல் செய்திகள்

52.‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’

                     (கட்டுரைத் தொகுப்பு)

53.உபநிடதத் தென்றலும் வேத மழையும் 

54.புராணங்கள் புளுகு மூட்டைகளா?       

                  (கட்டுரைத் தொகுப்பு)

55. ஆயிரம் இந்துமதப் பொன்மொழிகள்

56.அக நானூறு , புற நானூறு ,காதா எழுநூறு ,ராஜ தரங்கிணி

சொல்லும் அதிசயச் செய்திகள்

57.கட்டுரைக் கதம்பம்

(அக்னி – ஆசனம் – குரு –கங்கை நதி) book title

58. கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்

59.மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் (முதல் பாகம்)

60.மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் ( இரண்டாம் பாகம் )

61.சம்ஸ்க்ருதப் பொன்மொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும்

62.  தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்

63.தினமணி பத்திரிக்கை கதையும் என் கதையும்

64. தமிழ் — ஆங்கில மொழிகளில் ஹிந்து ‘க்விஸ்’

(Tamil- English Bilingual Hindu Quiz Book) book title

65.இந்திய நாகர்– தென் அமெரிக்க மாயா நாகரீக

அற்புத ஒற்றுமைகள்

66.மஹாராஷ்டிர மாநிலத்தின் 108 புனிதத் தலங்கள்

67.மத மாற்றம், இந்து மதம் பற்றி காந்திஜி  என்ன சொல்கிறார்? 

68. கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற கோவில்கள்

69.தமிழ், இந்து மதம் பற்றிய 60 தலைப்புகளில்

600 கேள்வி–பதில்கள் !!

70.கன்பூசியஸ், பர்மா பற்றிய அரிய தகவல்கள் !

(ஆயுர்வேதம் , ஆரூடம் , லண்டன் விழாக்களும் உள்ளன )

71.இந்து மத பண்டிகைகளில் மரம் ,செடி, கொடி வழிபாடு

72. கேரள மாநிலத்தின் 108 புகழ்பெற்ற  கோவில்கள்

73.இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் (Two Parts)

74.Second part

75. மேலும் அறுபது தலைப்புகளில் 600 கேள்வி–பதில்கள் !!

76. ஆந்திரம், தெலுங்கானாவில்

புகழ்பெற்ற கோவில்கள் – முதல் பாகம் (book title)

77. தமிழில் ஹனுமான் சாலீஸா விளக்க உரை

78. விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் விஞ்ஞான ரகசியங்கள்

79.அவ்வை ,பாரதி முதல் பாபா, மோடி வரை ! 38 ஆராய்ச்சிக் கட்டுரைகள் 

80.அறிவியல் நோக்கில் திருமந்திரம் – ஆராய்ச்சிக் கட்டுரைகள் (Two Parts)

81.தமிழ் – அவஸ்தன்– சம்ஸ்க்ருத- கிரேக்க

மொழி ஆராய்ச்சிக் கட்டுரைகள்     

82.தமிழ் வளர்த்த ஆண்டாளும் வள்ளலாரும்!

(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)

83.அதிசயங்கள் நிறைந்த ஆஸ்திரேலியா

84.ஷேக்ஸ்பியர் நாடக வசனங்களும்

பழந் தமிழ் நூல்களும் – ஒரு ஒப்பீடு

85.பஸ், ரயில் பயணத்தில் படிக்க சுவையான துக்கடாக்கள்

86.கனவுகள், கல்வெட்டுகள் , தமிழ் பற்றிய  புதிய ஆராய்ச்சிக்  கட்டுரைகள்

87.விநாயகர் அகவலுக்கு புதிய ஆராய்ச்சி உரை

88.தமிழ், சம்ஸ்க்ருத மொழிகளை வளர்த்த

ஜெர்மானிய அறிஞர்கள்

89. நான்கு நாடுகளில் நான் சென்ற கோவில்கள் 

90. வெளிநாட்டுப் பழமொழிக் கதைகளும்

நம் நாட்டுக் கதைகளும்!

91.சம்ஸ்க்ருத மொழி உலகிற்கு அளித்த நன்கொடை

92.இந்துமதத்தில்  விஞ்ஞானம் புதிய  செய்திகள்

*******************

வேறு பதிப்பகம் மூலம் :-

1.வினவுங்கள் விடைதருவோம் ( பிபிசி தமிழோசையில் வெளியான எனது கேள்வி-பதில் தொகுப்பு)

2.இதழியல்

xxx

***** 

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

****

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—

எழுச்சிமிக்க மதுரை இந்து மகாநாட்டில் பக்தர்கள் எடுத்த ஆறு முடிவுகள்

இந்து விரோதிகளுக்கும், தேச விரோதிகளுக்கும் ஓட்டு போடக்கூடாது : முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானம்!

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில்  6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1) திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்.

2) பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள்.

3) குன்றம் குமரனுக்கே சொந்தம் என முருகன் மலைகளை காக்க வேண்டும்.

4) தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து இந்த சமய அறநிலைத்துறை வெளியேற வேண்டும்.

5) தேர்தல்களில் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து, இந்து விரோதிகளுக்கும், தேச விரோதிகளுக்கும் ஓட்டு போடக்கூடாது.

6) சஷ்டி தினத்தன்று சஷ்டி கவசத்தை ஒன்று சேர்ந்து பாட வேண்டும்.

முருக பக்தர்கள் மாநாடு தமிழ்நாட்டில் ஆன்மிக புரட்சியை ஏற்படுத்தும் : காடேஸ்வரா சுப்பிரமணியம் திட்டவட்டம்!

முருக பக்தர்கள் மாநாட்டால் தமிழகத்தில் ஆன்மிக புரட்சி ஏற்படும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில்  பேசியவர்,

முருக பக்தர்கள் மாநாட்டால் தமிழகத்தில் ஆன்மிக புரட்சி ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்தவர், மாநாட்டிற்கு விளம்பரம் தேடித் தந்த சேகர்பாபு, திருமா, வைகோவிற்கு நன்றி கூறினார்.

பல்வேறு இடங்களில் மாநாட்டிற்கு வந்தவர்களை காவல்துறை தடுத்தனர் என்றும் முருகனின் ஆசியால் இந்த மாநாடு பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.

முருக பக்தர்கள் மாநாட்டில் கடல் அலையெனப் பக்தர்கள் திரண்டுள்ளனர் என்றும் அனைத்து கட்சியினரையும் சந்தித்து மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தோம் என காடேஸ்வரா சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.

ஸ்டாலினுக்கு அழைப்பிதழ் கொடுக்க நேரம் கேட்டும் நேரம் ஒதுக்கவில்லை என்று குறிப்பிட்டவர், முருக பக்தர்கள் மாநாடு தமிழ்நாட்டில் ஆன்மிக புரட்சியை ஏற்படுத்தும் என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் திட்டவட்டமாக கூறினார்.

நாங்கள் நடத்தும் மாநாட்டிற்கு கணக்குக் காட்ட தயார் என்றும் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வரும் பணம் எந்த தொழிலதிபர்களிடமிருந்து பெற்றது? என்றும்  அதில் எவ்வளவு ஊழல் நடந்தது என வெளியிட அமைச்சர் சேகர்பாபு தயாரா? என காடேஸ்வரா சுப்பிரமணியம் கேள்வி எழுப்பினார்.

*****

இந்துக்கள் வாழ்வியலுக்கு பிரச்சினை வந்தால் சூரசம்ஹாரம் நடக்கும் :  அண்ணாமலை எச்சரிக்கை

தொடர்ந்து இந்துக்கள் வாழ்வியலுக்குப் பிரச்சினை வந்தால் சூரசம்ஹாரம் நடக்கும் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முருக பக்தர்கள் மாநாட்டில்  பேசியவர்,

வெறும் இரண்டு விழுக்காடு இருக்கும் ஒரு நாடு போர் நடத்துகிறது என்றும் இந்தியாவில் ஆபரேஷன் நடத்தினால் சிலருக்குப் பிடிக்கவில்லை என அண்ணாமலை குறிப்பிட்டார். நாம் ஒற்றுமையை இருந்தால் சிலருக்குப் பிரச்சனை என்றும்  தொடர்ந்து நமது வாழ்வியலுக்குப் பிரச்சினை வருகிறது. என்றும்  என்னுடைய வாழ்வியல் முறைக்கும் பிரச்சினை வந்தால் நான் திருப்பி அடிப்பேன் என உறுதிபட கூறினார்.

இந்து மக்களிடம் எப்போதும் ஒற்றுமை வராது என்று அரசியல்வாதிகள் அரசியல் நடத்துகிறார்கள் என்றும் இவற்றை அனைத்தையும் மாற்றத் தான் இந்த மாநாடு என அண்ணாமலை  கூறினார்.

இந்த மாநாடு ஒரு எச்சரிக்கை மணி என்றும் இந்துக்கள் ஒற்றுமை இருக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்தார். ஆளும் ஆட்சியர்கள் முருகன் பக்தர்களை எந்த வீட்டில் வைத்துப் பார்க்க விரும்புகிறார்கள் என்றும் தொடர்ந்து இந்துக்கள் வாழ்வியலுக்குப் பிரச்சினை வந்தால் சூரசம்ஹாரம் நடக்கும் என  அண்ணாமலை எச்சரிக்கை விடுத்தார்.

*****

முருக பக்தர்கள் மாநாடு : பவன் கல்யாணுக்கு ஆதீனங்கள், மடாதிபதிகள் மாலை அணிவித்து ஆசீர்வாதம்!

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் மாலை அணிவித்து ஆசீர்வாதம் வழங்கினர்.

மதுரையில் இந்து முன்னணி சார்பில் சிறப்பாக நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில், ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பங்கேற்றார்.

பச்சை வேட்டி மற்றும் தோளில் பச்சைத் துண்டு அணிந்து, பாரம்பரிய தமிழ் அடையாளங்களோடு வருகை தந்த பவன் கல்யாணுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவருக்கு மாலை அணிவித்து ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் ஆசீர்வாதம் வழங்கினர். பின்னர், மண்டியிட்டு கீழே அமர்ந்து ஆதீனங்களைப் பவன் கல்யாண் வணங்கினார்.

*****

மதுரை அம்மா திடலில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

இந்து முன்னணி சார்பில் மதுரை அம்மா திடலில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

முருக பக்தர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் விதமாக மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் பிரம்மாண்ட மாநாடு நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அவர்கள் அறுபடை வீடுகளின் மாதிரிகளில் வழிபாடு நடத்தினர்.  மாநாட்டின் வெற்றியைப் பறைசாற்றும் வகையில் குவிந்த முருக பக்தர்கள் அரோகரா முழக்கத்தால் மாநாட்டுத் திடல் அதிர்ந்தது. பக்தர்களின் கூட்டத்தால் சித்திரைத் திருவிழாவை மிஞ்சிய மக்கள் வெள்ளமாக மாநாட்டுத் திடல் காட்சியளித்தது.

மாநாட்டில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, கே.டி.ராஜேந்திர பாலாஜி, பாஜக மூத்த தலைவர்கள், ஆதீனங்கள், மடாதிபதிகளும் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாநாட்டின் முதல் கலை நிகழ்ச்சியாகப் பம்பை நிகழ்ச்சி நடைபெற்றது.

மாநாட்டில் சிறுவன் சூரிய நாராயணன் தனது காந்தர்வ குரலால் முருகன் பாடலை பாடியதைப் பக்தர்கள் அனைவரும் மெய்மறந்து ரசித்தனர்.

தொடர்ந்து மாநாட்டு மேடையில், சிரவ ஆதின கர்த்தா ராமானந்த குமரகுருபர சுவாமிகள் உரையாற்றினார். அவருக்குத் திருச்செந்தூர் முருகன் கோயிலில் விசாகத்தன்று பூஜை செய்யப்பட்ட வேல் வழங்கப்பட்டது.

பின்னர் சிவன், பார்வதி வேடமிட்டு கலைஞர்கள் நடனமாடியதைப் பக்தர்கள் அனைவரும் கண்டு ரசித்தனர். மேலும் மாநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளும் களைக கட்டின.

*****

இந்து மதத்தை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை அவமதிக்காதீர்கள்: பவன் கல்யான்

ஒரு இந்து, இந்துவாக திகழ்ந்தால் மதவாதியாக கருதப்படுகிறார். இந்து மதத்தை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை அவமதிக்காதீர்கள். முருகர் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் வெவ்வேறு பெயர்களில் திகழ்கிறார்.  நிறத்தில் பேதம் இல்லை, அகத்தின் வழியே பார்க்கிறோம் கடவுள், கலாசாரம், பண்பாட்டை கேலி செய்தனர். சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்தது மதுரையில்தான். இப்படை தோற்கின் எப்படை வெல்லும், வெற்றியின் படிக்கட்டு அன்பு நாச சக்திகளை கிள்ளி எறிய வேண்டும். இந்துக்களை சீண்டிப் பார்க்க வேண்டாம் பேச்சு சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துகின்றனர். பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் இஷ்டத்துக்கு பேசுகின்றனர் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கூறினார்

ஹிந்து மதத்தின் நலன் பாதிக்கப்படும் போதெல்லாம், அதனைக் காக்க, தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது முன்னின்று போராடிய ஹிந்து முன்னணி தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் இணையற்ற உயிர்த்தியாகங்களை நினைவு கூறும் வாய்ப்பு கிடைத்தது பெருமை.

தமிழ்நாட்டில் பல வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்கள் உள்ளன. அவை நம் கோவில்களை மையமாகக் கொண்டதால் மட்டுமே காலத்தால் அழியாது நிற்கின்றன, அப்படிப்பட்ட நம் கோவில்களை, இன்று நடைபெறும் சுரண்டலில் இருந்து பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

இன்றைய முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு, முருகப் பெருமானின் அருள் பெறும் பாக்கியம் கிடைத்தது பெருமகிழ்ச்சி. ஆன்மீக பூமியான தமிழகத்தில், சனாதன தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இன்று கூடிய லட்சக்கணக்கான பொதுமக்களுக்கும், மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

*****

முருகன் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றம்

மதுரை, முருகன் மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன்படி, திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம் என முருகன் மலைகளை காக்க வேண்டும், திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

*****

கி.மீ தூரம் நடந்து செல்லும் மக்கள்

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் அம்மா திடலுக்கு முன்னர் உள்ள சாலை முழுதும் மக்கள் வெள்ளத்தால் குவிந்துள்ளது. பாண்டிகோவில் சந்திப்பு முதல் விரகனூர் சந்திப்பு வரை சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு மக்கள் நடந்து செல்கிறார்கள். மாநாட்டு திடலை சுற்றி அமைக்கப்பட்ட 20 க்கும் மேற்பட்ட வாகன நிறுத்தங்கள் நிரம்பின. 

இந்த மாநாட்டில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளின் மாதிரிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனைத் தரிசிப்பதற்காக முருக பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் குவிந்துள்ளனர்.

*****

மதுரை முருகர் மாநாட்டிற்கு காவல்துறை ஒத்துழைப்பு இல்லை – எல்.முருகன் 

மதுரை முருகர் மாநாட்டிற்கு காவல்துறை ஒத்துழைப்பு வழங்கவில்லை என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். உயர் நீதிமன்றம் அறிவுறுத்திய பிறகும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது கட்சி சார்ந்த மாநாடு அல்ல என்றும், அனைத்து தரப்பினரும் கட்சி பேதமின்றி பங்கேற்கும் ஆன்மீக மாநாடு என்றும் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.

*****

மாற்று மதத்தினர் தேவையற்ற சொற்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்: இயக்குனர் அமீருக்கு நடிகை கஸ்துாரி பதிலடி

மதுரை: ”மாற்று மதத்தினர் தேவையற்ற சொற்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” என இயக்குனர் அமீருக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை கஸ்துாரி பதிலடி தந்தார். அவர் கூறியதாவது: கும்பாபிஷேகம், முருக பக்தர்கள் மாநாடு நடத்துவதில் அரசியல் இல்லை. தி.மு.க., நடத்திய முருக பக்தர்கள் மாநாடும் சிறப்பாக நடந்தது. ஆனால் மக்களின் பேரெழுச்சியுடன் மதுரை மாநாடு நடக்கிறது. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இங்கு அரசியல் கட்சித் தலைவராக வரவில்லை. முருக பக்தராக வரவுள்ளது பெருமை. அதை தி.மு.க., ஆதரிக்க வேண்டும். சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்வதுதான் ‘அக்மார்க்’ மதவாதம். முருகனை போற்றுவோம் என்று சொல்வது ஆன்மிகம். முருக பக்தர்கள் மாநாட்டில் மத நல்லிணக்கத்தை பார்க்கப்போகிறீர்கள். முருக பக்தர்கள் என்று சொல்லி மதவாதம் செய்வதாக இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.மாற்று மதத்தினர் தேவையில்லாத சொற்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

அமீரின் மூதாதையர்கள் தமிழர்கள் தானே. அவர்களை அமீர் தமிழனாக நினைக்கவில்லையா எனத் தெரியவில்லை. மதுரையம் பதியில் மாற்று மதத்தினர் இதற்கு அரணாக நிற்க வேண்டும். சுல்தான் கூட கோயிலுக்கு நற்பணி செய்ததாகதான் வரலாறில் உள்ளது.

–subham—

Tags–மதுரை, முருகன் மகாநாடு, இந்து முன்னனி, ஆறு தீர்மானங்கள், கண்காட்சி, அறுபடை வீடுகள், 5 லட்சம் பேர் ,

MADURAI HINDU CONFERENCE FULL REPORT

POSTED BY LONDON SWAMINATHAN ON 23 JUNE 2025

Six Resolutions passed in Madurai Hindu Conference

(Posted by London Swaminathan; 23 June 2025)

Pawan Kalyan decries ‘insults to Hindu beliefs’, in politically charged speech at Murugan Devotees’ Conference

Taking aim at what he described as selective criticism under the guise of secularism, Kalyan claimed that a group was trying to provoke Hindus with insults to the deity Murugan.

Synopsis: In an address at the Murugan Devotees’ Conference in Madurai on Sunday, Andhra Pradesh Deputy Chief Minister Pawan Kalyan condemned what he described as rising insults against Hindu beliefs, and alleged mockery of deities and Hindu traditions under the guise of secularism.

Andhra Pradesh Deputy Chief Minister and Jana Sena Party leader Pawan Kalyan condemned what he termed “growing insults against Hindu beliefs and deities” during an address at the Murugan Devotees’ Conference in Tamil Nadu.

Speaking to a large gathering at the event jointly organised in Madurai on Sunday, 22 June, by the Hindu Munnani and the Bharatiya Janata Party (BJP), Pawan Kalyan declared:

“Murugan is the first revolutionary leader in the world. It was Murugan who raised me. It was Murugan who gave me courage. Don’t provoke us – when even the gentle are angered, the wild cannot withstand them.”

Taking aim at what he described as selective criticism under the guise of secularism, he said:

“Yet there is a group that mocks deities based on their dark complexion. A group that tries to provoke us by insulting Murugan – the very one who unites us. Some even dare to mock the Kanda Sashti Kavasam. They ridicule my culture, my heritage. And when questioned, they claim this is secularism.”

Ahead of the conference, a petition was filed in the Madurai Bench of the Madras High Court by advocate S Vanchinathan, seeking a ban on the event, alleging it was a political meeting disguised as a religious gathering.

The court expressed concern over the blurring lines between religious celebration and political mobilisation, but nevertheless allowed the event to proceed with specific restrictions, including a prohibition on political speeches.

Also present were BJP Tamil Nadu President Nainar Nagendran, former Governor of Telangana Tamilisai Soundararajan, former Tamil Nadu BJP President Annamalai, and Union Minister of State for Information & Broadcasting and Parliamentary Affairs L Murugan, among others.

DMK allies alleged that the event was a political platform in disguise for the BJP, even as the saffron party and the Hindu Munnani maintained it was purely a spiritual gathering for Murugan devotees.

Responding to the criticism, Kalyan said:

“One political party leader asked why don’t you conduct Murugan Conference in Uttar Pradesh? Who are they to mock the faith of others? Who are they to insult Murugan? Can they speak this way about a religion that came from Arabia?”

He continued:

“It’s fine if you don’t respect my religion – but don’t insult it. A Christian can live as a Christian. A Muslim can live as a Muslim. But when a Hindu chooses to live as a Hindu, some people seem to have a problem.”

Though organisers had earlier stated the event would remain apolitical, six key resolutions were passed during the conference. These included:

SIX RESOLUTIONS

Lighting the traditional Karthigai Deepam atop the Thiruparankundram hill.

Commending Prime Minister Narendra Modi’s response to the Pahalgam terror attack.

Demanding protection for Murugan-associated hills, declaring them as belonging to Kumaran.

Calling for the withdrawal of the Hindu Religious and Charitable Endowments (HR&CE) Department from temple administration.

Urging Hindu unity during elections to establish the strength of the Hindu vote.

Encouraging devotees to sing the ‘Kanda Sashti Kavasam’ collectively on the day of Sashti.

******

Sangh Parivar holds ‘Murugan Conference’ ahead of 2026 election

With the 2026 assembly election round the corner, the Sangh Parivar, to counter the pro-Tamil narrative of the ruling DMK, has chosen to cling to lord Murugan, considered a Tamil god, by holding a conference on Sunday in Madurai in an attempt to consolidate a Hindu vote bank,

Though Uttar Pradesh Chief Minister Yogi Adityanath gave a miss to the event, Andhra Pradesh Deputy Chief Minister and Jana Sena Party (JSP) president Pawanm Kalyan was in attendance and gave a fiery speech, dubbing secularism as Hindu bashing. Addressing the conference, organized by the Hindu Munnani (Hindu Front), an RSS affiliate, he said atheists in the country ridiculing only Hindu gods dare not touch the semitic religions of Islam or Christianity, which have come from the Arab region.

“The Constitution protects our Dharma. But, in the name of secularism, the atheistic crowd continues to ridicule my god and culture which has come to be the norm of secularism in the country. Can they criticize the semitic faiths? A leader of a political party questions why a conference for Murugan in Madurai and why not in Uttar Pradesh or elsewhere. It is dangerous. Lord Murugan is a Tamil god, with his presence all over the country and abroad. Don’t try to needle us. Fort, if we retort, it will be uncontrollable,” he said, hitting out at the DMK and its allies, without naming them.

COURT GAVE PERMISSION

The Muruga Bakthargalin Aanmeega Maanadu (Spiritual Conference of Devotees of Murugan) was embroiled in controversy, with the Tamil Nadu police imposing several conditions, including restricting the 11-day programme to three days. On June 13, the Madurai bench of the Madras high court, granted permission for the event but asked the Hindu Munnani to comply with the conditions laid down by the police in Madurai.

The conference organised by right wing outfit Hindu Munnani with the backing of the BJP was held under tight security as scores of people thronged to visit the replicas at the venue made of six abodes (known locally as Arupadai Veedu) of Lord Murugan that’s present across Tamil Nadu. The conference to celebrate the Tamil deity was attended by Andhra Pradesh’s deputy chief minister Pawan Kalyan, former BJP state president K Annamalai and the BJP’s ally and Tamil Nadu’s main opposition, the AIADMK. “Certain groups who make fun of our culture and faith and call it secularism will disappear,” Kalyan said speaking in Tamil.

Union home minister Amit Shah who on June 8 from Madurai urged people to participate in large numbers is likely to visit TN again in July – his third since April- ahead of the 2026 assembly elections. Shah, in his speech a week ago, drew in Lord Murugan over the Thiruparankunram issue.

In February, there was tension at a temple (one of the six abodes of Lord Murugan) in Thiruparankundram near Madurai after members of Hindu Munnani held a protest against a demand by a few Muslim organisations to rename the hillock, which is also home to a dargah as Sikander malai (hillock).

****

FIVE AKH DEVOTEES

“Five lakh people have come today to Madurai for the conference for our ideology despite knowing that they will get wet in the rains today. This is a warning for the ruling government,” Annamalai said. He added that the Hindu religion was under threat referring to the attack in Pahalgham and India’s response to Operation Sindoor.

Sunday’s conference comes a year after the DMK, known to have been established with rationalist tenets, also organised a conference for Lord Murugan last year. Last August, the DMK government organised a two-day conference on Lord Murugan as part of its efforts to oppose the BJP painting them as anti-Hindu and to manage the fallout of deputy chief minister Udhayanidhi Stalin’s controversial remarks against Sanatana Dharma.–SUBHAM—-

TAGS- MADURAI, MURUGAN CONFERENCE, HINDU, SIX RESOLUTIONS, HINDU FRONT, 

GNANAMAYAM 22 JUNE 2025 BROADCAST SUMMARY

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 1 PM (British Summer Time)

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time .

***

PROGRAMME

Prayer by Mrs Jayanthi Sundar Team: Mr Srinivasan Mrs Aruna Srinivasan redered the Prayer Song

***

Latha Yogesh from London presents World Hindu News in Tamil

****

Book Review: Gomathi Karthikeyan from Chennai

****

SPECIAL PROGRAMME: Talk by Dr N Kannan Ph.D.

(Chemistry Professor; Author, Speaker; Tamil Heritage Foundation)

Topic: ANCIENT LINKS BETWEEN TAMIL NADU AND KOREA

****

ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சி

ஞாயிற்றுக்கிழமை 22-6-2025

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் குழு -Mr Srinivasan and Mrs Aruna Srinivasan

****

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டன் மாநகரிலிருந்து  லதா யோகேஷ் வழங்கும் செய்தி மடல்.

***

புஸ்தக விமர்சனம் ;

நூலை விமர்சிப்பவர் –சென்னை கோமதி கார்த்திகேயன்

BOOK REVIEW BY GOMATHI KARTHIKEYAN, CHENNAI

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

சொற்பொழிவு — டாக்டர் நா.கண்ணன் Ph.D.

(Chemistry Professor; Author, Speaker; Tamil Heritage Foundation)

தலைப்பு – கொரியா நாட்டுடன்  தமிழர் தொடர்பு ; புதிய ஆராய்ச்சி முடிவுகள்

ANCIENT LINKS BETWEEN TAMIL NADU AND KOREA

*****

Anchored by London Swaminathan from London and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham—

Tags- Broadcast summary, 22-6-25

மதுரை பற்றி ஞான சம்பந்தரும் , சேக்கிழாரும் போடும் புதிர்கள்! (Post No.14,679)

Written by London Swaminathan

Post No. 14,679

Date uploaded in London –  23 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

நீடுயர் செல்வக்கோபுரம்

 மின் பொலி விசும்பை அளக்கும் நீள்

 கொடி சூழ் வியன் நெடும் கோபுரம்- சேக்கிழார் 1133–1150 CE

மீனாட்சி கோவிலின் தற்கால வரலாற்றுப்படி பழைய கோபுரம்

சுந்தர பாண்டியன் கோபுரம்; அதாவது கிழக்கு இராஜ கோபுரம்; இதன் ஆண்டு 1216- 1238 CE . இதன் உயரம் 153 அடி.

இற்றைக்குச் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது . ஆனால் மாலிக்காபூர் என்னும் முஸ்லீம் அரக்கன் தமிழ்நாட்டுக்கு கோவில்களை அழித்து,  டன் கணக்கில் தங்கத்தை எடுத்துச் சென்ற 1320 CE க்கு முன் மீனாட்சி கோவிலில் 28 கோபுரங்கள் இருந்தன.

இதை மாலிக்காபூர் படையெடுப்பு நடந்த 200  ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சேக்கிழார் பெருமானும் பெரிய புராணப் பாடல் மூலம் நமக்கு தெரிவிக்கிறார் . 1400 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரைக்கு விஜயம் செய்த திருஞான சம்பந்தரும் மதுரையின் பெரிய கோபுரங்களையும் அங்கிருந்த வண்ணமிகு சுதைகளையும் கண்டு பரவசப்பட்டு பாடியுள்ளார்.

இது பற்றி  யாரும் மேற்கொண்டு ஆராயவில்லை. சேக்கிழார் பெருமானோ ஒளிவீசும் நெடிய கோபுரங்கள் இருந்ததைத் திருஞான சம்பந்தர் கண்டதாகப் பாடியுள்ளார் ;இது 1400 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சித்திரம்.

ஞான சம்பந்தரும் தேவாரப் பாடல்களில் இதை உறுதி செய்கிறார் :-

கோப்ரஞ் சூழ் பு மலைக்கோயில் ….. ஆலவாய் 3-120-4

சுதை மாடக் கூடல் ஆலவாய் …. 1-7-2

இப்போது மதுரையில் 14 கோபுரங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. அவைகளும் மாலிக்காபூர் டில்லிக்குச் சென்ற பின்னர் எழுப்பப்பட்டவை ; இடிந்த கோபுரங்களை நம்மவர்கள்  மீண்டும் எழுப்பினர் என்று ஊகிக்கலாம்

*****

பெரியபுராணம்

அன்பராய் அவர் முன் பணிந்த சீர்

  அடியார் அண்ணலார் அடி இணை வணங்கி

முன்பு நின்று எடுத்த கைகளால் காட்டி

  முருகு அலர் சோலைகள் சூழ்ந்து

மின் பொலி விசும்பை அளக்கும் நீள்

  கொடி சூழ் வியன் நெடும் கோபுரம் தோன்றும்

என்பு அணி அணிவார் இனிது அமர்ந்து

  அருளும் திருவாலவாய் இது என்றார்.  2565

இது திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் சரிதத்தில் வரும் பாடல்

****

மின்பொலி விசும்பை அளக்கும் நீள்கொடி சூழ்வியன் நெடுந்கோபுரம்   என்ற வரிகளைக் கவனிக்கவும்

****

பாடிய பதிகம் பரவியே

  வந்து பண்புடை அடியவரோடும்

தேடுமால் அயனுக்கு அரியவர் மகிழ்ந்த

  திரு ஆலவாய் மருங்கு அணைந்து

நீடுயர் செல்வக் கோபுரம் இறைஞ்சி

  நிறை பெரு விருப்புடன் புக்கு

மாடு சூழ் வலம் கொண்டு உடையவர்

  கோயில் மந்திரியாருடன் புகுந்தார்—2567

*****

அங்கயற்கண்ணி தன்னோடு ஆலவாய்

  அமர்ந்த அண்ணல்

பங்கயச் செய்ய பாதம் பணிவன்

  என்று எழுந்து சென்று

பொங்கு ஒளிச் சிவிகை ஏறிப்

  புகலியர் வேந்தர் போந்தார்

மங்கையர்க்கு அரசியாரும் மன்னனும்

  போற்றி வந்தார்.  2764

இது சமணர்களை வென்ற பின்னர், மீனாட்சி கோவிலுக்குள் சம்பந்தர் நுழைந்த செய்தியைத் தெரிவிக்கிறது

*****

நீடுநீள் நிலைக் கோபுரத்துள் புக்கு

  நிலவிய திரு முன்றின்

மாடு செம் பொனின் மாளிகை வலம்

  கொண்டு வானுற வளர் திங்கள்

சூடுகின்ற பேரம்பலம் தொழுது போந்து

  அருமறை தொடர்ந்து ஏத்த

ஆடுகின்றவர் முன்புற அணைந்தனர்

  அணிகிளர் மணிவாயில்.  158

இது சிதம்பரம் கோபுரம் பற்றியது ; ஆகையால் அக்காலத்தில் பல உயரமான கோபுரங்கள் இருந்ததை அறிய முடிகிறது அப்பர் பெருமான் ஏழு வகைக்கோபுரங்களை பாடியுள்ளார் 

***

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய கட்டுரை இதோ

கோவில்கள் பற்றி அப்பர் தரும் அதிசயத் தகவல்

Written by London Swaminathan

Research Article No.1765;  Dated 1April 2015.

கரக்கோயில்இளங்கோயில்கொகுடிக் கோயில்மணிக்கோயில்ஞாழற்கோயில்ஆலக் கோயில்திருக்கோயில்

தமிழ்நாட்டில் 30,000-க்கும் மேற்பட்ட கோவில்கள் இருக்கின்றன. ஆயினும் மதுரை மீனாட்சி கோவில், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம், தஞ்சைப் பெரிய கோயில், திருவண்ணாமலைக் கோவில் கோபுரங்கள் எல்லாம் சுமார் 1000 ஆண்டு பழமையுடையவைதாம். அதற்கு முன் தமிழ் நாட்டில் கோவில்கள் இருந்தனவா? அவை எப்படி இருந்தன?

பிள்ளையார்பட்டி, மஹாபலிபுரம், திருப்பறங்குன்றம், நரசிங்கம் முதலிய ஊர்களில் மலைகளில் பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட  கோயில்களும் ஐந்தாம் நூற்றாண்டு முதற்கொண்டு ஏற்பட்டவையே. அப்படியானால் அதற்கு முன் என்ன மாதிரி கோயில்கள் இருந்தன?

சிலப்பதிகாரம், புறநானூறு, பரிபாடல் முதலிய நூல்களில் என்ன என்ன கோவில்கள் இருந்தன என்று கடவுளரின் பெயர்கள் எல்லாம் உள்ளன. ஆயினும் கோவில்களின் தோற்றத்தை நாம் அறியோம். அப்பர் என்ற திருநாவுக்கரசர் தமிழிலும், வராஹமிகிரர் சம்ஸ்கிருதத்திலும் அரிய தகவல்களைக் கூறுகின்றனர். அப்பர் பாடிய தேவாரத்தில் கரக்கோயில், இளங்கோயில்,கொகுடிக் கோயில், மணிக்கோயில், ஞாழற்கோயில், ஆலக்கோயில், திருக்கோயில் என்று பலவகையான கோயில்களைக் குறிப்பிடுகிறார்.

இந்தத் தகவலை 1968 ஆம் ஆண்டு இரண்டாவது உலகத் தமிழ்நாட்டு மலரில் எழுதிய தொல் பொருட்துறை அறிஞர் டாக்டர் இரா.நாகசாமி தமிழில் கோயில் என்பதற்கு பழங்காலத்திலேயே பல சொற்கள் இருந்ததையும் பட்டியலிட்டுள்ளார்.

டாக்டர் இரா.நாகசாமி இன்னும் ஒரு அரிய பாட்டினையும் பிங்கலந்தை நிகண்டிலிருந்து 1968 ஆம் ஆண்டுக் கட்டுரையில் மேற்கோள் காட்டியுள்ளார்:–

கல்லும் உலோகமும் செங்கலும் மரமும்

மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்

கந்த சருக்கரையும் மெழுகும் என்றயிவை

பத்தே சிற்பத் தொழிலுக்கு உறுப்பாகும் – பிங்கலந்தை 29

அதாவது தெய்வத் திரு உருவங்கள் செய்ய இந்த பத்து பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. கோவில்கள் மரம் செங்கற்களால் கட்டப்பட்டன. அவை எல்லாம் பருவமழை, வெயில் போன்ற காலநிலையாலும், முஸ்லீம் படை எடுப்புகளாலும் அழிந்து போயின. இன்றும் கூட கேரளம் முதலிய மாநிலங்களில் மரக் கோயில்கள் இருப்பதைக் காணலாம்.

அப்பர் தேவாரம் ஆறாம் திருமுறை (6-71)

பெருக்கு ஆறு சடைக்கு அணிந்த பெருமான் சேரும்

பெருங்கோயில் எழுபதினோடு எட்டும்மற்றும்

கரக்கோயில்கடிபொழில் சூழ் ஞாழற்கோயில்,

கருப்பறியல் பொருப்பு அனைய கொகுடிக்கோயில்,

இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும்

இளங்கோயில்மணிக்கோயில்ஆலக்கோயில்,

திருக்கோயில் – சிவன் உறையும் கோயில் சூழ்ந்து,

தாழ்ந்துஇரைஞ்சதீவினைகள் தீரும் அன்றே.

அப்பர் குறிப்பிடும் பலவகைக் கோவில்கள் என்ன என்று கூட நமக்குத் தெரியாது. அவர் காலத்தில் சிவபெருமானுக்கு 78 பெரிய கோயில்களும் மற்ற பல வகைக் கோயில்களும் இருந்தது தெரிகிறது. தேவார மூவரும், மாணிக்கவாசகரும் 300-க்கும் மேலான புனிதத் தலங்களின் பெயர்களைச் சொல்லுகின்றனர். அப்பர் வாழ்ந்தது ஏழாம் நூற்றாண்டில். அவருக்கு 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வராஹமிஹிரர் எழுதிய பிருஹத் சம்ஹிதா என்னும் அற்புத சம்ஸ்கிருத என்சைக்ளோபீடியாவில் 20 வகைக் கோவில்களைக் குறிப்பிடுகிறார். வெறுமனே பெயர்களை மட்டும் சொல்லாமல் அவற்றின் நீள, அகலம், கருவறையின் (கர்ப்பக் கிருஹம்) அளவு ஆகியவற்றையும் குறிப்பிடுகிறார்.

ஒரு அத்தியாயம் முழுதும் கோவில் பற்றி எழுதிவிட்டு மிகவும் அடக்கத்துடன் கார்கர் என்பவர் விரிவாக எழுதிய விஷயத்தை தாம் சுருக்கமாகச் சொல்லியதாகக்  கூறுகிறார். இதிலிருந்து 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பலவகை வடிவங்களில், உயரங்களில் கோபுரங்களை எழுப்பும் மாபெரும் எஞ்சினீயர்கள் இமயம் முதல் குமரி வரை இருந்தது தெரிகிறது.

வராகமிகிரர் எழுதிய பலவிஷயங்களில் ஒரு சில குறிப்புகளை மட்டும் பார்ப்போம்:-

“நிறைய தண்ணீர் பாயும் குளங்களுடனும் அழகான நந்தவனங்களுடனும் கோவில்களைக் கட்ட வேண்டும்.

ஒருவருக்கு புகழும் புண்ணியமும் கிட்ட வேண்டுமானால் கோயில் கட்ட வேண்டும்.

யாகம் செய்வோர், கிணறு வெட்டுவோர் ஆகியோருக்குக் கிடைக்கும் புகழ் கோவில் கட்டுவோருக்குக் கிடைக்கும்.

ஆற்றங்கரை,கடற்கரை, காடு, மலை, வனாந்தரம் ஆகிய இயற்கைச் சூழலில் கோவில் அமைவது மிகவும் விசேஷம்.

கோவில்கள் இருபது வகைப்படும். அவையாவன:–

மேருமந்தராகைலாசவிமானச் சந்தநந்தனசமுத்கபத்மகருடநந்திவர்த்தனகுஹராஜகுஞ்சரவ்ருஷஹம்சசர்வதோபத்கரகடசிம்ஹவ்ருத்தசதுஸ்கோணஷோடசரிஅஷ்டசரி.

மேரு என்னும் வகைக் கோவில் 12 நிலைக் கோபுரமும் அறுகோண வடிவமும் உடையவை. அகலம் 32 முழம்,  உயரம் 64 முழம்”.

இதுபோல 20 வகைக் கோவில்களுக்கும் நீள, அகல, உயரங்களைச் சொல்லிவிட்டு கர்ப்பக் கிரஹ அளவுகளையும் கொடுக்கிறார். பல்வகை கட்டிடக் கலை சொற்களையும் உபயோகிக்கிறார். இல்லாத ஒரு விஷயத்தை அவர் கற்பனை செய்து எழுதமுடியாது. இதை எல்லாம் கொண்டு பார்க்கையில் எந்த அளவுக்கு நமது கட்டிடக் கலைத்திறன் 1500 ஆண்டுஅளுக்கு முன் இருந்தது என்பது வெள்ளிடை மலையென விளங்கும்.

இதுவரை தமிழ்- சம்ஸ்கிருத மொழிகளில் கிடைக்கும் தகவல்களை யாரும் ஒப்பிட்டு ஆராய்ந்ததாகத் தெரியவில்லை. பாண்டியர்களில் மிகவும் பழையவனான பல்யாக சாலை முது குடுமிப் பெருவழுதி கோவிலை வலம் வரும் போதும், பிராமணர்கள் ஆசி வழங்கும் போதும் மட்டுமே அவன் குடையும் தலையும் தாழ்ந்து வணங்கும் என்று புலவர் பெருமக்கள் பாடியுள்ளனர் (புறம்-6). சிலப்பதிகாரத்தில் உள்ள கோவில்களின் பட்டியலை முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரையில் தந்துள்ளேன். எவரேனும் இரு மொழி இலக்கியங்களில் வரும் கோவில்கள ஒப்பிட்டு ஆராய்வது பலன் தரும்.

வாழ்க அப்பர், வராஹமிஹிரர்!! வளர்க கோவில் கலை!!

—சுபம்—

Tags- மதுரை, சேக்கிழார், புதிர் , 14 கோபுரங்கள், மாலிக்காபூர், அப்பர், ஏழுவகை, கோவில்கள்  ஞான சம்பந்தர்,