பிரிட்டிஷ் மக்களுக்கு மூளை கெட்டுப் போச்சு! டாக்டர்கள் தகவல்!! (Post No.14,791)

Written by London Swaminathan

Post No. 14,791

Date uploaded in London –  23 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

மூன்று சுவையான செய்திகளை பிரிட்டிஷ் இலவச பத்திரிகை மெட்ரோ இன்று 23-7-2025 வெளியிட்டுள்ளது

முதல் செய்தி — பிரிட்டிஷ் மக்களுக்கு மூளை கெட்டுப் போச்சு  ; ஆராய்ச்சியில் கண்ட தகவல்

இரண்டாவது செய்தி — நெப்போலியன் சட்டை பட்டன் ஏலம்

மூன்றாவது செய்தி — சின்னாப்பையன்களின் துப்பாக்கி போட்டி

சீன வைரஸ்சின் அதிகாரபூர்வ பெயர் கோவிட்.19 இது மார்ச்2020  முதல் மார்ச் 2022  வரை உலகையே ஆட்டிப்படைத்து; அச்சறுத்தியது இதில் விந்தை என்னவென்றால் நோய் வந்தவர்களுக்கும் நோயே வராதவர்களுக்கும் ,  இது மூளைப்   பாதிப்பை உண்டாக்கியுள்ளது. ஆயிரம் பேரின் மூளையை படம்பிடித்துப் பார்த்ததில் இந்த உண்மை தெரிந்ததாக நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக மருத்துவப்பள்ளி டாக்டர் தெரிவிக்கிரறார். அதாவது பிரிட்டிஷ் மக்களின் மூளையின் வயது ஐந்தரை மாதம் கூடிவிட்டது; சாதாரண வளர்ச்சியை விட கூடுதல் வேகத்தில் வயதாகிப் போய்விட்டது அதாவது கிழவன் ஆகிவிட்டது. அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் வயதானவர்களும், ஆண்களும் ஏழைகளும்தான் .

ஒரு ஆறுதல்தரும் செய்தி! இதை மாற்றிவிட முடியும் என்று நம்புகிறார்கள் ; நாம் வாழும் சூழ்நிலையை ஆரோக்கியமானதாக மாற்றினால் ஐந்தரை மாத  கிழத்தனம் அகன்றுவிடுமாம் . ஆனால் இதை இன்னும் ஆராய்ச்சியில் நிரூபிக்கவில்லை.

பிரிட்டனில் இரண்டரைக்கோடி மக்களை இந்த சீன வைரஸ் பாதித்தது; இரண்டரை லட்சம் மக்களைக் கொன்றது.

****

நெப்போலியன் பட்டன்

Napoleon Bonaparte, later known as Napoleon I, was born on August 15, 1769, and died on May 5, 1821.

நானும் நீங்களும் தங்க பட்டன் போட்டிருந்தாலும்கூட அதை நகைக்கடையில் கொண்டு கொடுத்தால் இன்றைய தங்கத்தின் விலையை விடக் குறைத்துப் பணம் கொடுப்பார்கள் ; அதிலுள்ள அழுக்கை எடுக்கக் காசு, கூலி,  சேதாரம் என்றெல்லாம் சொல்லி பணத்தைக் கழித்துக் கொடுப்பார்கள் ; இதையே பெரிய ஆட்கள் அணிந்திருந்தால் தங்கத்தின் விலையைப்போல நூறு மடங்கு உயர்த்திப் பணம் கொடுப்பார்கள். நெப்போலியன் சட்டையில் அணிந்த கிளிப் ஏலத்திற்கு வந்துள்ளது £ 5000 / ரூபாய் ஐந்து லட்சத்துக்கு  மேல் எதிர்பார்க்கிறார்கள். எப்போதுமே எஸ்டிமேட்டுக்கு மேலாகவே பணம் கிடைக்கும். இது தேனீ வடிவத்தில் உள்ளது.

வாட்டர்லூ  சண்டையில் தோற்றுப்போன பிரான்ஸ் நாட்டின் மாவீரன்  நெப்போலியனை வெள்ளைக்காரர்கள், அட்லான்டிக் பெருங்கடலிலுள்ள செயின்ட் ஹெலனா தீவில் சிறை வைத்து ஆர்செனிக் விஷம் கலந்த உணவைக் கொடுத்துக் கொன்றார்கள்; அப்போது காவலுக்கு இருந்த ஒரு காவலாளி/ சிப்பாய் அவரது பட்டனை எடுத்துக்கொண்டார். இப்போது அவரது சந்ததியில் வந்த ஒருவர் அதை ஆகஸ்ட் 13ம் தேதி ஏலத்துக்கு விடுகிறார் .

நான் 1990- ம் ஆண்டில் வெர்சாய் பாலசுக்குச் சென்றபோது நெப்போலியன் மேஜை, நாற்காலிகள், டப்பா, கரண்டி பானைகளைப் பார்த்தேன்; மதுரையில் வசித்த காலத்தில் விருந்தினர்களை காந்தி மியூசியத்துக்கு அழைத்துச் சென்று காந்தியின் காலணிகள் (செருப்பு) முதலியவற்றைக் காட்டி மகிழ்வேன். வைதீஸ்வரன்கோவிலுக்குச் செல்லுகையில் காஞ்சி பரமாச்சாரியார் பாதுகைகைளை சங்கர மட்டத்தில் கண்டு வணங்குவேன். பெரியோர்களும் புகழ் பெற்றோரும் அணிந்த எல்லாவற்றுக்கும் மதிப்பு; நாம் ஏலம் விடுவதில்லை; வெளிநாட்டில் எல்லாவற்றையும் ஏலம் விட்டு சம்பாதிப்பது பெரிய பிசினஸ். அதை பார்க்க மியூசியம் வைத்து இருபது பவுண்ட் நுழைவுக் கட்டணமும் வைத்துவிடுவார்கள்!! 

***

கிட்டிப்புல், கவண்கல், கவட்டைப் போட்டி 

சின்ன வயசில் பம்பரம் ஆடுதல் , பட்டம் விடுதல் , பாண்டி, கிளியோ கிளி, கண்ணாமூச்சி, கவட்டை, கவாங் கல் , கோலிக் குண்டு, படம் ஜெயிப்பு, பல்லாங்குழி, வில்-அம்பு, கிட்டிப்புல் (Village Cricket) முதலிய பல விளையாட்டுகளை என்னைப்போல நீங்களும் விளையாடி இருப்பீர்கள்; இப்போது எனது பேரக் குழந்தைகளுக்கு இதைப் பற்றி நான் சொன்னாலும் அதிகம் புரிவதில்லை!! ஆனால் வெளிநாட்டில்  பழைய விளையாட்டுகளுக்குப் போட்டியும் நடத்தி, அவற்றைப் பாதுகாத்து, பெருமைப்ப டுகிறார்கள்; அதில் ஒன்று மூங்கில் குழல் செய்து அதில் பட்டாணி அல்லது சிறு கல்லை வைத்துப் பின்னால் கயிற்றின் மூலம் எரிவதாகும் ; இந்த கிராமப்புற மரக்கட்டைத் துப்பாக்கி குண்டுப் போட்டியில் வென்ற சிறுவனின் படம் லண்டன் பத்திரிகைகளில் வந்து இருக்கிறது .

வருடாந்திர பட்டாணி சுடும் / shoot  செய்யும் போட்டி கேம்பிரிட்ஜ் அருகிலுள்ள விட்க்ஷம் என்னும் இடத்தில் நடந்தது. சிறுவர் பிரிவில் ஒன்பது வயது ஸ்டெல்லன் ஸ்மித் வெற்றி பெற்றான்; 52 ஆண்டுகளாக நடக்கும் இப்போட்டிக்கு அவன் அம்மா மட்டும் வந்தாள்; அப்பா வேறு ஒரு போட்டிக்குப் போய்விட்டார் ; பையன் சுட்டது பட்டாணி வடிவ கல்; அப்பாவோ அவர் வளர்த்த நிஜ பட்டாணிச் செடியைக் காட்ட தோட்டக்கலைக் கண்காட்சிக்குச் சென்றுவிட்டார் !

உண்மையான தமிழர்கள் இதைப்படித்தால் ஆண்டுதோறும் கிராமீய விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பரிசு கொடுக்க வேண்டும் ;நான் என்னுடைய பாட்டியுடன் விளையாடிய பல்லாங்குழி ஆட்ட வகைகள் எனக்கே மறந்து விட்டன

ஜாடி சொன்னா சைன் தானா ? என்று சொல்லி பமபரத்தை குத்தி  விளையாடுவோம் அதன் பொருள் ஆண்டவனுக்கே வெளிச்க்கம்; நான் வளர்ந்தது மதுரை வடக்கு மாசிவீதி யாதவர் தெருவில்!!

–subham—

Tags- நெப்போலியன், பட்டன், கிட்டிப்புல், கவண்கல், கவட்டைப் போட்டி,  பிரிட்டிஷ் மக்கள்,  மூளை கெட்டுப் போச்சு,  டாக்டர்கள் தகவல்

Leave a comment

Leave a comment