அபிராமி அந்தாதி மேற்கோள்கள்! ஆகஸ்ட் 2025 காலண்டர் (Post No.14,812)

Written by London Swaminathan

Post No. 14,812

Date uploaded in London –  30 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 அபிராமி பட்டர் வழங்கிய அபிராமி அந்தாதியின்  முதல் 31  பாடல்களுக்கு (உரை நடையில் ; பாடல் வடிவில் அல்ல) எளிய விளக்கத்தைக் கொடுத்துள்ளேன். இதைப் படித்துவிட்டு பட்டரின் பாடல்களைப் படித்தால் நன்றாகப் பொருள் விளங்கும் என்ற நம்பிக்கை எனக்குளது;  இந்த நூலுக்கு மாபெரும் தமிழ் அறிஞர் கி வா ஜகந்நாதன் எழுதிய அற்புதமான உரை இன்டெர் நெட்டில்  இலவசமாகக்  கிடைக்கிற்து ; எல்லோரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் அது .

பண்டிகைகள் 2-ஆடிப்பெருக்கு ; 8-வரலெட்சுமி விரதம் ; 9-யஜுர் ரிக் உபாகர்மா, ஆவணி அவிட்டம் ,ரக்ஷா பந்தன்; 10காயத்ரீ ஜபம்15-சுதந்திர தினம்; 16-ஜன்மாஷ்டமி/கிருஷ்ணன் பிறப்பு;

27-விநாயக சதுர்த்தி, 28-ரிஷி பஞ்சமி.

பெளர்ணமி -9; அமாவாசை-23; ஏகாதசி- 5,19;

சுப முகூர்த்த தினங்கள்- 20, 28, 29

ஆகஸ்ட் 1 வெள்ளிக்கிழமை

1.செங்கதிர், திலகம், மாணிக்கம், மாதுளம் பூ, மின்கொடி, குங்குமம் ஆகிய ஆறின் (6) நிறமுள்ள அன்னையே எனக்கு பெரிய துணையாவாள்.-1

***

ஆகஸ்ட் 2 சனிக்கிழமை

வேதமென் னும் விருட்சத்தின் கிளையும், அதன் முடிவிலுள்ள கொழுந்தும், கீழே பரவிப் பதிந்துள்ள அதன் வேரும் திரிபுரசுந்தரியே -2

***

ஆகஸ்ட் 3 ஞாயிற்றுக்கிழமை

வேறெவரும் அறிய முடியாத ரகசியத்தை நான் அறிந்து, அதன் காரணமாக உன் திருவடிகளை அடைந்தேன்.-3

***

ஆகஸ்ட் 4 திங்கட்கிழமை

மனிதர்களும் தேவர்களும்  முனிவர்களும் வந்து தலை தாழ்த்தி நின்று வணங்கிப் போற்றும்  திருவடிகளையும் மெல்லியல்பும் கொண்ட கோமளவல்லி அன்னையே!-4

***

ஆகஸ்ட் 5 செவ்வாய்க்கிழமை

நீள் சடைகொண்ட சிவபிரான் உண்ட நஞ்சைக் கழுத்தளவில் நிறுத்தி அமுதமாக்கிய அம்பிகையின் பொன்னடி என் தலையின் மீது பொருந்தியுள்ளது. அதை நான் வணங்குகிறேன்.,-5

***

ஆகஸ்ட் 6 புதன்கிழமை

என் நெஞ்சினுள்ளே உன் அழகிய திருமந்திரச் சொல் நிலை பெற்றுள்ளது. உன் அடியவ ர்களுடன் நான் பாராயணம் செய்வது, உன் பெருமைகளைக் கூறும் மேலான நூல்களையே !-6

***

ஆகஸ்ட் 7 வியாழக்கிழமை

பிரம்மாவிஷ்ணுசிவன் மூவரும்  வணங்கி எந்நாளும் துதித்து மகிழும்  அன்னையே! தயிர் கடையும் மத்தைப் போல, பிறவிக் கடலாம் சுழலில் சிக்கி அலையாமல், இருக்க அருள்புரி-7

***

 ஆகஸ்ட் 8 வெள்ளிக்கிழமை

மகிடன் என்னும் அசுரனின் சிரத்தின் மேல் நிற்கும் அந்தரி,பிரமதேவனின் கபாலத்தைத் தாங்கும் திருக்கரத்தைக் கொண்ட அபிராமி அன்னையே! உன் தாமரைத் திருவடிகள் என் உள்ளத்தில் என்றும் பொருந்தி நிற்கின்றன.-8

***

ஆகஸ்ட் 9 சனிக்கிழமை

அன்னையே!  அழுத பிள்ளையான ஞானசம்பந்தப் பெருமானுக்குப் பாலூட்டிய திருத்தனங்களும், அவற்றின்மேல் புரளும் முத்துமாலையும், கரத்திலுள்ள கரும்பு வில், மலர் அம்புகள் ஆகியனவும், அழகிய புன்னகையும் காட்டி, உன் முழுமையான காட்சியை  காட்டுவாயாக-9

^^^

ஆகஸ்ட் 10 ஞாயிற்றுக்கிழமை

நான் நின்றவாறும், இருந்தவாறும் படுத்தவாறும், நடந்தவாறும், தியானம் செய்வதும் உன்னை த்தான்-10

***

ஆகஸ்ட் 11 திங்கட்கிழமை

பஞ்சபூதங்களுக்கும் முடிவாக நிற்கும் தேவியின் திருவடித் தாமரை, நான்கு வேதங்களுக்கும் எல்லையாய் நிற்பது,  சிவபெருமானின் திருமுடியில் அணியப்பட்ட மாலையாயும் திகழ்கிறது.-11

***

ஆகஸ்ட் 12 செவ்வாய்க்கிழமை

நான் அல்லும் பகலும் கருதுவதெல்லாம் உன் புகழ்; கற்பதெல்லாம் உன் திருநாமம். எந்நேரமும் உள்ளமுருகப் பிரார்த்திப்பது உன் இரு திருவடித் தாமரைகளைத் தான்.  நான் இருப்பது  அடியவர்களின் கூட்டத்தில்தான். என்ன புண்ணியம் செய்தேனோ நான் அறியேன்.-12

***

ஆகஸ்ட் 13 புதன்கிழமை

14 உலகங்களையும் ஈன்றதுடன், பாதுகாப்பவளும், சம்காரம் செய்பவளுமான தாயே!  நீலகண்ட சிவனுக்கு முன் பிறந்தவளே!  திருமாலின் தங்கையே!  நான் உன்னையன்றி   இன்னொரு தெய்வத்தை வழிபட  இயலுமோ? (இயலாது)-13

***

ஆகஸ்ட் 14 வியாழக்கிழமை

எம் தலைவியான அபிராமி அன்னையே! தேவர்கள், அசுரர்கள்  உன்னை வழிபடுகிறார்கள். பிரம்ம தேவரும் திருமாலும் உன்னை எண்ணித் தியானம் செய்கின்றனர்.  சிவபெருமானோதம் உள்ளத்தினுள்ளே உன்னை அன்பினால் கட்டிவைப்பவர், இதனால் உன்னைத் தரிசிப்பவர் களுக்கு உன்குளிர்ச்சி மிக்க  தரிசனம் எளிதாக இருக்கிறது.-14

***

ஆகஸ்ட் 15 வெள்ளிக்கிழமை

உன் பேரருளைப் பெற வேண்டுமென முற்பிறவிகளில் பல கோடி தவங்களைச் செய்தவர்கள்,  அரச போகத்தையும் ,வானுலகை ஆளும் அரிய செல்வத்தையும் மோட்சம் என்னும் வீட்டையும் பெற்று மகிழ்வர்.-15

***

ஆகஸ்ட் 16 சனிக்கிழமை

எண்ணிப் பார்த்திட வொண்ணாத எல்லை கடந்து நின்ற பரவெளியே! ஐம்பெரும் பூதங்களுமாகி விரிந்த தாயே! இத்துணை சிறப்பு மிக்க நீ  என் சிற்றறிவின் எல்லைக்குட்பட்டது வியப்பிற்குரியதுதான்!-16

***

ஆகஸ்ட் 17 ஞாயிற்றுக்கிழமை

வியப்பூட்டும் வடிவத்தைக் கொண்டவள், ரதிக்கு நாயகனான காமனைத் தோல்வியுறும்படி, நெற்றிக் கண்ணைத் திறந்து பார்த்த சிவ பிரானை வெற்றி கொள்ள, அவரது இடப்பாகத்தைக் கவர்ந்து கொண்டாயோ ?-17

***

ஆகஸ்ட் 18 திங்கட்கிழமை

அன்னையே! அர்த்தநாரீசுவரத் திருக்கோலமும்உங்கள் இருவரின் திருமணக் கோலமும்என் உள்ளத்தில் குடி கொண்டிருந்த ஆணவத்தை அகற்றியமன் வரும் போதுஎன்முன் தரிசனம் தந்தருளி நிற்பீராக!-18

****

ஆகஸ்ட் 19 செவ்வாய்க்கிழமை

ஒளி பொருந்தித் திகழும் நவகோணங்களை ஏற்று விரும்பித் தங்கியுள்ள அபிராமித் தாயே! உள்ளும் புறமும் உன்னைக்கண்டபோது ஏற்பட்ட இன்ப வெள்ளத்துக்குக் கரை காண இயலவில்லை. இத்தகைய பேரருளைச் செய்த உன் திருவுள்ளக் குறிப்பின் காரணம் யாதோ?-19

****

ஆகஸ்ட் 20 புதன்கிழமை

பேரருளின் நிறைவான நித்திய மங்கலையே! நீ உறைகின்ற ஆலயம் எது? பரமேசுவரனின் ஒரு பக்கமோ அல்லது உன் புகழை எப்போதும் முழங்குகின்ற நான்கு வேதங்களின் மூலமோ, அல்லது அவற்றின் திருமுடிகளாகிய உபநிடதங்களோ,  சந்திரனோ,  தாமரையோ அடியேனின் உள்ளமோ, கடலோ? இவற்றில் எது?-20

***

ஆகஸ்ட் 21 வியாழக்கிழமை

சிவபிரானின் இடப்பாகத்தை ஆட்கொண்டவள். பொன்நிறத்தி னளான பிங்கலை; நீல நிறத்தினாளான காளி; செந்நிறத்தினாளான லலிதாம்பிகை; வெண்ணிறத்தினளான வித்யா தேவி; பச்சை நிறத் தினாளான உமையன்னை யாவும் நீயே.-21

****

ஆகஸ்ட் 22 வெள்ளிக்கிழமை

அபிராமி அன்னையே!  வேதமாகிய மலரின் நறு மணம் போன்றவளே! குளிர்ச்சிபொருந்திய இமாசலத்தில் விளை யாடி மகிழும் பெண் யானையே! பிரமன் போன்ற தேவர்களை ஈன்ற அன்னையே! நான்  மீண்டும் பிறவாதிருக்குமாறு ஓடிவந்து உதவி  செய் வாயாக!-22

****

ஆகஸ்ட் 23 சனிக்கிழமை

மூவுலகின் உள்ளேயும் உள்ள பரம் பொருளே! இருப்பினும் எல்லாப் பொருள்களுக்கும் புறம்பாயும் உள்ளாய். அடியவர்களின் உள்ளத்தில்  உள்ள இன்ப மென்னும் கள்ளே!  நான் என் உள்ளத்தில் தியானம் செய்யும் பொழுது உன்னு டைய திருக்கோலத்தைத் தவிர வேறு தெய்வம் எதனுடைய திருவுருவையும் நினையேன்.—23

****

ஆகஸ்ட் 24 ஞாயிற்றுக்கிழமை

மாணிக்கமே ! அந்த மாணிக்கத்தின் பிரகாசமே!  மாணிக்க  ஆபரணமே! அந்த ஆபரணங்களுக்கும் அழகூட்டுபவளே! உன்னை அணுகாமல் வீணாகப் பொழுது போக்கு வோருக்கு நோய் போன்றும்உன்னை அணுகியவர்களின் பிறவிப் பிணிக்கு மருந்து போன்றும் விளங்குபவளே! நான் வேறொருவரைப் பணியேன்.—24

****

ஆகஸ்ட் 25 திங்கட்கிழமை

மூவருக்கும் அன்னே!  அபிராமி என்னும் அருமருந்தே!

உன்னையான் மறவாமல் நின்று ஏத்துவனே-25

****

ஆகஸ்ட் 26 செவ்வாய்க்கிழமை

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் புரிந்துவரும் மும்மூர்த்திகளும், உன்னைத் துதிக்கும் அடியவர்களாக உள்ளனர்.  எளிய வனாகிய என் நாவில் வெளிவந்த பொருளற்ற சொற்களையும் கூடத் துதிகளாக ஏற்றுக்கொண்டுமகிழ்வதைக் கண்டால் அந்தச் சொற்கள் பெற்ற ஏற்றம் உண்மையில் நகைப்புக் குரியதன்றோ?-26

****

ஆகஸ்ட் 27 புதன்கிழமை

என் நெஞ்சில் கப்பி யிருந்த ஆணவம் முதலிய அழுக்கு களையெல்லாம் உன் கருணை யென்னும் தூய நீரால் கழுவிப் போக்கினாய். இந்த உன் திருவருட் சிறப்பை நான் என்னவென எவ்விதம் எடுத்துக்கூறிப்பாராட்டுவேன்?-27

****

ஆகஸ்ட் 28 வியாழக்கிழமை

ஆனந்தத் தாண்டவம் ஆடி மகிழும் நடராசப் பெருமானுடன் – சொல்லும் பொருளும் போல – என்றும் இணைந்து நிற்கும் தாயே!  உன் திருவடிகளைத்  தொழும் அடி யவர்களுக்கெல்லாம் உயர்பதவியும்தவ வாழ்க்கையும்இறுதியில் சிவலோக பதவியும் சித்திப்பதாகும்.-28

****

ஆகஸ்ட் 29 வெள்ளிக்கிழமை

எண்வகைச் சித்திகளும்அந்த சித்திகளை அளிக்கும்  பராசக்தியும், சக்தியைத் தம்மிடத் தில் தழைத்தோங்கச் செய்த பரமசிவமும் தவம் புரிபவர்கள் பெறும் மோட்சமும்  ஞானமும் ஆகிய அனைத்துமாயிருப்பவள்  திரிபுரசுந்தரியே!-29

****

ஆகஸ்ட் 30 சனிக்கிழமை

ஓருருவாகவும், பல உருவங்களையுடையவளாயும், உருவ மற்ற அருவமாயும் காட்சி தரும், தாயான உமா தேவியே! முன்னொரு நாள் என்னைத் தடுத்தாட் கொண்டு காத்தருள் புரிந்தாய்.  இனி நான் என்ன  பிழையைச் செய்தாலும்கடலில் விழுந்தாலும்என் குற்றத்தை மன்னித்துஎன்னைக் கரையேற்றிக் காப்பாயாகுக-30

****

ஆகஸ்ட் 31 ஞாயிற்றுக்கிழமை

அன்னையாம் உமையும், உமையைத்தம் இடப்பாகத்தில் கொண்ட அண்ணலாம் ஈசனும் இணைந்த அர்த்த நாரீசுவரக் கோலத்தில் எழுந்தருளி,  என் போன்றோரையும் நெறிப்படுத்தினார்.  இனி  பின்பற்ற த்தக்க வேறு சமயங்கள் ஏது மில்லை. என் பிறவிப் பிணி அகன்றுவிட்டது  இனி என்னை ஈன்றெடுக்கத்தக்க தாயும் இல்லை. மங்கையர் பால் கொண்டிருந்த மோகமும் இனி இல்லை.-31

–subham—

Tags அபிராமி அந்தாதி, மேற்கோள்கள், ஆகஸ்ட் 2025 காலண்டர்

Leave a comment

Leave a comment