
Post No. 14,823
Date uploaded in London – 2 August 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
காளிதாசன் காவியங்களில் மஹா விஷ்ணு; சங்க இலக்கியத்துடன் ஒப்பீடு- PART 2
முந்தைய கட்டுரையில் விஷ்ணுவைக் கடல் என்று வருணித்த காளிதாசன் ராமனையும் ராவணனையும் கடலுடன் ஒப்பிடுகிறான் .
விஷ்ணுவுடன் ஒப்பிட்ட போது கடலின் ஆழம், வர்ணம், பரப்பு ஆகியவற்றை ஒப்பிட்டு பெருமைப்படுத்தினான்
ரகுவம்சத்தில் எல்லை மீறும் சுனாமி பேரலை போன்றவன் ராவணன் என்றும் ரத்தினங்கள் நிறைந்த கடல்போன்றவர் விஷ்ணு என்றும் வருணிக்கிறான் ; அப்போதுதான் ராமாவதாரம் எடுக்கப்போகும் செய்தியை விஷ்ணு அறிவிக்கிறார்.
xxxx
उदधेरिव रत्नानि तेजाम्सीव विवस्वतः।
स्तुतिभ्यो व्यतिरिच्यन्ते दूराणि चरितानि ते॥ १०-३०
udadheriva ratnāni tejāmsīva vivasvataḥ।
stutibhyo vyatiricyante dūrāṇi caritāni te || 10-30
கடலிலுள்ள ரத்தினங்களைக் கணக்கிடமுடியாது ; சூரியனின் ஒளிக்கதிர்களை அளவிட முடியாது . அதைப்போல மனதிற்கும் வாக்கிறகும் எட்டாத உமது செயல்கள் தோத்திரங்களுக்குள் அடங்காது..
xxx
अनवाप्तमवाप्तव्यम् न ते किञ्चन विद्यते।
लोकानुग्रह एवैको हेतुस्ते जन्मकर्मणोः॥ १०-३१
anavāptamavāptavyam na te kiñcana vidyate।
lokānugraha evaiko hetuste janmakarmaṇoḥ || 10-31
விஷ்ணு ஏன் அவதாரம் எடுக்கிறார் ?
“இதுவரை உமக்கு அடையப்படாதது எதுவுமில்லை ; அடைய வேண்டியதும் எதுவுமில்லை உலகிற்கு நலம் செய்தல் ஒன்றே உமது பிறப்பிற்கும் செயலுக்கும் காரணம்” என்று சொல்லி விஷ்ணுவைத் தேவர்கள் துதித்தார்கள்
மும்மூர்த்திகளில் காக்கும் தொழில் விஷ்ணுவுடையது ஆகையால்தான் அவருக்கு மட்டும் அவதாரம் செய்யும் கட்டாயம் உள்ளது என்பதை கவிஞன் அழகாக எடுத்துரைக்கிறான்.
xxxx
துதிகள் தோத்திரங்கள் ஏன் ஒரு அளவோடு நின்றுவிடுகின்றன என்பதற்கு அடுத்த ஸ்லோகத்தில் காரணமும் சொல்கிறான் காளிதாசன் .உமது பெருமைகள் அனைத்தையும் யாராலும் முழுதும் சொல்லமுடியாது அதனால் மனிதர்கள் களைப்படைந்து உன்னைப்பு கழ்வதை நிறுத்திக்கொள்கிறார்கள்!
महिमानम् यदुत्कीर्त्य तव सम्ह्रियते वचः।
श्रमेण तदशक्त्या वा न गुणानामियत्तया॥ १०-३२
mahimānam yadutkīrtya tava samhriyate vacaḥ।
śrameṇa tadaśaktyā vā na guṇānāmiyattayā || 10-32
xxxx
தேவர்களின் புகழுரையைக்கேட்ட விஷ்ணு நீங்கள் எல்லோரும் செளக்கியமாக இருக்கிறீர்களா? என்று வினவினார் . இதைக்கேட்ட தேவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி. ஆஹா நமது கோரிக்கை நிறைவேறப்போகிறது என்று எண்ணி சொன்னார்கள் ,
“பிரளய காலம் வரும் முன்னரே (சுனாமி போல) கரை தாண்டி ஊருக்குள் நுழையும் ராக்ஷச கடல் ஒன்றுதான் அச்சம் தருகிறது என்று சொன்னார்கள்.
இது நல்ல ஒப்பீடு! விஷ்ணுவை வருணித்தபோது எல்லை தாண்டாத ரத்தினங்கள் நிறைந்த கடல் என்று புகழந்தார்கள் இப்போது எல்லை தாண்டி (சுனாமி) பேரழிவை உண்டாக்கும் ராக்ஷஸன் என்று திட்டுகிறார்கள்
விஷ்ணு அமைதியான கடல் என்றால் இராவணன் கொந்தளித்து எல்லை மீறும் சுனாமி அலைகள் போன்றவன் என்று காளிதாசன் வருணிப்பது மிகவும் பொருத்த்தமே
तस्मै कुशलसम्प्रश्नव्यञ्जितप्रीतये सुराः।
भयमप्रलयोद्वेलादाचख्युर्नैरृतोदधेः॥ १०-३४
tasmai kuśalasampraśnavyañjitaprītaye surāḥ।
bhayamapralayodvelādācakhyurnairṛtodadheḥ || 10-34
To him whose kindly feelings towards gods were manifested by his enquiry about gods’ welfare did the gods narrate the danger from the ocean called demon Ravana that had overflowed its shore at a time other than that of final destruction. [10-34]
தேவர்களின் கோரிக்கையைக் கேட்ட விஷ்ணு உரத்த குரலில் கடற்கரையிலுள்ள குகைகள் அனைத்தும் எதிரொலிக்கப் பேசத் தொடங்கினார்
இந்தப்பேச்சு முழுவதிலும் உவமைகளும் உருவகங்களும் வருவதைப் படித்து ரசிக்கலாம்
இங்கு விஷ்ணுவுக்குப் பகவான் என்ற பெயர் வருகிறது ; இது பகவத் கீதையின் தாக்கத்தைக் காட்டுகிறது பகவான் என்றால் நிறைந்த பெருமை, வீர்யம், யசஸ்/புகழ், செல்வம், அறிவு , வைராக்யம்/ திட உறுதி என்ற ஆறு பண்புகளைக் கொண்டவர் என்று பொருள்

பிறகு பகவான் கூறினார் -அவருடைய குரல் சமுத்ரக்கரையிலுள்ள மலைகளின் குகைகளில் எதிரொலி செய்து , கடலின் பேரொலியையும் வென்றது – ரகு வம்சம் 10-35
அடுத்த ஸ்லோகம்
பகவானால் பேசப்பட்டதால் வாக்கும் பயன் அடைந்தது ; ஏனெனில் அவர் எழுத்துக்களின் ஸ்தானங்களிலிருந்து உச்சரித்தார்
உரைகாரர் விளக்கம் – மார்பு, நெஞ்சு, தலை, நாவின் அடிப்பாகம், பல், மூக்கு, உதடு, அன்னம் என்ற எழுத்து பிறக்கும் 8 இடங்களை பயன்படுத்தி எழுத்துக்களை உச்சரித்தார்
இந்த 10-36 ஸ்லோகம் முக்கியமானது ஏனெனில் விஷ்ணுவை புராண கவி என்கிறார் ;அதாவது வேதங்கள் இறைவனிடமிருந்து தோன்றின.
पुराणस्य कवेस्तस्य (PURANA KAVI) वर्णस्थानसमीरिता।
बभूव कृतसम्स्कारा (SAMSKRUTHA) चरितार्थैव भारती (BHARATI)॥ १०-३६
purāṇasya kavestasya varṇasthānasamīritā।
babhūva kṛtasamskārā caritārthaiva bhāratī || 10-36
மேலும் மொழிக்குப் பாரதி என்ற சொல்லப் பயன்படுத்திவிட்டு புராண கவி என்றார் .செம்மையான தூய்மையான மொழி என்பதை க்ருத ஸம்ஸ்காரா என்கிறார் ; இதிலிருந்து சம்ஸ்க்ருதம் என்பது உருவானது என்று கருதலாம்.
தொடரும்………………………………..
TAGS- காளிதாசன், காவியங்கள், விஷ்ணு, ராமன் கடல், ராவணன் கடல், part-2