விக்கி திருக்குறளில் விஷம் / விஷமம் (Post No.14,820)

Written by London Swaminathan

Post No. 14,820

Date uploaded in London –  1 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

விக்கிப்பீடியா மற்றும்  விக்கி பவுண்டேஷன் நடத்தும் தளங்களில் இந்து விரோதிகளும் திராவிடங்களும் விஷம் கலந்து வருகின்றன .

இதே போல இந்து விரோதிகள், வள்ளலார் தலையில் மிளகாய் அரைத்து, அவரது விபூதியை அழித்து, அக்கிரமங்களும் அதிக்ரமங்களும் செய்து வருகின்றனர் .

ஆகையால் எந்த தமிழ் நூல் ஒரிஜினலுக்கும் நூறு ஆண்டுக்கு முந்தைய ஒரிஜினலை நாடுங்கள்; உரைகளைப் பாருங்கள்  என்பதே என் வேண்டுகோள்.

கி.வா. ஜகந்நாதன் பதிப்பாசிரியாகவுள்ள ராமகிருஷ்ண வித்யாலயப் பதிப்பு ஆயிரம் பக்கங்களையுடைய அருமையான திருக்குறள் பதிப்பு ; திருக்குறள்  முனுசாமி வெளியிட்ட பதிப்பு நல்ல பதிப்பு; ஆகையால் வள்ளலார் பாடல் , திருக்குறள் பதிப்புகளை வாங்கும்போது பார்த்து வாங்குங்கள்.

முதல் குறளிலேயே விஷமம் செய்பவன் எத்தனை குறள்களில் விஷமம் செய்கிறானோ அத்தனைக்கு தமிழ் மொழிக்கு ஆபத்து  ,  இவர்களது குடும்பங்களைத் தமிழ்த்தாய் வேரோடு அழிப்பாள் என்பது நிச்சயம்.

திருக்குறளில் கடவுள் வாழ்த்தில் இந்து விரோதிகள்  செய்த விஷமங்களைக் காண்போம்  :

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

·         அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

விளக்கம்:

·         அகர முதல எழுத்தெல்லாம் – அகரம் முதலாகிய எழுத்துக்கள் எல்லாமே

·         ஆதிபகவன் முதற்றே உலகு – ஆதிபகவானே முதலானவன்

தனது திருக்குறளின் முதல் அதிகாரத்தை கடவுள் வாழ்த்தாக ஆரம்பிக்கிறார் வள்ளுவர், அதில் கடவுளின் நிலையை அடைந்த ஆதிபகவானை முதலாக வைத்து தனது குறளை எழுத ஆரம்பிக்கிறார். தனது நூலில் சொல்லப் போகும் அகரம் முதலான எழுத்துக்கள் அனைத்திற்கும் ஆதிபகவானே முதன்மையாக இருகிறான் என்று கூறுகிறார்.

***

ஆதி பகவான் என்பதை விளக்கிய பரிமேல் அழகர் இப்பாட்டால் முதற் கடவுளது உண்மை கூறப்பட்டது என்கிறார். ஆதி பகவன் என்பது விஷ்ணுவைக்குறிக்கும் என்பது ஆழ்வார்கள் கருத்து.

அந்தமில்  ஆதியம்பகவன் — என்கிறது திருவாய்மொழி

•             உண்மைப்பொருள்

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. (1) —மு. வரதராசன்

2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றான் தொழாஅர் எனின்.

•             தன்னை விட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.(Miscreants deleted GOD)

                ****

•             உண்மைப்பொருள்

•             தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன? (2)—மு. வரதராசன்

3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்.

•             மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும். .(Miscreants deleted GOD)

                ***

                உண்மைப்பொருள்

•             அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார் (3)—மு. வரதராசன்

4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.

•             விறுப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை. .(Miscreants deleted GOD)

                ***

                உண்மைப்பொருள்

•             விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை (4)—மு. வரதராசன்

5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

•             இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள். .(Miscreants deleted GOD)

                ***        

                உண்மைப்பொருள்          

•             கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை (5)

—மு. வரதராசன்

6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்.

•             மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியை பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.

                ****

உண்மைப்பொருள்

•             ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர் (6)- —மு. வரதராசன்

7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது.

•             ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை…

•             தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது (7)—மு. வரதராசன்

8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது.

•             அந்தணர் என்பதற்குப் பொருள் ‘சான்றோர்’ என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல. .(Miscreants deleted GOD)

                ****

                உண்மைப்பொருள்          

•             அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது (8)—மு. வரதராசன்

9. கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை.

•             உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலிலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும். .(Miscreants deleted GOD)

                ***

                உண்மைப்பொருள்

•             கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம் (9)

—மு. வரதராசன்

10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.

•             வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும். .(Miscreants deleted GOD)

                ****

உண்மைப்பொருள்

இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது (10)—மு. வரதராசன்

PLEASE FOLLOW M VARADARAJAN.

—subham—

Tags- விக்கி, திருக்குறளில்,  விஷம், விஷமம்

Leave a comment

1 Comment

  1. santhanam nagarajan's avatar

    santhanam nagarajan

     /  August 1, 2025

    ஆமாம். பழைய நூல்களை மட்டுமே படிக்க வேண்டும். வேண்டுமென்றே திரித்து உரை எழுதுபவர்களைப் பார்த்தால் என்ன சொல்வது? தமிழகத்தின் இழிநிலையை எண்ணி எண்ணி வேதனைப் பட வேண்டியது தான்.

    ஆராய்ச்சி உரைகளை எழுதி வெளியிட்டவர்களுக்கு முன்னுரை தருவது வேடிக்கையாக இருக்கும்! இப்படி இவர் எழுதி இருந்தாலும் இன்னும் ஆராய்ச்சி செய்ய வேண்டும். ட் ரா வி டி யா சிந்தனை இல்லாத இடத்தில் இதை எழுதி விடுவார்கள்.

    ஆயிரக் கணக்கில் தூக்கிப் போடப்பட வேண்டிய புத்தகங்கள் துரதிர்ஷ்டவசமாக 1967க்கு மேல் பெருகி விட்டது.

    தமிழ்த் தாய்க்கு வந்த சோதனை! இதுவும் கடந்து போகும். தமிழ்த்தாய் வெற்றியே பெறுவாள்!

Leave a comment