திருவிளையாடல் புராணத்தில் சில அதிசயச் செய்திகள்-2 (Post No.14,715)

 Picture:– வலை வீசின படலம் 

Written by London Swaminathan

Post No. 14,715

Date uploaded in London –  2 July  2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

முருகன் ஊமையாகப் பிறந்தது ஏன் ?

வலை வீசின படலத்தில் சாபங்கள் பற்றிய சுவையான கதை வருகிறது . சிவபெருமான் மதுரையில் அங்கையற்கண்ணிக்கு வேதப்பொருளை சொல்லிக்கொண்டிருந்தபோது அவள் கவனக்குறைவாக இருந்ததால் கோபம் அடைந்த சிவன் அவளை மீனவப் பெண்ணாக பிறக்கச் சாபமிட்டார் ; மீனாட்சி அம்மை தனது செயலுக்கு வருந்தியபோது, “கவலைப்படாதே போ!  நானே மீனவனாக வந்து உன்னைத் திருமணம் செய்து கொள்வேன்” என்றார் . அம்மாவுக்கு கிடைத்த சாபச் செய்தி முருகனையும் பிள்ளையாரையும் எட்டியது இருவரும் ஒடி வந்து இந்தப் புஸ்தகங்களால்தானே இதெல்லாம் வந்தது என்று புஸ்தகங்களை வாரிக் கடலில் வீசினர் அவர்களை உள்ளே அனுமதித்த குற்றத்துக்காக நந்தி தேவரை சுறாமீனாகப் பிறக்கச் சாபமிட்டார்முருகனை செட்டியார் வீட்டில் ஊமையாகப் பிறக்க சாபமிட்டார் ; விநாயகப் பெருமானுக்குச் சாபமிட்டால் அது தன்னையே வந்தடையும் என்பதால் சிவன், பேசாமல் இருந்து விட்டார் – தி.வி.பு , வலை வீசின படலம்

எனது கருத்து

விநாயகப் பெருமானின் மஹிமை இதில் தெரிகிறது ; அச்சது பொடி செய்த அதி தீரா என்று அருணகிரிநாதர் விநாயகரைப் புகழந்து இருக்கிறார்; பிள்ளையார் அனுமதி இல்லாமல் சிவன் புறப்பட்டபோது அவருடைய தேரின் அச்சையே முறியச் செய்தார் கணபதி என்று அருணகிரி பாடியுள்ளார் .

இரண்டாவது கருர்த்து — வாத்தியார் பாடம் சொல்லும் போது, குரு உபதேசம் செய்யும்போது, கவனக்குறைவாக இருப்பது தண்டனைக்குரிய குற்றம் .

மூன்றாவது , வாயிற்காப்போன் கடமையில் தவறக்கூடாது ; மனைவியே வந்தாலும், மகனே வந்தாலும் அனுமதி பெற்ற பின்னரே உள்ளே  வரவேபண்டும்; இது முக்கிய பாடம். நாம் எந்த வீட்டுக்குச் செல்வதானாலும் முன்னரே போன் செய்து அனுமதி பெற்ற பின்னரே, சந்திக்கச் செல்ல வேண்டும் எவ்வளவு நெருங்கிய நண்பராக இருந்தாலும் இது முக்கியம்; திறந்த வீட்டில் நாய் நுழைந்த மாதிரி நுழையக்கூடாது.

****

எந்த திசையில் எந்த காவல் தெய்வம் இருக்கவேண்டும்?

திசைத் தெய்வங்கள் யார் என்றும் பரஞ்சோதி முனிவர் சொல்கிறார்.

நகரின் கிழக்குப்பகுதியில் அய்யனார் சிலையும் , தெற்குப்பகுதியில் சப்த மாதா கோவிலும் மேற்குப் பகுதியில் விஷ்ணு கோவிலும் வடக்குப் பகுதியில் துர்கா கோவிலும் இருக்க வேண்டும் என்று பரஞ்சோதி முனிவர் சொல்கிறார் . பழைய மதுரையில் இப்படி இருந்தது; இப்போதும் வடக்கில் செல்லத் தம்மன்  கோவில் என்னும் துர்கா கோவில் இருக்கிறது ; அதே போல தெற்கில் சப்த மாதா கோவில் உள்ளது ; ஒருவேளை கண்ணகி எரித்த பின்னர், மதுரையின் அமைப்பு மாறியிருக்கலாம் ;மதுரை பல முறை மாற்றியமைக்கப்பட்டது தி வி பு வில் சில படலங்களில் வருகிறது; பிளினியும் மதுரைத் தலை நகர் மாற்றம் பற்றி முதல் நூற்றாண் டில் குறிப்பிட்டுள்ளார்.

கெளடில்யர் எழுதிய அர்த்த சாஸ்திரத்திலும் திசைத் தெய்வங்கள் வருகின்றன ; இதை ஒப்பிட்டு ஆராய வேண்டும்

****

மகா புருஷனின் துவாதசாந்தம் மதுரை!

வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலத்தில் கீழ்கண்ட செய்தியைப் பரஞ்சோதியார் சொல்கிறார் :–

மகாபுருடனின் அளவினைச் சொல்லி முடியாது ; அப்புருடனுக்குத் திருவாரூர் மூலாதாரம்; திருவண்ணாமலை சுவாதிட்டானம் , திருவானைக்கா மணிபூரகம்; சிதம்பரம் அனாகதம்; திருக்காளத்தி விசுத்தி; காசி ஆக்ஞய் ;கயிலை பிரமரந்திரம்; மதுரை துவாதசாந்தம்  (அதாவது விராட புருஷனின் தலைக்கும் மேலாக அமைந்த தலம் ) .எனது கருத்து

துவாதசாந்தம் என்றால் எண் 12 (ஏன் பன்னிரெண்டு என்று தனிக்கட்டுரையில் விளக்கி இருக்கிறேன் )

இமயம் முதல் குமரி வரை என்ற கருத்து புற நானூற்றிலும் சிலப்பதிகாரத்திலும் உளது ;இங்கும் மதுரைமுதல் கயிலை வரை விவரிக்கப்பட்டது;  இது மகாபுருஷன் என்பவனின் உடல் என்ற உருவகமும் வருகிறது. ஆனால் இன்னும் சில அறிவிலிகள் வெள்ளைக்காரன் வந்துதான் இந்தியா என்பது ஒரு நாடு என்று காட்டினான் என்று உளறிக்கொண்டிருக்கின்றன இந்தியா என்பது 56 பிரிவுகளை உடையது அனைத்து 56 நாடுகளுக்கும் மீனாட்சி கல்யாண லெட்டர் / திருமுகம் அனுப்பப்பட்டது என்று தி வி பு கூறுகிறது இந்த 56 தேச விஷயம், நிறைய சம்ஸ்க்ருத நூல்களிலும் உளது; அவர்கள் அனைவரையும் எல்லா விழாக்களுக்கும்  அழைத்ததும், அவர்கள் வந்ததும் இந்தியா — அகண்ட பாரதம் — ஒரே நாடு என்று காட்டுகிறது ; வெள்ளைக்காரன் ஆட்சிக்கும் துலுக்க ஆட்சிக்கும் முன்னதாக அப்பரும் ஆதிசங்கரரும் சென்ற வரைபடத்தைப் பார்த்தால், ராமன் சென்ற வரை படத்தைப் பார்த்தால், சுந்தரரும் சேரமானும் கயிலை சென்ற வரை படத்தைப் பார்த்தால், அகண்ட பாரத்தைத்தைக் காணலாம்.

Picture:–கால்மாறி ஆடின படலம் 

*****

அடுத்த கட்டுரைகளில் வரும்  செய்திகள் இதோ :

வாட் போட்டி,

பாட்டுப் போட்டியில் இலங்கைப் பாடகி, வட நாட்டுப் பாடகர்

கணவன் மனைவி பெயர்கள்

காப்பி அடித்த புஸ்தகங்கள்

உலகின் முதல் சிபாரிசுக்கு கடிதம்

உவமைகளும் பழமொழிகளும்

ரசவாதம்

அஷ்டமா சித்திகள்

மதுரையில் செட்டி தெரு

சீல் / லட்சினை வைக்கும் முறை

அம்புகளில் பெயர்கள்

சுனாமி தாக்குதல்

கி பி 600 CE க்கு முந்திய லீலைகள்

தொடரும்………………………………………..

Tags– திருவிளையாடல் புராணம், அதிசயச் செய்திகள்  பகுதி -2 சாபங்கள், முருகன் ஊமை பிறப்பு

Leave a comment

Leave a comment