
Post No. 14,818
Date uploaded in London – 1 August 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
லண்டன் சுவாமிநாதனின் ஆராய்ச்சிக்கட்டுரை
ரிக் வேதத்தில் விஷ்ணு
विष्णु॑र्गो॒पाः प॑र॒मं पा॑ति॒ पाथ॑: प्रि॒या धामा॑न्य॒मृता॒ दधा॑नः । अ॒ग्निष्टा विश्वा॒ भुव॑नानि वेद म॒हद्दे॒वाना॑मसुर॒त्वमेक॑म् ॥
विष्णुर्गोपाः परमं पाति पाथः प्रिया धामान्यमृता दधानः । अग्निष्टा विश्वा भुवनानि वेद महद्देवानामसुरत्वमेकम् ॥
viṣṇur gopāḥ paramam pāti pāthaḥ priyā dhāmāny amṛtā dadhānaḥ | agniṣ ṭā viśvā bhuvanāni veda mahad devānām asuratvam ekam ||
மகத்தான அழிவில்லாத ஒளிபடைத்த வான்; எங்கும் நிறைந்த எல்லாவற்றையும் பாதுகாப்பாவன் விஷ்ணு; மிக உயர்ந்த வழியைப் பாதுகாக்கிறான் அக்கினி தேவனுக்கு இந்த வலிகள் அனைத்த்தும் தெரியும் தேவர்கள் ஒப்பில்லாதவர்கள் மகத்தானவர்கள்.
Key hymns mentioning Vishnu in the Rig Veda
Book 1 Hymn 22 Verses 16-21: விஷ்ணுவின் மகத்தான சக்தியைப் போற்றுகிறது
Book 1 Hymn 154: மூன்று அடியால் உலகளந்த செய்தியைத் தருகிறது
Book 1 Hymn 155: பூவுலகினையும் மேலுகையும் காப்பவன் விஷ்ணு
Book 1 Hymn 156: புராணன் ; இறுதிவரை உள்ளவன்
Book 7 Hymn 99: வானத்தையும் பூமியையையும் பிரிப்பவன்
Book 7 Hymn 100: அவன் வலிமைக்கும் வலிமையானவன்; மகத்தான சக்தி படைத்தகவன்
இந்திரனின் நண்பன் என்றும் மருத், அக்கினி கடவுளருடன் இணைந்தவன் என்றும் துதிகள் கூறுகின்ற்ன.
***
சூரியனைப் போன்றவன்; அவனே சூரியன் என்றும் போற் றுக்கின்றன .இன்று உலகிலுள்ள எந்த விஞ்ஞானியைக் கேட்டாலும் நமக்குப் பயன்தரும் மகத்தான சக்தி சூரியன் என்று பதில் தருவார்கள் ; இதனால் இந்துக்கள் காயத்ரீ ஜெபத்திலும் தினசரி மூன்று வேளை சந்தியா வந்தனத்திலும் சூரியன் வடிவில் விஷ்ணுவைப் போற்றுகின்றனர்.
பின்னர் வந்த இதிஹாச, புராணங்கள் அவன் பாற்கடலில் பாம்பணையில் பள்ளி கொண்டதையும் கருடன் மீதுபறந்து வந்ததையும் காட்டுகின்றன ; 2200 ஆண்டுகளுக்கு முந்தைய கோசுண்டி கல்வெட்டில் அவன் புகழ் பாடப்பட்டுள்ளது தமிழில் பழைய நூலான தொல்காப்பியமும் விஷ்ணுவின் புகழ் பாடுகிறது பின்னர் வந்த சிலப்பதிகாரம் ஆவான் சாதனைகள் அனைத்தையும் ஒரே பாடலில் தொகுத்து அளிக்கிறது.
ताम्तामवस्थाम्प्रतिपद्यमानम्
स्थितम्दश व्याप दिशो महिम्ना।
विष्णोरिवास्यानवधारणीयम्
ईदृक्तया रूपमियत्ताया वा॥ १३-५
tāmtāmavasthāmpratipadyamānam
sthitamdaśa vyāpa diśo mahimnā |
viṣṇorivāsyānavadhāraṇīyam
īdṛktayā rūpamiyattāyā vā || ரகுவம்ச 13-5
காளிதாசன் கடலையும் விஷ்ணுவையும் சாப்பிடுகிறான்
விஷ்ணுவும் கடலினைப்போல எங்கும் பரந்தவன்; பல நிலைளைக் (மீன், ஆமை அவதாரம் போல கொண்டவன்); கடல் ஆழம் போல விஷ்ணுவின் பெருமை அளக்கமுடியாதது ; கடல் எவ்வளவு ஆச்சர்யத்தையும் ஆனந்தத்தையும் அளிக்கிறதோ அதே போல விஷ்ணுவும் அளிக்கிறான் ; இரண்டும் நீலவண்ணன்.
The form of this ocean which acquiring diverse conditions occupies the ten quarters on account of its vastness, and as such it is not capable of being defined either with reference to its nature or its magnitude in the same way as the form of Vishnu which after having gone through different conditions and which on account of its magnitude occupies all the ten quarters, is indefinable both as to its nature or size. [13-5]
கடல் பற்றி பகவத் கீதை 2-70 லு ம் காண்கிறோம் ,
आपूर्यमाणमचलप्रतिष्ठं समुद्रमापः प्रविशन्ति यद्वत्।
तद्वत्कामा यं प्रविशन्ति सर्वे स शान्तिमाप्नोति न कामकामी॥७०॥
ஆபூர்யமாணமசலப்ரதிஷ்ட²ம் ஸமுத்³ரமாப: ப்ரவிஸ²ந்தி யத்³வத்|
தத்³வத்காமா யம் ப்ரவிஸ²ந்தி ஸர்வே ஸ ஸா²ந்திமாப்நோதி ந காமகாமீ ||2-70||
கடலில் நீர்த் தொகுதிகள் வந்து விழுகையில் அது மேன்மேலும் நிரப்புதற்குரியதாய் அசையா நிலைகொண்டிருப்பது போலே விருப்பங்கள் தன்னுள்ளே புகும்போது இயல்வான் எவனோ அவன் சாந்தியடைகிறான். விருப்பங்களை விரும்புவோன் அதனை அடையான்.–பகவத் கீதை 2-70
****
सीता तमुत्थाप्य जगाद वाक्यम्
प्रीतास्मि ते सौम्य चिराय जीव।
बिडौजसा विष्णुरिवाग्रजेन
भ्रात्रा यदित्थम् परवानसि त्वम् ॥ १४-५९
sītā tamutthāpya jagāda vākyam
prītāsmi te saumya cirāya jīva |
biḍaujasā viṣṇurivāgrajena
bhrātrā yadittham paravānasi tvam || 14-59
Having made Lakshmana to get up from prostration Seetha spoke this to him, “oh, gentle brother, I am pleased with you, may you live long. As the younger Vishnu is dependant on his elder brother Indra so are you upon your elder brother… thus your action is in the clear…” [14-59]
ராமன் சொற்படி சீதையைக் காட்டில் விட்டுவிட்டு அவருக்கு நமஸ்காரம் செய்து அழாக்குறையாக நிற்கிறான் லெட்சுமணன்; அப்போது சீதா தேவி சொன்ன ஸ்லோகம் இது “அன்புள்ள சகோதரா! உன் செயல் எனக்கு அதிருப்தி தரவில்லை; நீ நீடூழி வாழ்க; ஒருகாலத்தில் இந்திரனுக்குத் தம்பியாக — உபேந்திரனாக- விஷ்ணு பிறந்தான் அப்போது மூத்த சகோதரன் இந்திரனுக்கு விஷ்ணு எப்படி சேவகம் செய்தானோ அதே போல நீர் இருக்கிறீர் (ஸீதையின் பெருந்தன்மையும் தயவும் லெட்சுமண ரை உபேந்திரனுக்கு ஓப்பிடுவதும் காளிதாசனின் கவி நயத்தைக்காட்டுகிறது )
***

தமிழ் அதிசயம்
காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) ஒரு தமிழ் அதிசயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார் . 27 நட்சத்திரங்களில் தமிழர்கள் திரு என்ற அடைமொழியை, சிறப்பினை இரண்டு விண்மீன்களுக்கு மட்டுமே சூட்டியுள்ளனர்; அவை திரு- ஆதிரை; திரு ஓணம் . இன்னுமொரு அதிசயம் அவை இரண்டும் சரியாக ஆறுமாத இடைவெளியில் கொண்டாடப்படுகின்றன!
திருவாதிரை சிவனுக்கு உரித்தானது; ஓணம் விஷ்ணுவுக்கு உரித்தானது வாமன- த்ரிவிக்ரம- மஹாபலி கதையுடன் தொடர்புடையது . தமிழ் நாட்டில் பெரிதாகக்கொண்டாடப்பட்ட இப்பண்டிகை இப்பொழுது கேரளத்தில் மிகப்பெரிய இந்துப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது அதே போல அவர்கள் திருவாதிரையையும் பெரிய பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள்
****
புலவர் பெயர்கள்
(ச=ய முயல்-முசல்; குயவன்- கொசவன் ; வயம் -வசம்)
கண்ணதாசன்= கண்ணந்தாயன் ; அவன் மகன் தாயங்கண்ணன்
விஷ்ணுதாசன் = வீண்ணந்தாயன் (ஒப்பிடுக– காளிதாசன்)
தாமோதரன்
கேசவன்
****
மஹாவிஷ்ணுவை குறிப்பிட சிவ பக்தனான காளிதாசன் பயன்படுத்தும் சொற்கள்
காளிதாசன் காவியங்களில்
ஹரி – ரகு.3-43, 49,55,68; 13-1 சாகு6-29, 7–2. குமா 6-71, 7-44, 46
கேசவ – விக்ரம 3-0-12
கிருஷ்ண- குமா 3-13
ஹலபிருத்- கலப்பை ஏந்தியவன்- பலராம மேக 61.
லாங்கலின்- கலப்பை ஏந்தியவன்- பலராம மேக 51.
நாராயண – விக்ரம 3-1513
பங்கஜாநாம ரகு 18-20
பரமேஷ்டின் – விஷ்ணு, பிரம்மா -குமா 6-70; ரகு 15-93.
விஷ்ணு -மேக.15, 59; குமார.6-67; 7-44; ரகு.13-5, 14-59
விஸ்வக்ஷேன ரகு .15-103
****
கிருஷ்ணன் , பலராமன்
மேக 59, 61
புறம் -58, 174
அகம் 59, 175
பரி.
****
அடி அளந்தான் – வாமன / த்ரி விக்ரம அவதாரம்
முல்லை-1-5
மேக 59
ரகு-735; 7-56; 11-22 ;சாகு-7-6
****
நரசிம்மாவதாரம் –சாகு 7-3
பரசுராமன்
ரகு -11-92
அகம் 220, 90
முருகு-266
****
சங்கத் தமிழ் இலக்கியம்
மால் – முல்லை ; கலி .107-32; 123-4; பரி .1-31; 13-6
மாயோன் :புறம் .57; 291-2; கலி .103-55;
மது . வரி 591; பரி .திரட்டு 8-1
கலித்தொகை & பரிபாடல் ஆகிய இரண்டு னொல்களைத்தான் விஷ்ணு பற்றிய அதிகமான குறிப்புகள் கிடைக்கின்றன.
கலித்தொகையில் முல்லைக்கலியில் பதினேழு பாடல்களில் விஷ்ணுவின் புகழை ஆடல் பாடல் மூலம் புலவர்கள் பாடுகின்றனர்.
மாயோன் மேய காடுறை உலகமும் -தொல்காப்பியம்
To be continued………………………………….
Tags–காளிதாசன், காவியங்கள், மஹா விஷ்ணு, சங்க இலக்கியத்துடன் ஒப்பீடு-1, திரு ஆதிரை, திரு ஓணம்