கானக ஆஸ்ரமம் பற்றி காளிதாசரின் அற்புத வர்ணனை- 2 (Post No.14,796)

Written by London Swaminathan

Post No. 14,796

Date uploaded in London –  25 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Part Two

குமாரசம்பவ நூலில் ஒரு ஆஸ்ரமக் காட்சி :

காட்டில் வசந்த காலம் துவங்கியது.; மன்மதனுக்கு மகிழ்ச்சி / பெருமை தரும் காலம் அது. ஆனால் புலன்களைக் கட்டுப்படுத்தும் யோகிகளுக்கு அது எதிரிடையாகச் செயல்பட்டது .3-24

மான் குட்டிகளுக்கு கைப்பிடி கானக தானியத்தைக் கொடுக்கவே அவை நம்பிக்கையுடன்/ அஞ்சாமல் அவள் அருகில் வந்தன. உமாவும் தன்னுடைய கண்களுடன் அவற்றின் கண்களை ஒப்பிட்டுப் பார்த்து வியந்தாள் 5-15 .

(பெண்களுக்கு மான்விழி என்ற வருணனை தமிழ் இலக்கியத்திலும் உள்ளது ).

துறவிகளும் அவளைக்கான வந்தனர்; அவள் ஸ்நானம் செய்துவிட்டு தழை உடைகளை அணிந்திருந்தாள் . ஆன்மீக சாதனைகளை புரிந்தோருக்கு வயது என்பது ஒரு பொருட்டல்லவே  5-16

அந்த தபோவனம் புண்ய பூமியானது ; சண்டைபோடும் வன விலங்குகளும் சாதுவாகின. விருந்தினருக்கு மரங்களே விரும்பிய பழங்களை பரிசாக அளித்தன. புதிதாக அமைக்கப்பட்ட பர்ணசாலைகளில் யாகத்தீ மூண்டெழுந்தது 5-17

இந்த ஸ்லோகத்தில் தபோவனம் என்ற சொல் வருகிறது ; தவசிகள் நிறைந்த அல்லது தவங்கள் செய்ய உகந்த கானகம் என்பது இதன் பொருள்.

உமாவுக்கு தவசிகள் செய்யும் சாதாரண தவசு பலன் தராது என்று எண்ணி பஞ்சாக்கினி தவம் செய்யத்தொடங்கினாள் . அதாவது நாற்புறமும் தீயை எழுப்பி, சூரியனின் தகிக்கும் வெய்யிலை ஐந்தாவது அக்நியாக வைத்துக்கொண்டு கடும் தவம் இயற்றினாள் உமை.5-20

****

சாகுந்தல நாடகம் உலகப்புகழ் பெற்றது சகுந்தலா என்றால் பறவைப் பெண் BIRD GIRL என்று பொருள் ; அதிலிருந்துதான் சகுனம்/ பறவை சாஸ்திரம் வந்தது . அவள் ஒரு கானகப் பெண் என்பதால் நாடகம் முழுதும் காட்டிடையேயுள்ள ஆஸ்ரமத்தை காளிதாசன் படம் பிடித்துக் காட்டுகிறான். ஆஸ்ரமத்தைச் சுற்றிலும் மரங்களும் மல்லிகைக் கொடிகளும், மல்லிகை வகைச் செடிகளும் உள்ளன . அவைகளுக்குப் பெயர்களும் சூட்டப்பட்டுள்ளது . அங்கே குயில்களும் சார்வாகப் பறவைகளும் மான்களும் உலவுகின்றன

துஷ்யந்தனிடம் சேருவதற்காக சகுந்தலை புறப்படும்போது ஆஸ்ரமம் உள்ள கானகம் காட்சி   தர்க்கிறது

நாடகத்தின் முதல் காட்சியிலும் நாலாவது காட்சியிலும் வருணனைகள் உள்ளன . அதிலுள்ள முக்கிய அம்சங்கள் இதோ:-

அரசன் தபோவனத்துக்குள் நுழைந்தவுடன் இது ஒரு தபோவனமாகத்தான் இருக்கும் என்கிறான். உடனே தேரோட்டி நீங்கள் ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? என்று கேட்டவுடன் அரசன் தபோவனத்தை வருணிக்கிறான் : மரங்களில் கிளிகள் வசிக்கும் பொந்துகளிலிருந்து விழும் நீவாரா அரிசி மரத்தடியில் சிதறிக் கிடக்கின்றன.

இங்குடிக்   கொட்டைகளைத்  தட்டி உடைத்து எண்ணெய் எடுத்த கற்கள் பளபளப்புடனும் எண்ணெய்ப் பசையுடனும் காணப்படுகின்றன.

ரிஷிகள் பயன்படுத்தும் காட்டு அரிசி இயற்கையில் காடுகளில் வளர்வதாகும் அவர்கள் உடலில் பூசவும் விளக்கெரிக்கவும் இங்குடி  கொட்டை எண்ணெயை பயன்படுத்தினர்.

இங்குடி என்பதன் தாவரவியல் பெயர் Iṅgudī (इङ्गुदी) is a Sanskrit word translating to “zachum oil plant”, a tree from the Zygophyllaceae family of plants, and is used throughout Ayurvedic literature such as the Caraka-saṃhitā. The official botanical name of the commonly used plant species is Balanites roxburghii.

ரதத்தின் சப்தத்துக்கு அஞ்சாமல் மான்கள் உலவுகின்றன .

மரவுரிகளிலிருந்து தண்ணீர் சொட்டிக்கொண்டிருக்கிறது .

மரங்களைச் சுற்றியுள்ள பாத்திகளில் நீர் பாய்ந்து கொண்டிருக்கிறது; ஆசிரமத்திலிருந்து யாகப்புகை வந்துகொண்டிருக்கிறது. தர்ப்பைப் புதர் அழகாக வெட்டப்பட்டுள்ளது[ அங்கே மான்கள் அஞ்சாமல் நடக்கின்றன . சகுந்தலையிடம் தோழி அனசுயா சொல்கிறாள்:

உன்னை வளர்த்தது போலவே உன் தந்தை கண்வர் வளர்த்தாரே அந்த மாதவியை மறந்து விட்டாயா ?

அதற்கு சகுந்தலை சொல்லும் பதிலில், அந்த மல்லிகை/ மாதவிச் செடியை சகோதரிபோல நேசிப்பதாகச் சொல்லி தண்ணீர் விடுகிறாள். ஆஸ்ரமத்தைச் சுற்றி செடி கொ டிகளை ரிஷி முனிவர்களே வளர்த்தது இதிலிருந்து தெரிகிறது  கண்வரும் செடிக்குத் தண்ணீர் விடாமல் நீ சாப்பிடமாட்டாயே என்கிறார்

 அவள் ஆஸ்ரமத்தை விட்டு, மன்னன் அரண்மனைக்குச் செல்லலும் நாளில் பறவைகளும் மிருகங்களும் எப்படிச் செயலற்றுப்போயின என்பதிலிருந்து நமக்கு ஆஸ்ரமக் காட்சி தெரிகிறது.

அவள் பிரிந்து போவது கண்டு மான்கள் சாப்பிடவில்லை, குயில்கள் பாடவில்லை; மயில்கள் ஆடவில்லை

கண்வ மகரிஷி ஆறுதல் சொல்லும்போது “கவலைப்படாதே இந்த மல்லிகைக்  கொடிக்கு அருகில் மாமரம் வைத்து ஜோடி ஆக்கி விடுகிறேன்” என்று.

தாவரங்கள், பிராணிகள் மீது மக்களுக்கு இருந்த அன்பினையும் குறிப்பாக ஆஸ்ரமத்தில் நிலவிய அமைதியான அழகான சூழ்நிலையையும் இவை எல்லாம் நமக்குப் படம்பிடித்துக் காட்டுகின்றன.

சங்கத் தமிழ் இலக்கியத்திலும் செடியை சகோதரி என்று கருதி அதற்கு அடியில் காதலனுடன் கொஞ்சிக்குலாவக் கூட தமிழ்ப்பெண் ஒருத்தி மறுத்து விடுகிறாள். அதாவது, சகோதரிக்கு முன்னர் நான் வெட்கமில்லாமல் எப்படிக் கொஞ்சிக்  குலாவுவது? என்கிறாள். பிராணிகளுக்கும் தாவரங்களுக்கும் மனிதர் போல உணர்வுகள் உண்டு என்ற விஞ்ஞான உண்மையை காளிதாசனும் அவருக்குப் பின்னர் வந்த சங்கப் புலவர்களும் நன்றாக உணர்ந்திருந்தனர்.

கங்கைக் கரையிலுள்ள ரிஷி முனிவர்களின் ஆஸ்ரமங்களைக்  காண வேண்டும் என்று ராமனிடம் சீதா தேவி தெரிவிக்கும் ஆசை ரகுவம்சத்தில் வருகிறது காளிதாசன் பயன்படுத்தும் சொற்கள் – பாகீரதி தீர தபோவனானி — சீதை சொல்லும் அடைமொழிகள் — ஹம்சங்களினால் சாப்பிடப்பட்ட நீவாரா தான்யமாகிய உணவை உடையவைகளும் ஸ்நேஹத்தோடு கூடிய வானப்பிரஸ்தர்களின் பெண்களை உடையவைகளும்  அழகிய தர்ப்பையை உடையவைகளும்  ஆன தபோவனங்கள் …….

ரகுவம்ச 14-ஆவது சர்க்கத்தில் வரும் ஸ்லோகங்களில் மீண்டும் மயில்கள் ஆடவில்லை, குயில்கள் பாடவில்லை மான்கள் சாப்பிடவில்லை என்று வால்மீகியின் தபோவனத்தை வருணிக்கிறார்

காளிதாசன் வருணிக்கும் தபோவனங்கள் – வால்மீகி, வசிஷ்டர், கண்வர்;    ஸ்யவனர், அகஸ்தியர், சாதகர்ணி, சாரங்க, மரீசி முதலிய ரிஷிகளின் ஆசிரமங்கள்

.—SUBHAM—

TAGS– தபோவனம்., ரிஷி, கானகம், ஆஸ்ரமம், காளிதாசன், அற்புத வர்ணனை, PART-2

Leave a comment

Leave a comment