பழம் பற்றி பத்து விஷயங்களைச் சொன்னால் 100 மார்க் (Post.14,729)

Written by London Swaminathan

Post No. 14,729

Date uploaded in London –  5 July  2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பழம் என்று சொன்னவுடன்  உங்கள் மனதிற்கு வரும் பத்து அம்சங்களைச் (POINTS)  சொல்லுங்கள் . கீழே உள்ள அட்டவணையுடன் (IT MUST MATCH OUR SELECTION GIVEN BELOW ) ஒப்பிட்டு உங்களுக்கு நீங்களே மார்க்/ மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள் . ஒவ்வொன்றுக்கும் பத்து மார்க்குகள். அல்லது என்று இருந்தால் ஏதேனும் ஒன்றினைக் கூறினாலும் பத்து மார்க்குகள் உண்டு!

****

SAMPLE ANSWER –Ten Marks

விடைகள்— 1. இனிக்கும் அல்லது புளிக்கும் — பத்து மார்க்குகள்.

2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10…………………………

****

விடைகள்—

1. இனிக்கும் அல்லது புளிக்கும் — பத்து மார்க்குகள்.

2. பழச் சாறு  (பிழியலாம் அல்லது எடுக்கலாம்) அல்லது ப்ரூட் சாலட்(FRUIT SALAD) –பத்து மார்க்குகள்.

3.தோலி அல்லது கொட்டை இருக்கும் –பத்து மார்க்குகள்.

4.முப்பழம் – மா, பலா, வாழைப்பழம், –பத்து மார்க்குகள்.

5.சத்துக்கள் வைட்டமின்கள் நிறைந்தது –பத்து மார்க்குகள்.

6.பாலும் பழமும் (முதலிரவில்) –பத்து மார்க்குகள்.

7.சில பழமொழிகள்– பழம் நழுவி, பாலில் விழுந்தது போல ; பழமும் தின்னு கொட்டையும் போட்டவன், ஊரின் நடுவிலுள்ள பழமரம் போல–பத்து மார்க்குகள்.

8.சில கதைகள் – பழனி (முருகன்- பிள்ளையார் போட்டி) அல்லது ஈசாப் கதை – சீ சீ இந்தப் பழம் புளிக்கும்–பத்து மார்க்குகள்.

9.ஆப்பிள் கன்னம், மாம்பழ வாய், கொவ்வைப் பழம் போல வாய்/ உதடு, ஞானப்பழம்

வருணனைகளில் ஏதாவது ஒன்று. –பத்து மார்க்குகள்.

10. அவ்வைக்கு முருகன் போட்ட புதிர்- பாட்டி சுட்ட பழம் வேண்டுமா ? சுடாத பழம் வேண்டுமா ? அல்லது ராமனுக்கு சபரி  என்ற கிழவி கடித்துச் சுவைத்து பழம் கொடுத்தது–பத்து மார்க்குகள்.

–subham—

Tags- பழம் , பத்து விஷயங்கள் , 100 மார்க், –பத்து மார்க்குகள்.

Leave a comment

Leave a comment