காளிதாசன் காவியங்களில் விஷ்ணு கொடி, வாகனம்!- Part 5 (Post No.14,837)

Written by London Swaminathan

Post No. 14,837

Date uploaded in London –  6 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

காளிதாசன் காவியங்களில் விஷ்ணு கொடி, வாகனம்  !- Part 5

சங்கப்புலவர்களும் காளிதாசனும் விஷ்ணு பற்றியும் அவருடைய அவதாரங்கள், கொடி, வாகனம் அவனுக்குப் பிரியமான துளசி  உதளியான பற்றி சொல்லும் விஷயங்களை மேலும் விரிவாக விஷ்ணு ஸஹஸ்ரநாம உரைகள் ஆழ்வார் பாடல்களில்  மற்றுமுள்ள பக்தி இலக்கியங்களில் காண்கிறோம்.

பக்தி இயக்கம் என்பது ரிக் வேத காலத்திலியேயே துவங்கி விட்டது அப்போதிட்ட விதைகள் மரமாக வளர்ந்து பூத்துக்குலுங்கிப் பழங்களைக் கொடுத்தது  காளிதாசன் காலத்தில்- பரிபாடல் பாடிய சங்க காலத்தில்– என்றால் மிகையாகாது . ராமாயணம் இயற்றிய வால்மீகி  ராமனை அவதாரம் என்று சொல்லவில்லை ஆனால் காளிதாசன் அவன் விஷ்ணுவின் அவதாரம் என்றும் அவனது வாகனம் , கொடி, மனைவியர்  இவை இவை என்றும் சொல்கிறான் . ரகு வம்ச காவியத்திலிருந்தும் சங்க இலக்கிய நூல்களிலிருந்தும் சில பாடல்களை மட்டும் காண்போம்.

अथात्मनः शब्दगुणम्गुणज्ञ्यः

पदम्विमानेन विगाहमानः।

रत्नाकरम्वीक्ष्य मिथः स जायाम्

रामाभिधानो हरिरित्युवाच॥ १३-१

athātmanaḥ śabdaguṇamguṇajñyaḥ

padamvimānena vigāhamānaḥ |

ratnākaramvīkṣya mithaḥ sa jāyām

rāmābhidhāno harirityuvāca || 13-1

ராமன் என்ற ஸ்ரீ ஹரி என்று சொல்லும் ஸ்லோகம் இது . ராமன் சிங்கையில் விமானத்தில் ஏறிக்கொண்டு கடலினை காண்பித்து சீதையிடம் பேசும் காட்சி இது

****

त्रस्तेन तार्क्ष्यात्किल कालियेन मणिम् विसृष्टम् यमुनौकसा यः|

वक्षःस्थलव्यापिरुचम् दधानः सकौस्तुभम् ह्रेपयतीव कृष्णम्॥ ६-४९

trastena tārkṣyātkila kāliyena maṇim visṛṣṭam yamunaukasā yaḥ |

vakṣaḥsthalavyāpirucam dadhānaḥ sakaustubham hrepayatīva kṛṣṇam || 6-49

இந்துமதி சுயம்வர கட்டத்தில் ஒரு மன்னரை அறிமுகப்படுத்திய தோழி அந்த மன்னன் யமுனை நதியில் வாழும் காளியன் என்னும் பாம்பு கொடுத்த டீ ரத்தினத்தை மார்பில் அணிந்து விஷ்ணு கெளஸ்துப மணியை மார்பில் அணிந்து போல இருக்கிறது என்கிறாள் . இதை யமுனை, கிருஷ்ணன் அடக்கிய காளியன், விஷ்ணு அணியும் ரத்தினம்  முதலியன வருவதைக் கவனிக்க வேண்டும்.

****

स्वासिधारापरिहृतः कामम् चक्रस्य तेन मे।

स्थापितो दशमो मूर्धा लभ्याम्श इव रक्षसा॥ १०-४१

svāsidhārāparihṛtaḥ kāmam cakrasya tena me।

sthāpito daśamo mūrdhā labhyāmśa iva rakṣasā || 10-41

ராவணன் ஒரு அரக்கன் என்பதை புறநானூறு குறிப்பிட்டத்தை முந்தைய கட்டுரையில் கண்டோம் இந்த ரகுவம்ச பாடல் அவனை ராக்ஷஸன் என்றும் அவனது பத்தாவது தலை தன்னுடைய சுதர்சன சக்கரத்தால் வெட்டப்படும் என்றும் தேவர்களுக்கு விஷ்ணு உறுதி  தருகிறார்  முன்னொரு காலத்தில் கடும் தவம் இயற்றிய ராவணன் ஒன்பது தலைகளைத் தியாகம் செய்தபோது பிரம்மா தோன்றி வரம் கொடுத்து ஒன்பது தலைகளையும் மீண்டும் கொடுத்ததாக ஒரு வரலாறு உண்டு. இதில் ராவணன் ஒரு அரக்கன், விஷ்ணுவின் சுதர்சன சக்கரம் ஆகியன  வருவதைக் கவனிக்க வேண்டும்.

***

யாதவப் பெண்ணுக்கு காளை மாடு  காட்டிய கணவன்!

கிருஷ்ணனும் தெய்வ மாலும் (திரு மால் /விஷ்ணு/ ஹரியும் ) ஒன்று என்பதைக் காட்டும் வருணனை கலித்தொகையில் முல்லைக்கு காலையில் வருகிறது ஆயர்கள் -அதாவது யாதவ இடையர் வீட்டுப் பெண்மணிகள்  காளை அடக்கும் போட்டியில் (ஜல்லிக்கட்டு/ மஞ்சசுவிரட்டு) யார் வெல்கிறாரோ அவரையே

கல்யாணம் செய்வது வழக்கம் காளை அடக்கும் போட்டி, முதல் முதலில் பாகவதத்தில் வருகிறது

 கலி .107-22

ஒரு யாதவ பெண் தான் வளர்த்த காளையை மைதானத்துக்குள் அனுப்பினாள்; அந்தக் காலத்தில் ஆண்களும் தலையில் பூக்களை அணிவது வழக்கம்; காளையை அடக்க வந்த ஆண்மகனின் பூ மாலை காளையின் கொம்பில் சிக்கிக்கொண்டது அதை யாதவ இளைஞன் அடக்கியபோது துள்ளிக்குதித்த காளையின் கொம்பில் சிக்கி இருந்த அந்தப் பூ மாலை , யார் அந்தக் காளையை வளர்த்து போட்டிக்கு அனுப்பினாளோ அவள் மீது போய் விழுந்தது உடனே தோழியர் அனைவரும் பாராட்டி விஷ்ணுவே/ திருமாலே உனது கணவனைக் காட்டிவிட்டார் என்று சொல்லி மகிழ்கிறார்கள் இதை முல்லைக் கலி  பாடிய சங்கப்புலவர் சித்தரிக்கிறார் ; இதில் யாதவர்கள் வணங்கும் கிருஷ்ணனே மால் என்று வருவதைக்க  கருத்திற்கொள்ள வேண்டும்  .

வருந்தாதி
மண்ணி மாசு அற்ற நின் கூழையுள் ஏற அவன்   30
கண்ணி தந்திட்டது எனக் கேட்டு, ‘திண்ணிதா,
தெய்வ மால்காட்டிற்று இவட்கு எனநின்னை அப்
பொய் இல் பொதுவற்கு அடை சூழ்ந்தார் தந்தையோடு
ஐயன்மார் எல்லாம் ஒருங்கு

வருந்தவேண்டாம். உன் கூந்தலில் அவன் பூ விழுந்தது எனக் கேட்டு “இவளுக்குத் தெய்வம் காட்டிய வழி” என்று எண்ணிக்கொண்டு உன் தாய் தந்தையரும், அண்ணன்மாரும் திருமணம் செய்துதர உறுதி பூண்டுள்ளனர். உன் விருப்பம் நிறைவேறும்.

****

மார்பில் லெட்சுமி , கெளஸ்துப மணி கருடன்

பரிபாடல் 1 

எரிமலர் சினைஇய கண்ணை; பூவை

விரிமலர் புரையும் மேனியை; மேனித்

திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை; மார்பில்

தெரிமணி பிறங்கும் பூணினை; மால் வரை

எரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையை 10

சேவல் அம் கொடியோய்! நின் வல வயின் நிறுத்தும்

ஏவல் உழந்தமை கூறும்,

நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே.

பொருள்

எரியும் தீ போலப் பூக்கும் தாமரை-மலர் போன்ற கண்ணை உடையவன்.

பூவை என்னும் காயாம்பூ பூத்திருப்பது போன்ற ஒளிர்-நீல-நிற மேனியை உடையவன்.

அந்த மேனியில் திருமகள் நிமிர்ந்து அமர்ந்திருக்கும் மார்பினை உடையவன்.

அந்த மார்பில் தெரிப்பாக மணி ஒளிரும் பூணினை (கவச-அணிகௌவுத்துவ-மணி) உடையவன்.

பெரிய மலை பற்றி எரிவது போன்ற பொன்னிழையாலான உடுக்கை-ஆடை உடையவன்.

கருடச்சேவல் அழகு தரும் கொடியை வலப்புறம் உயர்த்திப் பிடித்துக்கொண்டிருப்பவன்.

உன் ஏவலின்படி உழைத்துக்கொண்டிருப்பவர்கள் நாக்கு வல்லமை பெற்ற (வடமொழி மந்திரத்தை வளமாக ஓதும் வல்லமை) அந்தணர்கள். அவர்கள் ஓதும் அருமறையின் பொருளாக விளங்குபவன். இப்படி விளங்குபவனே!

****

தசரதன் மனைவியர் கர்ப்பமாக இருக்கும்போது கண்ட கனவுகள்

गुप्तम् ददृशुरात्मानम् सर्वाः स्वप्नेषु वामनैः।

जलजासिकदाशार्ङ्गचक्रलाञ्छितमूर्तिभिः॥ १०-६०

guptam dadṛśurātmānam sarvāḥ svapneṣu vāmanaiḥ।

jalajāsikadāśārṅgacakralāñchitamūrtibhiḥ || 10-60

விஷ்ணுவின் அவதாரத்தைக்கோடி காட்டும்

சங்கு சக்ர சாரங்க கதையுடன் உள்ள இளைஞர்களைக் கனவில் கண்டனர்.

हेमपक्षप्रभाजालम् गगने च वितन्वता।

उह्यन्ते स्म सुपर्णेन वेगाकृष्टपयोमुचा॥ १०-६१

hemapakṣaprabhājālam gagane ca vitanvatā।

uhyante sma suparṇena vegākṛṣṭapayomucā || 10-61

ஒளியை வீசிக்கொண்டு பறக்கும் கருடன் தங்களை சுமந்து செல்வதாகவும் மேகங்கள் பின் தொடர்வதாகவும் கனவு கண்டார்கள்.

बिभ्रत्या कौस्तुभन्यासम् स्तनान्तरविलम्बितम्।

पर्युपास्यन्त लक्ष्म्या च पद्मव्यजनहस्तया॥ १०-६२

bibhratyā kaustubhanyāsam stanāntaravilambitam।

paryupāsyanta lakṣmyā ca padmavyajanahastayā || 10-62

லட்சுமி தனது மார்பில் கெளஸ்துப மணி விளங்க தாமரைப்பூ விசிறி கொண்டு வீசி உபசரிப்பதாகவும் கனவில் தெரிந்தது.

அடுத்த ஸ்லோகத்தில் சப்த ரிஷிகள் உபசரித்த கனவு வருகிறது இதையெல்லாம் அவர்கள் கணவன் தசரத சக்கரவர்த்தியிடம் சொன்னவுடன் அவர் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தார்.

****

அகநானூறு 175

கால் இயல் நெடுந் தேர்க் கை வண் செழியன் 10

ஆலங்கானத்து அமர் கடந்து உயர்த்த

வேலினும் பல் ஊழ் மின்னி, முரசு என

மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி,

நேர் கதிர் நிரைத்த நேமி அம் செல்வன்

போர் அடங்கு அகலம் பொருந்திய தார்போல், 15

திருவில் தேஎத்துக் குலைஇ, உரு கெழு

மண் பயம் பூப்பப் பாஅய்,

தண் பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே?

இப்போது வானம் மின்னுகிறது. செழியன் கைவண்மை மிக்க வள்ளல். அவன் வலிமை மிக்க சக்கரம் கொண்ட தேரில் சென்று ஆலங்கானம் என்னுமிடத்தில் போரிட்டான். அப்போது அவன் வேல்கள் மின்னியது போல வானம் மின்னுகிறது. அப்போது அவன் முரசு முழங்கியது போல இடி முழங்குகிறது. சக்கரத்தைக் கையிலே கொண்ட திருமால் மார்பில் உள்ள ஆரம் போல வானவில்லை வளைத்துக் காட்டுகிறது. மண்ணெல்லாம் விளைச்சல் பயன் தருமாறு மழை பொழிகிறது. அவர் வருவேன் என்று சொன்ன காலம் இதுதானே?

நான்கு தெய்வங்களின் கொடிகள் வாகனங்கள் பற்றி சங்கப்புலவர் நக்கீரர்

புறநானூறு 56

காளைமாட்டு ஊர்தி,

தீ போன்று விரிந்த செஞ்சடை,

கையில் கணிச்சி ஆயுதப் படை,

கழுத்தில் நீலநிற நஞ்சுமணி

ஆகியவற்றை உடைய சிவபெருமான் (1)

இவன் கூற்றுவன் போல் சினம் கொண்டவன்.

கடலில் வளரும் சுழல்சங்கு போன்ற வெண்ணிற மேனி,

கலப்பை ஆயுதப் படை,

பனைமரக் கொடி

ஆகியவற்றை உடைய பலராமன் (2)

இந்தப் பலராமன் போல் வலிமை கொண்டவன்

கழுவிய மணிக்கல் போன்ற நீலநிற மேனி,

கருடப்பறவைக் கொடி

ஆகியவற்றை உடைய திருமால் (3)

திருமால் போல் இகழ்வாரை அழிக்கும் புகழ் கொண்டவன்

மயில் கொடி,

மயில் ஊர்தி

ஆகியவற்றுடன் வெற்றியாளனாக விளங்கும் முருகன் (4)

முருகன் போல் எண்ணியதை முடிக்கும் திறனாளன்.

இப்படி நான்கு பெருந் தெய்வம் போல்

ஆற்றல் மிக்க உனக்கு செய்யமுடியாதது என்று ஒன்று உண்டா?

இல்லை.எனவே

இரப்போருக்கு வேண்டிய பொருள்களைக் குறைவின்றி வழங்குவாயாக.

யவனர் தந்த பொன்-கிண்ணத்தில்

மகளிர் நாள்தோறும் ஊட்டும் தேறலை உண்டு

மகிழ்ந்து இனிதாக வாழ்வாயாக.

வாளோக்கிய மாறனே!

இருளகற்றும் சூரியன் போலவும்,

மேற்குத் திசையில் காணப்படும் வளர்பிறை நிலாப் போலவும்

நிலைபேற்றுடன் உலகில் வாழ்வாயாக.

பாடல்

ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை,

மாற்று அருங் கணிச்சி, மணி மிடற்றோனும்;

கடல் வளர் புரி வளை புரையும் மேனி,

அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்;

மண்ணுறு திரு மணி புரையும் மேனி,       5

விண் உயர் புள் கொடி, விறல் வெய்யோனும்,

மணி மயில் உயரிய மாறா வென்றி,

பிணிமுக ஊர்தி, ஒண் செய்யோனும் என

ஞாலம் காக்கும் கால முன்பின்,

தோலா நல் இசை, நால்வருள்ளும்,                 10

கூற்று ஒத்தீயே, மாற்று அருஞ் சீற்றம்;

வலி ஒத்தீயே, வாலியோனை;

புகழ் ஒத்தீயே, இகழுநர் அடுநனை;

முருகு ஒத்தீயே, முன்னியது முடித்தலின்;

ஆங்கு ஆங்கு அவர் அவர் ஒத்தலின், யாங்கும்   15

அரியவும் உளவோ, நினக்கே? அதனால்,

இரவலர்க்கு அருங் கலம் அருகாது ஈயா,

யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல்

பொன் செய் புனை கலத்து ஏந்தி, நாளும்

ஒண் தொடி மகளிர் மடுப்ப, மகிழ் சிறந்து,          20

ஆங்கு இனிது ஒழுகுமதி! ஓங்கு வாள் மாற!

அம் கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும்

வெங் கதிர்ச் செல்வன் போலவும், குட திசைத்

தண் கதிர் மதியம் போலவும்,

நின்று நிலைஇயர், உலகமோடு உடனே!    25

பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை

மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

****

பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை

மதுரை மருதன் இளநாகனார் பாடிய முந்தைய பாடலில் மன்னனை முருகனுக்கும் சிவனுக்கும் ஒப்பிடுகிறார் . இதிலிருந்து இன்னுமொரு விஷயம் தெளிவாகத்தெறிகிறது ; காளிதாசன் சங்க காலத்துக்கு முந்தையவன் ஏனெனில் அவன் மன்னர்களை வேத கால இந்திரன், அக்கினி, வருணன் , யமனுக்கு ஒப்பிடுகிறான் ; தமிழ் தெரியாத வடகத்தியர்களும் வெளிநாட்டுக்காரர்களும் காளிதாசனைக் குப்தர்  காலத்தில் வைப்பது பொருந்தாது என்பதற்கு இது மேலும் ஒரு சான்று.

****

ஆதிசேஷன்படுக்கையில் விஷ்ணு

பிரம்மாவை வருணிக்கும் பாடலில் ஆதிசேஷன் என்னும் பாம்புப்  படுக்கை வருகிறது அதை அடுத்ததாகக் காண்போம்

–subham–

Tags- காளிதாசன் காவியங்கள், விஷ்ணு கொடி, வாகனம் ,சங்கப்புலவர் நக்கீரர், அகநானூறு 175,யாதவப் பெண், காளை மாடு,   கணவன், கலித்தொகை

Leave a comment

Leave a comment