காளிதாசன் காவியங்களில் சிவ பெருமான் -1 (Post.14,800)

Written by London Swaminathan

Post No. 14,800

Date uploaded in London –  26 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

காளிதாசன் நூல்கள்

ரகுவம்சம் – ரகு

மேகதூதம் -மேக

குமாரசம்பவம் – குமா

சாகுந்தலம் – சாகுந்த

மாளவிகாக்னிமித்ரம் –  மாளவிகா

விக்ரமோர்வசீயம் – விக்ரம

ருதுசம்ஹாரம் – ருது

காளிதாசனுக்கு மிகவும் பிடித்த தெய்வம் சிவபெருமான் . ஆயினும் அவன் பிரம்மா, விஷ்ணு ஆகிய தெய்வங்களையும் மிகவும் போற்றிப்   புகழ்ந்துள்ளான்

கணபதி பற்றிய குறிப்போ, லிங்கம் பற்றிய குறிப்போ இல்லை; இது  அவரது காலத்தைக் காட்டும் முக்கியக்கு றிப்புகள்.

அவன் சிவனுக்குப் பயன்படுத்திய சொற்கள்

ஈச, ஈஸ்வர, மஹேஸ்வர, பரமேஸ்வர, அஷ்டமூர்த்தி, வ்ருஷபத்வஜ, சூல ப்ருத், பசுபதி, த்ர யம்பக , த்ரி நேத்ர, அயுக்ம நேத்ர ஸ்தாணு, நீல லோஹித, நீல கண்ட, சிதிகண்ட, விஸ்வேஸ்வர, சண்டேஸ்வர, மஹாகால,  சம்பூ, கிரீச, ஹர, பூதேஸ்வர, பூதநாத , சங்கர, சிவ, பினாகி.

காளிதாசன் காலத்தில் கோவில்கள் இருந்தன. உஜ்ஜயினியில் இருந்த சிவனுக்கு மஹாகால என்று பெயர்; இந்த சிவனை அவன் குறிப்பிடுகிறான். இது ஜ்யோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்று. காசியிலுள்ள விஸ்வநாதர், கோகர்ணத்திலுள்ள சிவ பெருமான் ஆகியோரையும் அவன் பாடியுள்ளான்.

அஷ்டமூர்த்தி/ எண்குணத்தான் என்ற சொல் ரகுவம்சம், சாகுந்தலம், மாளவிகாக்நிமித்ரம் ஆகிய நூல்களில் வருகிறது .

சிவனைப்பற்றிய பெயர்கள் எல்லாம் பிற்கால புராணங்களில் சொல்லப்பட்ட கதைகளுக்கு ஆதாரமாக உள்ளன. சிவன் விஷத்தைக் குடித்து தேவர்களைக் காப்பாற் றியபோது பார்வதி தடுக்கவே கழுத்தில் விஷம் தங்கியது, மற்றும் அவனுக்கு மூன்று கண்கள் உண்டு; பூத கண ங்களுடன் அவன் மயானத்தில் வசிப்பான் முதலிய எல்லா விஷயங்களும் அவன் பெயர்கள் மூலம் தெரிகிறது.

இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது இவை எல்லாம் சங்க இலக்கியங்களில் இருப்பதாகும் அவை காளிதாசன் காவியங்கள் மூலம் தமிழ் நாட்டில் புகுந்தன என்பதில் ஐயமில்லை.

படைத்தல், காத்தல், அழித்தல் மூன்றுக்கும் காரணமானவன்; யோகிகள் அவனைத் தியானித்த வண்ணம் உள்ளனர் அவன் பிறவா யாக்கைப் பெரியோன் ; கடவுளில் மிகப்பெரிய மகேஸ்வரன்; உடல் முழுதும் விபூதி; பாம்புகளே அவனது ஆபரணம் ; பூதங்களே சேவகர்கள்  – இப்படிக் காளிதாசன் புகழ்கிறான்;  தோற்றமும் தேவார திருவாசக வருணனைகளை ஒத்துள்ளன ; குமார சம்பவத்தில் அவனது முழுத்  தோற்றத்தையும் காண்கிறோம் . அவனது வாகனம்கொடி எல்லாம் புறநானூற்றிலேயே  உள்ளன.

பிரபல கலை வரலாற்று நிபுணர் சிவராம மூர்த்தி ,காளிதாசன் காலத்தை நிர்ணயிக்க ஒரு அருமையான விஷயத்தைக் கூறுகிறார் எப்படி இலக்கியம் இன்றேல் இலக்கணம் இல்லை என்று நாம் சொல்கிறோமோ அப்பாடி இலக்கியம் இல்லையேல் சிற்பங்கள் இல்லை என்பது அவரது வாதம் ஆகவே குப்தர் கால சிற்பங்களும் அதற்கு முந்திய சிற்பங்களும் காளிதாசன் வருணனையில் பிறந்தவையே விக்ரமாத்தித்தன் காலத்தில் இவன் வருணித்தது பின்னர் சிற்பங்களாக உருவாகின.

அர்த்த நாரீச்வரன் – பாதி சிவன், பாதி சக்தி– ஆணும் பெண்ணும் சமம்- என்ற உருவமும் அவன் பாடலில் மறைமுகமாக உள்ளன. ரகு வம்ச காவியத்தின் முதல் ஸ்லோகம் பார்வதி பரமேஸ்வரன்  சொல்லும் பொருளும் போல பிரிக்க முடியாதவர்கள் என்கிறது . கடவுளர்களில் எளிதில் திருப்தி அடைப  ன் ஈசன் என்பதால் அவனை வேண்டி எல்லோரும் வரம் பெற்றனர்; இதனால் அவனை ஆசுதோஷ் என்பர். காளிதாசன் இதை ஸ்திர பக்தி யோக சுலபஹ என்று விக்ரமோர்வசீயத்தில் போற்றுகிறான் . அவன் கலையிலும் வல்லவன் என்பதை அவனது நடனமும் உடுக்கை கருவியும் காட்டுகின்றன

ஹிந்தி மொழியில் காலத்தால் அழியாத ராமசரித மானஸ காவியத்தை இயற்றிய துளசிதாசரும் கூட சிவனைத்தான் கடவுள் வாழ்த்தில் வைக்கிறார் . இதை சங்க இலக்கிய கடவுள் வாழ்த்திலும் திருக்குறள் கடவுள் வாழ்த்திலும் காண்கிறோம் (எண்குணத்தான்)

****

ரகு வம்சத்தில் அவன் கடவுள் வாழ்த்தாகப் பாடிய முதல் ஸ்லோகத்தை அறியாதவர் இல்லை.

வாகார்த்தாவிவ சம்ப்ருக்தௌ வாகர்த்தப் ப்ரதிபத்தயே |

ஜகதப் பிதரௌ வந்தே பார்வதி பரமேஸ்வரௌ”

– ரகுவம்ஸம் 1-1

இதன் பொருள்:

“சொல்லும் பொருளும் எப்பொழுதுமே பிரிக்க முடியாதது போல, இந்த உலகத்தின் தந்தையான பார்வதி பரமேஸ்வரர்களை வணங்குகிறேன்”

(சொல்லும் பொருளும் போல சேர்ந்திருப்பவர்களும் உலகத்திற்குத் தாய் தந்தையாக இருப்பவர்களுமான பார்வதி பரமேஸ்வரனை, சொல், பொருள் இவைகளை அறியும்பொருட்டு வணங்குகிறேன்.)

காளிதாசனில் சிவ வழிபாடே மேலோங்கி நிற்கிறது ; பிள்ளையார்  வழிபாடு இல்லை ; லிங்கம் பற்றிய குறிப்பும் இல்லை; இவை எல்லாம் சங்க இலக்கியத்துடன் ஒத்துப்போகின்றன ; மாணிக்கவாசகருடன் ஒத்துப்போகின்றன. சிவன் என்ற சொல்லையும் அரிதே பயன்படுத்தி இருக்கிறார் சங்க காலத்தில் சிவன் என்ற சொல் கிடையாது ; ஆகவே காளிதாசன் விக்ரமாதித்தன் காலத்தவன் ( 54  BCE)  என்பதும் மாணிக்க வாசகர் சங்க காலத்தை ஒட்டி வாழ்ந்தவர் என்பதும் வெள்ளிடை மலை என விளங்கும் . முதல் முதலில் சிவபுராணம் என்ற தலைப்பில் தமிழர்களுக்கு சிவனை அறிமுகப்படுத்தியவர் மாணிக்க வாசகர் என்றே கருத வேண்டியுள்ளது.

(சிவன் மண் சுமந்த லீலை, நரி-பரி லீலைகளை அப்பரும் சம்பந்தரும் பாடியதையும் , தமிழ் திருவிளையாடல் புராணங்களுக்கெல்லாம் மூல நூல்களான சம்ஸ்க்ருத திருவிளையாடல் புராணங்களில் மாணிக்கவாசகருக்குப் பின்னரே சம்பந்தரை வைத்து இருப்பதையும் முந்திய கட்டுரைகளில் ஆதாரத்துடன் காட்டிவிட்டேன்.)

எப்படி ரிக் வேதத்தில் சிவன் பற்றிய வருணனைகளை ருத்ரன் என்ற ரூபத்தில் கொடுத்துவிட்டு யஜுர் வேத்த்தில் முதல் முதலில் நம சிவாய வருகிறதோ அதே போல சங்க இலக்கியத்தில் இல்லாத சிவன் என்ற சொல் பக்தி இலக்கிய காலத்தில் கொடி கட்டிப் பறந்தது வள்ளுவன் கூட கணபதியைப் பாடாமல் எண்குணத்தான்/ அஷ்டமூர்த்தி  என்ற சொல்லால் சிவனைப் பாடினார் .

ஒரு முக்கியமான விஷயத்தை மனதில் வைத்துக்கொண்டு இவற்றைப் படிக்க வேண்டும். ஒரு விஷயத்தைக் குறிப்பிடாததால் அது அக்காலத்தில் இல்லை என்று எண்ணிவிடக்கூடாது . எடுத்துக் காட்டாக தமிழ் நாட்டில் 300 சைவ கோவில்களில் லிங்கங்கள் இருந்தபோதும் மாணிக்க வாசகரோ, காளிதாசரோ அதைக்  குறிப்பிடவில்லை அது அப்போது பேச்சு வழக்கில், பிரசாரத்தில் இல்லை என்பதே பொருள்.; லிங்க வடிவிலுள்ள கயிலையை அவர்கள் பாடிப் பரவியதை மறந்துவிடக்கூடாது.

ஆதிரையான்,ஆலமர் செல்வன், ஆனேற்றுக் கொடியுடையான் (விடைக்கொடியோன்), , ஈசன்,ஈர்ஞ்சடை அந்தணன், காலக் கடவுள், தாழ்சடைப் பெரியோன், நீலமேனி வாலிழைபாகத்து ஒருவன், மணிமிடற்றன், முக்கட் செல்வன்,  

என்ற பெயர்களில் சிவ பெருமானை சங்கப்புலவர் அழைத்தனர்

அப்பரும் சம்பந்தரும் கூட பாடல்களின் இடையேதான்  கணபதியை வைத்தனர்; கடவுள் வாழ்த்துப்போல பாடவில்லை .

எப்படி சங்க இலக்கிய கடவுள் வாழ்த்துக்களில் சிவபெருமான் ஆதிக்கம் செலுத்துகிறாரோ அதைக் காளிதாஸனிலும் காணலாம்.

காளிதாசன் குப்தர் காலத்துக்கு முன்னர் வாழந்ததும் அவர் சிவனையே முக்கியமாகப் பாடியதிலிருந்து தெரிகிறது; ஏனெனில் குப்தர்கள் தங்களைப் பரம  பாகவதர் என்று அழைத்துக் கொண்டனர் அதாவது விஷ்ணு பக்தர்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டனர்.

To be continued……………………………………….

Leave a comment

Leave a comment