Post No. 14,739
Date uploaded in London – —8 July 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கல்கிஆன்லைன் இதழில் 2-4-25 அன்று வெளியான கட்டுரை!
MOTIVATIONAL QUOTES
அறிஞர்கள் சொன்னார்கள்! அவ்வளவும் உண்மை!!
ச. நாகராஜன்
மனிதர்களும் மலைகளும் சந்திக்கும் போது பெரிய காரியங்கள் நடக்கின்றன. இது தெருவில் அலைந்து திரிவதால் நடக்காது.
– வில்லியம் ப்ளேக்
எதையும் செய்ய வேண்டும் என்று எண்ணும் ஒரு மனதிற்கு முடியாது என்பதே கிடையாது!
– ஜான் ஹெய்வுட்
குணாதிசயமே விதி!
– ஹெராக்லிடஸ்
ஒருமுனைப்படுதலே எனது லட்சியம். முதலில் நேர்மை, அடுத்தது உழைப்பு. பிறகு ஒருமுனைப்படுதல்!
– ஆண்ட்ரூ கார்னீகி
எவனுக்குத் தன்னிடம் நம்பிக்கை இருக்கிறதோ, அவன் மற்றவர்களை வழி நடத்துவான்.
– ஹொரேஸ்
வணிகம் என்பது யுத்தமும் விளையாட்டும் சேர்ந்ததாகும்!
– ஆண்ட்ரே மௌரிஸ்
–
குருடர்கள் சாம்ராஜ்யத்தில் ஒற்றைக்கண் மனிதனே ராஜா!
– ஸ்பானிய பழமொழி
முக்கியமான விஷயம் என்னவெனில் கேள்வி கேட்பதை நிறுத்தக் கூடாது என்பது தான்!
– ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
–
மனித இயற்கையில் உள்ளார்ந்து இருக்கும் ஒரு கொள்கை, தான் புகழப்படவேண்டும் என்பது தான்!
– வில்லியம் ஜேம்ஸ்
உலகின் மிகப் பெரிய பாடம் என்னவெனில் சில சமயம் முட்டாள்கள் கூடச் சரியாக இருக்கிறார்கள் என்பது தான்!
– வின்ஸ்டன் சர்ச்சில்
ஆயிரம் மைல் தூரம் கொண்ட ஒரு பயணம் ஒரு சிறிய காலடியை எடுத்து வைப்பதில் ஆரம்பிக்கிறது,
– சீனப் பழமொழி
எது புதியதோ அது அவசியமாகத் தேவைப்படுவதாயிருக்கும் என்பதுமில்லை, எது பழையதோ அது தூக்கிப் போடவேண்டியதாயிருக்கும் என்பதுமில்லை.
– ஹாரி ஜி. மெண்டல்ஸன்
சலுகைகளை எப்படி மறுப்பது என்பதைக் கற்றுக் கொள்; இது ஒரு மிகப் பெரிய பயனுள்ள கலை.
– தாமஸ் ஃபுல்லர்
–
அதிர்ஷ்டத்தை எவன் ஒருவன் ஈர்க்கிறானோ அவன் தயார் செய்தல் என்ற காந்தத்தைக் கூடவே கொண்டு செல்கிறான்.
– வில்லியம் ஏ. வார்ட்
–
சிறிய வாய்ப்புகளே பிரம்மாண்டமான வெற்றிகளுக்குப் பெரும்பாலும் காரணமாக அமைகிறது.
– டெமாஸ்தனிஸ்
– ***