Post No. 14,757
Date uploaded in London – 13 July 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருவிளையாடல் புராணத்தை (தி வி பு) 1994-ஆம் ஆண்டு முதல் ஆராய்ச்சி செய்து பக்கம் பக்கமாக எழுதிவைத்த எனக்கு இப்போது ஒரு தெளிவான சித்திரம் கிடைத்து விட்டது; வில்சன் என்ற ஆங்கிலேயர் ஏசியாட்டிக் ஜர்னலில் எழுதிய ஆராய்சசிக் கட்டுரையில் 74 பாண்டிய மன்னர்கள் பெயர்களை ஆங்கிலத்தில் கொடுத்துள்ளார்; அது 1963- ஆம் ஆண்டில் வெளியான மீனாட்சிகோவில் கும்பாபிஷேக மலரில் வெளியாகியுள்ளது. அவர் பரஞ்சோதி முனிவரின் தி.வி.பு. விலுள்ளதை அப்படியே கொடுத்துள்ளார்; முனிவரோ கந்த புராணத்தில் உள்ளதை மொழிபெயர்ப்பதாக எழுதியுள்ளார்.
****
ஏற்கனவே நான் கண்டுபிடித்தது :
1.இப்போதுள்ள மதுரையின் வரலாறு 2300 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்குகிறது . மெகஸ்தனிஸ் இதை உறுதி செய்கிறார் ; பிளினி (75 CE), மதுரை தலைநகர் மாற்றம் பற்றிச் சொல்லியுள்ளார்.
2.பாணபத்த்ரன் – வரகுணன் என்பவர் முதலாவது வரகுணன் ; இவர்களை தேவாரத்தில் சம்பந்தர் பாடியுள்ளதால் இவர் ஒன்பதாம் நூற்றாண்டு வரகுணன் இல்லை.
3.மேலும் நரி-பரி லீலையையும், மண் சுமந்த லீலையையும் அப்பர் பாடியுள்ளதால் சம்பந்தருக்கு 200 ஆண்டு முன் வாழ்ந்தவர் மாணிக்க வாசகர்.
4.கடலில் அழிந்து போன தென் மதுரையில் இலங்கை விஜயனும் மந்திரிகளும் பெண் எடுத்ததை மஹாவம்சம் கூறுகிறது . இது நடந்தது 2600 ஆண்டுகளுக்கு முன்னர்.
.jpg)
5.எனது புதிய கண்டு பிடிப்பு
தோற்றுப்போன பாண்டிய மன்னன் யார்?
ஒரிஸ்ஸாவில் 2200 ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சி புரிந்த சமண மன்னன் காரவேலன் மஹா உத்தமன்; நீதிமான்; கட்டிடக் கலைஞன்; கலை ரசிகன் ; இவனைப் பற்றிய அரிய செய்திகளைக் கூறும் ஹத்திகும்பா குகைக் கல்வெட்டு ஒரிஸ்ஸாவில் உள்ளது; பிராகிருத மொழியில், பிராமி லிபியில், 17அடி நீளத்துக்கு பொறித்துள்ளனர் ;பல வரிகள் அழிந்தாலும் பாண்டியர் பற்றிச் சொல்லும் வரிகள் தெளிவாகவே உள்ளது.
அந்தக் கல்வெட்டில் நிறைய நல்ல விஷயங்கள் உள்ளன. இந்தக் கட்டுரைக்குத் தேவையான விஷயங்கள் இரண்டுதான்; 1.அவன் வடக்கிலும் தெற்கிலும் பல மன்னர்களை வென்றான்; ஆந்திரத்திலுள்ள சதகர்ணி மன்னனையும் தமிழ் நாட்டில் பாண்டிய மன்னனையும் வென்றான்; 113 ஆண்டுக் காலமாக இருந்த தமிழக கூட்டணியை (த்ரமிள சங்கடன்) அவன் முறித்து, உடைத்ததாகக் கல்வெட்டு கூறுகிறது இந்தக் கூட்டணியை சேர சோலா பாண்டியர்கள் அசோகனின் கலிங்கப் படை எடுப்பின்போது ஏற்படுத்தி இருக்க வேண்டும் 2.பின்னர் பாண்டிய மன்னனிடமிருந்து சிவப்பு ரத்தினக் கற்கள், முத்துக்கள், உடைகள், பிற பரிசுப் பொருட்கள் கப்பமாக வந்தன . இந்த வரிகள் தெளிவாக இருப்பதால் அறிஞர்கள் எவரும் இதை ஆட்சேபிக்கவில்லை. ஆனால் தோற்றுப்போன பாண்டிய மன்னன் யார் என்றும் சொல்லவில்லை . தி.வி.பு.வில் சமணர் படையெடுப்புகள் பற்றிய செய்திகள் உள்ளன; அவற்றைக் காலக்கணக்கு வரிசையில் வைத்துப் பார்த்தால், இரண்டு பாண்டிய மன்னர்களில் ஒருவர் என்று அடையாளம் காண முடிகிறது.
Hathigumpha Cave Inscriptions
LINE 11
(… lost …) And the market-town (?) Pithumda founded by
the Ava King he ploughs down with a plough of asses; and (he) thoroughly breaks
up the confederacy of the T[r]amira (Dramira) countries of one hundred and
thirteen years, which has been a source of danger to (his) Country (Janapada).
And in the twelfth year he terrifies the kings of the Utarapatha with
(… lost …) thousands of
LINE 13
(… lost …) (He) builds excellent towers with carved
interiors and creates a settlement of a hundred masons, giving them exemption from
land revenue. And a wonderful and marvellous enclosure of stockade for
driving in the elephants (he)(… lost …) and horses, elephants, jewels and rubies
as well as numerous pearls in hundreds (he) causes to be brought here
from the Pandya King.
****
54 பாண்டியர்கள் மாயம் !
தி.வி.பு கதைகள் தொடர்புடைய 20 பாண்டிய மன்னர்கள் பற்றி கதை சொன்ன பரஞ்சோதியார், வேறு 54 பாண்டியர் பெயர்களை மட்டும் சொல்கிறார். ஒருவேளை இவர்களில் ஒருவர் தோற்றுப்போனவராக இருக்க முடியும்.
வெள்ளைக்கார வில்ஸனுக்கு இருந்த அக்கறைகூட நம்மவர்க்கு இல்லை; அவர் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே 74 பாண்டியர்களையும் ஆங்கிலக் கட்டுரையில் எழுதிவிட்டார்.
****
இதோ எனது ஆராய்ச்சி முடிவுகள்:-
குலசேகர பாண்டியன்
கிமு. மூன்றாவது நூற்றாண்டில் இப்போதுள்ள மதுரையை நிறுவினான்.
மலையத்வஜ பாண்டியன் – சூர சேன நாட்டு இளவரசி காஞ்சனமாலாவை மணந்தவன்.
ராணி மீனாட்சி
ஆணவம் என்ற மூன்றாவது முலையுடன் பிறந்தாள்; திக் விஜயம் செய்து ஏழு திசைகளை வென்றாள் ; எட்டாவது திசையில் தோற்றுப்போனாள். தெய்வீக ஆணழகன் சுந்தர பாண்டியனைக் கண்டவுடன் ஆணவம் என்னும் மூன்றாவது முலை மறைந்தது; அவனை மணம் புரியவே குழந்தை பிறந்தது ; காலம் கிமு. மூன்றாவது நூற்றாண்டு. ஆதாரம்- மெகஸ்தனீசின் இண்டிகா என்னும் நூல்.
உக்கிரகுமாரன்
இவனை முதுகுடுமிப் பெருவழுதியுடன் ஒப்பிடலாம் ; அவன் யாக யக்ஞப் பிரியன்; நாடு முழுதும் யாகத்தைச் செய்து யூபஸ்தம்பங்களை நட்டவன். அதே போல உக்கிரகுமாரன் செய்ததாக பரஞ்சோதி செப்புகிறார்; ரகு வம்சத்தில் காளிதாசனும் இவனை வருணிக்கிறார். யாகம் செய்து அவப்ருத ஸ்நானம் செய்ததால் எப்போதும் ஈர வேஷ்டியுடன் தோன்றுவான் என்கிறார் காளிதாஸ். காலம் கிமு. மூன்றாவது அல்லது இரண்டாம் நூற்றாண்டு.
****
வீர பாண்டியன்
வேட்டையாடுகையில் புலி அடித்து இறந்தவன்.
****
அபிஷேக பாண்டியன்
இளம் வதிலேயே பட்டம் ஏற்றான்; இவனை நெடு டுஞ் செழியனுடன் ஒப்பிடலாம் . அவனும் இளம் வயதில் பட்டம் ஏற்றதாக சங்க இலக்கியங்கள் பகர்கின்றன . காலம் கிமு. இரண்டாம் நூற்றாண்டு.
****
விக்ரம பாண்டியன்
இதில்தான் முக்கிய விஷயத்தைப் பரஞ்சோதி தருகிறார். இதுதான் முதல் சமணர் படை எடுப்பு;
சோழர் படையுடன் சமணர் படை நுழைகிறது. ஒரிஸ்ஸாவிலிருந்து வந்தவர் வேண்டுகோளுக்கிணங்கவோ நிர்பந்தத்தாலோ சோழர்கள் வந்திருக்கலாம் ; இதை காரவேலன் படை எடுப்பு என்றும் கருதலாம் ; காலம் கிமு. இரண்டாம் நூற்றாண்டு.
So, this is the period of Kharavelaa’s Invasion ( second century BCE)
****
ராஜசேகர பாண்டியன்
கரிகால் சோழன் சபைப்புலவர் வைத்து ராஜ சேகர பாண்டியனுக்கு கரிகாற்சோழன் போல 64 கலைகளும் தெரியுமா? என்று சவால் விடுகிறான் ; இதன் மூலம் இவன் காலம் கிமு. இரண்டாம் நூற்றாண்டு என்று தெரிகிறது
****
குலோத்துங்க பாண்டியன்
சோழர்களும், கர்நாடக ஆளுப்பா (ஆலவாய்) பாண்டியர்களும் இந்தப் பெயரைப் பிற்காலத்தில் பயன்படுத்திய கல்வெட்டுகள் இருப்பதால் இந்தப் பெயர் உண்மை என்று தெரிகிறது . இவனுக்கு நிறைய மனைவியர் உண்டு .
***
அனந்த குண பாண்டியன்
இவன் சமணர்களுடன் கடுமையான மோதல்களில் ஈடுபட்டவன் . ஆகையால் காரவேலனுடைய காலம் உறுதியாகிறது ; இவை எல்லாம் இரண்டாம் கிமு. இரண்டாம் நூற்றாண்டுச் செய்திகள்.
2200 ஆண்டுகளுக்கு முன்னர் காரவேலன் தமிழ் நாட்டின் மீது படை எடுத்த காலமும் இதுதான். 113 ஆண்டு தமிழக கூட்டணியை அவன் முறித்து, உடைத்தது உறுதியாகிறது. தமிழ்ப் புலவர்கள் மோரியரின் தென் பகுதி முன்னேற்றம் குறித்தும் பாட புத்திரத்தில் கங்கை நதிக்கடியில் நந்தர்கள் தங்கத்தைப் புதைத்து வைத்திருப்பது குறித்தும் பாடியாதாலும் புலவர்களின் வரலாற்று அறிவும் தெளிவிவாகத் தெரிகிறது.
***
விக்ரம பாண்டியன் அல்லது அனந்த குண பாண்டியன் சமண மன்னன் காரவேலன் காலத்தவனாக இருக்க வேண்டும் என்பதே என் கருத்து . அவன் நீதி தவறாதவன் என்பதால் பிடித்த நாடுகளைத் திருப்பிக்கொடுத்துவிட்டுக் கப்பம் மட்டும் பெற்றதை ஹத்திகும்பா கல்வெட்டு ஐயம் திரிபறக் காட்டுகிறது இந்தக் கல்வெட்டினால் தி.வி.பு கதைகளின் மன்னர்களின் காலமும் உறுதியாகிறது.
வாழ்க காரவேலன் ; வளர்க ராஜ நீதி
–சுபம்–
Tags- காரவேலன், ஹத்திகும்பா கல்வெட்டு, 54 பாண்டியர்கள் மாயம், தோற்ற பாண்டிய மன்னன், பெயர்,வில்சன்
Athmanathan Seetharaman
/ July 14, 2025Malayadwaja pandyan must have been a puranic, ancient character confirmed
by Mathsya purana in its very beginning. Meenakshi took her avatar not in
kali yuga. Uggira kumara or murugan can’t be easily defeated as written in
one of the articles. Vaigai or krutamala in Sanskrit is where the malaya
king Shraddha deva or Vaivasvata Manu while taking bath in Vaigai offered
ablutions when Vishnu appeared as small fish in his palm. The rest of the
story is well known. Limiting the history of Tamil and tamil country to
within about 10000 years is unacceptable. This is what the Dravidian
rascals are doing by claiming Keeladi etc as 2500 years old and taking
pride in its recent antiquity with some potsherds and mudpots. Because they
want a Dravidian culture common to AP, Kannada and Malayalam but not Tamil
culture which predates even the Sindhu Valley civilization.
My anxiety is TVP narrative should not be limited to a time limit of a few
millennia.
Athmanathan S