தேசீய கீதம் பற்றி பத்து விஷயங்களைச் சொன்னால் 100 மார்க்! (Post No.14,722)

Written by London Swaminathan

Post No. 14,722

Date uploaded in London –   3  July  2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தேசீய கீதம் என்று சொன்னவுடன்  உங்கள் மனதிற்கு வரும் பத்து அம்சங்களைச் (POINTS)  சொல்லுங்கள் . கீழே உள்ள அட்டவணையுடன் (IT MUST MATCH OUR SELECTION GIVEN BELOW ) ஒப்பிட்டு உங்களுக்கு நீங்களே மார்க்/ மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள் . ஒவ்வொன்றுக்கும் பத்து மார்க்குகள். அல்லது என்று இருந்தால் ஏதேனும் ஒன்றினைக் கூறினாலும் பத்து மார்க்குகள் உண்டு!

****

SAMPLE ANSWER –Ten Marks

விடைகள்— 1. இயற்றியவர் ரவீந்திர நாத் தாகூர் — பத்து மார்க்குகள்.

2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10…………………………

****

விடைகள்—

1. இயற்றியவர் ரவீந்திர நாத் தாகூர் — பத்து மார்க்குகள்.

2. வங்காளி மொழியில் உள்ளது– பத்து மார்க்குகள்.

3. தாகூர் இயற்றிய நீண்ட பாடலில் இருந்த ஐந்து பாடல்களில் இது முதல் பாடல் –பத்து மார்க்குகள்.

4 . இதை அவர் டிசம்பர் December 11, 1911 இல் இயற்றினார் – பத்து மார்க்குகள்.

5. அரசியல் நிர்ணய சபை 1950 ஆம் ஆண்டு இதை இந்தியாவின் தேசீய கீதமாக அங்கீகரித்தது

–பத்து மார்க்குகள்.

6.  தேசீய கீதம் பாடும்போது நோயாளிகளைத் தவிர மற்ற எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் அல்லது இந்தியாவின் அனைத்து விதமான அரசு நிகழ்சிகளின் இறுதியில் இப்பாடல் பாடப்பெறுகிறது

 –பத்து மார்க்குகள்.

7.. இதில் வரும் இயற்கை இடங்கள் – கங்கை, யமுனை நதிகள், இமய விந்திய மலைகள் கடல்கள்

–பத்து மார்க்குகள்.

.8. இதில் தென்னாட்டு மாநிலங்களைத் திராவிட என்ற சொல் குறிக்கும் ஏனைய  மாநிலங்கள் : பஞ்சாப் , சிந்து,  குஜராத்,

மராட்டியம், ஒரிசா (உத்கலம்),வங்காளம், –பத்து மார்க்குகள்.

9.. இதை பாடுவதற்கு 52 வினாடிகள் ஆகும் அல்லது இப்பாடல் கீதாஞ்சலி என்னும் கவிதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது

10 .இதன் பொருள் அல்லது முழு கீதம் — பத்து மார்க்குகள்.

ஜன கண மன அதிநாயக ஜய ஹே

பாரத பாக்ய விதாதா

பஞ்சாப ஸிந்து குஜராத மராட்டா

திராவிட உத்கல பங்கா

விந்திய ஹிமாசல யமுனா கங்கா

உச்சல ஜலதி தரங்கா

தவ சுப நாமே ஜாகே

தவ சுப ஆசிஸ மாகே

காஹே தவ ஜய காதா

ஜன கண மங்கள தாயக ஜய ஹே

பாரத பாக்ய விதாதா

ஜய ஹே ஜய ஹே ஜய ஹே ,

ஜய ஜய ஜய ஜய ஹே !

இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற

நீயே எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய்.

நின் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும், கூர்ச்சரத்தையும்

மராட்டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும்.

வங்காளத்தையும், உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது.

நின் திருப்பெயர் விந்திய, இமய மலைத் தொடர்களில்

எதிரொலிக்கிறது; யமுனை, கங்கை ஆறுகளின்

இன்னொலியில் ஒன்றுகிறது; இந்தியக் கடலலைகளால்

வணங்கப்படுகிறது.

அவை நின்னருளை வேண்டுகின்றன; நின் புகழைப் பரப்புகின்றன.

இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே. உனக்கு

வெற்றி! வெற்றி! வெற்றி!

–subham—

Tags—, 100மார்க்குகள், ரவீந்திர நாத் தாகூர் , தேசீய கீதம்

Leave a comment

Leave a comment