தி.வி. பு. உவமைகள், உருவகங்கள்- 3 (Post No.14,743)

picture–வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்

Written by London Swaminathan

Post No. 14,743

Date uploaded in London –  9 July  2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில்( தி.வி. பு.) கையாளும் மேலும் சில சுவையான உவமைகள் இதோ:

பாண்டியன் சுரம் தீர்த்த படலத்தில்,

பிசாசுகள் சூழ்ந்தாற்போல எங்கும் சமணர் கூட்டங்கள் நிலைகொள்வதாயின ..

****

சோழநாட்டிலிருந்து வந்த ஒரு வேதியரைப் பார்த்து சோழநாட்டில் என்ன புதுமையென்று மங்கையற்கரசியாரும் குலச்சிறையாரும் கேட்க , அந்தச் சைவப் பிராமணன்  , புதுமையுண்டு கேளுங்கள் ; சிவபாத இருயதரிடத்திலே  சிவனருளால் இந்த உலகமெல்லாம் தெளிவுபெற இளஞ்சசூரியனைப்போல ஒரு பிள்ளை அவதரித்தனர் … என்று சம்பந்தரின் பெருமைகளைக் கூறினார் .

உடனே அவ்விருவரும் சம்பந்தருக்குச் சொல்வதற்காக அந்தப் பிராமணன்  கையில் ஓலை விண்ணப்பம் கொடுத்துவிட்டு வ்விருவரும் மீனாட்சி சுந்தரேசரை வணங்கிவிட்டு வீட்டுக்குப் போனார்கள்

****

இதற்கு முன்னர் பாணபத்திரன் கையில் சிவன் எழுதிக்கொடுத்த லெட்டரையும் கண்டோம் . இதே போல ஒரு பிராமணன்  கையில் மாதவி எழுதிக்கொடுத்த லெட்டரை / ஓலையை அவன் கோவலனிடம் கொடுத்த செய்தியை சிலப்பதிகாரம் கூறுகிறது ஒரு பிராமணன் காட்டு வழியே அடுத்த நாட்டு மன்னனுக்கு  லெட்டர் கொண்டுபோனபோது அவனை மறவர்கள் கொன்றுவிட்டு, அடடா இவனைக் கொன்றுவிட்டோமே என்று கையை நொடித்த செய்தி புறநானூற்றில் வருகிறது. பிராமணர்கள் மட்டுமே தூது போகலாம் என்று தொல்காப்பியரும் சொல்கிறார் . வாஸ்கொட காமா கப்பலுக்குள் ஓலையுடன் நுழைந்த பிராமணனை அந்த போர்ச்சுகீசிய அரக்கன் கண்டம் துண்டமாக வெட்டி சாக்குப்பையில் கேரள மன்னனுக்கு திருப்பி அனுப்பிய செய்தி  போர்ச்சிகீசியர் வரலாற்றில் உள்ளது ஆயினும் இந்த சோழநாட்டுப் பிராமணன் சம்பந்தர் கையில் கொடுத்த லெட்டர் தமிழ் நாட்டின் வரலாற்றையே மாற்றிவிட்டது . லெட்டரில் இருந்த விஷயத்தையும் பரஞ்சோதியார் எழுதியுள்ளார்.

****

பரஞ்சோதியாரின் இன்னும் ஒரு உவமை ,

picture–நாரைக்கு முக்தி கொடுத்த படலம்

சமணர்கள் மதுரைக்குள் நுழைந்த சம்பந்தரைத் தடு த்தபோதும் வெற்றிகரமாக மதுரைக்குள் பிரவேசித்தார் . அதை அதிகமாக மதம் ஒழுகுகின்ற மதயானையைத் தாமரை நூலினால் கட்டினால்அதற்குத்தடை பட்டு யானை நிற்குமா? என்று உவமிக்கிறார்  பரஞ்சோதி.

சமணர்கள் தலை மயிரைக் கைகளால் பிடுங்க வேண்டும் என்பது நியதி; அவர்கள் தலையில் அப்போது உண்டான கொப்புளங்கள் போல வானத்தில் நடச்சத்திரங்கள் தோன்றின என்பது இன்னும் ஒரு உவமை..

பரிசுத்தமான சைவமாகிய பயிரை வளர்க்க வேலி போல அமைந்த பாண்டிமாதேவியும் மந்திரியாகிய குலச்சிறை நாயனாரும்…….

****

சங்கப் பலகை தந்த படலத்தில்,

picture–இசைவாது வென்ற படலம்

பிரமதேவன் கங்கையில் தனியாகக் குளிக்கவே சரஸ்வதி நானில்லாமல் நீர் என் இப்படி ஸ்நானம் செய்தீர்? என்று கேட்க , நீ தாமதமாக வந்துவிட்டு என்னைக் கேள்வி கேட்கிறாய். நீ பூமியில் போய் பிறக்கக்கடவது என்று சாபமிட்டார் . உடனே வாணி , சுவாமி பிறப்பில்லாத உமக்கு பாரியையான நான் பூமியில் பிறந்து என்ன செய்வேன் என்று புலம்பினாள்.

உடனே பிரம்மா சொன்னார்

ஓ  வாணியே , உன் சொரூபமான 51 எழுத்தில் அகரமுதலாக 48 எழுத்துக்களும் 48 புலவர்களாக உலகில் பிறக்கக்கடவன; வெவ்வேறு உச்சரிப்புகள் தோன்ற , உயிர்க்கு முதலாக விளங்குகின்ற கடவுள் திருவாலவாயன் ஆதலால்  அக்கடவுளும் ஒரு புலவராய் பிறந்து சங்கப்பலகையில் ஏறியிருந்தது மற்ற 48 புலவருக்கு ஞானம் தோன்ற செய்து அங்கே முத்தமிழ்ப்  பு  லமையும் நிரம்ப அருள் செய்வாரென்று பிரம்மா சொன்னார்.

அப்படியே அந்த 48எழுத்தும் உலகத்திலே வெவ்வேறு மனித ஜாதிகளாகப் பிறந்து தமிழ்ப் புலமையில் தலைமையானவர்களாய் உயர்ந்து , வயிர, இரத்தின ஆபரணங்களை அணியாமல் ருத்ராக்ஷ மாலைகளையணிந்து  திருநீறுமணிந்த திருமேனியராய் சோமசுந்தரக் கடவுளுக்கு தமிழ் மாலை சூட்டுவதோடு பூமாலையும் சூட்டுவார்கள் என்றார்

இன்றும் கோவிலுக்குள் ,சோமசுந்தரக்கடவுளுக்கு வட மேற்கே சங்க மண்டபம் உள்ளது அதில் 49 புலவர்களின் சிலைகள் உள்ளன .

யாரவது ஒருவர் இந்த கோவிலுக்குள் 49 சிலைகளையும் நன்றாகக் புகைப்படம் எடுத்து வெளியிட வேண்டும்.

(நான் மதுரைக் கோவிலுக்குப் போன நூற்றுக்கணக்கான  முறைகளில் , உயரமான படிகள் ஏறி, இந்த சங்க மண்டபத்துக்கு ஒரு கும்பிடு போடுவது வழக்கம்; ஆனால் சிறிய நுழைவாயில் கயிறு கட்டி உள்ளே போகாமல் தடுத்து இருப்பார்கள். அதையும் மீறி உள்ளே போனது இல்லை; வெளியிலிருந்து பார்த்தால் சிறிய சிறிய சிலைகளாகத் தென்படும் ; அவைகளை மேலும் ஆராய்வது நல்லது.

****

மண் சுமந்த படலத்தில் வரும் வசனங்கள்:

அப்போது மாணிக்கவாசகர் புத்தனைப் பார்த்து (இலங்கையிலிருந்து வந்த புத்த குரு ) திருட்டு வார்த்தை சொல்லப்பட்டவனே! நீ வந்த காரணத்தைக் சொல்லென்று கேட்க , அவ்வுரை கேட்ட புத்தனானவன் பொன்னம்பலத்தில் (சிதம்பரம்) எங்கள் புத்தரை வைக்க விரும்பி நேற்று வந்தேன் என்றான் .பொல்லாங்கைத்தருகிற கொலைகளவு, பொய், கள்ளுண்ணல்  என்னும் நான்கு குற்றங்களையும் நீக்கி  மேன்மை சிறந்த அரசமரத்தின் கீழ் எமது கடவுள் சேர்ந்திருப்பான் . பொருந்திய கர்ப்பத்திற் சேர்கின்ற உருவம் – வேதனை- குறிப்பு- பாவனை- விஞ்ஞானம் ஆகிய பஞ்ச கந்தங்களும் கூடி ஒளிவில்லாத அநேக வறிவுண்டாய் நீங்குவது பிறவித் துன்பமாம் ; அது நீங்க கேடாய்ழிவது  மோட்சமென்றான் . 

To be continued……………..

–subham—

Tags– 51எழுத்துக்கள், 49 புலவர்கள், உவமைகள் ,உவமேயங்கள், பகுதி 3, திருவிளையாடல் புராணம்

Leave a comment

Leave a comment