Post No. 14,828
Date uploaded in London – —4 August 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இந்த வருடத்தின் (2025) ஆரம்பத்தில் ஜனவரியில் 27ம் அத்தியாயத்தை முடித்து விட்டுப் பல மாதங்கள் ஓடி விட்டன. மீண்டும் தொடரைத் தொடர்வோம்.
ராமாயணத்தில் வரங்கள் (28)
ராமாயணத்தில் வரங்கள் (28) பிரம்மா மயனுக்கு அளித்த வரம்!
ச. நாகராஜன்
.
கிஷ்கிந்தா காண்டத்தில் ஐம்பத்தோராவது ஸர்க்கமாக அமைவது ‘ஸ்வயம்பிரபை செய்த ஸத்காரம் என்ற ஸர்க்கமாகும்.
தென் திசையில் சீதாதேவியைத் தேடிச் சென்ற ஹனுமானும் மற்ற வீரர்களும் வாய்திறந்த ஒரு குகையைக் கண்டு அதனுள் நுழைந்தார்கள்.
ரிக்ஷபிலம் என்ற அந்த குகை பிரம்மாண்டமானதாக இருந்தது. அங்கு ஓரிடத்தில் பொன்மயமான மரங்களையும் தாமரை ஓடைகளையும் கண்டு அவர்கள் வியந்தனர்.
அங்கு ஒரு ஸ்திரீயைக் கண்டனர். மரவுரியையும் மான் தோலையும் உடுத்து தவக் கோலத்தில் இருந்த அவளைப் பார்த்த ஹனுமார் அவளிடம், “நீவீர் யார்? இந்த மாளிகையும் பிலமும் இந்த ரத்தினங்களும் யாருடையது. பதில் சொல்லி அருள்வீராக” என்று கேட்டார்.
அதற்கு அந்த தபஸ்வி பதில் கூறலானாள்:
மயோ நாம மஹாதேஜோ மாயாவீ தானவர்ஷப: |
தேனேதம் நிர்மிதம் சர்வ்ம் மாயயா காஞ்சனம் வனம் ||
தானவர்ஷப: – அசுர சிரேஷ்டனான
மய: நாம – மயன் என்பவன்
மஹா தேஜா: – மஹா தேஸஸ்வி.
மாயாவி – மாயைகளில் வல்லவம்
தேன – அவனால்
இதம் – இந்த
காஞ்சனம் – பொன் மயமான
வனம் – காடு
சர்வம் – மற்றுமுள்ள எல்லாம்
மாயயா – மாயையினாலேயே
நிர்மிதம் – சிருஷ்டிக்கப்பட்டது.
புரா தானவமுக்யானாம் விஸ்வகர்மா வபூவஹ: |
யேனேதம் காஞ்சனம் திவ்யம் நிர்மிதம் பவனோத்தமம் |\
புரா – முன்பு
இதம் – இந்த
காஞ்சனம் – பொன்மயமான
திவ்யம் – தேவர்களுக்குரிய
பவனோத்தமம் – சிறந்த மாளிகை
நிர்மிதம் – சிருஷ்டிக்கப்பட்டது
யேன – எவனாலோ அவன்
தானவ முக்யானாம் – சிறந்த அரக்கர்களுக்கெல்லாம்
விஸ்வகர்மா – விஸ்வகர்மாவாக
வபூவ ச – ஆனான்
ஸ து வர்ஷசஹஸ்ராணி தபஸ்தப்த்வா மஹாவனே |
பிதாமஹாத்வரம் லேபே சர்வமௌஷனஸம் தனம் ||
ஸ: – அவன்
மஹாவனே – பெரிய காட்டில்
வர்ஷ சஹஸ்ராணி – ஆயிரம் வருஷங்கள்
தப: – தவத்தை
தபத்வா – இயற்றி
பிதாமஹான் – பிரம்மதேவனிடமிருந்து
ஔஷனஸம் – உசனஸ் என்பவரால் செய்யப்பட்ட சிற்ப சாஸ்திரக் கல்வியாகிற
தனம் – சிறந்த பொக்கிஷத்தை
சர்வ து – எல்லாவற்றையும்
வரம் – வரமாக
லேபே – அடைந்தான்
கிஷ்கிந்தா காண்டம், 51வது ஸர்க்கம் ஸ்லோகங்கள் 11,12,13
உசனஸ் என்பவரால் செய்யப்பட்ட அந்த வனத்தை பிரம்மாவிடமிருந்து மயன் பெற்று அனுபவித்து வந்தான். ஒரு சமயம் அவன் ஹேமை என்ற தெய்வப்பெண்ணைக் கண்டு அவள் மேல் ஆசை கொண்டான். இதை அறிந்த இந்திரன் அவனை வஜ்ராயுதத்தை பிரயோகித்துக் கொன்றான். பொன்மயமான வனத்தை இந்திரன் ஹேமைக்குத் தந்தான்.
இந்த வரலாற்றைச் சொன்ன அந்த பெண் தபஸ்வியானவள் தன்னை அந்த ஹேமையின் உயிர்த்தோழியாக அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
அவள் பெயர் ஸ்வயம்பிரபை.
இங்கு பிரம்மாவிடமிருந்து மயன் பெற்ற வரம் பற்றிய விவரங்களை அறிகிறோம்.
***