Madurai Temple Vahanas.
Post No. 14,770
Date uploaded in London – 17 July 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அருணகிரி நாதர் முதல் திருப்புகழிலேயே தேவியைப் பாடி விடுகிறார் ; கைத்தல நிறைகனி என்று துவங்கும் கணபதி வாழ்த்தில் அவரைப் புகழும் போது உத்தமி புதல்வன் என்று தேவியைப் புகழ்கிறார் இந்தப்பாட்டில் சிவன், உமை, பிள்ளையார் முருகன் ஆகிய எல்லோர் பெயர்களும் வருவது கவனத்துக்குரியது
****
சக்தி பற்றிய பாரதி பாடல்
18. ஓம் சக்தி
நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப் பூண்.
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம், இவள்
பார்வைக்கு நேர் பெருந்தீ.
வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்த ரெல்லாம்,
தஞ்சமென் றேயுரைப்பீர் அவள் பேர்,சக்தி
ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம். 1
நல்லதுந் தீயதுஞ் செய்திடும் சக்தி
நலத்தை நமக்கிழைப் பாள்;
அல்லது நீங்கும் என்றே யுலகேழும்
அறைந்திடுவாய் முரசே!
சொல்லத் தகுந்த பொருளன்று காண்! இங்கு
சொல்லு மவர் தமையே,
அல்லல் கெடுத்தம ரர்க்கிணை யாக்கிடும்
ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம். 2
நம்புவ தேவழி யென்ற மறைதன்னை
நாமின்று நம்பி விட்டோம்
கும்பிட்டெந் நேரமும் ‘சக்தி’ யென் றாலுனைக்
கும்பிடுவேன் மனமே!
அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
அச்சமில் லாத படி
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம்
ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம். 3
பொன்னைப் பொழிந்திடு, மின்னை வளர்த்திடு,
போற்றி உனக்கிசைத் தோம்.
அன்னை பராசக்தி என்றுரைத் தோம்; தளை
அத்தனையுங் களைந்தோம்;
சொன்ன படிக்கு நடந்திடு வாய், மன
மே தொழில் வேறில்லை, காண்,
இன்னு மதே யுரைப்போம், சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம். 4
வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு
ளாக விளங்கிடு வாய்!
தெள்ளு கலைத் தமிழ் வாணி! நினக்கொரு
விண்ணப்பஞ் செய்திடுவேன்;
எள்ளத் தனைபொழுதும் பயனின்றி
இரா தென்றன் நாவினிலே
வெள்ள மெனப்பொழி வாய்சக்தி வேல், சக்தி
வேல், சக்தி வேல், சக்தி வேல்! 5
இந்தப்பாட்டில் தேவியை வழிபட்டால் என்ன என்ன கிடைக்கும் என்ற பட்டியலைப் பாரதியார் தருகிறார் :
இவளுடைய அருட்பார்வை இருந்தால் தீயில் கருகும் பஞ்சு போல நமது துன்பங்கள் பஸ்மாமாகிவிடும்.
வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க, போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் – என ஆண்டாள் திருப்பாவையில் சொன்னதையும் ஒப்பிடலாம் .
அடுத்ததாக, தேவி வழிபாடு நலத்தை நமக்கு நல்கி அல்லது யாவற்றையும் அகற்றிவிடும் என்கிறார் பாரதி .
அடுத்ததாக, நம்மைக் கட்டிப் பிணைக்கும் பாச பந்தங்கள் எல்லாம் விடுபட்டு முக்தி கிடைக்கும் என்கிறார் .
சக்தியைக் கலைவாணி ரூபத்தில் வழிபட்டால் பாரதி போல நம் நாவிலும் சரஸ்வதி தேவி வெள்ளமெனக் கவிதை பாடும் வாக்கு வன்மையைத் தருவாள் –எள்ளத் தனைபொழுதும் பயனின்றி
இரா தென்றன் நாவினிலே வெள்ள மெனப்பொழிவாய் …..
*****
Madurai Temple Vahanas.
குமர குருபர சுவாமிகளின் சகல கலா வல்லி மாலை
குமர குருபர சுவாமிகளும் சகல கலா வல்லி மாலையில் கடைசி பாடலில் இதையே சொல்லுவதைக் காணலாம்
மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண் கண்ட அளவிற் பணியச் செய்வாய் படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடியுண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ சகல கலா வல்லியே
—குமரகுருபரர் அருளிய சகல கலா வல்லி மாலை.
10. Goddess of all Learning! There are myriads of Gods, and celestial beings like the Creator. But is there one to equal you? Grant me this boon that all monarchs, who rule over the earth, bow unto me the moment I sing my poems.
பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொற் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிது எய்தநல் காய் எழுதாமறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலுமன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலா வல்லியே
6. Goddess of all Learning! You pervade everything: you pervade the Vedas, the five elements, namely, ether, air, water, fire and the earth; you fill the vision and the hearts of Your devotees. Grant me this boon; make me proficient in all the arts whenever I wish. Make me proficient in music, in dance, in learning and in singing sweet poems.
****
கவி பாடும் ஆற்றல் பெற
ஆதிசங்கரரும் கலைமகள் வடிவத்தில் தேவியை வணங்கும் 2 செளந்தர்ய லஹரி பாடல்களில் சரஸ்வதி தேவி நமக்கு நல்ல அறிவினையும் வாக்கு வன்மையையும் கவிபாடும் ஆற்றலையும் தருவாள் என்கிறார் ,
शरज्ज्योत्स्नाशुद्धां शशियुतजटाजूटमकुटां
वरत्रासत्राणस्फटिकघटिकापुस्तककराम् ।
सकृन्न त्वा नत्वा कथमिव सतां संन्निदधते
मधुक्षीरद्राक्षामधुरिमधुरीणाः फणितयः ॥ १५॥
சரஜ்-ஜ்யோத்ஸ்னா ஸுத்தாம் சசியுத-ஜடாஜூட-மகுடாம்
வர-த்ராஸ-த்ராண-ஸ்படிக-குடிகா-புஸ்தக-கராம் i
ஸக்ருன்ன த்வா நத்வா கதமிவ சதாம் ஸன்னிதததே
மது-க்ஷீர-த்ராக்ஷா-மதுரிம-துரீணா: பணிதய: Ii
சரஸ்வதி தேவி சரத்கால சந்திரன் போல ஜொலிக்கிறாள்.இரு கரங்கள் மூலம் பக்தர்களுக்கு வரம் அளிக்கிறாள்; ஏனைய இரு கரங்களில் புஸ்தகத்தையும் ஜபமாலையையும் வைத்துக்கொண்டு காட்சி தருகிறாள் ; சடை முடியில் மணிமகுடத்துடன் பிறைச்சந்திரன் இருக்கிறது அவளை ஒரு முறை வணங்கினாலும் நல்லோர் நாவிலிருந்து திராட்சை ரசம், பால், தேன் ஆகிய வற்றினும் இனிய சொற்கள் மழைபோலப் பொழிவது என்னே (விந்தை)
****
कवीन्द्राणां चेतःकमलवनबालातपरुचिं
भजन्ते ये सन्तः कतिचिदरुणामेव भवतीम् ।
विरिञ्चिप्रेयस्यास्तरुणतरशृङ्गारलहरी-
गभीराभिर्वाग्भिर्विदधति सतां रञ्जनममी ॥ १६॥
கவீந்த்ராணாம் சேத: கமலவன பாலாதப-ருசிம்
பஜந்தே யே ஸந்த: கதிசிதருணா மேவ பவதீம் i
விரிஞ்சி-ப்ரேயஸ்யாஸ்-தருணதர-ஷ்ருங்காரலஹரீ
கபீராபிர்-வாக்பிர்-விதததிஸதாம் ரஞ்சனமமீ ii
உதய சூரிய கால இளஞ்சிவப்புக் கதிர்களின் நிறத்துடையவளே! தாமரை போன்ற மனம் கொண்ட அருட்கவிகள் உன்னைக் கண்டமாத்திரத்தில் வெள்ளமெனக் கவிதை மழை பொழிகிறார்கள் ; இளமையுடன் தோன்றும் கல்வித் தெய்வமான உன்னைத் தரிசித்த மாத்திரத்தில் சபையோரும் வியக்கும் வண்ணம் அலைகடலென சொற்களை வீசும் சக்தியை அறிஞர்கள் பெறுகிறார்கள்.
(பக்தர்கள் மனம் தாமரைக்கு உவமை; சரஸ்வதி தேவி உதய சூரியனுக்கு உவமை; சூரியனைக் கண்ட தாமரை போல மலரும் கவிஞர் உள்ளம் வெள்ளெமெனைக் கவிதைகளை இயற்றி இலக்கிய வித்தகர் நிறைந்த சபையை அசத்துகின்றனர்.
TO BE CONTINUED……………………….
Tags- சரஸ்வதி தேவி, செளந்தர்ய லஹரி, குமர குருபர சுவாமி, சகல கலா வல்லி மாலை, அருணகிரி நாதர் ,சக்தி , பாரதி பாடல், தெள்ளு கலைத் தமிழ் வாணி