
Post No. 14,826
Date uploaded in London – 3 August 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
விஷ்ணு – பொருள் – எங்கும் நிறைந்தவன்
மேக 15,59;
குமா.6-67; 7-44;
ரகு..13-5, 14-59.
கீழே பாடல்களின் பொருள் உள்ளன
***
இந்தப் பெயரை விண்ணந்தாயன் என்ற சங்கப்புலவர் பெயரில் காண்கிறோம்
விண்ணந்தாயன்= விஷ்ணு + தாசன்
ஆகாச என்பது தமிழில் ஆகாயம் என்று மாறுவது போல (ய=ச) தாசன் , தாயனானாக மாறுகிறது
சங்க காலத்திலியேயே லேடி மஹாபாரதத்தைத் தமிழாக்கிய செய்தி பாரதம் பாடிய மாதேவனார் (மஹாதேவன்) என்ற புலவர் மூலம் கிடைக்கிறது
கண்ணன் என்பதும் , கன்னையா என்பதும் ஆழ்வார் பாடல்கள், பாரதி பாடல்கள் மூலம் நாம் அறிந்ததே .
இந்த கண்ணன் பெயர் முது கண்ணன் , பாண்டரங் கண்ணன் தாயங்கண்ணன் (தாச +கண்ணா ) முதலிய பெயர்களில் வருகிறது ; தாமோதரனார், கேசவனார், வால்மீகி என்ற சங்கத் தமிழ் புலவர்களை நான் விளக்கத் தேவையே இல்லை.
***
ரகுவம்சம் 13-5 பாடலில் கடலுடன் விஷ்ணு ஒப்பிடப்பட்டதை முந்தைய கட்டுரையில் கண்டோம் . கடல் வண்ணன் என்றால் உடனே விஷ்ணு என்பது புரியக்கூடியதுதான் மாயோன் என்ற சொல்லால் தொல்காப்பியரும் சங்கப்புலவர்களும் இதைக் குறிப்பிடுகின்றனர் ; கருப்பு, நீலம் ஆகிய இரண்டு நிறங்களையும் இந்துக்கள் ஒரே பொருளில் பயன்படுத்துவர் ; கண்ணன் நிறமும் விஷ்ணு நிறமும் கருப்பு என்பது கிருஷ்ணா= கருப்பன் என்ற பெயரிலேயே உள்ளது.
மண்ணுறு திருமணி புரையும் மேனி
விண்ணுயர் புள்கொடி விறல்வெய் யோனும்
—புறநானூறு -56
நீல்நிற உருவின், நேமியோனும், என்று
இருபெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு,
—புறநானூறு -58
நீல நிற வண்ணன் (கலி .104-38),நெடியோன் (மது .வரி 763, பெரும் .வரி 402, பதிற்றுப் -15-39,
தேயா விழுப்புகழ்த் தெய்வம்;–கலி .103-75
தொல் கதிர்த் திகிரியான்;–கலி .104-78; 105-72
ஆடுகொள் நேமியான்;
(சுதர்சன சக்கரத்தைக் கையில் ஏந்தியவன் -நேமி , திகிரி)
தெய்வ மால்;–கலி .103 to 108 (Mal= Black; Melanesian Islands in the Pacific Ocen meant Black People)
வெள்ளைக்காரக் கொள்ளைக் காரர்கள், நாடு பிடிக்க உலகம் முழுதும் சென்றபோது கறுப்புத் தோல் உடையவர்களைக் கண்டவுடன் அந்த பசிபிக் மகா சமுத்திரத் தீவுகளுக்கு மேலனெசியா என்று பெயர் சூட்டினார்கள்.
Maal = Mala= Mela
****
रत्नच्छाया-व्यतिकर इव प्रेक्ष्यमेतत् पुरस्ताद्
वल्मीकाग्रात् प्रभवति धनुःखण्डमाखण्डलस्य ।
येन श्यामं वपुरतितरां कान्तिमापत्स्यते ते
बर्हेणेव स्फुरितरुचिना गोपवेषस्य विष्णोः ॥ 15
Kalidasa wrote first Travelogue in the world. He wrote the first Meteorological book showing the course of Southwest Monsoon, the most important weather factor in India.
மேகதூத காவியத்தில் உலகத்தின் முதல் பயண நூலைக் காளிதாசன் எழுதினான்; அது மட்டுமல்ல உலகின் முதல் வானிலையியல் நூலையும் எழுதி தென் மேற்குப் பருவக்காற்றின் போக்கினை வர்ணிக்கிறான்.
15–ஆவது பாடலில் “ஏ மேகமே கிழக்கே பார்! மலை முகட்டினின்று இந்திர தனுஷ் என்னும் வான வில்லினைக் காண். ரத்தினங்கள் அத்தனையின் ஒளியையும் ஒருங்கே உமிழ்வதைப் பார். உன்னுடைய கரு நிற உடலின் மீது அது பிரகாசிப்பது விஷ்ணுவானவர் இடையன் கோலத்தில் வந்த (கிருஷ்ணனின்) வனின் மயில் பீலி மீது பிரகாசிப்பது போல இருக்கிறது” என்கிறான் காளிதாசன்
இந்தப்பாடலில் மேகமும் கருப்பு; விஷ்ணுவும் கருப்பு; கிருஷ்ணனும் கருப்பு; விஷ்ணுதான் கிருஷ்ணாவதார ம் எடுத்தான் அவன் தலையிலுள்ள மயில் பீலி, வானவில் பொழப்பு பிரகாசிக்கிறது என்ற எல்லா செய்திகளும் உள.
****
प्रालेयाद्रेरुपतटमतिक्रम्य तांस्तान् विशेषान्
हंसद्वारं भृगुपति-यशोवर्त्म यत् क्रौञ्चरन्ध्रम् ।
तेनोदीचीं दिशमनुसरेस्तिर्यगायाम-शोभी
श्यामः पादो बलि-नियमनाभ्युद्यतस्येव विष्णोः ॥ 59॥
பாடல் 59 -ல் மூன்று சுவையான செய்திகளைத் தெரிவிக்கிறான் .
முருகனுக்கு கிரவுஞ்ச்சபேதனார் என்ற பெயர் உண்டு இந்த கிரவுஞ்ச்ச இடைவெளி- இமயமலைக் கணவாய் –இன்றும் நிதி கணவாய் என்ற பெயரில் உள்ளது;; அதன் வழியாகத்தான் ரஷ்யாவிலிருந்து பறவைகள் தமிழ்நாட்டிலுள்ள வேடந்தாங்கல் வரை இன்றும் வந்து கொண்டிருக்கின்றன; அதைக் குறிப்பிட்ட பின்னர் பலியின் கர்வத்தை அடக்குவதற்கு ஓங்கி உலகளந்த உத்தமன் என்று வாமன- த்ரிவிக்ரமாவதாரத்தையும் குறிப்பிடுகிறான்
திருவள்ளுவரும் அடி அளந்தான் என்று குறளில் புகழ்கிறார் விஷ்ணுவை ; 1.ஆக பறவைகள் குடியேற்றம் என்ற ஆர்னிதாலஜி ORNITHOLOGY FACT விஷயம், 2.கிரவுஞ்சபேதம் என்னும் முருகன் விஷயம், 3. விஷ்ணுவின் வாமன அவதாரம் ஆகிய அத்தனையும் கொட்டிவிட்டான் .
பாடலின் பொருள் இதோ:–
ஏ மேகமே, இமயமலையின் சரிவிலுள்ள பல அற்புதங்களைப் பார்த்துக்கொண்டே போ ; குறுகிய கிரவுஞ்ச கணவாய் வழியாகச் செல்வாயாக! அதன் வழியாகத்தான் குள்ள வாத்துக்கள் வருகின்றன பிருகு வம்சத் தலைவனின் பெருமையைப் பாடும் இடம் அது . குறுக்கு நெடுக்காக விரிந்த அந்த மலைப்பகுதி விஷ்ணு தனது கருமை நிறப்பாதங்களால் மகாபலியை அடக்குவது போல இருக்கும்—59
Krauñca (क्रौञ्च)—Sanskrit word for a bird “crane”, “demoiselle crane” (Anthropoides virgo). This animal is from the group called Plava (‘those which float’ or ‘those move about in large flocks’). Plava itself is a sub-group of the group of animals known as Ānupa (those that frequent marshy places).
Krauñca [Kraunch] is the name of a mythical mountain said to be the grandson of Himālaya who was pierced by Kārtikeya and Paraśurāma.
முருகன் அல்லது பரசுராமன் பிளந்த மலை என்ற கதையும் உண்டு அதனால்தான் காளிதாசன் பிருகு தலைவன் என்று சொல்கிறான்.
கிரவுஞ்ச என்பது நாரை, குள்ள வாத்து வகைப் பறவைகள்.
****
திருமணி, திரைபாடு அவிந்த முந்நீர்,
வரு மழை இருஞ் சூல்-மூன்றும் புரையும் மா மெய்; பரிபாடல் 4-6/7
****
Five in One
கார், மலர்ப் பூவை, கடலை, இருள், மணி,
அவை ஐந்தும் உறழும் அணி கிளர் மேனியை;
பரிபாடல் 13-42/43
****
மலையொடு மார்பு அமைந்த செல்வன்; Chest as wide as mountain or as strong as hill- – கலி.108-55
மலைமகள் பார்வதியை பெண்கேட்க, சப்த ரிஷிகளும் ஆங்கிரஸ் தலைமையில் இமய மலையிடம் போகிறார்கள் ; ஆங்கிரஸ் சொல்கிறார் :
உன்னை விஷ்ணு என்று எல்லோரும் அழைப்பது பொருத்தமே ; அசையாமல் நீ இருக்கிறாய்! உன்னுடைய நடுப்பகுதியோ அசையும் அசையாப்பொருட்கள் அனைத்துக்கும் ஆதாரமாய் உள்ளது – குமார சம்பவம், 6-67
பர்வத ராஜ குமாரி= பார்வதி
****
காளிதாசன் மாபெரும் சிவ பக்தன் .ரகு வம்ச முதல் ஸ்லோகத்தில் இந்த ஜகத்துக்கு பார்வதி பரமேஸ்வரன் பெற்றோர்கள் என்கிறான் குமார சம்பவ 8-27 பாடலில் சிவ பெருமானை ஜகத் குரு என்கிறான் . ஆயினும் அத்வைதத்தின் உச்சநிலையை அடைந்த அவனுக்கு மூவரும் ஒருவரே என்றும் தெரியும் ; இதோ குமார சம்பவப் பாடல் :
ஒரே கடவுள் மூன்றாகப்பிரிந்து அருள்புரிகிறார் ; அவர்களில் யார் பெரியவர் யார் சிறியவர் என்பது மாறி மாறி வரும்; சில நேரங்களில் சிவனைவிடப்பெரியவர் விஷ்ணு என்றும் , மேலும் சில இடங்களில் விஷ்ணு வை விடப்பெரியவர் சிவன் என்றும் அல்லது இவ்விருவரை விடப்பெரியவர் பிரம்மா என்றும் அழைக்கப்படுகிறார்கள்- 7-44
பரிபாடலில் விஷ்ணுவைப் புகழும் பாடல்களில் எல்லாம் அவனே என்ற கருத்து வருகிறது ; பகவத் கீதையில் விபூதி யோகத்த்தில் கிருஷ்ண எதில் எதில் சிறந்ததோ, அது தனது உருவமே என்பது போன்றது இது; காளிதாசன் அதைக் குமார சம்பவத்தில் ஒரே ஸ்லோகத்தில் சுருக்கமாகச் சொல்லவிட்டான் ; இதோ பரிபாடல்
பரிபாடல்-4
உலகு உயிர்களின் தோற்றமும், நிலைபேறும், ஒடுக்கமும்
நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள; 25
நின் தண்மையும் சாயலும் திங்கள் உள;
நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள;
நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள;
நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள;
நின் தோற்றமும் அகலமும் நீரின் உள; 30
நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள;
நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள;
அதனால், இவ்வும், உவ்வும், அவ்வும், பிறவும்,
ஏமம் ஆர்த்த நிற் பிரிந்து,
மேவல் சான்றன, எல்லாம். 35
****
பகையும் நட்பும் இன்மை
கடு நவை அணங்கும் கடுப்பும், நல்கலும்,
கொடுமையும் செம்மையும், வெம்மையும் தண்மையும் 50
உள்வழி உடையை; இல்வழி இலையே;
போற்றார் உயிரினும், போற்றுநர் உயிரினும்,
மாற்று ஏமாற்றல் இலையே; ‘நினக்கு
மாற்றோரும் இலர்; கேளிரும் இலர்’ எனும்
வேற்றுமை இன்று, அது போற்றுநர்ப் பெறினே: 55
மனக்கோள் நினக்கு என வடிவு வேறு இலையே;
கோள் இருள் இருக்கை ஆய் மணி மேனி,
நக்கு அலர் துழாஅய் நாறு இணர்க் கண்ணியை;
பொன்னின் தோன்றிய புனை மறு மார்ப!
நின்னில் தோன்றிய நிரை இதழ்த் தாமரை 60
அன்ன நாட்டத்து அளப்பரியவை;
நின்னின் சிறந்த நின் தாள் இணையவை;
நின்னில் சிறந்த நிறை கடவுளவை;
அன்னோர் அல்லா வேறும் உள; அவை
நின் ஓர் அன்ஓர் அந்தணர் அருமறை. 65
பல்வேறு திருப்பெயர் கொண்ட ஒரு பொருள்
அழல் புரை குழை கொழு நிழல் தரும் பல சினை
ஆலமும், கடம்பும் நல் யாற்று நடுவும்,
கால் வழக்கு அறு நிலைக் குன்றமும், பிறவும்,
அவ்வவை மேவிய வேறு வேறு பெயரோய்!
எவ் வயினோயும் நீயே; நின் ஆர்வலர் 70
தொழுத கை அமைதியின் அமர்ந்தோயும் நீயே;
அவரவர் ஏவலாளனும் நீயே;
அவரவர் செய்பொருட்கு அரணமும் நீயே. 73
****
பரிபாடல் 3-48/58
வனப்பும் வலியும்
நினக்கு-விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும்,
வலியினும், மனத்தினும், உணர்வினும், எல்லாம்-
வனப்பு வரம்பு அறியா மரபினோயே! 50
அணி நிழல் வயங்கு ஒளி, ஈர்-எண் தீம் கதிர்,
பிறை வளர், நிறை மதி உண்டி,
அணி மணிப் பைம் பூண், அமரர்க்கு முதல்வன் நீ;
திணி நிலம் கடந்தக்கால், திரிந்து அயர்ந்து, அகன்று ஓடி,
நின் அஞ்சிக் கடற் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார் 55
அன்னவர் பட, அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ;
அதனால், ‘பகைவர் இவர்; இவர் நட்டோர்’ என்னும்
வகையும் உண்டோ, நின் மரபு அறிவோர்க்கே?
Xxxx
எங்குமாய் எல்லாமாய் நிறைந்த பெருமை
பரிபாடல் 13-14/25
சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு,
அவையும் நீயே, அடு போர் அண்ணால்! 15
அவைஅவை கொள்ளும் கருவியும் நீயே;
முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும்,
ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே;
இரண்டின் உணரும் வளியும் நீயே;
மூன்றின் உணரும் தீயும் நீயே; 20
நான்கின் உணரும் நீரும் நீயே;
அதனால், நின் மருங்கின்று–மூ-ஏழ் உலகமும்,
மூலமும், அறனும், முதன்மையின் இகந்த
காலமும், விசும்பும், காற்றொடு கனலும் 25
****
பரிபாடல் 2-52/60
திருமால் திருமேனியின் ஒளி முதலிய சிறப்புக்கள்
பொன் ஏர்பு அவிர் அழல் நுடக்கு அதன் நிறனே.
நின்னது திகழ் ஒளி சிறப்பு இருள் திருமணி;
கண்ணே, புகழ்சால் தாமரை அலர் இணைப் பிணையல்;
வாய்மை, வயங்கிய வைகல்; சிறந்த
நோன்மை நாடின், இரு நிலம்; யாவர்க்கும், 55
சாயல் நினது, வான் நிறை-என்னும்
நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே:
அவ்வும் பிறவும் ஒத்தனை; உவ்வும்
எவ் வயினோயும் நீயே.
உருவமும், உணவும், வெளிப்பாடும்
செவ்வாய் உவணத்து உயர் கொடியோயே!
Xxx
பரிபாடல் 3-4/11
தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்,
ஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும், 5
திதியின் சிறாரும், விதியின் மக்களும்,
மாசு இல் எண்மரும், பதினொரு கபிலரும்,
தா மா இருவரும், தருமனும், மடங்கலும்,
மூ-ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும்,
மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம் 10
மாயா வாய்மொழி உரைதர வலந்து:
****
பரிபாடல் 3-61-70
ஓ!’ எனக் கிளக்கும் கால முதல்வனை;
ஏஎ இன கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம்;
சாம வேதம் கூறுதலின் தெளிந்த பொருள்
தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ; 65
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின்,
உறையும் உறைவதும் இலையே; உண்மையும்
மறவியில் சிறப்பின் மாயமார் அனையை; 70
****
பரிபாடல் 3-73-76
பறவாப் பூவைப் பூவினோயே!
அருள் குடையாக, அறம் கோலாக,
இரு நிழல் படாமை மூ-ஏழ் உலகமும்
*****
TO BE CONTINUED…………………………….
TAGS- காளிதாசன் , காவியங்கள் , விஷ்ணு , மால் , திருமால், மாயோன்
, சங்க இலக்கியம் , ஒப்பீடு , பகுதி 3