திருவிளையாடல் புராணத்தில் சில அதிசயச் செய்திகள்- PART 5 (Post No.14,728)

picture- உக்கிரகுமாரனுக்கு வேல் , வளை, செண்டு கொடுத்த படலம் 

Written by London Swaminathan

Post No. 14,728

Date uploaded in London –  5 July  2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருவிளையாடல் புராணத்தில் (தி.வி.பு) மேலும் சில அதிசயச் செய்திகளைக் காண்போம் .

பெரிய புராணத்தையும் தி. வி.புராணத்தையும் பக்திக் கண்ணோட்டத்தில் பார்ப்பதால் அதிலுள்ள அற்புதமான விஷயங்கள், செய்திகள் தெரியாமல் போகின்றன

பரஞ்சோதி முனிவர் எழுதிய தி.வி.பு.வில் 15 +7+22  மன்னர்கள் பெயர்களைச் சொல்லி,   அக்காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியையும்  குறிப்பிடவில்லை .  பாண்டிய நாட்டில் ஒரே நேரத்தில் ஐந்து பாண்டியர்கள் வெவ்வேறு பகுதிகளை ஆண்டதாகவும் ஒரு பொதுக் கருத்து உண்டு; அப்படிப்பார்த்தால் எட்டு பாண்டியர்களை அவர் ஒதுக்கிவிட்டார் என்று தோன்றுகிறது இதனால், காலத்தைக் கணக்கிடுகையில் அவர்களுக்கும் சுமார் 25 ஆண்டுகள் வீதம் ஒதுக்க வேண்டும். உலக வரலாற்றில் ஒரு மன்னருக்கு சராசரியாக ஒதுக்கப்பட்ட ஆண்டு 20 என்றாலும் இந்திய மன்னர்கள் முன் காலத்தில் சராசரி முப்பது ஆண்டு காலம் ஆட்சி செய்துள்ளதை  குப்தர் கால வரலாற்றிலிருந்து அறிய முடிகிறது.

picture-இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலம் 

****

12 ஆண்டுக்கால வறட்சி

பரஞ்சோதி முனிவர் காசியிலிருந்து பிராமணர்களை மதுரைக்கு வரவழைத்த செய்தியைக்  கூறுகிறார்; வறட்சி காரணமாக பிராமணர்கள் வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்ததையும் சொல்கிறார் . இவையெல்லாம் அக்கால குடியேற்றத்தைக் குறிக்கிறது மேலும் 12 ஆண்டுக்கால வறட்சி என்பது பல தமிழ் சம்ஸ்க்ருத நூல்களில் திரும்பத் திரும்ப வருகிறது; அதாவது குரு JUPITER  என்னும் வியாழன் கிரகம் சூரியனைச் சுற்றி வர 12 ஆண்டுகள் பிடிக்கும்; இதனால் வருடம்தோறும் நாம் குருப்பெயர்ச்சி பலன்களை பத்திரிக்கைகளில் படிக்கிறோம் குரு கிரகம்  ஒரு குறிப்பிட்ட ராசியில் சஞ்சரிக்கும்போது வறட்சி ஏற்படும் என்பது நம்பிக்கை. இதனை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் பல குடியேற்ற உண்மைகள வெளியாகும்.

****

ஏழு அடி தூரம்

வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை, நாம் மன்னர் பதவியில் இருந்தாலும், ஏழு அடி தூரம் நடந்து வழி அனுப்பவேண்டும் . இதை கரிகாலன் செய்ததை சங்க இலக்கியம் செப்புகிறது இது ரிக் வேதத்திலும் ராமாயணத்திலும் உள்ளது பரஞ்சோதி முனிவரும் குறைந்தது அவர்ஜ்கள் ஏழு அடி அடைந்து வழி அனுப்பினார்கள் என்று எழுதுகிறார் . பிராமணர் கால்யாணங்களில் கணவனும் மனைவியும், அதாவது மணப்பெண்ணும் மண மகனும் தீயை வலம் வந்து ஏழு அடி நடக்கும்போது மந்திரங்களை சொல்லி பிணைப்பினை உறுதிப்படுத்துவர் ; அப்போதுதான் கல்யாணம் பூர்த்தியானதாக கணக்கு இந்த 7 அடி விஷயம் சுவையானது.

****

மதுரையில் செட்டி தெரு

மதுரையில் செட்டி தெரு என்று பெரியதொரு வருணனையை மதுரைத் திரு நகர படலத்தில் பரஞ்சோதி சொல்கிறார் . மதுரைக்கு வருவோர் தெற்கு ஆவணி மூலவீதிக்குச் சென்றால் நூற்றுக்கணக்காக செட்டியார் நககைக்கடைகளை கணடு ஆச்சரியப்படுவார்கள்; குறிப்பாக இரவு நேரத்தில் சென்றால் ஜகஜ்ஜோதியாக இருக்கும்; கடைகளின் போர்டுகளில் செட்டியார் என்ற பெயர்களைக் காணலாம் . இப்போது முஸ்லீம், கிறிஸ்தவர்களும் நகை வியாபாரத்தில் நுழைந்துவிட்டார்கள்; அக்காலத்தில் நான் மதுரையில் வாழ்ந்த 1986-ம் ஆண்டு வரை செட்டியார் நகைக்கடை போர்டுகளை மட்டுமே கண்டுள்ளேன். மேலும் மதுரையிலுள்ள நாளங்காடி, அல்லங்காடி (DAY TIME SHOPS, NIGHT TIME SHOPS ) பற்றி சங்க இலக்கியத்திலே காண்கிறோம்; கோவலன் வந்த போது இந்தத் தெரு வழியாகத்தான் போயிருக்க வேண்டும். மதுரையில் தி வி பு வை அரங்கேற்றிய பரஞ்சோதி இதைக் கண்டு வியப்புற்றதால் செட்டி தெரு என்ற தலைப்பில் வருணனை செய்துள்ளார். அங்கு தங்கம், வெள்ளி ரத்தினங்கள் ஜொலிப்பதைக் காணலாம். உலகில் இப்படி ஒரு வீதி முழுவதும் செட்டியார் நகைக்கடைகள் இருந்தது வேறு எங்கும் இல்லை என்றே சொல்லலாம்.

பட்ட மங்கை , உத்தர கோசமங்கை, வரகுணமங்கை

மங்கை என்ற பெயரை அகராதியில் தேடிப் பார்த்தால் பெண்கள் பற்றித்தான் உள்ளது ;உண்மையில் இது மங்கலம் என்பதன் திரிபு. பாண்டிய நாட்டில் மட்டும் மங்கலத்தை, மங்கை என்று சுருக்கியதை தி.வி.பு, திருவாசகம், நம்மாழ்வார் பாசுரம் மூலம் அறிகிறோம்; இது தவிர ராதாபுரம் கல்வெட்டில் வரகுண ஈஸ்வரம் குறிக்கப்படுகிறது ; பட்டமங்ககையில் ஆறு கார்த்திகைப் பெண்களும் பாறைகள் ஆனதாக பரஞ்சோதி எழுதுகிறார். இப்போது இந்த ஊரை நாம் பட்டமங்கலம் என்கிறோம் ; நம்மாழ்வார் பாடிய வரகுண மங்கையில் சிவன் கோவிலே இலை. ஆகையால் நாம் அறிந்த “சிவ பக்த வரகுணன்களுக்கு” முன்னால்  வேறு வரகுணன்களும் இருந்தது தெரிகிறது.

மங்கலம் என்றால் பிராமணர்கள் வசிக்கும் இடம் என்று பொருள்; பெரும்பாலும் பிரமதேயமாக அரசர்கள் கொடுத்த தெருக்கள் வீடுகள் உள்ள இடம் இது. இந்த ஊர்களின் வரலாற்றினை ஆராய வேண்டும் .

அருணாகிரி பாடிய தி.வி.பு.

திருப்புகழில் அருணகிரிநாதர் குறைந்தது 12 பாடல்களில் தி வி பு லீலைகளைக் குறிப்பிடுகிறார் கல்லாடத்தில் முப்பதுக்கும் மேலான தி வி பு லீலைகளைக் காண்கிறோம் ; இவர்களுக்கெல்லாம் முந்திய சம்ஸ்க்ருத நூல்களின் மொழிபெயர்ப்பே நம்பி, பரஞ்சோதி முனிவர்கள் எழுதியவை; ஆகையால் இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக வைத்து ஆராய ஆதீனங்கள் மடாதிபதிகள் ஆகியோர்  மகாநாடு கூட்ட வேண்டும் . அத்தோடு வேள்விக்குடி தளவாய்புரம் செப்பேடுகளை வைத்து ஒப்பிட வேண்டும்  ‘பாண்டியர் செப்பேடுகள் பத்து’ என்ற நூலில் பல அரிய செய்திகள் உள்ளன.

picture-  நான்மாடக்கூடல் ஆன படலம் 

****

இறுதியாக ஒரு விஷயம்

சங்க இலக்கியத்தில் மதுரைப் பேராலவாயார் , இடைக்காடர் , வெள்ளியம்பலத்தில் துஞ்சிய பாண்டிய மன்னன் பற்றிக் காண்கிறோம். இவர்கள் பாடிய பாடல்கள் அனைத்தையும் ஒருங்கே வைத்து அவர்களால் பாடப்பட்ட மன்னர்களைக் (CHRONOLOGICA ORDER கால வரிசைப்படுத்தினால் தி வி பு சொல்லும் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் யாருக்குப் பொருந்தும் என்பதையும் கண்டுபிடித்துவிடலாம் இதுவரை நான் கண்டது அபிஷேக பாண்டியன்= இளம் வயதில் பட்டம் ஏற்ற நெடுஞ்செழியன் , உக்கிரப்பெருவழுதி= முது குடுமிப் பெருவழுதி , ராஜசேகர பாண்டியன் = கரிகாலன் காலம் , கடல் சுவற வேல் விட்ட பாண்டியன்= வடிவலம்ப பாண்டியன் ஒப்பீடுகள் ஆகும் . இவைகளை மேலும் ஆராய வேண்டும் .

முற்றும்.

–சுபம்—

Tags- திருவிளையாடல் புராணம்,  அதிசயச் செய்திகள்- PART 5 , பட்டமங்கை, செட்டி தெரு, அருணாகிரி, ஏழு அடி தூரம்

Leave a comment

Leave a comment