தி.வி. பு. உவமைகள்,  உருவகங்கள்-4 தமிழில் மிக நீண்ட வாக்கியம் (Post.14,746)

GODDESS MEENAKSHI COMING OUT OF FIRE PIT LIKE DRAUPADI IN MAHABHARATA.

Written by London Swaminathan

Post No. 14,746

Date uploaded in London –  10 July  2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆர்த்தன தடாரி பேரி ஆர்த்தன முருடு மொந்தை

ஆர்த்தன உடுக்கை தக்கை ஆர்த்தன படகம் பம்பை

ஆர்த்தன முழவம் தட்டை ஆர்த்தன சின்னம் தாரை

ஆர்த்தன காளம் தாளம் ஆர்த்தன திசைகள் எங்கும்.

பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில்( தி.வி. பு.) கையாளும் மேலும் சில சுவையான உவமைகள் இதோ:

WEDDING OF GODDESS MEENAKSHI WITH SUNDARA PANDYA, INCARNATION OF SHIVA.

கம்பனுடன் ஒப்பிடும் அளவுக்குப் பாடல்களின் நயம் உள்ளது ; திருமணப் பெண்ணுக்குச் செய்த அலங்காரத்தை உரைநடையில் படிக்கும்போது மூச்சு விடக்கூட நேரம் கிடைக்காது. ஆங்கிலத்தில் ஜேம்ஸ் ஜாய்ஸ் எழுதிய உரை நடை போல உள்ளது. 

The longest sentence in an English novel is widely considered to be in Jonathan Coe’s The Rotters’ Club, which contains a sentence of 13,955 words. This surpasses the length of Molly Bloom’s soliloquy in James Joyce’s Ulysses, which is a 4,391-word sentence. 

IN TAMIL, PARANJOTHI MAY BE ENTERED IN GUINNESS BOOK OF RECORDS.

மீனாட்சிக்கு, அதாவது தடாதகைப் பிராட்டியார்க்கு மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டதை திருமணப்படலத்தில் வருணிக்கிறார்,

“பின் தடாதகைப் பிராட்டியாரை ஒரு சிங்காதனத்திலிருத்திக்  கஸ்தூரியணிந்து குங்குமச் சேறு பூசி, வாசனைத் திருமஞ்சனத்தால் அபிஷேகம் செய்து, முரசுஞ் சங்கும் முழங்க மெல்லிய பட்டாடை சாத்தி, ராஜகுலத்துக்குத் தக்கபடி வேத பிராமணர்களுக்கு   தானங்கள் கொடுத்துப்பின்பு திருமகளும் கலைமகளும் தங்கள் தவப்பயன் பலித்ததாக மகிழ்ந்து பிராட்டியினதுஅனிச்சப்பூவுக்கும் மெல்லியதான  பாதங்களுக்குச் செம்பஞ்சு பூசி கூந்தலுக்கு மயிர்ச்சாந்தம் வழிய வார்த்துக் கொங்கைகளில் பனி நீரில் குழைய சந்தனம் பூசிக் கால்களில் சிலம்பணிந்து  பாதசாலமும் கிண்கிணியும் புலம்ப , முப்பத்திரண்டு கோவையாக இரிசிகையும், இருபத்தொரு கோவையாக கலாபமும் பதினான்கு கோவையாக பருவமும் எட்டுக்கோவையாக மேகலையும் இரண்டு கோவையாக காஞ்சியும் ஒரு பூங் கொம்பிலே வண்டுகள் புலம்புவது போல பூட்டிக் காந்தலில் வண்டுபோல மணியாழி விரலுக்கிட்டு , கைகளில் வைரக்கடகம் அணிந்து தொழில் கேயூரம் பூட்டி , மரகதமாலை, பொன்மாலை செம்பவள மாலைகளை  மேருவைச் சூழ்ந்த நவக்கிரகங்கள் போல முலைகளைச்  சூழ அணிந்து ,  காதிலே குண்டலம், மேகத்துக்கும் சந்திரனுக்கும் இடையே இந்திரவில்லைப்போல நெற்றிப்பட்டம் கட்டி, புஷ்பமாலைகளால் கூந்தலில் அலங்காரம் செய்து  திவ்யாபாரணங்களெள்ளாம்  விளங்க அணிந்து  சுந்தரக் கடவுளுக்கு மிகவும் மகிழ்ச்சி தோன்றச் சிங்காரித்து, கலைமகளும் திருமகளும் சொப்பனம் என்று வாழ்த்தி , இரு கைகளையும் அவ்விருவரும் தாங்க எழுந்த போது வாத்தியங்கள் முழங்கி சங்கம் தொனிக்க , பூமழை பொழிய, சாமரை வீச பல்லாண்டு முழங்க வேத வாத்தியங்கள் முழங்க,

இந்திராணி அடைப்பை தாங்க, திலோத்தமை கண்ணாடி கொள்ள,  விந்தை சந்தடி விலக்க,  அரம்பை காளாஞ்சி தூக்க ஊர்வசி விசிறி வீச மேனகை கொடிகளேந்த சந்தன களப கஸ்தூரி பனிநீர்  இறைக்க தூப தீபங்கொடுக்க சோபனங்கள் பாட, புஷ்பங்கள் பரத்தின் பூம்படாத்தின் மேலே பாடகக் கால்களை பையப்பைய வைத்து சரஸ்வதியும் லெட்சுமியும் கைப்பற்றித்தொடர செல்வம் கல்வி வேண்டினவர்க்கு இதுவே சமயம் என்று சிலம்புகள் சொல்ல, நடந்து துவண்டு  அன்பு மிக்கிருந்த  பெருமானுக்கருகே பிடரிமேலே தலையைச் சாய்த்துக்கொண்டு  எழுந்தருள அந்த ரத்ன பீடத்தில்  சுந்தரப்பாண்டியன் என்கிற கடவுளோடு  இருந்த தடாதகையைக்   கண்டவர்கள்  மேரு மலை மேலே கற்பகத்தருவைச் சேர்ந்த  பச்சைக்கொடி போலிருக்கிற தென்று புகழ, பண்ணும் இசையும் நீரும் குளிர்ச்சியும் பாலும் சுவையும் பூவும் வாசமும் வெவ்வேறு வடிவு கொண்டிருந்தாற்போல அம்மையும் அப்பனும் இருக்க  எல்லோரும் கடவுளடி  நீழலிற் கலந்தது போலக்   கலந்து கலந்து மகிழ்ந்திருந்தார்கள்.

இதே போல இன்னும் ஒரு நீண்ட பத்தியில் மகாவிஷ்ணு தாரை வார்த்துக் கொடுத்ததை வருணிக்கிறார் .

****

UKARAKUMARA PANDYA RECEIVING VEL, VALAI, SENDU .

மேற்கூறிய செய்திகளைப் பரஞ்சோதியாரின் பாடல்களில் காண்போம்:–

752.     மாமணித் தவிசில் வைகி மணவினைக்கு அடுத்த ஓரை

தாம் வரும் அளவும் வானத் தபனிய மலர்க் கொம்பு                                                   அன்னார்

காமரு நடன நோக்கிக் கருணை செய்து இருந்தான்                                                   இப்பால்

கோமகள் வதுவைக் கோலம் புனைதிறம் கூறல்                                                   உற்றேன். 153

753.     மாசு அறுத்து எமை ஆனந்த வாரி நீராட்டிப்                                                   பண்டைத்

தேசு உரு விளக்கவல்ல சிவபரம் பரையைச்                                                   செம்பொன்

ஆசனத்து இருத்தி நானம் அணிந்து குங்குமச் சேறு                                                   அப்பி

வாச நீராட்டினார் கண் மதிமுகக் கொம்பர் அன்னார்.   154

754.     முரசொடு சங்கம் ஏங்க மூழ்கிநுண் தூசு சாத்தி

அரசியல் அறத்திற்கு ஏற்ப அந்தணர்க்கு உரிய தானம்

விரை செறி தளிர்க்கை ஆர வேண்டுவ வெறுப்பத்                                                   தந்து

திரை செய் நீர் அமுதம் அன்னாடு திருமணக் கோலம்                                                   கொள்வாள்.     155

755.     செம் மலர்த் திருவும் வெள்ளைச் செழுமலர்த் திருவும்                                                   தங்கள்

கைமலர்த் தவப் பேறு இன்று காட்டுவார் போல                                                   நங்கை

அம்மலர் அனிச்ச மஞ்சு மடியில் செம் பஞ்சு தீட்டி

மைம் மலர்க் குழல் மேல் வாசக் காசறை வழியப்                                                   பெய்து.    156

756.     கொங்கையின் முகட்டில் சாந்தம் குளிர் பனிநீர்                                               தோய்த்து அட்டிப்

பங்கய மலர் மேல் அன்னம் பவளச் செவ்வாய் விட்டு                                                   ஆர்ப்பத்

தங்கிய என்ன வார நூபுரம் ததும்பச் செங்கேழ்

அங்கதிர்ப் பாதசாலம் கிண் கிணி அலம்பப் பெய்து.    157

757.     எண் இரண்டு இரட்டி கோத்த விரிசிகை இருபத்து                                                   ஒன்றில்

பண்ணிய கலாபம் ஈர் ஏழ் பருமநால் இரண்டில் செய்த

வண்ணமே கலை இரண்டில் காஞ்சி இவ் வகை ஓர்                                                   ஐந்தும்

புண்ணியக் கொடி வண்டு ஆர்ப்ப பூத்த போல்                                                   புலம்பப் பூட்டி.  158

758.     பொன் மணி வண்டு வீழ்ந்த காந்தளம் போது போல

மின் மணி ஆழி கோத்து மெல் விரல் செங்கைக் ஏற்ப

வன் மணி வைர யாப்புக் கடகமும் தொடியும் வானத்

தென் மணிக் கரங்கள் கூப்ப இருதடம் தோளில் ஏற்றி. 159

759.     மரகத மாலை அம் பொன் மாலை வித்துரும மாலை

நிரைபடுவான வில்லின் இழல் பட வாரத் தாமம்

விரைபடு களபச் சேறு மெழுகிய புளகக் கொங்கை

வரைபடு அருவி அன்றி வனப்பு நீர் நுரையும் மான்.   160

760.     உருவ முத்து உருவாய் அம் முத்து உடுத்த பல் காசு                                               கோளாய்

மருவக் காசு சூழ்ந்த மாமணி கதிராய்க் கங்குல்

வெருவ விட்டு இமைக்கும் ஆர மேருவின் புறம்                                                    சூழ்ந்து ஆடும்

துருவச் சக்கரம் போல் கொங்கை துயல் வர விளங்கச்                                                       சூட்டி.     161

761.     கொடிக் கயல் இனமாய் நின்ற கோட்சுறா வேறும் வீறு

தொடிக் கலை மதியும் தம் கோன் தொல் குல                                           விளக்காய்த் தோன்றும்

பிடிக் இரு காதின் ஊடு மந்தணம் பேசு மாப் போல்

வடிக்குழை மகரத் தோடு பரிதி வாண் மழுங்கச்                                                       சேர்த்து.   162

762.     மழைக்கும் மதிக்கும் நாப்பண் வானவில் கிடந்தால்                                                       ஒப்ப

இழைக்கும் மா மணி சூழ் பட்டம் இலம்பக இலங்கப்                                                       பெய்து

தழைக்குமா முகிலை மைந்தன் தளை இடல் காட்டு மா                                                       போல்

குழைக்கு நீர்த் தகர ஞாழல் கோதை மேல் கோதை                                                       ஆர்த்து.   163

763.     கற்பகம் கொடுத்த விந்தக் காமரு கலன்கள் எல்லாம்

பொற்ப மெய்ப் படுத்து முக்கண் புனிதனுக்கு ஈறு                                                       இலாத

அற்புத மகிழ்ச்சி தோன்ற அழகு செய்து அமையம்                                                       தோன்றச்

சொல் கலையாளும் பூவின் கிழத்தியும் தொழுது                                                       நோக்கி.   164

764.     சுந்தர வல்லி தன்னைச் சோபனம் என்று வாழ்த்தி

வந்து இருகையும் தங்கள் மாந்தளிர் கைகள் நீட்டக்

கொந்தவிழ் கோதை மாது மறம் எலாம் குடிகொண்டு                                                       ஏறும்

அந்தளிர் செங்கை பற்றா எழுந்தனண் மறைகள்                                                       ஆர்ப்ப.    165

765.     அறைந்தன தூரியம் ஆர்த்தன சங்கம்

நிறைந்தன வானவர் நீள் மலர் மாரி

எறிந்தன சாமரை ஏந்திழையார் வாய்ச்

சிறந்தன மங்கல வாழ்த்து எழு செல்வம்.   166

766.     அடுத்தனல் சுந்தரி அம் பொன் அடைப்பை

எடுத்தனள் ஆதி திலோத்தமை ஏந்திப்

பிடித்தனள் விந்தை பிடித்தனள் பொன்கோல்

உடுத்த நெருக்கை ஒதுக்கி நடந்தாள். 167

767.     கட்டவிழ் கோதை அரம்பை களாஞ்சி

தொட்டனள் ஊர்பசி தூமணி ஆல

வட்டம் அசைத்தனள் வன்ன மணிக்கா

சிட்டிழை கோடிக மேனகை கொண்டாள்.   168

768.     கொடிகள் எனக் குளிர் போதொடு சிந்தும்

வடி பனி நீரினர் விசு பொன் வண்ணப்

பொடியினர் ஏந்திய பூம்புகை தீபத்

தொடி அணி கையினர் தோகையர் சூழ்ந்தார்.     169

769.     தோடு அவிழ் ஓதியர் சோபன கீதம்

பாட விரைப் பனி நீரொடு சாந்தம்

ஏடு அவிழ் மென் மலர் இட்டப் படத்தில்

பாடக மெல்லடி பைப்பய வையா.     170

770.     செம் மலராளொடு நாமகள் தேவி

கைம்மலர் பற்றின கல்வி ஒடு ஆக்கம்

இம்மையிலே பெறுவார்க்கு இது போது என்று

அம்மணி நூபும் ஆர்ப்ப நடந்தாள்.     171

771.     ஒல்கினண் மெல்ல ஒதுங்கினள் அன்பு

பில்கி இருந்த பிரான் அருகு எய்தி

மெல்கி எருத்தம் இசைத்த தலை தூக்கிப்

புல்கிய காஞ்சி புலம்ப இருந்தாள்.

772.     அற்பக இமைக்கும் செம்பொன் அரதன பீடத்து                                                       உம்பர்ப்

பொற்பு அகலாத காட்சிப் புனிதன் ஓடு இருந்த நங்கை

எற்பகல் வலம் கொண்டு ஏகு எரிகதிர் வரையின்                                                       உச்சிக்

கற்பக மருங்கில் பூத்த காமரு வல்லி ஒத்தாள்.  173

773.     பண்ணுமின் இசையும் நீரும் தண்மையும் பாலும் பாலில்

நண்ணும் இன் சுவையும் பூவும் நாற்றமும் மணியும்                                                       அம் கேழ்

வண்ணமும் வேறு வேறு வடிவு கொண்டு இருந்தால்                                                       ஒத்த

அண்ணலும் உலகம் ஈன்ற அம்மையும் இருந்தது                                                       அம்மா.    174

774.     விண் உளார் திசையின் உள்ளார் வேறு உளார்                                              பிலத்தின் உள்ளார்

மண் உளார் பிறரும் வேள்வி மண்டபத்து அடங்கி                                                       என்றும்

பண் உளார் ஓசை போலப் பரந்து எங்கும் நிறைந்த                                                       மூன்று

கண் உளார் அடியின் நீழல் கலந்து உளார் தம்மை                                                       ஒத்தார்.   175

775.     ஆய போது ஆழி அங்கை அண்ணல் பொன் கரக                                                       நீரால்

சேயவான் சோதி ஆடல் சேவடி விளக்கிச் சாந்தம்

தூய போது அவிழ்ச் சாத்தித் தூபமும் சுடரும் கோட்டி

நேயமோடு அருச்சித்து ஐய நிறை அருள் பெற்று                                                       நின்றான்.  176

776.     விண் தலத்து அவருள் ஆதி வேதியன் பாத தீர்த்தம்

முண்டகத் அவனும் மாலும் முனிவரும் புரந்தர் ஆதி

அண்டரும் நந்திதேவு அடுகணத்தவரும் ஏனைத்

தொண்டரும் புறம்பும் உள்ளும் நனைத்தனர் சுத்தி                                                       செய்தார்.

SHIVA KILLIKNG THE MAD ELEPHANT SENT BY JAINS.

–SUBHAM—

TAGS-  தமிழில் மிக நீண்ட வாக்கியம், தி.வி.பு. உவமைகள், உருவகங்கள்-4

Leave a comment

Leave a comment