தலை கீழாகத் தொங்கிய முனிவர்கள்! காளிதாசன் தரும் அற்புதத் தகவல் (Post No.14,810)

Research Article Written by London Swaminathan

Post No. 14,810

Date uploaded in London –  29 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ரிஷி முனிவர்கள் எப்படியெல்லாம் தவம் செய்தனர்? காளிதாசன் தரும் அற்புதத் தகவல்

காளிதாசன் எழுதிய ஏழு நூல்களில் உள்ள அதிசய விஷயங்களைத் தொடர்ந்து காண்போம் .

காளிதாசன் பாடிய ரிஷிகள் :

வால்மீகி , வசிஷ்டர், கண்வர், அகஸ்தியர் , சாதகர்ணி, சரபங்க , சுதீக்ஷ்ணர், மரீசி .

ரகுவம்சம் எட்டாவது சர்க்கத்தில் அஜன் என்ற மன்னனின் தந்தை ரகு எப்படி இருந்தார் என்று காளிதாசன் வருணிக்கிறார் . அவன் மோட்சத்தை அடைவதற்காக  அறிவுபெற்ற யோகிகளுடன் சேர்ந்தான் . ஐம்புலன்களை அடக்கினான் ; ஞானத் தீயினால் பிறப்புக்குக் காரணமான வினைகளை அழித்தான்

இதைப்  படிக்கும் போது மாணிக்கவாசகரின் சிவபுராணப் பாடலில் வரும் மாயப்பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி என்பதும் திருமூலரின் முன்னை வினையை களையும் பாடல்களும் நினைவுக்கு வரும்

கடவுள் அருளால் முன்னை வினையின் முடிச்சை அவிழ்க்கலாம்-

தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்

முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்

பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்

சென்னியில் வைத்த சிவன் அருளாலன்றே

— திருமந்திரத்தில் திருமூலர்

***

स किलाश्रममन्त्यमाश्रितो निवसन्नावसथे पुराद्बहिः|

समुपास्यत पुत्रभोग्यया स्नुषयेवाविकृतेन्द्रियः श्रिया॥ ८-१४

sa kilāśramamantyamāśrito nivasannāvasathe purādbahiḥ|

samupāsyata putrabhogyayā snuṣayevāvikṛtendriyaḥ śriyā || 8-14

மன்னன் ரகு சன்யாசம் ஏற்ற பின்னர்,  நகருக்கு வெளியே வசித்தான்; நாட்டு விஷயங்களை காதில் போட்டுக்கொள்ளவில்லை. கானகத்திலுள்ள பழங்களையும் பூக்களையும் தண்ணீரையும் சேகரிப்பதில் பொழுதைச் செலவிட்டான் . ராஜ்யம் முன்னர் மனைவியின் ஸ்தானத்தில் இருந்தது இப்பொழுது நாட்டுப்பெண் ஸ்தானத்தை அடைந்துவிட்டது .

காளிதாசனின் அருமையான உவமைகளில் இது ஒன்று.  முன்னர் தான் அனுபவித்த நாட்டினை இப்பொழுது மருமகள் மாதிரி நினைத்து அவன் ஒதுங்கிவிட்டான் .

முனிவர்களின் வேலைகளில் ஒன்று, காய் கனிகளைத் திரட்டுவது, யாகத்துக்கான அரசமர, பலாச மரக்குச்சிகளைச் சேகரிப்பது, இங்குடி எண்ணெய் எடுப்பது ஆகியன ஆகும்.. மீதி நேரம் எல்லாம் தவத்தில் ஈடுபட்டனர்.

சாகுந்தல நாடகத்தில் மரீசி முனிவரின் தவத்தை வருணிக்கிறார் ;தனது உடலுக்கு என்ன நேர்ந்தது என்பதே அவருக்குத் தெரியாது; ஆழ்ந்த தவத்தில் இறங்கிய அவருடைய உடல் மரக்கட்டை போல இருந்தது. அவர் உடல் அசையாமல் இருந்ததால் அவரைச் சுற்றி எறும்புகள் புற்று எழுப்பி பாதி உடலை மறைத்தன. புற்றிலுள்ள பாம்புகள் அவர் மார்பில் பாம்புத் தோலை விட்டிருந்தன; தலையில் இருந்த ஜடாமு டியில் பறவைகள் கூடு கட்டின -சாகு.7-11

Matali. (Pointing by the hand) Where the sage unshaken like a post remains facing the Sun’s disc, with his body half buried in an ant-hill, with his chest having a snake’s slough stuck up, pressed very hard at the neck by the circular twine of dried creepers and bearing a load of matted hair hanging down to his shoulders and abounding in the nests of birds.

ரிஷி முனிவர்கள் செய்யும் தவங்களில் ஒன்று பஞ்சாக்னி எனும் ‘ஐந்து தீ தவம் ஆகும்; தன்னைச் சுற்றி நான்கு புறங்களிலும் தீயை மூட்டிவிட்டு சூரியனின் ஒளியை ஐந்தாவது தீயாகப் பாவித்து கடும் வெப்பத்தில் தவம் செய்வது பஞ்சாக்னி தவம் ஆகும். சிவ பெருமானை அடைவதற்காக உமாதேவி இந்த தவத்தைச் செய்தது குமார சம்பவ காவியத்தில் வருகிறது .

****

தலைகீழாகத் தொங்கிக்கொண்டு தவம் செய்யும் முனிவரின் வருணனை  ரகுவம்ச 15-49 பாடலில் உள்ளது.

अथ धूमाभिताम्राक्षम् वृक्षशाखावलम्बिनम्।

ददर्श कंचिदैक्ष्वाकस्तपस्यन्तमधोमुखम्॥ १५-४९

atha dhūmābhitāmrākṣam vṛkṣaśākhāvalambinam |

dadarśa kaṁcidaikṣvākastapasyantamadhomukham|| 15-49

****

மேலும் பல முனிவர்களின் வருணனை ரகுவம்சத்திலுள்ளது;

13–ஆவது சர்க்கத்தில் வரிசையாக வருகிறது.

पुरा स दर्भाङ्कुरमात्रवृत्तिः

चरन्मृगैः सार्धमृषिर्मघोना।

समाधिभीतेन किलोपनीतः

पञ्चाप्सरोयौवनकूटबन्धम्॥ १३-39

purā sa darbhāṅkuramātravṛttiḥ

caranmṛgaiḥ sārdhamṛṣirmaghonā |

samādhibhītena kilopanītaḥ

pañcāpsaroyauvanakūṭabandham || 13-39

தர்ப்பைப்புல் செடியின் குருத்துக்களை மட்டுமே உணவாகக் கொண்டார் சாதகர்ணி ; அவருடைய தவத்தைக் கலைக்க ஐந்து அப்சரஸ் அழகிகளை இந்திரன் அனுப்பினான்.

****

हविर्भुजामेधवताम्चतुर्णाम्

मध्ये ललाटंतपसप्तसप्तिः।

असौ तपस्यत्यपरस्तपस्वी

नाम्ना सुतीक्ष्णश्चरितेन दान्तः॥ १३-४१

havirbhujāmedhavatāmcaturṇām

madhye lalāṭaṁtapasaptasaptiḥ |

asau tapasyatyaparastapasvī

nāmnā sutīkṣṇaścaritena dāntaḥ || 13-41

இது சுதீக்ஷ்ண முனிவரின் ஆஸ்ரமம்; அவர் பஞ்சாக்கினி தவம் செயற்வதைப்பார் (விமானத்தில் இருந்தவாறே ராமபிரான், சீதைக்கு ஒவ்வொரு முனிவர் பற்றியும் சொல்லும் சர்கம் இது)

***

एषोऽक्षमालावलयम्मृगाणाम्

कण्डूयितारम्कुशसूचिलावम्।

सभाजने मे भुजमूर्ध्वबाहुः

सव्येतरम्प्राध्वमितः प्रयुङ्क्ते॥ १३-४३

eṣo’kṣamālāvalayammṛgāṇām

kaṇḍūyitāramkuśasūcilāvam |

sabhājane me bhujamūrdhvabāhuḥ

savyetaramprādhvamitaḥ prayuṅkte || 13-43

இதோ சுதீக்ஷ்ணர் எனக்கு மரியாதை தெரிவிக்க கையை உயரே தூக்குகிறார். அவர் கைகளில் ருத்ராக்ஷ வளையல் அணிந்துள்ளார் மான்களை சொரிந்து கொடுப்பதும் தர்ப்பபைப் புல் சேகரிப்பதும் அவர் செய்யும் பணி. 

****

அவர் மவுனத்தைக் கடைப்பிடிப்பதால் தலையை அசைத்து எனது வருகையைப் பார்த்தபின்னர் மீண்டும் சூரியனைப்பார்த்து தவம் செய்யத் துவங்கிவிட்டார்.

वाचंयमत्वात्प्रणतिम्ममैष

कम्पेन किञ्चित्प्रतिगृह्य मूर्ध्नः।

दृष्टिम्विमानव्यवधानमुक्ताम्

पुनः सहस्रार्चिषि संनिधत्ते॥ १३-४४

vācaṁyamatvātpraṇatimmamaiṣa

kampena kiñcitpratigṛhya mūrdhnaḥ |

dṛṣṭimvimānavyavadhānamuktām

punaḥ sahasrārciṣi saṁnidhatte || 13-44

***

சரபங்கர் தபோவனம்

अदः शरण्यम्शरभङ्गनाम्नः

तपोवनम्पावनमाहिताग्नेः।

चिराय संतर्प्य समिद्भिरग्निम्

यो मन्त्रपूताम्तनुमप्यहौषीत्॥ १३-४५

adaḥ śaraṇyamśarabhaṅganāmnaḥ

tapovanampāvanamāhitāgneḥ |

cirāya saṁtarpya samidbhiragnim

yo mantrapūtāmtanumapyahauṣīt || 13-45

छायाविनीताध्वपरिश्रमेषु

भूयिष्ठसंभाव्यफलेष्वमीषु।

तस्यातिथीनामधुनासपर्या

स्थिता सुपुत्रेष्विव पादपेषु॥ १३-४६

ChAyAvinItAdhvaparishrameShu

bhUyiShThasa.nbhAvyaphaleShvamIShu |

tasyAtithInAmadhunAsaparyA

sthitA suputreShviva pAdapeShu || 13-46

அடுத்த இரண்டு ஸ்லோகங்களில் சரபங்க முனிவரின் பெருமையை சீதைக்கு ராமன் சொல்வதாக காளிதாசன் பாடியுள்ளார் – அதோ பரிசுத்தமான சர்ப்பங்க முனிவரின் தபோவனம்! அவர் நீண்ட காலத்துக்கு அக்கினியில் சமித்துக் குச்சிகளைப்   போட்டு யாகம் செய்த பின்னர் தனது உடலையே அக்கினியில் ஆகுதி கொடுத்தார்;  அவர் எப்படி விருந்தாளிகளைக் கவனித்து உபசரித்தாரோ அதை அப்படியே அவரது  புதல்வர்கள் செய்கின்றனர்

****

ரகு சன்யாசியாகவே இறந்தான்

ரகு சந்நியாசி போல வாழ்ந்ததால் அவன் உடலை எரிக்காமல் அஜன் புதைத்தான் . அக்கினி சம்பந்தமில்லாத உத்தரக்கிரியைகளைச் செய்தான் சந்யாசிகள் இறந்தால் அவர்களுக்குப் பிண்டக்கிரியைகள் தேவை இல்லை என்றும் அவர்கள் இறந்தால் துக்கப்படக்கூடாதென்றும் சாஸ்த்ர விதிகளைக் காட்டி, இந்த ஸ்லோகங்களை உரை எழுதியோர் விளக்கி இருக்கிறார்கள் ஏனெனில் அவர்கள் மோட்சத்தை அடைந்துவிடுகிறார்கள். ஸ்லோகம் 18 முதல் 26 வரை இவை உள்ளது.

சந்யாசிகள் தரித்த உடைகளையும் காளிதாசன் விளக்குகிறான் .

வற்கலை என்னும் மரவுரியை அணிந்தார்கள் குமார சம்பவத்தில் உமாவும் இப்படி உடைகளை அணிந்து தவம் செய்ததைக் குறிப்பிட்டுள்ளான் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்களும் தவம் செய்தனர் அவர்களும் ஏனைய சன்யாசிகளைப் போலவே விரதங்களை அனுஷ்டித்தனர் என்பதும் தெளிவாகத் தெரிகிறது

மரவுரி பற்றி அவன் எழுதிய ஐந்து நூல்களில் குறைந்தது பத்து முறையாவது பாடுகிறான்:

ரகு12-8, 14-82. குமார. 5-8-30, 44 சாகு.1-17, 2-12 முதலியன.

ராமனைக்காட்டில் தரிசிக்க வந்த பரதனும் இப்படி வந்ததைக் கம்பன் பாடியிருக்கிறான்

                வற்கலையின் உடையானை,

     மாசு அடைந்த மெய்யானை,

நற் கலை இல் மதி என்ன

     நகை இழந்த முகத்தானை,

கல் கனியக் கனிகின்ற துயரானைக்

     கண்ணுற்றான்;

வில் கையினின்று இடை வீழ,

     விம்முற்று, நின்று ஒழிந்தான்.

****

சிவனுடைய பெயர்களில் ஒன்று கிருத்திவாஸஅதாவது யானைத்தோலை அணிந்தவன் . குமாரசம்பவத்தில் இந்த சொல் வருகிறது

சிவன் யானைத்தோல் அணிந்தவன் என்பதை சம்பந்தரின் தேவாரப்பாடலிலும் படிக்கிறோம்

போர்த்ததுவும் கரியின் உரி புலித்தோலுடை

கூர்த்ததோர் வெண்மழு ஏந்தி கோளரவம் அரைக்கு

ஆர்த்ததுவும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்

பார்த்ததுவும் அரணம் படரெரி மூழ்கவே.

பாடல் விளக்கம்:

போர்த்துள்ளது யானைத்தோல், உடுத்துள்ளது புலித்தோல், ஏந்தியுள்ளது கூரிய வெண்மழு, அரையில் கட்டியுள்ளது பாம்பு, பரந்த எரியுள் மூழ்குமாறு பார்த்தது முப்புரம், அத்தகையோன் அகத்தியான்பள்ளி இறைவன் ஆவான்.

***

துணியால் நெய்யப்பட்ட ஆடைகளை அணிந்த சந்யாசிகள் அவைகளைக் காவியில் நனைத்து காஷாய உடைகளை அணிந்தனர் ; இதை மாளவிகாக்நிமித்திரம் நாடகத்தில் காண்கிறோம் .

குச அல்லது முஞ்ஜ புற்களால் ஆன மெளஞ்சி என்பதைக் கச்சையாக ஒட்டியானமாக அணிந்தனர்  ; இதை குமா. 5-10; ரகு 9-21 நூல்களில் சொல்கிறான்.

ருத்ராக்ஷத்தைக் கையிலும் காதிலும் கழுத்திலும் மாலையாக அணிந்ததையும் கூறுகிறான்- குமா.3-46;, 5-11, 63 ரகு. 13-43 

பட்டினப்பாலை ,பெரும்பாணாற்றுப்படை நூல்களை எழுதிய சங்க புலவரின் பெயர் ருத்ராக்ஷ என்பதை முன்னரே கண்டோம்.

முனிவர்கள் கட்டாந்தரையிலோ,  குச புல்லால் ஆன பாயிலோ படுத்தார்கள் ரகு8-18, 1-95

கைகளில் தண்டத்தை ஏந்திச் சென்றனர் -குமா 5-12.

முக்கோல் அந்தணர் என்று தொல்காப்பியரும் இதைக் குறிப்பிட்டுள்ளார் .

இங்குடி என்னும் மரத்திலிருந்து எண்ணெய் எடுத்து தலைக்குத் தடவவும் விளக்கு எரிக்கவும் பயன்படுத்தினார்கள் -ரகு13-41, 43

இவ்வாறு ஒவ்வொரு ஸ்லோகத்திலும் நமக்குப் புதிய முனிவர்களை அறிமுகப்படுத்தி , புதிய விஷயங்களையும் காளிதாசன் சொன்னார்.

Hindu Sages and Hermitages in Kalidasa’s Works (Post …

Tamil and Vedas

https://tamilandvedas.com › 2017/04/01 › hindu-sages-…

1 Apr 2017 — Sakuntalam Act I. King:“Suta, urge the horses on and let us purify … [13-41]. Here that sage sutIkShna lifting up his right arm aloft 

–subham—

Tags—ரிஷி, முனிவர்கள், தவம் செய்தனர்,  காளிதாசன், அற்புதத் தகவல்

Leave a comment

Leave a comment