Picture shows dead Malaiyadwaja Pandya returning to earh in Space Shuttle.மலையத்வஜனை அழைத்த படலம், அவர் விண்ணுலகத்திலிருந்து ஸ்பேஸிஷட்டிலில் ஸ் வந்து செல்லும் காட்சி
Post No. 14,740
Date uploaded in London – 8 July 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஏழுவகை பருவ மங்கையர்
பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில்( தி.வி. பு.) பயன்படுத்தும் மேலும் சில உத்திகளைக் காண்போம்.
திருவண்ணாமலையில் மாணிக்கவாசகர் தங்கி இருந்தபோது, அழகான பேதை- பெதும்பை-மங்கை- மடந்தை- அரிவை- தெரிவை- பேரிளம் என்னும் ஏழுவகை பருவ மங்கையர்களெல்லாம் மார்கழி மாதத்தில் திருவாதிரைக்கு பத்து தினங்களுக்கு முன்னே வீடுகள் தோறும் போய் அழைத்துக் கொண்டு விடியற்காலத்திலே தீர்த்தத்தில் போய் ஸ்நானம் செய்வார்கள் . அவர்களைக்கண்ட மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடினார்.
****
சிவன் தலையில் மூன்றாம் பிறை நிலவு
தெள்ளிய மூன்றாம் பிறையைத் தரித்த சடாபாரத்தையுடைய கடவுளானவர் அன்பில்லாதவர்களேயானாலும் தன்னைப் பாடினவர்களிடத்தில் இரக்கஞ்செய்வார் என்று நினைத்து எண்ணுதல் பெற,
நமச்சிவாய வாழ்க நாதன்றாள் வாழ்க — என்று — சிவபுராணம்– பாடினார் . இது மண்சுமந்த படலத்தில் வருகிறது .
*****
இவன்தான் வந்தி என்பவளுடைய கூலியாள் என்று காட்டிவிட பாண்டியன் கண்டு கோபித்துத் தன் கையிலே பொற்பிரம்பு (Golden Stick) கொண்டு அண்டங்களையும் அளவில்லாத உயிர்களையும் தனக்குச் சரீரமாகக்கொண்ட கடவுள் முதுகிலே ஓங்கி அடித்தான்.
இந்த அண்டம் என்ற சொல்லுக்கு முட்டை மற்றும் கோளமான என்ற பொருள் உண்டு. திருவாசகத்திலும் அதற்கு முந்தைய நூல்களிலும் இந்தச் சொற்பிரயோகத்தைக் காணலாம் ; பூமி மட்டுமல்ல ; அண்ட சராசரங்கள் அனைத்தும் வட்ட வடிவமானவை என்று இந்துக்கள் முதல் முதலில் கண்டுபிடித்ததை இது காட்டுகிறது..
****
கடற்கரையில் மீன்வியாபாரம் செய்யும் மீனவப் பெண்கள் பற்றி வலை வீசின படலத்தில் பரஞ்சோதி எழுதுகிறார் ,
பின்னும் அந்த நுளைப் பெண்கள் விலை கூறி விற்கிற கெண்டை மீனுக்கு நேராக அவர்கள் கண்களே பிறழ்ந்து விலையுயர்த்தவும் , பேசுகிற வாய் வாசமும் கூந்தலில் முடித்த தாழம்பூ வாசமும் மீனின் நாற்றத்தை ஒழித்து நல்ல மணம் வீசவும்……….
****
நால்வகைக் சொற்கள் பற்றிய உரையில் தவறு
நாமகள்
பழுதகன்ற நால்வகைச்சொல் மலரெடுத்துப்
பத்திபடப் பரப்பித் திக்கு
முழுதகன்று மணந்துசுவை யொழுகியணி
பெறமுக்கண் மூர்த்தி தாளில்
தொழுதகன்ற வன்பெனுநார் தொடுத்தலங்கல்
சூட்டவரிச் சுரும்புந் தேனுங்
கொழுதகன்ற வெண்டோட்டு முண்டகத்தா
ளடிமுடிமேற் கொண்டு வாழ்வாம்.
(பொருள்- குற்றநீங்கிய, பெயர் –வினை –இடை –உரி என்னும் நான்கு
வகையை யுடைய சொற்களாகிய மலர்களை எடுத்து, நிலல் பெற வைத்து, எல்லாத்
திக்குகளினுஞ் சென்று, கமழ்ந்து, கூசை ஒழுகப்பெற்று, அழகுபெற, அகன்ற
பெரிய அன்பாகிய நாரினால், பாமாலையாகச் செய்து, மூன்று கண்களையுடைய
இறைவனுடைய, திருவடிகளில், வணங்கி, அணிவதற்கு, கீற்றுக்களையுடைய,
ஆண்வண்டும் பெண்வண்டும், குடைதலினால், விரிந்த, வெண்மையான இதழ்களையுடைய தாமரைப்பூவை
இருக்கையாகவுடைய நாமகளின், திருவடிகளை, சென்னியிற் சூடிவாழ்வாம்
Picture: பிரம்மா சரஸ்வதி வழிபடும் காட்சி
நால்வகைச் சொற்கள் என்பதற்கு உரைகாரர்கள் பெயர்ச் சொல், வினைச்சொல், இடைச் சொல், உரிச்சொல் என்று உரை எழுதியுள்ளனர். இது தவறு என்று நான் கருதுகிறேன் ஏனெனில் தொல்காப்பியம் சொல்லும் நான் வகைச் சொற்கள் வேறு (அடியிற் காண்க).
உண்மையில் இது சம்ஸ்க்ருத நூல்களில் உள்ள நான்குவகைச் சொற்கள் ஆகும் . வாதாபி கணபதிம் பாடலில் முத்து சுவாமி தீட்சிதரும் இதைப்படியுள்ளார் பராதி சத்வாரி வாகாத்மகம் ப்ரணவஸ்வரூப வக்ரதுண்டம்…….
அதாவது பரா, பச்யந்தி, மத்யமா, வைகரீ ஆகிய நான்கு வித வாக்கு சொரூபமாக இருப்பவர்.
பிரணவ சொரூபமாக(ஓங்கார சொரூபமாக) வளைந்த முகத்தை உடையவர்.
ஆகவே சரஸ்வதியைத் துதிக்கும்போது இதையே பரஞ்சோதி முனிவர் மனதிற் கொண்டிருக்க வேண்டும்
ஏனெனில் பிற இடங்களிலும் அவர் உபநிஷத் வாக்கியங்களை பயன்படுத்துகிறார்; நேதி நேதி – இது இல்லை, இது இல்லை என்ற பாடலை முன்னரே எழுதியுள்ளேன். ; ஏனெனில்,
நேதி நேதி – இது இல்லை, இது இல்லைஎன்பது உபநிஷத வாக்கியம்
இன்னும் ஒரு பாடலில் அநோ ராணீ யாம் மஹதோ மஹீயாம் என்ற உபநிஷத வசனத்தை
Picture- Lord Shiva carrying sand to strenghen the banks of flooded River Vaigai in Madurai (மண் சுமந்த படலம்)
பெரியதினும் பெரியதுமாய்ச் சிறியதினுஞ் சிறியதுமாய்
அரியதினு மரியதுமா யெளியதினு மெளியதுமாய்க்
கரியதுமாய்க் காண்பானுங் காட்சியுமா யவைகடந்த
துரியமுமாய் நின்றாயென் சோதனைத்தோ நின்னியல்பே— கல்லானைக்கு கரும்பருதித்ய படலம்
Aṇor aṇīyān mahato mahīyān (Kaṭha Upaniṣad 1.2.20). என்பது கடோபநிஷத் வாக்கியம்.
****
வேங்கடசாமி நாட்டார் உரை
இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் எனலுமாம்;
“இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென்
றனைத்தே செய்யு ளீட்டச் சொல்லே” என்றார் ஆசிரியர் தொல்காப்பியனாரும்..
ஆகவே தொல்காப்பியர் சொன்னதை ஒப்புக்கொள்ளவேண்டும்; அல்லது சரஸ்வதி துதி
என்பதால் முத்துசுவாமி தீட்சிதர் பாடலில் உள்ளதை ஒப்புக்கொள்ளவேண்டும்
*****
வேதக்கிளி
பல தலங்களில் திருஞானசம்பந்தர் கண்ட ஒரு காட்சி கிளிகளும் வேதங்களைச் சொல்லும் காட்சியாகும்
அக்கிரகார பிராமணர்கள் வீட்டில் கிளிகளை வளர்த்த செய்தி சம்ஸ்க்ருத நூல்களிலும் இருக்கிறது
மதுரைத் திருநகரப்படலத்தில் பரஞ்சோதியார் சொல்கிறார்:–
தீவினை யந்த ணாளர் சிறார்பயி றெய்வ வேத
நாவுரு வேற்றக் கேட்டுக் கிளிகளோ நவிலும் வேற்றுப்
பூவையும் பயின்று புத்தே ளுலகுறை புதுமந் தாரக்
காவுறை கிளிகட் கெல்லாங் கசடறப் பயிற்று மன்னோ.
பார்ப்பனரின் சிறுவர்கள், பயிலுதற்குரிய மறைகளை,
(தமது) நாவினால் உருப்போடுதலைக் கேட்டு,
(அவ்வில்லங்களிலுள்ள) கிளிகள் மட்டுமா கூறாநிற்கும் (அன்று);
அயலிடங் களிலுள்ள நாகணவாய்ப் புட்களும் கற்று, தேவருலகத்தில்
கற்பகச் சோலையின் கிளிகளுக் கெல்லாம், குற்றம் நீங்கக் கற்பிக்கும் .
இது ஒரு நல்லகற்பனைச் சித்திரம் ; பிராமணச் சிறுவர்களிடம் கிளிகள் வேதம் கற்றன; அவைகளிடமிருந்து பூவைப் பறவைகள கற்றன ; அவைகள் தேவலோகத்துக்குப் போய் அங்குள்ள கிளிகளுக்கு வேதம் கற்பித்தன !
*****
பாண்டியன் திருநகரம் கண்ட படலம், (Madurai City)
நாத்தீகம் பேசுவோர்
மறையவர் வீதி
ஆத்திக ருண்டென் றோது மறமுதற் பொருள்கள் நான்கும்
நாத்திகம் பேசும் வஞ்சர் நாவரி கருவி யாக
ஆத்தனா லுரைத்த வேத வளவுகண் டுள்ளந் தேறித் தீர்த்தராய்
முத்தீ வேட்குஞ் செல்வர்தம் மிருக்கை சொல்வாம்.
ஆத்திகர்கள் உண்டு என்று சொல்லுகின்ற, அறம் தலிய நான்கு பொருள்களையும், நாத்திகம் பேசும் வஞ்சர்
இல்லையென்று கூறுகின்ற வஞ்சகரின், நாவினை அறுக்கின்ற வாளாக, இறைவன் அருளிய மறையீன் முடிவை
உணர்ந்து, மனந் தெளிந்து தூய்மையுடையராய், மூன்று தீ வேள்வியை முடிக்கும், மறையவரின்
வீதியின் பெருமையைச் சொல்வாம்.
ஆத்திகர் – உண்டென்பார்; மறுபிறப்பும் இருவினைப்பயனும்
கடவுளும் உண்டென்பார், அறம் பொருள் இன்பம் வீடு என்னும்
நாற் பொருளும் உண்டென்பார், மற்றும் இத்தன்மைய மெய்ம்மைகள்
உண்டென்பார். நாத்திகர் – இல்லையென்பார்;
–subham—
Tags- திருவிளையாடல் புராணம், உவமைகள், உருவகங்கள் , பகுதி 2 , நால் வகைச் சொற்கள், வேதம் சொல்லும் கிளிகள் , பெண்களின் 7 பருவங்கள் நாத்தீகம் பேசுவோர்