
WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,795
Date uploaded in London – —25 July 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
4-6-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
உபரத்தினங்கள் வரிசை!
துணிவைப் பெற ‘டைகர்ஸ் ஐ’ (Tiger’s Eye) அணியலாமே!
ச. நாகராஜன்
துணிவுக்கு ஒரு உபரத்தினம் டைகர்ஸ் ஐ என்று கூறலாம்.
பெயருக்கு ஏற்றபடி இது வலுவான தைரியமான ஆற்றலை உருவாக்கும்.தன்னம்பிகையை ஏற்படுத்தும். சூரியனின் ஆதிக்கத்தைக் கொண்ட கல் இது.
இது ஒருவகையான க்வார்ட்ஸ் கல். சால்ஸ்டோனி (Chalcedony Family) குடும்ப வகையைச் சார்ந்த இது ஒளி விடும் ஒரு கல். சிவப்பும் பழுப்பும் கலந்த வர்ணமும் கருமையும் ஒரு தனித்த காட்சியை அளிக்கும்,
பழைய காலத்தில் எகிப்திய மன்னர்களும் குருமார்களும் மார்பில் இதை அணிவது வழக்கம். அவர்கள் ஆற்றிய அற்புதங்களுக்கு இந்தக் கல்லே காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனுடைய அளவு கடந்த சக்தியினால் அந்தக் காலத்தில் இதன் விலை தங்கத்தின் விலையை விட அதிகமாக இருந்தது.
இதை வீட்டில் பூஜை அறையில் வைக்கலாம் அல்லது வீட்டின் நடுவில் வைக்கலாம். அப்போது வீடு முழுவதும் பிராணசக்தி உருவாகும்.
எதிர்காலத்தைச் சிறப்பானதாக ஆக்கும் இந்தக் கல் இடது பக்க மூளையையும் வலது பக்க மூளையையும் ஒருங்கே செயல்படுத்தும் தன்மை வாய்ந்த ஒன்றாகும்.
உணர்ச்சிகளை சமனப்படுத்தி, கவலை, பயம் ஆகியவற்றை நீக்கி ஆற்றலை நல்ல செயலுக்குப் பயன்படுத்த இது வழிவகை செய்கிறது.

இதை அடிக்கடி சுத்தம் செய்தல் வேண்டும். இதன் மேல் அழுக்கு படிந்திருந்தால் தண்ணீரில் நனைத்து அதை நீக்கலாம். நிலவொளியில் வைக்கலாம். அல்லது உங்கள் வீட்டில் வளரும் மரத்தின் வேர்பாகத்தில் வைத்து இதன் சக்தியை அதிகரிக்கலாம்,
சீன வாஸ்து கலையான பெங்சுயியில் யின் – யாங் எனப்படும் சமநிலை சக்தியை இது உருவாக்கும்,
தனி மனிதனுக்கு உள்ள கண் நோய், முதுகு வலி போன்றவற்றை நீக்கும்.
மிதுன ராசிக்காரர்களுக்கான விசேஷ கல் இது.
டைகர்ஸ் ஐயில் பலவித ரகங்கள் உண்டு.
ஆக்ஞா சக்கரத்தையும் மூன்றாவது கண்ணையும் தூண்டி விடக் கூடிய இதை அணிந்தால் ஆன்மீக சக்தியும் அதிகரிக்கும்.
நம்பகமான கடைக்காரரிடம் இதை வாங்கி உங்களுக்குப் பிடித்த வகையில் மார்பில் செயினில் பதித்தோ வேறு விதமாகவோ இதை அணியலாம். வலது கையில் ப்ரேஸ்லெட்டில் இதை அணியலாம். அல்லது பர்ஸிலோ, பையிலோ பத்திரமாக வைத்துக் கொள்ளலாம்.
**உபரத்தினங்கள் வரிசையில் ஓபல் பற்றிய கட்டுரையை 6-5-25 வெளியீட்டில் காணலாம்.